Jun 8, 2010

16

வேர்டுக்கும் எக்ஸெலுக்கும் பூட்டு போடு

  • Jun 8, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: பிரச்சினை வரும் வரை ஒருவனின் பலமும் பலவீனமும் தெரியாது.

    நண்பர்களே நாம் சில நேரங்களில் நம்முடைய தகவல்கள் அடங்கிய வேர்டு மற்றும் எக்ஸெல் பைல்களை ஏதாவது ஒரு காரணத்திற்காக யாரும் படிக்க அனுமதிக்காமல் இருக்க அதற்கு கடவுச்சொல் கொடுத்து திறக்கவிடாதபடி செய்வோம் அதை இங்கு தெரியாத நண்பர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கிறேன் இது பற்றி முன்பே தெரிந்தவர்கள் தயவுசெய்து மன்னிக்கவும்.

    சரி இங்கு மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பு 2003 மற்றும் 2007 இரண்டுக்குமே அதற்கான வழிகளை பார்க்கலாம் முதலில் 200 வேர்ட், எக்ஸெலில் கடவுச்சொல் கொடுப்பதை பார்க்கலாம்.

    மைக்ரோசாப்ட் வேர்ட் 2003

    படத்தில் காண்பித்துள்ளபடி Tools கிளிக்கி அதில் Options தெரிவு செய்யுங்கள்.



    இனி இப்படியாக ஒரு பாப் அப் திற்க்கும் அதில் Password to open என்பதில் நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை கொடுங்கள் நீங்கள் விரும்பினால் மட்டும் Advanced என்பதை கிளிக்கி தேவையான மாற்றங்கள் செய்யுங்கள் ஆனால் அது உங்களுக்கு தேவைப்படாது எனவே Password to openல் கடவுச்சொல் கொடுத்ததும் கீழே இருக்கும் ஓக்கே பட்டனை அழுத்தி ஓக்கே கொடுத்து விடுங்கள்.



    இனி இப்படியாக திற்க்கிறதா நீங்கள் முன்னர் கொடுத கடவுச்சொல்லை இங்கேயும் கொடுங்கள் அவ்வளவுதான் இனி உங்கள் வேர்ட் பைல் கடவுச்சொல் இல்லாமல் திறக்கமுடியாது.



    மைக்ரோசாப்ட் எக்ஸெல் 2003

    படத்தில் காண்பித்துள்ளபடி Tools கிளிக்கி அதில் Options தெரிவு செய்யுங்கள்.



    இனி இப்படியாக ஒரு பாப் அப் திற்க்கும் அதில் Security டேப்பை திறந்து Password to open என்பதில் நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை கொடுங்கள் நீங்கள் விரும்பினால் மட்டும் Advanced என்பதை கிளிக்கி தேவையான மாற்றங்கள் செய்யுங்கள் ஆனால் அது உங்களுக்கு தேவைப்படாது எனவே Password to openல் கடவுச்சொல் கொடுத்ததும் கீழே இருக்கும் ஓக்கே பட்டனை அழுத்தி ஓக்கே கொடுத்து விடுங்கள்.



    இனி இப்படியாக திற்க்கிறதா நீங்கள் முன்னர் கொடுத கடவுச்சொல்லை இங்கேயும் கொடுங்கள் அவ்வளவுதான் இனி உங்கள் எக்ஸெல் பைல் கடவுச்சொல் இல்லாமல் திறக்கமுடியாது.



    மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் எக்ஸெல் 2007

    இதில் மைக்ரோசாப்ட்டின் ஆபிஸ் பட்டனை கிளிக்கினால் கீழிருப்பது போல திறக்கும் அதில் நீங்கள் கடவுச்சொல கொடுக்கவேண்டிய பைலை திறந்து Prepare என்பதில் கிளிக்கி அதில் வரும் Encrypt Document என்பதை தேர்வு செய்யவும்.



    இனி உங்களுக்கு இப்படியாக ஒரு பாப் அப் திற்க்கும் இதில் நீங்கள் கடவுச்சொல்லை கொடுத்து ஓக்கே கொடுத்ததும் மீண்டும் ஒரு பாப் அப் திறந்து உங்கள் கடவுச்சொல்லை ஊர்ஜிதம் செய்ய சொல்லும் அதையும் செய்து விடுங்கள் அவ்வளவுதான் இனி மைக்ரோசாப்ட் 2007 லிலும் கடவுச்சொல் இல்லாமல் திறக்கமுடியாது.



    என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருந்ததா மேலும் பல நண்பர்களுக்கு சென்றடைய உதவுங்கள் குறைந்தபட்டம் உங்கள் நண்பர்களோடு அறிவுப்பகிர்தலாவது செய்துகொள்ளுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    16 Comments
    Comments

    16 Responses to “வேர்டுக்கும் எக்ஸெலுக்கும் பூட்டு போடு”

    Robin said...
    June 8, 2010 at 11:10 AM

    Useful Info.
    Thanks.


    ராம்ஜி_யாஹூ said...
    June 11, 2010 at 2:00 PM

    thanks, can u write about to set password lock for Folders.


    ஜிஎஸ்ஆர் said...
    June 13, 2010 at 4:53 PM

    @Robin

    Thanks Dear Robin


    ஜிஎஸ்ஆர் said...
    June 13, 2010 at 4:53 PM

    @ராம்ஜி_யாஹூ

    Welcome Dear Ramji & Tnanks for your comment


    cheena (சீனா) said...
    June 15, 2010 at 8:50 AM

    அன்பின் ஞானசேகர்

    அதிகம் பேருக்குத் தெரியாத அரிய தகவல இது. பகிர்ந்து கொள்வது நன்றுதான் - நல்ல செயல் - நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


    ஜிஎஸ்ஆர் said...
    June 15, 2010 at 9:27 AM

    @cheena (சீனா)

    நன்றி நண்பரே


    varagan said...
    June 30, 2010 at 9:55 PM

    நன்றி பல கோடி


    rajvel said...
    November 21, 2010 at 7:37 PM

    நன்றி - நல்வாழ்த்துகள்


    Vengatesh TR said...
    November 27, 2010 at 1:41 PM

    .thanks for revised me !


    .useful info, la !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:40 AM

    @varaganகருத்திற்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:40 AM

    @rajvelகருத்திற்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:41 AM

    @சிகப்பு மனிதன்சில இடங்களில் la !இப்படி எழுதுகிறீர்கள் அதன் அர்த்தம் என்ன


    Vengatesh TR said...
    November 30, 2010 at 3:42 AM

    .நான் தல (ajith) ரசிகன் !

    .அவரின் Billa(2007) படத்தில், அவர் உபயோகிப்பார் !

    .நானும் அவர் போலவே, பேச தொடங்கி, என்னிடமே வாடகை தராமல் தங்கி விட்டது !

    .அதுவும் ஒரு slang thaan (pa,ma,ra போன்ற suffix word)


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:30 PM

    @சிகப்பு மனிதன்அப்படியா ஆனால் எனக்கு இது புதிது


    Vengatesh TR said...
    December 3, 2010 at 3:00 AM

    .ஆங்கிலம் பேசுகையில், இறுதியில், பயன்படுத்தி பாருங்கள்,
    eg : I'm starting to home, la !

    .ஆண்-பெண், பெரியவர்-சிறியவர், வேறுபாடு இன்றி இதை உபயோகிக்கலாம் !


    ஜிஎஸ்ஆர் said...
    December 5, 2010 at 8:58 AM

    @சிகப்பு மனிதன்தகவலுக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர