Dec 30, 2012

20

தங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்! சுங்க வரியும்!

  • Dec 30, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: ஒரு மரத்திலுள்ள பழங்களை எண்ணி விடலம் . ஒரு பழத்தால் உருவாகப் போகும் மரங்களை எண்ண முடியாது.

    வணக்கம் நண்பர்களே பல மாதங்களாக எழுத முடியாத நிலை இப்பொழுதும் கூட அதே நிலை தான் ஆனால் சமீபத்தில் பேஸ்புக் தளத்தில் தங்கத்தை பற்றிய ஒரு கட்டுரையை காண நேர்ந்தது அதன் உந்துதல் தான் இந்த பதிவு. இந்த பதிவையே உங்களை வாழ்த்துவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு உங்களை வாழ்த்த விரும்புகிறேன் . அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் -2013, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.

    நம் எல்லோருக்கும் தெரியும், நாம் வாங்கும் ஆபரணங்கள் பெரும்பாலும் 22 கேரட் வகையை சேர்ந்தது அதைத்தான் 916 என்பார்கள், இன்னும் சில இடங்களில் KDM அதாவது (Cadmium) இதில் இந்த KDM நகைகள் தற்போது அதிகளவில் மார்கெட் செய்யப்படுவதில்லை பல நாடுகளில் தங்கத்தில் KDM பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு விட்டது.

    KDM என்றால் என்ன? எதனால் இது தங்கத்தொழிலில் தடை செய்யப்பட்டது இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு இப்ப வந்திருக்கும் தானே? KDM (Cadmium) ஒரு கெமிக்கல் கலவை அதாவது சாதரணமாக தங்கத்தோடு வெள்ளி, மற்றும் செம்பு மட்டுமே கலந்து ஆபரணங்கள் செய்வார்கள், ஆனால் KDM நகையை பொருத்த வரை தங்கத்தோடு கலப்பதற்கு Cadmium எனும் ரசயானக்கலவையை பயனபடுத்துவார்கள், இதனால் தங்கத்தின் நிறம் பளிச்சென இருக்கும் ஆனால் இதை தொழில் முறையாக செய்பவருக்கு நிச்சியம் உடல் நிலை பாதிக்க படும் மற்றபடி இதை அணிபவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    பொதுவாக தங்கம் 8 Ct , 9 Ct, 10 Ct, 12 Ct, 14 Ct, 15 Ct, 16 Ct, 18 Ct, 19 Ct ,20 Ct, 21 Ct, 21.6 Ct, 22 Ct ,23 Ct, 24 Ct இந்த நிலைகளில் மட்டுமே காணப்படுகிறது 8 Ct க்கு கீழே இருப்பவற்றை தங்கம் என்பதாக கணக்கில் எடுப்பதை விட ஏதோ ஒரு உலோகம் என்று வேண்டுமானல் வைத்துக்கொள்ளலாம். நமது நாட்டை பொருத்தவரை 18 Ct முதல் 24 Ct Purity தங்கம் மட்டுமே பெரும்பாண்மையாக பயன்படுத்த படுகிறது அதே நேரத்த்தில் 8 Ct முதல் 16 Ct வரையிலான Purity தங்கம் மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பயன்படுத்த படுகிறது.

    தங்கத்தை பொருத்தவரை 24 Ct என்பது சுத்த தங்கம் அதாவது இதன் Purity என்பது 999.99% என்பதாகும் அதாவது 24 Ct தங்கத்தில் 0.01% வெள்ளியும், செம்பும் கலக்கபட்டிருக்கும், ஆனால் உலக அளவில் 99.9% Purity என்பது 24 Ct சுத்த தங்கமாக ஏற்றுக்கொள்ளபட்டிருக்கிறது, ஆனால் மிகவும் மென்மையாக இருப்பதால், 24 Ct தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியாது இந்த 24 Ct தங்கத்தை தொழில்முறை ரீதியாக 24 பார்ட் என்கிறார்கள் அதாவது 24 பார்ட் என்பது 999.99% Purity தஙகமாகும் இதில் வெறும் 0.01% அளவு மட்டுமே வேறு உலோகம் சேர்க்கபட்டிருக்கிறது, 22 Ct என்பது 22 பார்ட் அதாவது 91.66 Purity தங்கமாகும். அதாவது சுருக்கமாக சொலவதானால் ஒரு பார்ட் என்பது 4.1666 % Purity ஆக கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் வெளி நாட்டு நகைகளில் உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகள் (வளைகுடா நாடுகள்) மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் 22 Ct தங்கம் 91.7 % Purity ஆக காணப்படும் சாத்தியக்கூறுகள் தெரிகிறது. ஆனால் நம் ஊரை பொருத்த வரை 91.66 % Purity என்பது அப்படியே இருந்தால் சந்தோஷம் தான்.

    தங்கத்தின் Purity-யை எப்படி தெரிந்துகொள்வது?

    24 Ct X 4.1666 = 99.99 % Purity
    23 Ct X 4.1666 = 95.83 % Purity
    22 Ct X 4.1666 = 91.66 % Purity
    20 Ct X 4.1666 = 83.33 % Purity
    18 Ct X 4.1666 = 74.99 % Purity

    இதை முறையை வேறு விதமாகவும் கையளாலம்.

    24 Ct / 24 Ct = 100 % Purity
    23 Ct / 24 Ct = 95.83 % Purity
    22 Ct / 24 Ct = 91.66 % Purity
    20 Ct / 24 Ct = 83.33 % Purity
    18 Ct / 24 Ct = 0.75 % Purity

    மேலே சொன்னது உங்களுக்கு புரித்திருக்கும் தானே? இப்படியே 8 Ct முதல் 22 Ct வரையிலான தங்கத்தின் Purity-யை தெரிந்துகொள்ளலாம். வழக்கமான கணித முறைகள் போலவே புள்ளிகளுக்கு அடுத்த வரும் இலக்கங்களை முழுமையான எண்ணாக மாற்றிக்கொள்ளலாம், உதாரணத்திற்கு 18 X 4.1666 = 74.99 % Purity என்பதை 75 % Purity என்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

    சரி நீங்கள் 22 Ct தங்கத்தில் 1 Gram அளவில் தங்க நகையை வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் இந்த 22 Ct தங்கம் முழுவதும் தங்கம் தானா? இந்த 1 Gram தங்கத்தில் உண்மையில் எத்தனை கிராம் சுத்தமான தங்கமும், எத்தனை மில்லி கிராம் செம்பும், வெள்ளியும் கலக்கபட்டிருக்கிறது என்பதை எந்த நகை கடையும் சொல்வதில்லை, ஆனால் அவர்கள் நேரடியாக சொல்லாவிட்டாலும் 916 KDM அல்லது 22 Ct என்று மட்டும் தான் சொல்வார்கள் எத்தனை பேருக்கு தெரியும் இது தான் தங்கத்தின் Purity என்பது, பெரும்பாலோனோர் இதை ஒரு தரப்படுத்தும் குறியீடாக தான் புரிந்து வைத்திருக்கிறார்கள் (ISO முத்திரை போல) என்பது நான் கண்ட உண்மை.

    உங்க கிட்ட 1 Gram (22 Ct) இருந்தால், அதை 24 Ct Purity தங்கமா மாத்தும் போது எத்தனை கிராம் 24 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.

    Formula 1: 1 Gram x 22 Ct / 24 Ct = 0.917 Milli Gram
    Formula 2: 1 Gram / 1.09 = 0.917 Milli Gram

    இதில் இரண்டாவது பார்முலா என்பதில் 1.09 என்பது எப்படி வந்தது என கேள்வி எழுமேயானால் அதற்கான பதில் இது தான் 24 Ct / 22 Ct = 1.09, இதில் சிறிய அளவிலான மைக்ரோ மில்லி கிராம் அளவில் சிறிய மாறுதல்கள் இருக்கும்.

    இதே போல உங்க கிட்ட 1 Gram (24 Ct) இருந்தா அதை நீங்க 22 Ct நகையா மாத்தும் போது எத்தனை கிராம் 22 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.

    Formula 1: 1 Gram X 24 Ct / 22Ct = 1.09 Gram (22 Ct)
    Formula 2: 1 Gram / 0.9166 = 1.09 Gram (22 Ct)

    தங்கத்தில் உலோகம் கலக்கும் அளவு.

    • 24 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 0.01% அளவில் கலந்து இருக்கும்.
    • 22 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 8.3 % அளவில் கலந்து இருக்கும்.
    • 18 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல் சேர்ந்து 25% அளவில் கலந்து இருக்கும்.
    • 14 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல், துத்தநாகம் மற்றும் பல்லேடியம் போன்றவை சேர்த்து 41.5 % அளவில் கலந்து இருக்கும்..

    நம்மில் பலரும் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்க சென்றால் ஆயிரம் கேள்வி கேட்டு, கத்தரிக்காயை அமுக்கி பார்த்து, வெண்டைக்காயை உடைச்சு பார்த்து வாங்குற நாம நகைக்கடைக்கு போன அந்த தங்கம் சுத்தமானது தானா? அதன் Purity சரிதானா? என எதையும் யோசிக்க மாட்டோம், கடைக்காரன் கொடுக்கிற ஒரு கூல்ட்டிரிங்க்ஸோ அல்லது டீயையோ குடிச்சிட்டு அவன் சொல்ற விலைக்கு வாங்கிட்டு வந்துகிட்டே இருப்போம், இப்படி நாம நம்புற ஒரு நகை கடைக்காரன் நம்ம கிட்ட எப்படி கொள்ளையடிக்கிறான் தெரியுமா, நம்மள ஏமாத்துறதுக்காகவே செய்கூலி, சேதாரம் வச்சுருக்காங்க.

    சேதாரம்னா என்ன ஒரு பொருளை இனி உபயோகிக்கவே முடியாத என்கிற அளவில் இருப்பதை தான் சேதாரமாகி விட்டது என்று எடுத்துக்கொள்லலாம். 1 கிராம் நகை எடுக்கிறதுக்கு 30 % செய்கூலி சேதாரம் கொடுக்க வேண்டியிருக்கு அதாவது பொருளோட மதிப்புக்கு 3/1 பாகத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்கு 1000 ரூபாய்க்கு நகை வாங்கின 300 ரூபாய் செய்கூலி சேதாரமா கொடுக்க வேண்டியிருக்கு.

    ஒரு பொருளை செய்வதற்கு செய்கூலி என்பது நியாயமானது வெறும் தங்க துகள்களாக, தங்க கட்டிகளாக இருப்பதை நமக்கு பிடித்த விதத்தில் டிசைன்கள் செய்து தருவதற்கு நாம் நிச்சியம் செய்கூலி கொடுத்து தான் ஆகவேண்டும். ஆனால் இதில் சேதாரம் என்பது தான் பகல் கொள்ளையாக இருக்கிறது தங்கத்தை பொருத்தவரை கழிவு என்பதே இல்லை, அப்படியே பயன்படுத்த முடியாத தங்கமாக இருந்தால் அதை நம்மிடம் தந்துவிட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொள்வது தானே முறை, ஆனால் பொருளை நமக்கு தராமலே அவர்களே வைத்துக்கொண்டு நம்மிடம் சேதாரம் என்பதாக பணம் பறிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

    உங்களுக்கு தெரியுமா தங்க பட்டறைகளில் கூட்டி பெருக்கி குப்பயை கூட வெளியே அள்ளி போட்டு விடமாட்டார்கள் அத்தனையும் சேர்த்து வைத்து சலித்து விடுவார்கள், சலித்து முடித்தவுடன் குப்பையை வெளியே அள்ளி போட்டு விடுவார்கள் என நினைத்தால் அது தான் இல்லை அதையும் அவர்கள் இதற்கென்றே இருக்கும் சிறிய தொழிலாளிகளிடம் விற்று விடுவார்கள். இந்த குப்பை மண்ணை வாங்கியவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இதில் இருந்து ஏதாவது கிடைக்க கூடும், அப்படி கிடைக்குமென்று தான் நினைக்கிறேன் இல்லையென்றால் இந்த கழிவை வாங்க மாட்டார்கள் தானே? ஆக எப்படி பார்த்தாலும் நகை பட்டறைகளில் இருந்து சில பல மில்லி கிராம் தங்க துகள்கள் வெளியில் செல்லுமே தவிர கிராம் கணக்கில் போவதற்கான வாய்ப்பு மிக குறைவு, ஆனால் நாம் நகை வாங்கும் போது 30% செய்கூலி சேதாரம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் உண்மையில் நெடு நாட்களாக நகை கடைகளில் வாடிக்கையாளனை நூதனமாக ஏமாற்றி கொள்ளை அடிக்கபடுகிறது, எல்லாவற்றுக்கும் சட்டம் போடும் அரசு கூட இந்த பகல் கொள்ளை விஷயத்தில் அக்கரை எடுத்ததாய் தெரியவில்லை ஒருவேளை அரசு அதை மறைமுகமாக மனப்பூர்வமாக நகைக்கடை வியாபாரிகளை அனுமதிக்கிறது என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

    இந்தியாவில், தமிழகத்தில் பெரிய சில கடைகளில் மட்டுமே தங்கத்தின் Purity தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது மற்ற பெரும்பாலன கடைகளில் Purity பற்றி தெரிந்துகொள்ள வசதியில்லை, ஆனால் வெளி இடங்களில் Purity சோதனை செய்வதற்காகவே சில கடைகள் இயங்குகின்றன, ஆனால் நகை ஒரு இடத்தில் வாங்கி அதன் பின்னர் வேறொரு கடைக்கு சென்று சோதனை செய்வதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத காரியம்.. நம்பிக்கையோடு நகையை வாங்கும் நம்மை போன்ற மக்களை மறைமுகமாய் இப்படி பகல் கொள்ளை அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.

    வெளி நாட்டில் இருப்பவர்கள் ஆபரண தங்கம் வாங்க நினைத்தால் அங்கேயே 22Ct நகைகளாக வாங்குவது நல்லது, தங்கத்திற்கான Purity உத்ராவாதம் கிடைக்கும், செய்கூலியும் குறைவாய் இருக்குமென்று கேள்விபட்டிருக்கிறேன், அதே நேரத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாய் தங்க பிஸ்கட் வாங்கி வந்து ஊரில் செய்து கொள்ளலாம் என நினைத்தால் Purity-க்கு எந்த இந்தியாவில் எந்த உத்ரவாதமும் இல்லை வெளிநாட்டு நண்பர்கள் வாயிலாக அறிந்த வரை இந்தியாவில் தான் செய்கூலி சேதாரம் என்பது மிகவும் அதிகம். அதே நேரத்தில் வணிக நோக்கோடு தங்கம் வாங்க நினைத்தால் தங்க பிஸ்கெட்கள் வாங்கி வருதல் நலம், இந்தியாவில் நல்ல விலையும் கிடைக்கும். ஆனால் மத்திய அரசின் புதிய விதிப்படி ஆண் நபர் ஒருவர் இந்திய ரூபாய் 10,000 மதிப்பிலான தங்கம் மட்டுமே கொண்டு வரமுடியும், பெண் நபர் ஒருவர் 20,000 ரூபாய் மதிப்பிலான நகை மட்டுமே கொண்டு வரமுடியும் அதற்கு மேல் இருந்தால் கஸ்டம்ஸில் பணம் கட்ட வேண்டியதிருக்கும் ஒவ்வொரு பத்து கிராம் நகைக்கும் 450 ரூபாய் வீதம் + 3% வரி உட்பட கட்ட வேண்டியிருக்கும், பணம் கட்டி நகையை கொண்டு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் உங்கள் ஆபரணங்களை ஏர்போர்ட்டிலேயே வைத்து அதற்கான அடையாள சீட்டை பெற்றுக்கொள்வதன் மூலம் திரும்பி செல்லும் போது உங்கள் நகையை பெற்றுக்கொள்ள முடியும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Feb 28, 2012

    16

    MP3 பாடலில் உங்கள் போட்டோவையும் இனைக்கலாம்.

  • Feb 28, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கோபம் வாயை திறக்க வைக்கும் ஆனால் கண்களை மூடி விடும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக MP3 பாடலில் ஒரு போட்டோவை எப்படி இனைப்பது என்பது பற்றி பார்க்கலாம். உங்களில் சிலராவது சில MP3 பாடல்களை விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கும் போது விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்கம் அந்த பாடலின் படத்துடைய போட்டோவோ அல்லது பாடிய நபரின் போட்டோவோ பார்த்திருக்க கூடும் இல்லையா? இதைப்பற்றி சிலருக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு எப்படி என்ற கேள்வி இருக்குமேயானால் அதற்கான விடையைத்தான் இப்போது பார்க்க போகிறோம். இதற்கான வழிமுறைகள் மூன்று விதங்களில் இருக்கிறது நாம் முதல் இரண்டு வழிகளை பார்க்கலாம்.

    சரி ஏதாவது ஒரு MP3 பாடலை உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரில் திறந்து கீழிருக்கும் படத்தில் இருப்பது போல Media Library கிளிக் செய்து நீங்கள் போட்டோ இனைக்க விரும்பும் டிராக்கை தெரிவு செய்து இடது கிளிக் செய்வதன் மூலமாக திறக்கும் மெனுவில் Advanced Tag Editor செலக்ட் செய்யவும்.



    இப்பொழுது கீழிருப்பது போல ஒரு பாப் அப் விண்டோ திற்க்கும் அதில் Picture டேப் திறந்து நீங்கள் விரும்பும் போட்டோவை பிரவுஸ் செய்து அப்ளை கொடுத்து ஓக்கே கொடுக்கவும்.



    இது நான் உங்களுக்காக இனைத்திருக்கும் படம் வலது பக்கம் பாருங்கள் ஒரு போட்டோ இனைத்திருக்கிறேன்.



    இரண்டாவதாக MP3
    மென்பொருள் இருக்கிறது தேவைப்படுபவர்கள் தரவிறக்கி இன்ஸ்டால் செய்து அப்ளிகேஷனை ரன் செய்யவும் இதில் நீங்கள் போட்டோ இனைக்க விரும்பும் MP3 பாடல்களை ஏதாவது ஒரு போல்டரில் வைத்து கீழிருக்கும் படத்தில் குறிப்பிட்டு இருப்பது போல செய்து விடவும் அவ்வளவு தான் இனி உங்கள் MP3 பாடலை விண்டோஸ் மீடியா பிளேயரிலோ அல்லது www.videolan.org
    இயக்கினால் கூடவே நீங்கள் இனைத்த போடோவையும் காணமுடியும்.



    VLC பிளேயரில் நான் ஒரு MP3 பாடலை ஓட விட்ட போது நான் இனைத்திருக்கும் போட்டோவும் கூடவே தெரிகிறது.



    நண்பர்கள் கவணத்திற்கு சில நேரங்களில் உங்கள் VLC Player ஒருவேளை போட்டோவை காண்பிக்காமல் இருக்கலாம் அதற்கான தீர்வு http://forum.videolan.org
    அல்லது http://forums.mp3tag.de
    இருக்கிறது முயற்சித்து பாருங்கள் வேறேதுனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் கேளுங்கள் எனக்கும் தெரிந்தால் நிச்சியம் பதில் அளிக்கிறேன்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Feb 5, 2012

    8

    எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு.

  • Feb 5, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: தன்னை புகழந்து கொள்வதும். பிறரை இகழ்வதும் பொய்க்கு இனையானது.

    வணக்கம் நண்பர்களே எக்‌ஷெல் பற்றி நம்மில் அநேகருக்கு தெரியும் கிட்டதட்ட இதுவும் ஒரு கடல் போலத்தான் எக்‌ஷெல்லில் எத்தனையோ விதமான காரியங்களை செய்யமுடியும் அந்தளவுக்கு அதன் திறன் இருக்கும், சொல்லப்போனால் எக்‌ஷெல்லுக்கென்றே ஒரு தளம் ஆரம்பித்து எழுதலாம் ஆனாலும் நான் இந்த பதிவின் வாயிலாக ஒரு எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களை மட்டும் எப்படி எடிட் செய்யவிடாமல் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    நான் உபயோகிப்பது மைக்ரோசாப்ட்டின் ஆபிஸ் தொகுப்பு2010 (Microsoft Office 2010) ஆனால் இதே வழிமுறைதான் மற்ற தொகுப்புகளிலும் இருக்கும் சரி இப்போது புதிதாய் ஒரு எக்‌ஷெல் திறந்து கொள்ளுங்கள் (Start ->Run->type excel then enter) இனி பட்த்தில் காண்பித்திருப்பது போல மேலே இடது பக்கம் மூலையில் சிறிய கட்டம் போல இருக்கும் இடத்தில் இடது கிளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது Ctrl+A என்பதை அழுத்துவது மூலமாகவோ Format Cells என்பதை தெரிவு செய்யவும்.



    இப்போது தங்களுக்கு படத்தில் இருப்பது போல ஒரு பாப் அப் விண்டோ திறந்திருக்கும் அதில் Protection என்கிற டேப் திறந்து அதில் இருக்கும் Locked என்பதன் அருகில் இருக்கும் டிக் குறியை (Tick Mark) எடுத்துவிட்டு ஓக்கே கொடுக்கவும்.



    இனி எக்‌ஷெல் பைலில் தாங்கள் எந்த பகுதியை அல்லது எந்த செல்களை பூட்ட விரும்புகிறீர்களோ அந்த பகுதியை செலக்ட் செய்யவும் உதாரணமாக இரு வேறு பகுதிகளில் இரண்டு விதமான செல்களை பூட்ட நினைத்தால் முதலில் ஒரு பகுதியை செலக்ட் செய்த பின்னர் அடுத்த பகுதிக்கு செல்ல Ctrl கீயை அழுத்திக்கொண்டு அடுத்த பகுதியையும் செலக்ட் செய்யமுடியும். இப்படி செலக்ட் செய்த பின்னர் செலக்ட் செய்த பகுதியில் மவுஸ் பாயிண்டர் கொண்டு வந்து அந்த இடத்தில் மவுஸால் இடது கிளிக் செய்வதன் மூலம் மீண்டும் Format Cells தெரிவு செய்வதன் மூலம் திறக்கும் பாப் அப் விண்டோவில் Protection என்கிற டேப் திறந்து அதில் இருக்கும் Locked என்பதன் அருகில் ஒரு டிக் மார்க்(Tick Mark) குறியை ஏற்படுத்த்தி ஓக்கே கொடுக்கவும்.



    இனி நாம் இதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து சேமித்து விட்டால் மற்றவர்கள் இந்த பைலில் நீங்கள் பூட்டியிருக்கும் செல்லில் எந்தவிதமான மாற்றஙக்ளையும் செய்யமுடியாது ஆனால் உங்கள் பைலை திறக்க முடியும். இறுதிகட்டமாக நீங்கள் செய்யவேண்டியது உங்கள் எக்‌ஷெல் டூல் வரிசையில் Review என்பதாக இருக்கும் டூல் கிளிக்குவதன் மூலம் அதிலிருக்கும் Protect Sheet என்பதை கிளிக்கி திறக்கும் பாப் அப் விண்டோவில் Select Unlocked Cells என்பதன் அருகில் ஒரு டிக் மார்க் (Tick Mark) கொடுத்து மேலே பாஸ்வேர்டுக்கான இடத்தில் பாஸ்வேர்ட் கொடுத்து ஓக்கே கொடுத்தால் மீண்டும் பாஸ்வேர்ட் கன்பர்மேசன் கேட்கும் அதையும் கொடுத்தால் அவ்வளவுதான்.



    என்ன நண்பர்களே இப்போது நீங்கள் உங்கள் எக்‌ஷெல் பைலை சோதித்து பாருங்கள் நீங்கள் பூட்டியிருக்கும் செல்களில் எந்த மாற்றத்தையும் செய்யமுடியாது. சரி மொத்தமாவே பைலை யாரும் திறக்க முடியாத படி செய்யனுமா? வேர்டுக்கும் எக்ஸெலுக்கும் பூட்டு போடு பாருங்க உங்களுக்கு உதவியாய் இருக்கும். பதிவு உபயோகமா இருக்கா? நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Jan 30, 2012

    15

    வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும்.

  • Jan 30, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: ஆபத்திற்கு உதவுவது எப்பொழும் சொந்தமல்ல நட்பு மட்டுமே.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பதிவுகள் எழுதும் நண்பர்களுக்காக, உங்களில் சிலர் சில வலைத்தளங்களில் ஏதாவது ஒரு தகவலை காப்பி எடுத்து வேர்ட் பைலிலோ அல்லது இன்ன பிறவற்றில் பேஸ்ட் செய்யும் போது நாம் காப்பி எடுத்த தகவலோடு அந்த பதிவின் உரலும் (Read more :-http://gsr-gentle.blogspot.com) கூடவே உங்கள் கிளிப்பேர்டில் வந்து இருக்கும் நாம் இந்த பதிவின் வழியாக பார்க்க போவதும் இதைப்பற்றி தான். நான் என்ன சொல்கிறேன் என்பது சரியாக புரியாதவர்கள் என் தளத்தில் இருந்து ஏதாவது ஒரு பகுதியை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து பாருங்கள் புரியும்.

    இனி நீங்கள் செய்ய வேண்டியது tynt™ publisher tools தளத்திற்கு சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுத்து உங்களுக்கென ஒரு அக்கவுண்ட் உருவாக்கவும்.



    நீங்கள் அக்கவுண்ட் உருவாக்கியதும் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பக்கம் திறக்கும் அதில் உங்கள் தளத்துக்கான ஸ்கிரிப்ட் வந்திருக்கும், ஸ்கிரிப்ட் காப்பி எடுத்து உங்கள் பிளாக்கர் தளம் திறந்து Design-> Edit Html சென்று Ctrl +F அழுத்தி <head> என்பதை கண்டுபிடித்து அதற்கு மேலாக நீங்கள் காப்பி எடுத்த ஸ்கிரிப்ட்டை பேஸ்ட் செய்து விடவும் அவ்வளவு தான். முடிந்தால் ஸ்கிரிப்ட் பேஸ்ட் செய்யும் முன், ஸ்கிரிப்டின் தொடக்கத்தில் <!—XXXXXXX Start--> ஸ்கிரிப்டின் முடிவில் <!—XXXXXXX End--> இப்படியாக சேர்த்து விடுங்கள் XXXXXXX என்பதில் உங்களுக்கு புரியும் வகையிலான தலைப்பை கொடுத்து விடுங்கள் பின்னாளில் தேவையில்லையென்றால் நீக்குவதற்கு ஸ்கிரிப்ட் கண்டுபிடிக்க உதவியாய் இருக்கும்.



    நீங்கள் இதில் கூடுதலாக மாற்றங்கள் செய்ய விரும்பினால் Customize Attribution கிளிக்குவதன் மூலம் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ள முடியும்.

    கூடவே ஒரு செய்தி இதை வைப்பதால் மட்டும் காப்பி எடுத்தவர்கள் உங்கள் பதிவின் உரலை இனைப்பார்கள் என்று கணவு காண வேண்டாம் அழகாக டெலிட் செய்து விடுவார்கள் அது மட்டுமல்லாமல் இது போன்ற தளங்களில் காப்பி எடுக்கும் போது கூடவே வரும் URL வராமல் செய்வதற்கான வழிகளும் இனையத்தில் இருக்கிறது.

    என்ன நண்பர்களே பதிவு உங்களுக்கு உதவியானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Jan 10, 2012

    3

    தங்க நாணயம் 99

  • Jan 10, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: மனிதன் பிறப்பது மெய்ஞனாக ஆனால் இறப்பதோ வஞ்சகனாக.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் ஒரு கதையின் வழியாக இன்றைய எதார்த்த மனிதனின் நிலையை சொல்லிவிட முடியுமா என்றால் சொல்லிவிட முடியும் என்பது தான் உண்மை முன்பெல்லாம் குறும்படம் பற்றி அதிகம் தெரியாது ஆனால் இப்பொழுது யூடியுப்பில் நான் அதிகம் விரும்பி தேடி பார்ப்பது குறும்படங்களை தான்.. உண்மையில் ஆச்சரியமாய் இருக்கிறது 10 நிமிடத்திற்குள் எத்தனை அழகாய் ஆழமாய் அந்த உணர்வுகளை நமக்குள் உள்வாங்க வைத்துவிடுகிறார்கள் அதிலும் கனேஷ்குமார் டீம் ஒன்று இருக்கிறது அவர்களின் நகைச்சுவை குறும்படங்கள் நன்றாயிருக்கும் நேரமிருந்தால் பாருங்களேன்.

    நான் விரும்பும் தளங்களில் pkp
    , urssimbu
    , www.mybloggertricks.com
    இவைகளும் அடங்கும் இதில் பிகேபி
    குறித்தும் சிலம்பரசன்
    குறித்தும் சில பதிவுகளில் சுட்டிக்காட்டியிருக்கிறேன் ஆனால் பலமுறை பாகிஸ்தான் நண்பர் Mohammad Mustafa Ahmedzai எழுதும் www.mybloggertricks.com
    குறித்து ஏதாவது ஒரு பதிவில் வெளிப்படுத்த நினைப்பேன் ஆனால் குறிப்பிடுவதற்கான இடம் இல்லாததால் இதுவரை அவரை பற்றி குறிப்பிடமுடியவில்லை மேலும் அவர் எழுதுவது எல்லாமே பிளாக்கர் தொழில்நுட்பம், HTML நிரல்கள் தான் என்பதால் அதை எடுத்து மீண்டும் ஒரு மறுபதிப்பு செய்வதில் விருப்பமில்லை இவருடைய தள பதிவுகள் அதிலும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவுகள் பரவலாய் இனையதளத்தில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பேதமில்லாமல் பரவிக்கிடக்கிறது. மேலும் பிளாக்கர் தொழில்நுட்ப தளங்களின் தகவல்களுக்கு பிளாக்கர் தொழில்நுட்ப தளங்கள்
    .

    இப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் Mohammad Mustafa Ahmedzai
    ஒரு குட்டி கதையை தன் தளத்தில் சொல்லியிருந்தார் அதையே கொஞ்சம் சுருக்கமாக நமது நடையில் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு வேளை நான் விரும்பியது போல யோசித்த்து போல உங்களையும் யோசிக்க வைக்கலாம்.

    ஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம், பொருள் இருக்கிறது அந்த ஊரில் 80% நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலைபார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள் ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை ஆனால் என்ன குறை என்பதையும் அவரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை ஆனால் தன்னிடம் கூலி வாங்கி ஜீவணம் செய்யும் கூலித்தொழிலாளி தன் குழந்தையுடன் குடும்ப சந்தோஷமாக இருக்கிறானே இது எப்படி முடிகிறது என தன் வீட்டு மேனேஜரிடம் கேட்கிறார் உடனே மேனேஜர் அதற்கான ஒரு காரணத்தை சொல்லுகிறார் மேலும் கூடவே ஒரு ஆலோசனையும் சொல்லுகிறார்.

    ஆலோசனையின் படியே 99 தங்க்காசுகளை ஒரு பையில் இட்டு அதை அந்த ஏழை கூலித்தொழிலாளியின் வீட்டு வாசலில் இரவிலேயே போட்டுவிடுகிறார்கள் விடிந்த்தும் கூலித்தொழிலாளி கதவை திறக்கும் போது வாசலில் ஒரு பை இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் எடுத்து பிரித்து பார்க்கிறார் அதில் 99 தங்க காசுகள் ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் அதிர்ச்சி ஆனால் சந்தோஷத்தை கொண்டாடமல் மீண்டும் அந்த தங்க காசுகளை எண்ணி பார்க்கிறார் அதே 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது ஆனாலும் மீண்டும் எண்ணி பார்க்கிறார் அப்போதும் 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது அங்கும் இங்கும் தேடிப்பாத்தும் 100 தங்கக்காசுகள் கிடைக்கவில்லை ஆனால் இப்போது இவருக்கு 99 தங்கக்காசு கிடைத்த போது சந்தோஷப்படாமல் இல்லாத ஒரு தங்க காசுக்கு ஏங்குகிறார் 99 தங்க்காசுகளை 100 ஆக எப்படியும் மாற்றி விட முடிவு எடுக்கிறார்.

    கூலித்தொழிலாளி தன் மேனேஜரிடம் சென்று தனக்கு கொஞ்சம் பணத்தேவை இருப்பதாக சொல்லி தன்னை கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கும்படி கேட்கிறார் அதற்கு மேனேஜரும் சம்மதிக்கிறார் அன்று முதல் எப்படியும் ஒரு தங்க காசு வாங்கி தன்னிடம் இருக்கும் 99 தங்க காசுகளை 100 தங்க காசுகளாக சேர்த்துவிட வேண்டுமென்ற வெறியில் பல மணி நேரம் உழைக்கிறார் இப்படி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய மகன் அப்பா எனக்கு விளையாட்டு பொருள் வேண்டும் என கேட்கிறான் ஆனால் அதுவரை மகனிடம் கோபப்படாத தந்தை இப்போது மிகுந்த கோபத்துடன் இப்படி தேவையில்லாத செலவுகளுக்கு எல்லாம் பணத்தை வீணாக்க முடியாது என்பதாக கடினமான வார்த்தைகளை பிரயோகித்து மகனுடன் கூட நேரம் செலவலிக்காமல் ஒரு தங்க காசு மட்டுமே குறியாய் இருக்கிறார்.

    இதிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிந்துகொள்ள முடிகிறதா? இப்படித்தான் இன்று நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நமக்கு கிடைப்பதை வைத்து நாம் சந்தோஷப்படுவதில்லை 10 ரூபாய் கிடைத்தால் 20 ரூபாய் கிடைக்காதவென மனது ஏங்கும் இலட்ச ரூபாய் கிடைத்தால் மனம் கோடிக்கு (தெருக்கோடிக்கு அல்ல) ஆசைப்படும். நமக்குள்ளே இருக்கும் சந்தோஷத்தை நாம் பணத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மனதை ரணமாக்கி நம் சந்தோஷத்தையும் இழந்து நம் குடும்பத்தினர் சந்தோஷத்தையும் சேர்த்தே அழித்து விடுகிறோம்.

    உலகத்தில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் எல்லோரையும் பார்த்து நமக்கு பொறாமையோ, ஆற்றாமையோ இருக்கும் பொதுவாக அவர்களுக்கு என்ன அவர்களிடம் எல்லாம் இருக்கிறது என்பதாக நினைப்போம் ஆனால் அவர்கள் நிலையோ நாம் மேலே பார்த்த கூலித்தொழிலாளி கதையாகத்தான் இருக்கும்.

    எல்லாவற்றிலும் விதி விலக்குகள் இருப்பது போல பெரும் கோடீஸ்வரர்களிலும் சில விதி விலக்குகள் இருக்கிறார்கள் உதாரணத்திற்கு : வார்ன் பப்பட், பில்கேட்ஸ் போன்றவர்கள் தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதற்கு தயாராய் இருக்கிறார்கள் அதிலும் வார்ன் பப்பட் கிட்டத்தட்ட தன் பெருவாரியான சொத்துக்களை டிரஸ்டுகளுக்கும் பொது நலன்களுக்கும் கொடுத்துவிட்டார் சமீபத்தில் கூட தன்னிடம் இருப்பதில் 1 மில்லியன் டாலர்கள் மட்டும் எனக்கு போதும் என்பதாக ஒரு செய்தி வந்திருந்தது இவர்களை போல செய்து விட யாருக்கும் மனம் வரும்?

    இன்னொருவர் இருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் இவரு மேஜிக்கல் போன் (ஐபோன்) சொந்தக்கார்ர் முன்னவர்கள் தன்னிடம் இருப்பதை டிரஸ்டுகளுக்கு அள்ளிக்கொடுத்தனர் ஆனால் இவரோ இவர் வரும் முன்பே இயங்கிகொண்டிருந்த டிரஸ்டையும் தான் வந்ததும் நிறுத்தி விட்டார்...பார்த்தீர்களா மனிதர்கள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம்...

    இந்த வாழ்க்கையில இப்ப இருக்கிற இந்த நிமிடம் நமக்கு சொந்தமானது முடிந்தவரை எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக்கொண்டாலே நமக்கு நிம்மதி வந்துவிடும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவச்சு வாழ பழகுவோம்?...பதிவு கோர்வையில்லாமல் இருக்கலம் ஆனால் சொல்ல வந்த விஷயம் புரிந்திருக்குமென்று நம்புகிறேன் விரும்பினால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், இது பற்றிய தங்களின் கருத்துக்களையும் பகிருங்களேன்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Dec 31, 2011

    15

    போல்டர் பேக்கிரவுண்ட் கலர், புகைப்படம் மாற்றலாம் (Windows Folder Background Change)

  • Dec 31, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அதிகமாய் பேசுவதனால் மட்டும் ஒருவன் அறிஞனாகி விட முடியாது.

    வணக்கம் நண்பர்களே புத்தாண்டு வாழ்த்துகள் 2012 இந்த பதிவின் வழியாக விண்டோஸின் டிபால்ட் பேக்கிரவுண்ட் மாற்றுவது பற்றி பார்க்கலாம் வழக்கமாக நம் கணினியில் விண்டோஸின் பேக்கிரவுண்ட் வெள்ளை நிறமாக மட்டும் இருக்கும், அந்த வெள்ளை நிறத்துக்கு பதிலாக நமக்கு பிடித்த ஏதாவது ஒரு நிறம் அல்லது நம் நிழல்படம் இப்படி ஏதாவது இருந்தால் கொஞ்சம் அழகாகவும் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தையும் சேர்த்து கொடுக்கலாமே?

    சரி இதற்கு மூன்று வகையான வழிமுறைகள் இருக்கிறது முதலாவதாக ரிஜிஸ்டரியில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் போல்டரின் பேக்கிரவுண்ட் நிறத்தை மாற்ற முடியும் அல்லது நிழல்படத்தை வைக்க முடியும் ஆனால் இந்த முறை எனக்கு சரியாக செயல்படவில்லை விரும்புவர்கள் perishablepress.com அல்லது askvg.com சென்று முயற்சித்து பாருங்கள் சந்தேகங்களுக்கு அந்த கட்டுரையின் கருத்துக்களை அவசியம் படிக்கவும்.

    இரண்டாவதாக இதற்கென ஒரு மென்பொருள் இருக்கிறது இந்த மென்பொருள் வழியாக எந்த சிரமமும் இல்லாமல் எளிதாக மாற்றிக்கொள்ள் முடியும் உதவிக்கு கீழிருக்கும் படங்களை பாருங்கள், மென்பொருள் தரவிறக்கத்துக்கு
    Windows Folder Background Change செல்லுங்கள்.

    மென்பொருளை இன்ஸ்டால் செய்து திறந்து கீழிருக்கும் பட்த்தில் உள்ள வழிமுறைகளின் படி உங்கள் போல்டரின் நிறத்தை அல்லது நிழல்படம் மாற்றுங்கள்









    இப்பொழுது பாருங்கள் நான் எனது போல்டருக்கு இப்படி ஒரு நிழல்படம் சேர்த்திருக்கிறேன் இனி உங்கள் கணினியிலும் நீங்கள் கஷ்டமைஸ் செய்த போல்டரின் பின்னனி மாறியிருக்கும்.



    இனி மூன்றவதாக XP Folder BackgroundChange தரவிறக்கி அதனுள்ளே இருக்கும் ieshwiz என்பதை காப்பி எடுத்து உங்கள் கணினி இயங்குதளம் Cயில் நிறுவப்பட்டிருக்குமேயானால் C:\WINDOWS\system32-ன் உள்ளே பேஸ்ட் செய்துவிட்டு மீண்டும் நீங்கள் தரவிறக்கிய போல்டரில் இருக்கும் ரிஜிஸ்டரி பைலை கிளிக்குவதன் மூலம் உங்கள் ரிஜிஸ்டரியை அப்டேட் செய்துவிடவும் அவ்வளவு தான் இப்போது இனி உங்கள் விருப்பம் போல கலரையோ அல்லது நிழல்படத்தையோ மாற்றிக்கொள்ள முடியும் அதற்கான வழிமுறைகளையும் கீழே இருக்கும் நிழல்படங்கள் வழியாக தெரிந்துகொள்ளுங்கள்.







    அட என்ன நண்பா எல்லாமே விண்டோஸ் எக்ஸ்பிக்கு மட்டுமே இருக்கு விண்டோஸ் 7 பயன்படுத்துற எங்களுக்கு இல்லையா எனக் கேட்கும் அன்பர்களுக்காக windows 7 folder background change பயன்படுத்தி பாருஙக்ள்.

    இனி வேறு ஒரு மென்பொருள் பற்றியும் பார்க்கலாம் விண்டோஸ் 7ல் தானாகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் டெஸ்க்டாப் பேக்கிரவுண்ட் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது ஆனால் நமது XPயில் இந்த வசதி இல்லை விருப்பபடுவர்கள் XP Auto Wall Paper Change தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் பிடித்திருந்தால் உபயோகபடுத்துங்கள் இல்லையென்றால் நீக்கி விடுங்கள்.



    என்ன நண்பர்களே பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா, உபயோகமாக இருக்கிறதா? உங்களுக்கு உபயோகாமாகவே இருக்குமென்று நம்புகிறேன் பயன்படுத்தி பார்த்து உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள் மேலும் சிலருக்கு உங்கள் கருத்துரை வழியாக பதிவுகள் எளிதாய் சென்றடையும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Dec 23, 2011

    33

    போட்டோஷாப்பில் தமிழ் யூனிக்கோட் எழுத்துரு (100% satisfied)

  • Dec 23, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: துரதிஷ்டங்கள் எப்பொழுதும் அதற்காக திறந்து வைக்கப்பட்ட கதவின் வழியே வருகின்றன.

    வணக்கம் நண்பர்களே முன்பு போல் அதிகம் பதிவுகள் எழுத முடிவதில்லை எழுதும் நேரங்களில் நல்ல பதிவுகளை உபயோகமானவற்றை மட்டுமே உங்களுக்கு தர விரும்புகிறேன் அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு மிக உபயோகமாக இருக்குமென்று நம்புகிறேன்.

    முன்பெல்லாம் தமிழ் தட்டச்சு தெரிந்தால் மட்டுமே தமிழில் எழுதும் வாய்ப்பு இருந்து வந்தது கணினியில் அதிலும் எழுத்துரு பிரச்சினை பல தளங்களில் இப்பவும் இருக்கிறது ஆனால் அந்த பிரச்சினையை முற்றிலும் களைய வந்தது தான் யூனிக்கோட் எழுத்துரு முறை இந்த வகையில் எழுத்துரு பிரச்சினை வருவதில்லை இன்று தமிழில் இனைய பக்கங்கள் அதிகமாக வளர்ந்து வருவதற்கும் இந்த தமிழ் யூனிக்கோட் எழுத்துரு மிக முக்கிய காரணமாகும்.

    இப்பவும் யூனிக்கோட் முறை தெரிந்தாலும் அதை நேரடியாக போட்டோஷாப்பில் பயன்படுத்த முடியாது இருப்பினும் சில நண்பர்கள் சில வகை மென்பொருள்களை பயன்படுத்தி போட்டோஷாப்பில் தமிழ் உள்ளிட முடியும் என்றாலும் அவசியம் தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் இந்த முறை எல்லோருக்கும் நிச்சியமாய் வசதியாய் இருக்காது அதிலும் பல வகையான எழுத்துருக்குள். உதாரணமாக: Bamini, Shreelipi, Tab, Tam, TSCII, Vanavil, Senthamiz இப்படி நிறைய இருக்கிறது.

    இனி விஷயத்திற்கு வருகிறேன் நீங்கள் போட்டோஷாப்பில் அல்லது மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்புகளில் தமிழ் யூனிக்கோட் எழுத்துருக்களை பயன்படுத்தி விதவிதமான எழுத்துருக்களுக்கு மாற்றி அமைத்துக் கொள்வதுடன் போட்டோஷாப்பில் கிட்டத்தட்ட 512 வகையான தமிழ் ஃபாண்ட்களை நீங்கள் உபயோகிக்க முடியும் ஆனால் நான் கொடுத்திருக்கும் இந்த பொதியில் கிட்டதட்ட 800 வகையான தமிழ் ஃபாண்ட்கள் இருக்கிறது மேலும் இதில் மைக்ரோசாப்ட் டிபால்ட் (Default) ஃபாண்ட்களும் இருக்கிறது அதில் 512 தமிழ் ஃபாண்ட்களை பயன்படுத்த உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியவேண்டிய அவசியமில்லை அதுதான் இந்த பதிவின் விஷேசம்.

    எல்லாவற்றையும் தனித்தனியாக பிரித்து எடுத்து தருவதில் சிரமம் இருந்ததால் மொத்த ஃபாண்டுகளையும் ஒரு பொதியாய் சேர்த்து விட்டேன் எனவே காப்பி எடுத்து உங்கள் ஃபாண்ட் போல்டரில் (Font Folder) சேமிக்கவும் அப்படி சேமிக்கும் போது மைக்ரோசாப்ட் டிபால்ட் (Default) ஃபாண்ட்கள் முன்பே உங்கள் கணினியில் இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படாமல் Over Write செய்து விடவும் அதிலும் குழப்பம் இருந்தால் பாப் அப் மெனு வரும் போது ஓக்கே கொடுக்கவும்.

    இனி இந்த Photoshop Tamil Unicode Fonts பொதியை தரவிறக்குங்கள் பொதியின் அளவு 185 எம்பி அளவுடையது, இந்த பொதியின் உள்ளே கிட்டதட்ட 512 தமிழ் யூனிக்கோட் ஃபாண்ட்கள், 300க்கும் மேலான தமிழ் ஃபாண்ட்கள் (உபயோகிக்க தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்), 1300க்கும் மேலான ஆங்கில வகை ஃபாண்ட்கள் இதில் பலவும் மைக்ரோசாப்ட்டின் டிபால்ட் வகையை சேர்ந்தவை, மற்றும், ஃபாண்ட் மேனேஜர், தமிழ் யூனிக்கோட் எழுதுவதற்கான NHM Writer மற்றும் யூனிக்கோட் எழுத்துருக்களை வேறு வகையான எழுத்துருக்களில் மாற்றம் செய்வதற்கு NHM Convertor மேலும் ஒரு பிடிஎப் தொகுப்பு இது மிக முக்கியமானது இதில் ஃபாண்ட் மாதிரி எழுத்து, அதன் பெயர், அது எந்த வகையான எழுத்துரு வகையை சேர்ந்த்து என்பதை தொகுத்திருக்கிறேன்.. இதை தரவிறக்கி பயன்படுத்தும் போது உங்களுக்கு மிக சாதரணமாக தெரிவதோடு எளிதாக இருக்கும் ஆனால் இதை செய்து முடிப்பதற்கு ஒரு வார காலம் தேவைப்பட்டது ஆரம்பத்தில் என் சொந்த உபயோகத்திற்காக தான் அட்டவனைபடுத்த தொடங்கினே இறுதியில் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற அடிப்படையில் உங்களுக்காகவும்.

    முதலில் உங்கள் கணினியில் NHM Write இன்ஸ்டால் செய்யவும், இன்ஸ்டால் செய்யும் போது தமிழை தெரிவு செய்யவும் நீங்கள் உங்கள் கணினியில் நிறுவலை முடித்ததும் டாஸ்க்பாரின் வலது பக்க மூலையில் ஒரு மணி போன்ற ஒன்று வந்திருக்கும் அதை கிளிக் செய்து தமிழ் பொனாட்டிக் யூனிக்கோட் என்பதை தெரிவு செய்யவும் அல்லது நேரடியாக கீபோர்டில் Alt+2 என்பதை அழுத்தினால் போதும், நீங்கள் Alt+2 என்பதை அழுத்தியவுடன் அதன் நிறம் பொன்நிறமாக மாறியிருக்கும்.

    இனி தமிழ் யூனிக்கோட் தட்டச்சு செய்யவேண்டியது தான் உதாரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பில் “ஸ்ரீராம், ஸ்ரீதர், ஞானசேகர், புரியாத கிறுக்கல்கள்” என்று தட்டச்சு செய்ய நினைக்கிறீர்கள் என்பதாக இருந்தால் ஆபிஸ் தொகுப்பை திறந்து NHM Writer ல் Alt+2 அழுத்தி அதன் பின்னர் “ஸ்ரீராம், ஸ்ரீதர், ஞானசேகர், புரியாத கிறுக்கல்கள்” என்பதற்கு நீங்கள் sriram, sridhar, gnanasekar, puriyaatha kiRukkalkaL என்பதாக தட்டச்சினால் போதும்.

    புரியவில்லையா? ammaa – அம்மா, appaa – அப்பா, sakOthari- சகோதரி, இப்படி தமிழை நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுங்கள் சில இடங்களில் பிரச்சினை வரும் உதராணத்திற்கு sakOthari என்பதில் O மட்டும் கேப்பிட்டல் எழுத்தை பயன்படுத்தியிருக்கிறேன் இதையே sakoothari இரண்டு o பயன்படுத்தியும் எழுதலாம், நீங்களாகவே முயற்சி செய்யும் போது எல்லாம் எளிதில் வந்துவிடும் தேவைப்பட்டால் அவர்களின் உதவிப்பக்கத்தை பார்க்கவும்.



    இப்போது நீங்கள் தமிழை எழுத கற்றுக்கொண்டு வீட்டீர்கள் இனி அடுத்த கட்டமாக NHM Convertor பற்றி பார்க்கலாம், நாம் மேலே உள்ள சில பாரக்களில் பார்த்த்து போல நமக்கு தெரிந்த யூனிக்கோட் எழுத்துருக்களை இந்த NHM Convertor வழியாக Bamini, Shreelipi, Tab, Tam, TSCII, Vanavil போன்ற எழுத்துருக்களுக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் அந்த வகையான எழுத்துருக்களையும் நாம் யூனிக்கோட் வழியாக மாற்றி நாம் பயன்படுத்தலாம். மேலும் சில யூனிக்கோட் எழுதி தமிழில் எழுதுவது எப்படி?

    கீழே படத்தில் இருப்பது போல Input- 1 என்பதில் உங்கள் தெரிவு Unicode எனபதாக இருக்கட்டும் (தேவைப்பட்டல் Bamini, Shreelipi, Tab, Tam, TSCII, Vanavil இவற்றை யூனிக்கோட் முறைக்கும் மாற்றிக்கொள்ளலாம்) Output – 2 என்பதில் எந்த வகையான எழுத்துருக்கு மாற்ற விரும்புகிறீர்களோ அதை தெரிவு செய்யவும், Output – 3 என்பதை கிளிக்குவதன் மூலம் கன்வெர்ட் நொடிக்குள் நடந்து முடிந்து விடும் Copy Converted text – 4 இங்கு நீங்கள் மாற்றி டெக்ஸ்ட் இருக்கும் அதை காப்பி எடுத்து உங்களுக்கு தேவையான இடத்தில் பயன்படுத்த முடியும் அது போடோஷாப்பாக இருக்கலாம், ஆபீஸ் தொகுப்பாக இருக்கலாம்.

    இங்கு நேரடியாக நீங்கள் தட்டச்சு செய்யலாம் அல்லது வேறு இடத்தில் இருந்து காப்பி எடுத்தவற்றை பேஸ்ட் செய்வதன் மூலமும் கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.



    இனி விளக்குமுறை வழியாக பார்த்து விடலாம் நான் முன்பே சொன்ன பிடிஎப் தொகுப்பு இது தான் கீழே படத்தில் பாருங்கள்
    நான் ஒரு எழுத்து மாதிரியை தெரிவு செய்திருக்கிறேன் அந்த ஃபாண்ட் பெயர் TAM-Tamil184 என்பதாகும் அந்த எழுத்து மாதிரியோ Tam வகையை சேர்ந்தது
    எனக்கு “ஸ்ரீராம் , ஸ்ரீதர், ஞானசேகர், புரியாத கிறுக்கல்கள்” என்பதை நான் குறிப்பிட்டிருக்கும் எழுத்து வடிவில் கொண்டு வர விருப்பம்.

    நீங்கள் கவணிக்க வேண்டிய விஷயம் நீங்கள் விரும்பும் எழுத்து மாதிரி எந்த வகையை சேர்ந்தது மற்றும் அந்த ஃபாண்ட் பெயர் குறித்து வைத்துக் கொள்ளவும்.

    நான் விரும்பும் மாதிரி ஃபாண்ட் பெயர் TAM-Tamil184 அந்த உருத்தொகுப்பு Tam வகையை சேர்ந்தது அதனால் நான் எனது யூனிக்கோட் எழுத்துருவை Unicode to Tam என்பதாக கன்வெர்ட் செய்யப்போகிறேன். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.



    சரி நான் இப்போழுது NHM Convertor திறந்து தட்டச்சு செய்வது மூலமாகவோ அல்லது காப்பி எடுத்து பேஸ்ட் செய்வது மூலமாகவோ NHM Convertor உள்ளே கொண்டு வந்துவிட்டேன் அதில் முதலாவதாக Unicode என்பதை தெரிவு செய்திருக்கிறேன் அடுத்ததாக Tam என்பதை தெரிவு செய்திருக்கிறேன் அடுத்ததாக கன்வெர்ட் கொடுத்தேன் கீழே இருக்கும் படத்தை பாருங்கள் யூனிக்கோட்டில் எப்படி இருந்த எழுத்து Tam வகைக்கு கன்வெர்ட் செய்து முடித்ததும் எழுத்துரு மாற்றம் அடைந்திருப்பதை இனி கன்வெர்ட் செய்த எழுத்துகளை நீங்கள் எங்கே பயன்படுத்த விரும்புகிறீர்களோ அங்கே ஒட்டி (Paste) செய்து எழுத்துருவுக்கான ஃபாண்ட் மாற்றி விடுங்கள் அவ்வளவு தான்.



    நான் மாற்றிய எழுத்துருவை போடோஷாப்பில் பயன்படுத்த விரும்புகிறேன் எனவே நான் போட்டோஷாப்பில் எழுத்துக்களை பேஸ்ட் செய்து அந்த டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து ஃபாண்ட் TAM-Tamil184-க்கு மாற்றி விட்டேன் கீழிருக்கும் படத்தை பாருங்கள் நான் முதலில் NHM Convertor-ல் இருந்து காப்பி எடுத்துக்கொண்டு வந்த டெக்ஸ்ட் முதலாவதாக இருக்கிறது, அதற்கு கீழே நான் அதற்கு சரியான ஃபாண்ட் TAM-Tamil184 என்பதை மாற்றியதும் அதன் எழுத்துருவும் மாறியிருக்கிறது.



    மேலே சொன்ன ஃபாண்ட் மேனேஜரின் மாதிரி இதில் நீங்கள் ஏதாவது ஒன்றை எழுதி அதன் மாதிரி எப்படி இருக்குமென்பதை தெரிந்துகொள்ள வசதியாய் இருக்கும்.



    என்ன நன்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் மேலும் இது தெரியாத நபர்களையும் சென்றடையும் விதமாக உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்.சந்தேகம் இருப்பின் கேளுங்கள் எனக்கு தெரிந்தவரை உதவ முயற்சிக்கிறேன்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Dec 8, 2011

    13

    பிடிஎப் ரிப்பேர் டூல் (PDF Repair Tool)

  • Dec 8, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: புதிதாக புகழ் வராவிட்டால் பழைய புகழும் தானே போய்விடுகிறது.

    வணக்கம் நண்பர்களே நம்மில் அநேகம் பேர் பிடிஎப் பயன்படுத்துபவர்கள் உண்டு அதற்கான காரணம் பிறருக்கு ஏதாவது ஒரு தகவலை அனுப்ப நினைக்கும் பொழுது ஃபாண்ட் (Font) பிரச்சினையை தவிர்க்க உதவும். அதே நேரத்தில் நாம் இனையத்தில் இருந்து தரவிறக்கிய பிடிஎப் தொகுப்பு புத்தங்கங்கள் அல்லது நம்மிடம் இருக்கும் ஏதாவது தொகுப்புகள் சில நேரங்களில் ஏதாவது ஒரு அறியாத காரணத்தில் திறக்க முடியாமலோ அல்லது பிழைச்செய்திகளையோ நாம் கண்டிருக்ககூடும். அந்த மாதிரி நேரங்களில் சில நேரம் நம்மால் பிடிஎப் தொகுப்பை திறக்க முடியாமல் போய்விடுவதும் உண்டு.

    நாம் இந்த பதிவின் வழியாக இந்த பிரச்சினையை தீர்ப்பது பற்றி பார்க்கலாம் இந்த மென்பொருள் எத்தனை விதமான பிழைகளை சரிசெய்து தரும் என்பது உறுதியாக என்னால் கூற இயலவில்லை ஆனால் நான் சோதித்து பார்த்த வரையில் சிதிலமடைந்த (Corrupt) பிடிஎப் தொகுப்புகளை அழகாய் சில நிமிடங்களில் ரிப்பேர் செய்து தந்துவிடுகிறது.

    இந்த மென்பொருளின் பயன்பாடு நமக்கு அடிக்கடி தேவைப்படுவதில்லை, நாம் எதிர்பார்க்காத நேரத்தில் சில நேரம் நமக்கு தேவைப்படும் எனவே இதை தரவிறக்க விரும்புகிறவர்களுக்கு பிடிஎப் ரிப்பேர் (PDF Repair) மேலும் தரவிறக்க விருப்பம் இல்லாதவர்கள் முடிந்தால் முகவரியை குறித்துக்கொள்ளுங்கள் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வழக்கம் போலான இன்ஸ்டாலேசன் முறைதான் இயக்குவதற்கும் பெரிதாய் சிரமம் இருக்காது சிதிலமடைந்த (Corrupt) பிடிஎப் தொகுப்பை தெரிவு செய்து மீண்டும் சேமிக்க விரும்பும் இடத்தை (Directory) தெரிவு செய்து Start Repair என்பதை கிளிக்கினால் போதும் சில நிமிடங்களில் சிதிலமடைந்த பிடிஎப் தொகுப்பை திறந்து படிக்க முடியும்.



    என்ன நண்பர்களே பதிவு தற்போது உங்கள் உபயோகப்பட்டிருக்கவோ அல்லது சோதித்து பார்த்திருக்கவோ முடியாது என்பதை உணர்கிறேன் அதே நேரத்தில் உங்களுக்கு எப்பொழுதாவது தேவைப்படலாம்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Nov 21, 2011

    7

    ஜிமெயிலில் ஷார்ட்கட் கீகள் நம் விருப்பம் போல அமைக்கலாம்

  • Nov 21, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

    வணக்கம் நண்பர்களே கடந்த பதிவான ஜிமெயிலுக்கு தேவையில்லை மவுஸ் வழியாக ஜிமெயிலில் ஷார்ட்கட் கீகளை பயன்படுத்துவது பற்றி பார்த்தோம் அது தங்களுக்கு உபயோகமாக இருந்திருக்குமென்றே நம்புகிறேன் ஆனாலும் நடைமுறையில் உங்களுக்கு உதவியாக இருந்ததா? இல்லை என்பதே எனது பதிலாக கூட இருக்கும். அந்த பதிவை பொறுத்த வரை தங்களுக்கு ஒரு செய்தி எனக்கு ஒரு பதிவு என் பதிவுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியதே தவிர பெரிதாய் பயன்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதே என் நிலைப்பாடாக இருக்கிறது.

    ஆனால் இந்த பதிவு நிச்சியம் உங்களுக்கு நடைமுறைக்கு உகந்ததாக இருக்கும் நாம் ஏற்கனவே பார்த்த ஷார்ட்கட் கீகளை இனி நம் இஷ்டத்திற்கு மாற்றி அமைத்துக்கொள்ளலாம். உதாரணமாக முந்தைய பதிவில் Compose என்பதற்கு ஷார்ட்கட் கீ c என்பதாக இருந்தது ஆனால் இனி இந்த c எனும் எழுத்தை நினைவில் வைக்க கடினமாக இருப்பதாக நினைத்தால் உங்களுக்கு நினைவில் நிற்கும் படியான ஒரு எழுத்தை மாற்றி அஸைன் செய்துகொள்ள முடியும்.

    ஜிமெயில் செட்டிங்க்ஸ் சென்று Labs தெரிவு செய்து Custom Keyboard Shortcuts என்பதை எனாபிள்(Enable) செய்யவும் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பார்க்கவும்.



    இனி கீழிருக்கும் படத்தில் உள்ளது போல புதிதாய் ஒரு தெரிவு வந்திருக்கும் இனி என்ன உங்கள் விருப்பம் போல ஷார்ட்கட் கீகளை மாத்துங்க ஜிமெயில் பயன்படுத்தும் போது ஷார்ட்கட் கீகளை உபயோகிச்சு வேலையை விரைவாகவும் மத்தவங்களுக்கு ஆச்சரியத்தையும் கொடுங்க.



    என்ன நண்பர்களே ஜிமெயிலுக்கு தேவையில்லை மவுஸ் என்கிற பதிவை விட பயனுள்ளதாய் இருக்குமென்று நம்புகிறேன் பயன்படுத்தி பார்த்து உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள் மேலும் சிலருக்கு உங்கள் கருத்துரை வழியாக பதிவுகள் எளிதாய் சென்றடையும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Nov 3, 2011

    8

    அனானி ஹேக்கர்களை ஆதரிப்போம்..(We Support Anonymous Hackers)

  • Nov 3, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பணம் சேர்த்து வைத்திருப்பவனுக்கு பயம், இல்லாதவனுக்கு கவலை.

    பொதுவாக ஹேக்கர்கள் என்றாலே இனைய தொழில்நுட்பம் சார்ந்து இயங்குபவர்களுக்கு கொஞ்சம் அலர்ஜியாகத்தான் இருக்கும் ஆனால் இப்பொழுது கூடவே கூகுலின் பிளாக்கர் வசதியை பயன்படுத்துபவர்களுக்கும் கொஞ்சம் பயமும் இருக்கிறது காரணம் வலைப்பதிவுகளும் இப்போது தனிமனித துவேஷம் கொண்டு ஹேக்காவது அவ்வப்போது வலைத்தளங்களின் வழியாக அறிய முடிகிறது.

    நம் வலைத்தளத்தின் வழியாக பாலியல் தூண்டும் அடிப்படை குறித்தான சில பதிவுகள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன் அதில் சில மாற்றுக் கருத்துகளும் கூட இருந்தது எப்பொழுதும் நம் சிந்தனையை போலவே மற்றவர்களின் சிந்தனையும் இருக்குமென்பது எதிர்பார்க்க கூடாதுதானே?

    இப்பொழுது இனையத்தில் தேவையான ஒரு எச்சரிக்கையை அனானி ஹேக்கர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் ஆபரேஷன் டார்க்நெட் (Operation Darknet) அவர்களுடைய கோரிக்கை குழந்தைகளை பலிகடாவாக்கி கொழிக்கும் குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் (Child Pornography) தளங்களை முடக்குவோம் என்பது தான் அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை.

    குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் (Child Pornography) தளங்களை நடத்தும் உரிமையாளர்கள் அவர்களுக்கான வழங்கிகள் என அவர்கள் கண்டறியும் அனைத்து தளங்களையும், இனைய வழங்கிகளையும் முடக்க இருக்கிறார்கள் இதுவரை பல தளங்களை முடக்கியும் இருக்கிறார்கள் மேலும் அவர்களின் கொள்கைகள் மற்றும் டார்க்கெட் என்னவெண்பதை மிக தெளிவாக Anonymous Hackers
    தளத்தில் சொல்லியிருக்கிறார்கள் இவர்கள் சாதரணமானவர்கள் இல்லை என்பதற்க்கு இவர்கள் வெளியிட்ட எச்சரிக்கையை பார்த்தவுடன் சில தளங்கள் முகவரிகளையும் லிங்குகளையும் மாற்றியிருக்கிறார்கள் என்பதே இவர்கள் திறமைக்கு சிறந்த உதாரணம்.

    ஆபரேஷன் டார்க்நெட் (Operation DarkNet)



    அனானி ஹேக்கர்களின் (Anonymous Hackers) கைவரிசையில் சோனி நிறுவணம் (Sony Corporation) மற்றும் நியுயார்க் ஸ்டாக் எக்ஞ்சேஞ் (New york Stock Exchage) இரண்டும் பட்ட கஷ்டங்கள் அவர்களுக்கு தான் தெரியும் அதிலும் சோனி நிறுவணம் தான் அதிகமான சேதாரங்களை சந்தித்திருக்க வேண்டும். அனானி ஹேக்கர்கள் சோனி நிறுவணத்துக்கு எதிராக வெளியிட்ட அறிவிப்பை படித்து பாருங்கள் Anonymous wrote to Sony Corporation
    ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் சோனி நிறுவண சேர்மேன் Sony Board of Director யுஎஸ் அரசுக்கு எட்டு பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதியிருக்கிறார் அந்த கடிதத்தை Sony Chairman Letter to the US Govt.
    படித்து பாருஙகள் ஒரு கட்டத்தில் புலம்பியிருக்கிறார் நாங்கள் என்னதான் பாதுகாப்பு நடவடிக்க எடுத்து ஒரு ஆபத்தில் இருந்து தப்பித்தாலும் அடுத்த சில மணி நேரங்களிலேயே அடுத்து புதுவிதமான தாக்குதலை தொடர்கின்றனர் என்பதாக நீண்ட கடிதமாக இருக்கிறது.

    கிட்டத்தட்ட இதுவரை 100ஜிபி அளவிலான குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் (Child Pornography)தள தகவல்களை எடுத்து அழித்திருக்கிறார்கள் இனியும் தொடரும் இதை முற்றிலுமாக ஒழித்தால் நமக்கும் சந்தோஷம் இன்றைய குழந்தைகள் நாளைய நம் எதிர்காலம் நிச்சியமாய் அவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கப்பட வேண்டும். மேலும் இவர்கள் குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் தளங்களின் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கையாக நீங்கள் யாராக வேண்டுமானலும் இருங்கள் உங்களை நாங்கள் கண்டுபிடிக்கிறோம் என்பதாக இருக்கிறது.

    பொதுவாக ஹேக்கர்கள் என்றாலே பயம் வரும் ஆனால் அனானி ஹேக்கரிகள் மீது மரியாதையும் மதிப்பும் வருகிறது. அனானி ஹேக்கர்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள கூகுலில் சென்று Anonymous Hackers என்று தேடினால் போதும். அப்படியே நான் முன்பு எழுதிய பிரபல ஹேக்’கிங்’குகள் மற்றும் கீலாக்கர் அபாயம்
    என்பதையும் படித்து பாருங்கள்.

    மேலும் அனானி ஹேக்கர்கள் தங்களை பற்றி சொல்வது இப்படித்தான்...
    • We are Anonymous.
    • We are Legion.
    • We do not forgive.
    • We do not forget.
    • Expect us.

    இது ஒரு புறம் இருக்க பொழுதுபோக்கு தளங்களில் முதன்மையாக இருக்கும் முகப்புத்தக (Facebook) தளத்தையும் வருகிற நவம்பர் 5 ம் தேதி (Facebook will fall Nov 5, 2011) முடக்கப்படும் என்பதாக ஒரு யூடியுப் வீடியோ இருக்கிறது உண்மையை சொல்லப்போனால் இந்த பேஸ்புக்கால் சீரழிந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் இதற்கு சமீபத்திய ஒரு உதாரணம் மகேஷ் என்பவரின் தற்கொலையும் அவர் செய்த கொலையும்.

    ஆபரேஷன் பேஸ்புக் (Operation Facebook)



    என்ன நண்பர்களே அனானிகளின் ஆபரேசன் டார்க்நெட் தேவையான ஒன்றே என்று நம்புகிறேன் இனையத்தில் வலம் வரும் போது குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் (Child Pornography) தளங்களை கண்டால் Anonymous Hackers
    களிடம் தெரியபடுத்தினால் போதும் மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர