Dec 5, 2010

32

அத்தை மகனே

 • Dec 5, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: கடவுள் மனிதனை படைத்து அவனை சந்தோஷபடுத்த கொடுத்த அன்பளிப்பே காதல்.

  வணக்கம் நண்பர்களே இந்த காதலை பற்றி எவ்வளவோ எழுதலாம் காதல் ஒருவரின் வாழ்க்கையை மாற்றிவிடும் அது உயர்வாக இருக்காலம் சில நேரங்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம் வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதல் வயப்பட்டிருப்போம் ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள் இளைஞிகள் காதல் என்பதை ஏதோ ஒரு கட்டாமயாக உண்ண வேண்டிய மருந்தாய் உபயோகிக்க நினைக்கிறார்கள் அதன் விளைவுதான் புரிதல் இல்லாத காதல், அங்கங்கே நடக்கும் ஏமாற்றம். காதல் வெறும் உடல் சார்ந்த இச்சை இல்லை அப்படி இருந்தால் அது காதலாகவே இருக்கமுடியாது. காதல் உணர்வுகளில் இருந்து வருவது அதற்கு அழகு, பணம், நிறம் இப்படி எதுவும் தேவையில்லை இதற்கு உதாரணமாக நிறைய விஷயங்கள் இருக்கிறது ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமே காதல் என்பதில்லை நாம் இயல்பாய் நேசிக்கும் ஐந்தறிவு ஜீவனுடன் இருக்கும் அன்பின் பெயரும் காதல் தான். காதல் இல்லாத உலகத்தை யோசித்து பாருங்கள் எப்படியிருக்கும்!.

  இதற்கு நான் வைத்த பெயர் கவிதை அப்படி நினைத்து தான் எழுதுகிறேன் ஒரு பெண் தன் காதலனை நினைத்து அவனுக்காக ஒரு கவிதையை எழுதுவதாய் படித்து பாருங்கள் அல்லது முதல் மற்றும் கடைசி வரியில் ஒரு வார்த்த்தையை மாற்றினாக் ஒரு ஆண் பெண்ணுக்கு எழுதுவது போல இருக்கும் ஒருவேளை அது உங்களுக்கும் பிடிக்கலாம்.

  அத்தை மகனே

  உன்னைப்பற்றிய
  தவறான செய்திகளிலும்
  நிஜமான தகவல்களிலும்
  பலமுறை சிதறிப்போயிருக்கிறேன்...  நீ இருக்கும் இடம் என் வசந்தம்
  அது மட்டுமே என் சொந்தம்
  நீ வரும் திசை கிழக்கு
  நீ மறைந்து போகும் திசை மேற்கு...

  நீ வந்து போனால் தெருவெல்லாம் காதல் வாசம்
  அதனாலோ எனக்குள்ளும் காதல் வாசம்
  பூக்களின் வாசம் மறந்து போயிற்று
  உன் வாசம் எனக்குள் உறைந்து போயிற்று...

  உதட்டில் நீ இட்ட முத்தம்
  இன்னமும் தித்திக்கிறது
  உன் ஸ்பரிசம் நினைக்கையில்
  உடல் சில்லிட்டு கொள்கிறது...  தென்றலாய் என்னை தீண்டு-என்
  வறண்ட நெஞ்சம் ஈரமாகட்டும்
  தொலை தூர மழைச்சாரலாய் இல்லாமல்
  என்னுள் மழையாய் வா...

  மேகமாய் மறைந்து போகாமல்
  சந்திரணாய் குளிரூட்டவா
  மின்னலாய் மறைந்து போகாமல்
  அழகான வானவில்லாய் வந்து போ...

  விழி ஈட்டியில் எனக்குள்
  உன் காதலை எழுது
  அமராவதியாய் நானிருக்க
  அம்பிகாவதியாய் எனக்குள் வா...  ஆடிக்காத்து அசைக்கும் முன்
  புதுத் தையில் என் கரம் பிடி...


  சிநேகமுடன்
  XXXXXXXXXX

  என்ன நண்பர்களே படிக்கிற மாதிரியாவது இருந்துச்சா? இப்பொழுதெல்லாம் எழுதுவதற்கான ஆர்வம் குறைந்தே வருகிறது இருந்தாலும் எந்த வித நிர்பந்தபடுத்தலுக்கோ அல்லது நான் உங்கள் தளத்தில் இனைகிறேன் நீங்கள் என் தளத்தில் இனைந்துகொள்ளுங்கள் என்கிற சித்தாந்தத்தில் இல்லாமல் இதுவரை தானகவே இனைந்த நண்பர்களுகாகவும், மின்னஞ்சல் வழி படிக்கும் நண்பர்களுக்காகவும் மற்றும் நம் தளத்தை விரும்பி படிக்கும் நண்பர்களுக்காவும் அவசியம் விரைவில் நல்ல கணினி தகவல்கள் மட்டும் அதிலும் அவசியமுள்ளதை மட்டுமே எழுதுகிறேன் இது வரை அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் ஒன்றிரண்டு பதிவுகள் விதி விலக்காக இருக்கும். சரி இதை பற்றியாதான உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், பரவாயில்லை என நினைத்தால் இன்டிலியில் வாக்கு அளித்து செல்லுங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  32 Comments
  Comments

  32 Responses to “அத்தை மகனே”

  ம.தி.சுதா said...
  December 5, 2010 at 8:57 AM

  எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  நனைவோமா ?


  ம.தி.சுதா said...
  December 5, 2010 at 9:00 AM

  ஃஃஃஃஃகடவுள் மனிதனை படைத்து அவனை சந்தோஷபடுத்த கொடுத்த அன்பளிப்பே காதல்.ஃஃஃஃ

  ஆமாம் சகோதரா சிலர் அதை சாக்கடையில் எறிகிறார்கள் பலர் அதை பூசை அறையில் வைத்துப் போற்றுகிறார்கள்...


  ம.தி.சுதா said...
  December 5, 2010 at 9:02 AM

  ஃஃஃஃஃதென்றலாய் என்னை தீண்டு-என்
  வறண்ட நெஞ்சம் ஈரமாகட்டும்ஃஃஃஃ

  அருமையாக இருக்கிறது.. நல்ல வர்ணனையுடன் மனதை மயிலிறகால் வருடி எடுத்து விட்டீர்களே....


  ஜிஎஸ்ஆர் said...
  December 5, 2010 at 9:06 AM

  @ம.தி.சுதாவிருப்பபடியே ஆகட்டும்


  ஜிஎஸ்ஆர் said...
  December 5, 2010 at 9:08 AM

  @ம.தி.சுதாஉண்மை தான் காதலை எதிர்ப்பவர்கள் அதை புரிந்துகொள்ளவில்லையென்றே அர்த்தம் ஆனால் இது நாம் நேரடியாக அனுபவிக்காதவரை நாம் இதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்


  மாணவன் said...
  December 5, 2010 at 9:09 AM

  //உன்னைப்பற்றிய
  தவறான செய்திகளிலும்
  நிஜமான தகவல்களிலும்
  பலமுறை சிதறிப்போயிருக்கிறேன்...//

  அருமை நண்பரே, வரிகள் ஒவ்வொன்று ரசனையான உணர்வுகளை பதிவு செய்கிறது கவிதை சூப்பர்...

  தொடருங்கள்........


  ஜிஎஸ்ஆர் said...
  December 5, 2010 at 9:09 AM

  @ம.தி.சுதாநீங்கள் இதனால் மகிழ்ந்தால் நிச்சியமாக சந்தோஷமே


  ஜிஎஸ்ஆர் said...
  December 5, 2010 at 9:12 AM

  @மாணவன்நன்றி நண்பரே


  மாணவன் said...
  December 5, 2010 at 9:12 AM

  //விழி ஈட்டியில் எனக்குள்
  உன் காதலை எழுது
  அமராவதியாய் நானிருக்க
  அம்பிகாவதியாய் எனக்குள் வா...//

  வரிகளுக்கேற்ப புகைப்படங்களின் தேர்வும் அருமை...

  கணினித் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அவ்வபோது இதுமாதிரியும் எழுதுங்கள் நன்றாக இருக்கிறது


  மாணவன் said...
  December 5, 2010 at 9:13 AM

  //ஒரு வரி கருத்து: கடவுள் மனிதனை படைத்து அவனை சந்தோஷபடுத்த கொடுத்த அன்பளிப்பே காதல்.//

  அருமை மிகச் சரியான கருத்து

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  வாழ்க வளமுடன்


  மாணவன் said...
  December 5, 2010 at 9:17 AM

  //உங்கள் தளம் திறக்கும் போது கூடவே ஒரு பாப் அப் திறக்கிறதே அது எனக்கு மட்டும் தான் திறக்கிறதா அல்லது நீங்களும் இந்த பிரச்சினையை சந்தித்திருக்கிறீர்களா?//

  எனது தளத்தில் இந்த பிரச்சினை இருப்பதாக சொல்லியிருந்தீர்கள் திரும்ப முயற்சித்து பார்த்தீர்களா நண்பரே, நேரமிருந்தால் சோதித்து பார்த்து என்ன காரணமாக இருக்குமென்று சொல்லுங்கள் நண்பா...

  நன்றி
  நட்புடன்
  உங்கள் மாணவன்


  தம்பி கூர்மதியன் said...
  December 5, 2010 at 11:34 AM

  சிறப்பாக இருக்கிறது..
  இருப்பினும் உள்கருத்துக்கு இன்னும் அழுத்தமான வரிகளை எதிர்பார்க்கிறது மனது...
  தங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..
  இங்கும் வாருங்கள் நண்பரே...
  http://kirukaninkirukals.blogspot.com/
  http://ram-all.blogspot.com/


  Speed Master said...
  December 5, 2010 at 12:17 PM

  Nice sir

  one help i just started new blog want to know some details
  how to add Tamil Manam Vote in my blog
  Comment option


  Mohamed Faaique said...
  December 5, 2010 at 1:03 PM

  nallayirukku thalaiva... kavithai super'a eluthureenga...


  தமிழ் ரயில் said...
  December 5, 2010 at 1:05 PM

  கேபிள் சங்கரின் போஸ்டர் திரை விமர்சனம்


  சிகப்பு மனிதன் said...
  December 5, 2010 at 7:06 PM

  .நன்றாக உள்ளது, நண்பரே !!

  .என் ஆசையை, பூர்த்தி செய்து விட்டீர்கள் !


  Anonymous said...

  December 5, 2010 at 7:30 PM

  //ஆடிக்காத்து அசைக்கும் முன்
  புதுத் தையில் என் கரம் பிடி...//


  -காலத்தின் சுழற்சியில் கலைந்து போன என் காதலியின் நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தியது இந்த வரிகள்.மனது கணக்கிறது அண்ணே!


  vaanmohi said...
  December 6, 2010 at 6:51 AM

  எளிமை அருமை


  ஜிஎஸ்ஆர் said...
  December 6, 2010 at 10:38 AM

  @மாணவன்

  \\//உங்கள் தளம் திறக்கும் போது கூடவே ஒரு பாப் அப் திறக்கிறதே அது எனக்கு மட்டும் தான் திறக்கிறதா அல்லது நீங்களும் இந்த பிரச்சினையை சந்தித்திருக்கிறீர்களா?//

  எனது தளத்தில் இந்த பிரச்சினை இருப்பதாக சொல்லியிருந்தீர்கள் திரும்ப முயற்சித்து பார்த்தீர்களா நண்பரே, நேரமிருந்தால் சோதித்து பார்த்து என்ன காரணமாக இருக்குமென்று சொல்லுங்கள் நண்பா...

  நன்றி
  நட்புடன்
  உங்கள் மாணவன்\\

  நான் நினைக்கிறேன் என் கணினியில் தான் பிரச்சினை இருக்கிறதென்று நினைக்கிறேன் அதே பாப் அப் வேறு சில தளங்களிலும் எனக்கு திறக்கிறது ஆக பிரச்சினை உங்கள் தளத்தில் இருப்பதாய் தெரியவில்லை தவறான தகவலுக்கு மன்னிக்கவும்


  ஜிஎஸ்ஆர் said...
  December 6, 2010 at 10:39 AM

  @மாணவன் நண்பர் மதி சுதா அவர்கள் தான் படம் இனைக்கும் படி கூறினார்


  ஜிஎஸ்ஆர் said...
  December 6, 2010 at 10:40 AM

  @மாணவன் \\//ஒரு வரி கருத்து: கடவுள் மனிதனை படைத்து அவனை சந்தோஷபடுத்த கொடுத்த அன்பளிப்பே காதல்.//

  அருமை மிகச் சரியான கருத்து

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  வாழ்க வளமுடன்\\

  நான் அப்படித்தான் நம்புகிறேன்


  ஜிஎஸ்ஆர் said...
  December 6, 2010 at 10:41 AM

  @தம்பி கூர்மதியன்ஒருவிதம் சில வரிகளில் அழுத்தமான அர்த்தங்கள் கொடுத்திருக்கிறேன் இனி வரும் காலங்களில் தஙகளின் ஆலோசனையையும் கவணத்தில் கொள்கிறேன்


  ஜிஎஸ்ஆர் said...
  December 6, 2010 at 10:42 AM

  @Speed Masterதங்களிடம் ஏதாவது கேட்டால் முதலில் பதில் அளிக்க பழகுங்கள்


  ஜிஎஸ்ஆர் said...
  December 6, 2010 at 10:43 AM

  @Mohamed Faaiqueசும்மா நமக்கு தெரிந்த நாலு வார்த்தையை போட்டு எழுதியிருக்கிறேன் நண்பா தங்கள் பாரட்டுதலுக்கு நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  December 6, 2010 at 10:43 AM

  @தமிழ் ரயில் பதிவை பற்றிய கருத்தை எழுதியிருக்கலாம்!


  ஜிஎஸ்ஆர் said...
  December 6, 2010 at 10:44 AM

  @சிகப்பு மனிதன் நன்றி நண்பரே


  ஜிஎஸ்ஆர் said...
  December 6, 2010 at 10:44 AM

  @lakshuஇந்த கவிதையால் உங்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறதா


  ஜிஎஸ்ஆர் said...
  December 6, 2010 at 10:45 AM

  @vaanmohiதங்களின் வருகைக்கும் கருத்துரைகும் நன்றி


  அரசன் said...
  December 6, 2010 at 1:04 PM

  சார் மிக அருமை ..
  தங்களின் இந்த பணி தொடர எனது வாழ்த்துக்கள்...
  நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  December 9, 2010 at 9:24 AM

  @அரசன் நன்றி தொடருவோம் தஙகளை போன்ற நண்பர்களின் துனையோடு


  rtvenkat said...
  May 4, 2012 at 11:38 PM

  மிக அருமை நண்பரே! தொடருங்கள்.வாழ்த்துக்கள்.


  ஜிஎஸ்ஆர் said...
  May 8, 2012 at 4:14 PM

  @rtvenkat நல்ல நண்பர்களும், புரிதலும் உடையவர்கள் கூடவே இருந்தால் எதுவும் சாத்தியமே.


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர