Apr 6, 2010

6

இரண்டு வேர்டு பைல் மாற்றங்கள் அறிய

  • Apr 6, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:மனிதர்கள் வாழ்வதெல்லாம் செயல்களின் மூலம் தான். யோசனைகள் மூலம் அல்ல.


    நண்பர்களே வணக்கம் இந்த பதிவு இரண்டு வேர்டு பைல்களில் எந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்காகவே நாம் வழக்கமாக அலுவலக கடிதம் அல்லது சொந்த கடிதம் இப்படி எதுவாக இருந்தாலும் ஏற்கனவே தயாரித்திருந்த File –யை காப்பி எடுப்போம் அல்லது Save as என கொடுத்து சேமித்து பின்னர் அதில் நமக்கு தேவையான மாற்றங்கள் செய்வோம் நாம் பார்க்கபோவது இதைப்பற்றித்தான்.


    நீங்கள் ஒரு அலுவலகத்தில் பணி செய்கிறீர்கள் ஒரு முக்கியமான டெண்டர் பைலில் மீண்டும் சில மாற்றங்கள் செய்து வேறொரு நிறுவனத்திற்கு கொடுப்பதற்காக மாற்றம் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம் ஒன்றோ அல்லது இரண்டோ பக்கம் என்றால் நீங்களாகவே வாசித்து பார்த்தே எதெயெல்லாம் மாற்றியிருக்கிறோம் என கண்டுபிடித்துவிடுவீர்கள் சரி ஐநூறு பக்கம் இருக்கிறதென்றால் என்ன செய்வீர்கள் நீங்கள் ஒரு பத்து இடத்தில் மட்டுமே மாற்றம் செய்திருப்பீர்கள் அதை எப்படி எந்தெந்த பக்கத்தில் எந்த வரியில் மாற்றம் மேற்கொண்டீர்கள் என கண்டுபிடிப்பது கடினம் இல்லையா அது போன்ற நேரத்தில் உங்களுக்கு உதவி செய்யத்தான் இந்த வழிமுறையை பார்க்கப்போகிறோம்.


    இது மைக்ரோசாப்ட் 2007–க்கு பொருந்தும் இனி வழக்கம் போல வேர்டு பைலை திறக்கவும் (Start –Run-Winword) இப்படியும் கமென்ட் வழியாக புதிய வேர்டு பைல் திறக்கலாம் இனி மேலே உள்ள ரிப்பனில் Review எனும் பட்டனை தெரிவுசெய்யும் போது Compare எனும் தெரிவு இருக்கும் அதில்Compare என்பதை தேர்ந்தெடுத்து Original Document எனும் இடத்தில் மாற்றம் செய்யும் முன்பே உள்ள பைல் Revised Document எனுமிடத்தில் நீங்கள் மாற்றம் செய்த பைல் பிரவுஸ் செய்து ஓக்கே கொடுங்கள்





    இனி அடுத்து கீழே இருக்கும் இரண்டு படத்தையும் பாருங்கள் முதலாகவதாக உள்ளது மாற்றங்கள் செய்யப்படாதது இரண்டாவது மாற்றங்கள் செய்தது







    பார்த்தீர்களா முதல் படத்தில் இருக்கும் எஸ்.பி கந்தசாமி எனும் பெயர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஞானசேகர் எனும் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது அதை நமக்கு புரிந்து கொளவதற்காக எஸ்.பி கந்தசாமி எனும் பெயர் அடித்தும் புதிதாக சேர்த்த பெயர் ஞானசேகர் அடிக்கமாலும் இரண்டும் வேறுபடுத்திகாட்ட சிவப்பு நிறத்தில் இருக்கும் இன்னும் நிறைய வசதிகள் இருக்கின்றது நீங்களும் முயற்சித்து பார்க்கவும் இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ கருத்துரையில் பதியவும்.


    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    6 Comments
    Comments

    6 Responses to “இரண்டு வேர்டு பைல் மாற்றங்கள் அறிய”

    Mohamed Faaique said...
    August 22, 2010 at 11:12 AM

    அருமை நண்பா


    Vengatesh TR said...
    November 28, 2010 at 12:14 PM

    .எப்படி இதெல்லாம், யோசிக்கீர்கள் ?


    .அனைவரும் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய trick !


    .தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !


    Vengatesh TR said...
    November 28, 2010 at 12:17 PM

    .எனக்கு ஒரு சந்தேகம் !

    .pdf / image பைலில் உள்ள, font ஐ கண்டுபிடிப்பது எப்படி ?

    .eg:, i had received a document from my friend, on it's document properties -> font tab, too not properly listing !!
    OR
    on advertisement looking stylish font !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:29 PM

    @சிகப்பு மனிதன்இதற்கு வழிமுறைகள் இருப்பதாக தெரியவில்லை தெரியவரும் போது அவசியம் தெரிவிக்க்றேன்


    Vengatesh TR said...
    November 30, 2010 at 4:40 AM

    .நானும் தேடி பார்கிறேன், என்னால் முடிந்த வரை !


    .அனால், வழி இருக்கிறது, நான் கேள்விபட்டிருக்கிறேன் !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:21 PM

    @சிகப்பு மனிதன்முயற்சிப்போம்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர