Apr 11, 2010

20

கணினியில் வைரஸ்

  • Apr 11, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஓரு வரி கருத்து:மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் நீண்ட நாள் அங்கேயே தங்க முடியாது

    கணினி உபயோகிப்பவர்களுக்கு வைரஸ் எனும் பெயர் கேட்டால் கொஞ்சம் அலர்ஜியாகத்தான் இருக்கும் அதிலும் புதியவர்களுக்கு கணினியில் ஏதாவது தகராறு என்றால் உடனே அவர்கள் சர்வீஸ் செய்யத்தான் நினைப்பார்கள் பார்மட் செய்யாமல் வைரஸ் நீக்கினாலும் அவர்களுக்கு அந்த பயம் விலகாது சரி இந்த வைரஸ் எப்படித்தான் நம் கணினியின் உள்ளே நுழைகிறது அந்த நுழைவாயிலை கொஞ்சம் அடைத்தால் இந்த பிரச்சினைக்கு கொஞ்சம் தீர்வு கிடைக்கும்.

    வைரஸ் இணைய வழியிலும் மற்றும் பென் டிரைவிலும்,பிளாப்பி வழியிலும் தான் ஒரு கணினிக்குள்ளாக வைரஸ் வருகிறது அதிலும் இப்போதெல்லாம் பிளாப்பி என்பது இல்லாமல் போய்விட்டது அது ஏன் தகவல் பரிமாற்றத்துக்காக நாம் பயன்படுத்தும் சிடியின் வழியாக வைரஸ் வருவதில்லை ஏனென்றால் அது எழுதுவதற்கு அனுமதிப்பதில்லை ஆனால் பென் டிரைவ் அப்படியில்லை எத்தனை முறை வேண்டுமானாலும் அழித்து பதிந்து கொள்ளலாம் இந்த இடம் தான் வைரஸ்க்கு துணை செல்கிறது

    இப்படி பென் டிரைவில் வரும் வைரஸ் தடுக்க சின்ன வழிமுறையை பின்பற்றலாம் இது சின்ன வழிமுறை ஆனாலும் இதனால் கணினிக்கு அதிக பாதுகாப்பு நிச்சியம், உங்கள் பென் டிரைவில் ஒரு புதிய போல்டர் உருவாக்கி அதற்கு பெயர் autorun.inf என கொடுத்து படத்தில் காண்பித்துள்ளது போல Read Only , Hidden இரண்டையும் தேர்வு செய்து ஓக்கே கொடுத்து விடவும் இனி இந்த போல்டர் உங்கள் பென் டிரைவில் இருந்து மறைந்து விடும்



    எதற்காக இந்த போல்டரை உருவாக்கினோம் பெரும்பான்மையான வைரஸ்கள் இந்த Autorun.inf வழியாகதான் வருகிறது அப்படி வரும் வைரஸ்கள் நமது பென் டிரைவில் ஏற்கனவே ஒரு autorun.inf இருப்பதாலும் அது Read Only , Hidden ஆக இருப்பதாலும் அதனால் இந்த பெயரில் autorun.inf உருவாக்கி உள்ளே வரமுடியாது.

    ஒரு autorun.inf உருவாக்கி விட்டால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா? நீங்கள் உபயோகி்க்கும் பென் டிரைவ் என்றால் அதில் பாதுக்கப்பு ஏற்படுத்தியிருப்பீர்கள் வேறு ஒரு நண்பரின் பென் டிரைவ் தங்கள் கணினியில் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் அப்பொழுது என்ன செய்வீர்கள் இங்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்

    கணினியில் பென் டிரைவ் இனைக்கும் முன்பு ஷிப்ட் கீயை அழுத்தி பிடித்துக்கொள்ளவும் இவ்வாறு செய்வதால் ஒரு வேளை அந்த பென் டிரைவில் வைரஸ் இருந்தால் அது autorun வழியாக தானியங்கியாக திறக்க விடாது இனி கீழே டாஸ்க்பாரில் வலது மூலையில் பென் டிரைவ் கணினியில் இணைந்ததற்கு அறிகுறியாக பச்சை நிற ஆரோ வந்திருக்கும் இனி Windows Key + E உபயோகித்து திறக்கும் விண்டோவில் பென் டிரைவ் தேர்ந்தெடுத்து இருமுறை கிளிக்கி திறக்காமல் வலது கிளிக் வழியாக open என்பதை தேர்ந்தெடுக்கவும் வேண்டுமானால் திறக்கும் முன்பே உங்கள் வைரஸ் காப்பான் கொண்டு சோதித்து விடுங்கள்.

    ஒரு வேளை வைரஸ் இருந்தால்
    1)Start- 2)Run Type 3) Type cmd

    டிரைவின் பெயர் 4) G: (உங்கள் டிரைவின் எழுத்தை பார்த்துக்கொள்ளவும்)

    அடுத்தபடியாக 5) ATTRIB -H -R -S AUTORUN.INF

    மீண்டும் 6) EDIT AUTORUN.INF

    இனி புதிதாக ஒரு ஊதா நிற விண்டோ திறக்கும் அதில் 7)File என்பதில் கிளிக்கி 8)Save as கொடுக்கவும் பின்னர் 9) Exit என கொடுக்கவும்(வெளியேறவும்)

    மீண்டும் 10)Start- 11)Run Type 12) Type cmd

    13) ATTRIB +H +R +S AUTORUN.INF

    அடுத்து 14) EXIT
    அவ்வளவுதான் இனி பென் டிரைவ் எடுத்து மீண்டும் கணினியில் இணைத்துக்கொள்ளுங்கள் இப்போது சோதித்து பாருங்கள் வைரஸ் இருக்காது.

    உங்கள் வைரஸ் கொல்லி எந்தளவிற்க்கு சிறந்தது என சோதித்து பார்க்க கீழே இருக்கும் கோடிங்கை காப்பி செய்து நோட்பேட் திறந்து பேஸ்ட் செய்து சேமித்து பாருங்கள் உங்கள் ஆன்டிவைரஸ் மென்பொருள் சிறப்பாக செயல்பட்டால் இதை சேமிக்க விடாது அப்படி சேமிக்க அனுமதித்தால் ஆண்டிவைரஸ் மென்பொருளை மாற்றிவிட்டு வேறு நல்ல மென்பொருளை நிறுவுங்கள்

    =================================================================================
    X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
    =================================================================================

    சில நேரங்களில் வைரஸ் கன்ட்ரோல் பேனல் மற்றும் ரிஜிஸ்டர்யையும் முடக்கி விடும் அதை சரி செய்ய என் முந்தயை பதிவான காணமல் போன கன்ட்ரோல் பேனல் பாருங்கள்

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    20 Comments
    Comments

    20 Responses to “கணினியில் வைரஸ்”

    Muthu Kumar N said...
    April 11, 2010 at 10:01 AM

    அன்புள்ள ஞானசேகர் அவர்களுக்கு,

    நல்ல தகவல் கீழ்க்கண்ட தவறுகளை திருத்திவி்ட்டீர்களென்றால் இன்னும் நன்றாக இருக்கும்.


    உயரமாண = உயரமான
    பெரும்பாண்மையான = பெரும்பான்மையான
    கண்ட்ரோல = கன்ட்ரோல்
    ஆண்டிவைரஸ் = ஆன்டிவைரஸ்
    இனைந்ததற்கு = இணைந்ததற்கு
    உபயோகிக்கிம் = உபயோகி்க்கும்
    உப்யோகிக்க = உபயோகிக்க
    வைரஸ் இனைய = வைரஸ் இணைய
    துனை = துணை
    வேண்டுமானல் = வேண்டுமானால்
    இனைத்துக்கொள்ளுங்கள் = இணைத்துக்கொள்ளுங்கள்

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்


    ஜிஎஸ்ஆர் said...
    April 11, 2010 at 10:52 AM

    @ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

    தல நீங்க சொன்னமாதிரி மாத்திட்டேன் நேரம் கிடைக்கும் போது ஆன்லைன் வாங்க

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    மாணவன் said...
    April 12, 2010 at 7:18 AM

    Excellent Boss,

    Nice posting.....

    Keep it up...

    Thanks a lot....


    rkajendran2 said...
    April 12, 2010 at 1:32 PM

    நன்றி தலைவா


    Unknown said...
    April 12, 2010 at 1:43 PM

    Hi
    Indha Pentrive Virus Patri Neenka sona vijayam Romba Usefulla irunthadu


    sathiyapalani said...
    April 12, 2010 at 4:30 PM

    Super Boss
    very useful information
    keep it up


    Unknown said...
    April 12, 2010 at 5:33 PM

    Useful Post


    ஜிஎஸ்ஆர் said...
    April 12, 2010 at 7:12 PM

    @DJ.RR.SIMBU.BBA-SINGAI

    வணக்கம் நண்பா தொடர்ந்து வாருங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    April 12, 2010 at 7:13 PM

    @rkajendran2

    என்ன நண்பரே தங்கள் கருத்துரைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள் கருத்துகளை எழுதுங்கள்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    April 12, 2010 at 7:14 PM

    @bhuvana

    வணக்கம் சகோதரி தொடர்ந்து வாருங்கள் தங்களின் கருத்துரைக்கு நன்றி

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    April 12, 2010 at 7:15 PM

    @sathiyapalani

    உங்களின் கருத்துரைகளும் இடும் வாக்குகளும் மேலும் மேலும் எழுத தூண்டுகிறது என்றால் மிகையில்லை

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    April 12, 2010 at 7:16 PM

    @Prem


    தங்களின் கருத்துரைக்கு நன்றி தொடர்ந்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Anonymous said...

    April 18, 2010 at 11:08 PM

    very useful informatio


    Anonymous said...

    April 18, 2010 at 11:27 PM

    very useful information....


    01.மிகவும் சுலபமான xvid dvdrip சொப்ட்வெயரை தருவீா்களா? மற்றும் டிவீடிஜ xvid ஆக மாற்றும் படிமுறையையும் கூறுங்கள்.


    ஜிஎஸ்ஆர் said...
    April 19, 2010 at 8:52 AM

    @Anonymous

    நன்றி அனானி அவர்களே

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    April 19, 2010 at 8:54 AM

    @Anonymous

    மிக விரைவிலேயே உங்களுக்காக அதை பற்றி ஒரு பதிவாக எழுதிவிடுகிறேன் போதிய நேரமின்மையும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    நண்பன் said...
    April 22, 2010 at 9:08 AM

    மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் நீண்ட நாள் அங்கேயே தங்க முடியாது


    Vengatesh TR said...
    November 28, 2010 at 11:30 AM

    .chrome browser'l, உங்கள்-தள படங்கள்(pictures) முழுவதுமாக அவ்வபோது தெரியமறுக்கிறது !

    .நான் செட்டிங்க்ஸ் ஏதாவது மாற்ற வேண்டுமா, நண்பரே ?


    .உங்கள் எழுடானிக்கு நன்றி, நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:41 PM

    @சிகப்பு மனிதன்chrome browser-ல் இது போன்ற பிரச்சினைகளை நானும் சந்திக்கிறேன் ஆனால் சரி செய்வதற்கான வழிமுறை தான் தெரியவில்லை பார்க்கலாம் ஏதாவது வழி தெரிந்தால் தெரிவிக்கிறேன்


    Vengatesh TR said...
    December 7, 2010 at 7:13 AM

    .காத்திருக்கிறேன் ..

    .நன்றி நண்பரே !


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர