Apr 13, 2010

16

எக்ஸெல் & வேர்டில் Proper Case,Upper Case,Lower Case

  • Apr 13, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கடமையில்லாதவன் ஏழைகளிலெல்லாம் ஏழை

    உங்களுக்கு மின்னஞ்சல் வழியாகவோ அல்லது நண்பர்கள் வழியாகவோ, அலுவலக சம்பந்தபட்ட தகவல் நிறைந்த ஒரு எக்ஸெல் டேட்டா பைல் வந்திருக்கிறது உதாரணத்திற்கு உங்கள் அலுவலகத்தில் உள்ள மொத்த ஊழியர்கள் பெயர் மற்றும் அவர்களது முகவரி அடங்கிய ஒரு ஒரு பைல் வந்திருக்கிறது கீழே உள்ள படத்தை பார்க்கவும் இதில் பாருங்கள் மொத்த பெயர்களும் Capital Letter- ஆக இருக்கிறது சரி இதை எப்படி நீங்கள் உங்கள் விருப்பதிற்கு ஏற்றார்போல் Proper Case(Saidul Farque Ahamed) , Lower Case (saidul farque ahamed) , Upper Case (SAIDUL FARQUE AHAMED) எப்படி மாற்றுவீர்கள் இதில் உள்ளது போல பத்து பெயர்கள் என்றால் ஒன்றும் பிரச்சினையில்லை மீண்டும் ஒரு முறை டைப் செய்து விடலாம் ஆனால் ஆயிரம் பெயர்கள் மற்றும் பிற தகவல்கள் இருக்குமேயானால் எப்படி செய்வீர்கள்



    இந்த பிரச்சினையை தீர்க்க நமக்கு உதவுவது எக்ஸெல் பார்முலா படத்தை கிளிக்கி பாருங்கள் புரியும்.



    இப்படியாக பார்முலா உபயோகித்த பின்னர் கீழே உள்ள படம் பாருங்கள் எழுத்துக்கள் மாறியிருப்பதை



    ஒவ்வொரு வரிசையை மாற்றிய பின் புதிய (Windows Key + R then type excel அல்லது Start –Run –Type excel) எக்ஸெல் திறந்து மாற்றிய டேட்டாக்களை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து நீங்கள் விரும்பும் வகையில் அமைத்துக்கொள்ளவும், காப்பி எடுத்து பேஸ்ட் செய்யும் போது எலியின் வலது பக்கம் கிளிக்கி Paste Special என்பதை தெரிவு செய்து Value என்பதை தேர்ந்தெடுத்து ஓக்கே கொடுக்கவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்



    அடுத்து வேர்டில் எப்படி மாற்றுவது இதில் பார்முலா ஒன்றுமில்லை ஒரு வேர்டு பைல் மொத்தமும் மாற்றவேண்டும் என நினைத்தால் Ctrl + A கொடுத்தால் மொத்த எழுத்துக்களும் செலக்ட் ஆகியிருக்கும் இனி Shift + F3 என அழுத்தினால் உங்களுக்கு தேவையான வடிவில் Proper Case(Saidul Farque Ahamed) , Lower Case (saidul farque ahamed) , Upper Case (SAIDUL FARQUE AHAMED) மாற்றலாம் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் மாற்ற நினைத்தால் அந்த பகுதியை மட்டும் செலக்ட் செய்து Shift + F3 அழுத்தவும்

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    16 Comments
    Comments

    16 Responses to “எக்ஸெல் & வேர்டில் Proper Case,Upper Case,Lower Case”

    Speed Master said...
    August 26, 2010 at 3:02 PM

    useful one Thanks and wishes


    Mohamed Faaique said...
    August 26, 2010 at 3:10 PM

    மிகவும் பயனுள்ள பதிவு நண்பா....


    Mohamed Faaique said...
    August 26, 2010 at 3:18 PM

    pen drive 'ஐ ram ஆக பாவிப்பது பற்றி ஏதும் idea உண்டா?


    ஜிஎஸ்ஆர் said...
    August 26, 2010 at 4:31 PM

    @buruhaniibrahim நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    August 26, 2010 at 4:32 PM

    @Speed Master நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    August 26, 2010 at 4:36 PM

    @Mohamed Faaique இதற்கு ஒரு மென்பொருள் இருக்கிறது இங்கேதரவிறக்கவும் ஆனால் இது இலவசமல்ல


    Vadamally said...
    August 26, 2010 at 6:38 PM

    Very Useful for Me Thank You


    Enathu Ennangal said...
    August 27, 2010 at 10:59 AM

    ஞானசேகர் மிகவும் உபயோகமான பதிவு இது. மீண்டும் பதிவு எழுத வந்தமைக்கு நன்றி. இதற்கு முன்னால் போட்ட பதிவுகளை ஏன் நீக்கிவிட்டிர்கள்.


    Unknown said...
    August 27, 2010 at 3:37 PM

    மிகவும் உபயோகமான பதிவு இது


    ஜிஎஸ்ஆர் said...
    August 28, 2010 at 9:13 AM

    @Vadamallyதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஒரு பதிவின் பலமே தங்களை போன்றோரின் பதிவு பற்றிய கருத்துரைதான்


    ஜிஎஸ்ஆர் said...
    August 28, 2010 at 9:16 AM

    @Enthiran The Robotஇரண்டு பதிவுகளை நீக்கியிருக்கிறேன் அது இரண்டுமே மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் பயன்படாது 1) தமிழிஷில் வாக்களிக்க நண்பர்கள் தேவை 2)வலைத்தளம் மூடப்படுகிறது என்பதாக அதற்கு பதிலாக மேலேயே ஒரு அறிவிப்பு கொடுத்திருக்கிறேனே மேலும் நான் இது வரை புதிதாக பதிவு எழுதவில்லை எல்லாம் என் பழைய பதிவுகள் தான் ஆனால் விரைவிலேயே எழுத ஆசை இருக்கிறது


    ஜிஎஸ்ஆர் said...
    August 28, 2010 at 9:21 AM

    @THE PEDIATRICIANதங்களின் வருகைக்கும் பதிவு சார்ந்த கருத்துரைக்கும் மிக்க நன்றி


    Vengatesh TR said...
    November 28, 2010 at 11:07 AM

    .உங்கள் உதவியுடன், excelல் செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டேன் !


    .பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:44 PM

    @சிகப்பு மனிதன்இதே விஷயத்தை வேர்டில் Shift +F3 அழுத்துவதன் மூலம் செய்யமுடியும்


    Vengatesh TR said...
    November 30, 2010 at 4:29 AM

    .ஆம், நண்பரே,

    .நான் ms-word'ல் பயன்படுத்தி உள்ளேன் !



    .excel'ல் செய்வதை உங்கள் மூலம், தெரிந்து கொண்டேன் !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:22 PM

    @சிகப்பு மனிதன் புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர