Jul 15, 2010
எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம்
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு மிக நீளமானதாக இருக்கும் நான் வேண்டுமானால் இதையே இரண்டு பதிவுகளாக எழுத முடியும் ஆனால் அதை விரும்பவில்லை எனவே ஒரே பதிவாக எழுதுகிறேன் அதுவே தங்களுக்கு எளிதாக புரியும்படியாக இருக்கும்.என்னுடைய கடந்த பதிவில் Faaique Najeebஎன்பவர் பின்னுட்டத்தின் வழியாக இப்படியாக ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.portable software உருவாகுவது எப்படி? can u pls make & snd nhm writter as a portable . i cnt install anythng in my office "faaique@yahoo .co .uk "அவருக்கு உதவும் பொருட்டும் மேலும் இது தெரியாத நண்பர்களுக்கும் உதவுமே என்பதே பதிவின் நோக்கம் மேலும் நண்பர்கள் உங்கள் சந்தேகங்கள் கேட்கும் போது என் தளத்தில் கேட்பதை விட மதிப்பிற்குறிய நண்பர் பிகேபி அவர்களின் போரத்தில் கேள்விகளை பதிவீர்களேயானால் அங்கு உங்களுக்கு உதவ நிறைய தன்னலமில்லா நண்பர்கள் இருக்கிறார்கள் மேலும் அங்கு எழுதுவதால் அதிகம் நபர்கள் பயணடைய வாய்ப்பிருக்கிறது எனக்கு தெரிந்தவரையில் தன் பெயரை கூட வெளிப்படுத்தாத மனிதர் மேலும் அங்கு உங்கள் கேள்விகளுக்கு நிச்சியம் விடை கிடைக்கும்.
சில தளங்களில் போட்டபிள் மென்பொருள் கிடைக்கும் ஆனால் எல்லா மென்பொருளுக்கும் கிடைக்குமாவென்றால் இல்லை என்பதாக பதில் இருக்கும் ஆனால் இங்கு நீங்கள் விரும்பும் எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம் அதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கிறது ஆனால் பதிவின் நீளம் கருதி இப்போடு ஒன்றை மட்டுமே எழுதுகிறேன் மேலும் இந்த பதிவின் வரவேற்பை பொறுத்து அடுத்த வழிமுறையும் விரைவில் எழுதப்படும் சரி விஷயத்துக்குள் செல்வோம் நீங்கள் இந்த VMWARE Portable Application Makerதரவிறக்கவும் இதன் அளவு 7எம்பி-க்கும் குறைவே இதை வின்ரார் கொண்டு விரித்ததும் படத்தில் இருப்பது போல இருக்கும் இது விலையுள்ள மென்பொருள்தான் எனவே டிரையல் தரவிறக்கி பயன்படுத்தி தேவையென்றால் வாங்கிகொள்ளுங்கள்.
மென்பொருளை இருமுறை கிளிக்கினால் போதும் இனி I accept the terms in the License agreement என்பதன் அருகில் இருக்கும் கட்டத்தில் டிக் மார்க் குறி ஏற்படுத்தி பின்னர் Next என்பதை கிளிக்கவும்.
இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் Serial Number என்பதில் நீங்கள் முன்னமே காப்பி எடுத்த சீரியல் எண்ணை முதல் கட்டத்தில் ஒட்டவும் இரண்டாவதாக கீழே இருக்கும் கட்டத்தில் யூசர் நேம் கொடுத்ததும் Install என்பதை கிளிக்கவும் கணினி பற்றி தெரியாதவர்களும் இதை பயன்படுத்த வேண்டுமென்பதற்காகத்தான் இத்தனை விளக்கவும் தெரிந்தவர்கள் பொறுத்துக்கொள்ளவும்.
இனி மென்பொருளில் கம்பைள் செய்யப்பட்டவைகளி உங்கள் கணினிக்கு காப்பியாகி கொண்டிருக்கும் Next என்பது எனாபிள் ஆனதும் Next கொடுக்கவும்.
இப்போது உங்கள் மென்பொருள் இன்ஸ்டாலேசன் முடிந்தது என்பதாக தோன்றும் இனி நீங்கள் Finish என்பதை கிளிக்கவும் அவ்வளவுதான் இன்ஸ்டாலேசன் முடிந்துவிட்டது.
இனி நீங்கள் உங்கள் கணினியின் Start ->Programs -> VMware -> ThinApp Setup Capture என்பதை கண்டுபிடித்து புரோகிராமை திறக்கவும்.
இப்போது திறந்திருக்கும் விண்டோவில் Next என்பதை கிளிக்கவும்.
திறக்கும் இந்த விண்டோவிலும் ஒன்றும் யோசிக்க வேண்டியது இல்லை Next என்பதை கிளிக்கவும்.
இனி இப்படியாக இருக்கும் இதில் நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டாம் தானகவே அடுத்த பக்கத்திற்கு சென்றுவிடும்.
இந்த பக்கம் வந்தவுடன் இந்த விண்டோவே மினிமைஸ் செய்துவிட்டு நீங்கள் எந்த மென்பொருளை போர்ட்டபிளாக மாற்ற விரும்புகிறீர்களோ அந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுங்கள், நிறுவி முடித்ததும் இரண்டு நிமிடம் கழித்து நீங்கள் மினிமைஸ் செய்து வைத்திருந்த விண்டோவை மேக்சிமைஸ் செய்து Next என்பதை சொடுக்கவும்.
இந்த பக்கம் வந்தவுடன் நீங்கள் நிறுவிய மென்பொருளின் ஸ்நாப்ஷாட் எடுக்க தொடங்கிவிடும் முடிந்ததும் தானகவே அடுத்த பக்கத்திற்கு செல்லும்.
இனி இப்படியாக பக்கம் இருக்கும் அதில் நீங்கள் நிறுவிய மென்பொருளின் .Exe மட்டும் தெரிவு செய்யவும் அதிகபட்சம் முதலாவதாக இருக்கும் மற்றவை தேவையில்லை, தெரிவு செய்ததும் Next என்பதை சொடுக்கி அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
இந்த பக்கத்தில் USB flash / poratble media (stored in directory with application) என்பதை தெரிவு செய்து Next கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
இந்த பக்கத்தில் Merged isolotion mode என்பதை தெரிவு செய்து Next கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
இப்போது திறந்திருக்கும் விண்டோவில் Project Location என்பதை பிரவுஸ் செய்து நீங்கள் மாற்றும் போர்ட்டபிள் மென்பொருள் சேமிக்க விரும்பும் இடத்தை தெரிவு செய்யவும் அடுத்து அதன் கீழே இருக்கும் No compression (fastest for testing builds) என்பது தெரிவாகியிருக்கிறதா என பார்த்துக்கொண்டு Next என்பதில் கிளிக்கி அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
இனி இப்படியாக வந்ததும் நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை தானாக நாம் மாற்ற விரும்பிய மென்பொருளில் ரிஜிஸ்டரி குறிப்புகளை சேமித்ததும் அடுத்த பக்கம் சென்றுவிடும்.
இனி இப்படியான இறுதி பக்கம் வந்ததும் Build Now என்பதை கிளிக்கவும் இதன் மூலம் நமது போர்ட்டபிள் மென்பொருள் கம்பைள் செய்யப்பட்டுவிடும் அல்லது Browse Project என்பதை கிளிக்கி திற்க்கும் போல்டரில் build என்கிற பேட்ச் பைல் இருக்கும் அதை இருமுறை கிளிக்குவதன் மூலமாகவும் கம்பைள் செய்யலாம் அவ்வளவுதான்.
இப்போது உங்கள் போர்ட்டபிள் மென்பொருள் bin எனும் போல்டரின் உள்ளே தயாராய் இருக்கும் அங்கு உங்கள் போர்ட்டபிள் மென்பொருள் தவிர மற்ற அனைத்தையும் அழித்து விடுங்கள் அது எதுவும் தேவையில்லை மேலும் நீங்கள் ஏற்கனவே நிறுவிய மென்பொருளை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு உங்கள் போர்ட்டபிள் மென்பொருளை இயக்கவும், நீங்கள் போர்ட்டபிள் மென்பொருள் இயக்க தொடங்கியதும் சில போல்டர்கள் உருவாகும் அதை நீங்கள் அழித்தலும் மீண்டும் மென்பொருள் இயக்க தொடங்கியதும் அதேபோல போல்டர்கள் உருவாகும் எனவே அந்த போல்டரில் வலது கிளிக்கில் பிராப்பர்ட்டிஸ் திறந்து Hiden கொடுத்து ஓக்கே கொடுத்து விடவும்.
நான் விளையாட்டு மென்பொருள் இன்னும் சில மென்பொருள்களை சோதித்து இயக்கி பார்த்துவிட்டேன் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் துரதிருஷ்டவசமாக NHM Writer போர்ட்டபிளாக மாற்றினால் போனாடிக் இயங்கவில்லை தமிழ்99 யூனிக்கோட் மட்டுமே இயங்குகிறது எனவே தமிங்கிலிஷ் அடிப்பவர்களுக்கு இது உதவாது.
இந்த பதிவை நான் எழுதுவதற்கு இரண்டு இரவுகளை தொலைத்திருக்கிறேன் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் இது உங்களை போல உள்ள மற்ற நபர்களுக்கும் சென்றடைய உதவுங்கள் பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் பெரும்பாண்மையவர்கள் பயணடைய உதவுங்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
42 Responses to “எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம்”
-
WebPrabu
said...
July 15, 2010 at 11:41 AMஇது மிகச்சிறந்த, விலைமதிக்கமுடியாத பதிவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நான் படித்த மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று என்று சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தும் முறைகளை விளக்கி இருக்கிறீர்கள். தங்களிடமிருந்து அடுத்தடுத்த நுட்பங்களை கற்க மிகவும் ஆவாலாக உள்ளோம். மேலும் லினக்ஸ் பயனாளர்களுக்கும் பயன்படுபடியான நுட்பங்கள், மென்பொருள்கள் பற்றி தாங்களுக்கு தெரிந்திருந்தால் பதிவிடவும். மிக்க நன்றி!!!
-
movithan
said...
July 15, 2010 at 11:53 AMபெறுமதியான தகவல்.
வாழ்த்துக்கள். -
Mohamed Faaique
said...
July 15, 2010 at 12:09 PMஎன் கோரிக்கைக்காக பதிவு எழுதியதற்கு முதல் நன்றி...
இது மிகச்சிறந்த, விலைமதிக்கமுடியாத பதிவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நான் படித்த மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று என்று சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தும் முறைகளை விளக்கி இருக்கிறீர்கள். தங்களிடமிருந்து அடுத்தடுத்த நுட்பங்களை கற்க மிகவும் ஆவாலாக உள்ளோம். மேலும் லினக்ஸ் பயனாளர்களுக்கும் பயன்படுபடியான நுட்பங்கள், மென்பொருள்கள் பற்றி தாங்களுக்கு தெரிந்திருந்தால் பதிவிடவும். மிக்க நன்றி!! -
ஜிஎஸ்ஆர்
said...
July 15, 2010 at 12:23 PM@WebPrabu
மன்னிக்கவும் நண்பரே தங்களுக்கு உதவ முடியாத நிலைக்கு நிச்சியமாய் வருந்துகிறேன் நான் இதுவரை லினக்ஸ் உபயோகபடுத்தி பார்த்ததில்லை வெறும் வாசிப்பு அறிவு மட்டுமே இருக்கிறது அனுபவம் இல்லாமல் சோதனை செய்து பார்க்காமல் எழுதுவது என்பது சரியாய் இருக்காது இருப்பினும் விரைவில் எழுத முயற்சிப்போம் -
ஜிஎஸ்ஆர்
said...
July 15, 2010 at 12:24 PM@malgudi
தங்களில் விலைமுடியாத கருத்துரைக்கு நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
July 15, 2010 at 12:26 PM@Faaique Najeebநமக்கு தெரிந்ததை ன நம்மாள் முடிந்ததை பகிரிந்துகொள்கிறேன் அதற்கான நான் ஒன்றும் பெரிய கணினி அறிவு உள்ளவன் இல்லை மேலும் மன்னிக்கவும் நண்பரே தங்களுக்கு உதவ முடியாத நிலைக்கு நிச்சியமாய் வருந்துகிறேன் நான் இதுவரை லினக்ஸ் உபயோகபடுத்தி பார்த்ததில்லை வெறும் வாசிப்பு அறிவு மட்டுமே இருக்கிறது அனுபவம் இல்லாமல் சோதனை செய்து பார்க்காமல் எழுதுவது என்பது சரியாய் இருக்காது இருப்பினும் விரைவில் எழுத முயற்சிப்போம்
-
வரதராஜலு .பூ
said...
July 15, 2010 at 4:00 PMமிகவும் உபயோகமானதொரு பதிவு. விளக்கமாக விவரித்துள்ளீர்கள். மிக்க நன்றி
-
மாணவன்
said...
July 15, 2010 at 4:36 PMஅருமை ஜிஸ்ஆர் சார்,
மிகச்சிறந்த பயனுள்ள மென்பொருள் அழகாகவும் விளக்கியுள்ளீர்கள்...
உங்களிடமிருந்து நிறைய கற்றுவருகிறேன் சார்...
ஒவ்வொரு பதிவும் தெளிவாகவும் அழகாகவும் எழுதுகிறீர்கள்
உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்...
உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்ப்புகளுடன்...
நன்றி நன்றி நன்றி...... -
July 15, 2010 at 4:55 PMReally a great information...
Thanks a lot....... -
July 15, 2010 at 8:08 PMநிச்சயம் பயனுள்ள தகவல் நண்பரே! தொடர்க தங்கள் சேவை. வாழ்த்துகள்.
-
ஜிஎஸ்ஆர்
said...
July 17, 2010 at 9:00 PM@try2get
நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
July 17, 2010 at 9:00 PM@வரதராஜலு .பூ
நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
July 17, 2010 at 9:01 PM@R.ரவிசிலம்பரசன்_சிங்கை
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே -
ஜிஎஸ்ஆர்
said...
July 17, 2010 at 9:02 PM@எசாலத்தான்
உங்களை போன்றவர்கள் தொடர்ந்து வருவீர்களேயானால் எனக்கும் தொடர்ந்து செல்ல ஊக்கமாய் இருக்கும் -
ஜிஎஸ்ஆர்
said...
July 17, 2010 at 9:03 PM@www.thalaivan.com.
Rss ஓடை வழியாக பதிவை தானாக இனைத்தால் நன்றாயிருக்குமே -
Unknown
said...
July 19, 2010 at 7:58 PMநன்றி, அருமையான பதிவு, உங்கள் பொறுமை எனக்கு பொறாமையை தருகிறது.
-
Unknown
said...
July 19, 2010 at 11:45 PMஒரு சந்தேகம், ஏ-கலப்பை தமிழ் மென்பொருள் இதில் வேலை பார்க்காதா? தயவுசெய்து விளக்கவும். நன்றி!
-
ஜிஎஸ்ஆர்
said...
July 20, 2010 at 6:20 PM@GOPSA - கோப்ஸா
நமது நோக்கமே அனைவருக்கும் புரிய வேண்டுமென்பதே -
ஜிஎஸ்ஆர்
said...
July 20, 2010 at 6:21 PM@GOPSA - கோப்ஸா
நீங்களே கொஞ்சம் முயற்சி செய்து பார்த்து விடுங்களேன் போதிய நேரமின்மையே காரணம் தவறாக நினைக்க வேண்டாம் -
மு.ம.ராஜன்
said...
July 21, 2010 at 7:14 PMexcellent article
for rhis
i really intersting and read your article...
please dont stop your writing
continue your writing...
all the best
congratulation for your valuable post -
ஜிஎஸ்ஆர்
said...
July 22, 2010 at 10:18 AM@kingமகா
நன்றி மதிப்பிற்குறிய நண்பர் அவர்களே தொடந்து நம் தளத்தோடு இனைந்திருங்கள் தவறுகளை சுட்டிகாட்டுங்கள் நல்லவற்றை மற்றவர்களுக்கு அறிமுகபடுத்துங்கள் -
Mohamed Faaique
said...
July 22, 2010 at 12:32 PMஎன் pc 'யில் (win 7 ) இந்த sofware வேலை செய்யவில்லை. வேறு ஏதும் software உண்டா? பேரை மாத்திரம் தந்தாலும் போதும்..
-
ஜிஎஸ்ஆர்
said...
July 24, 2010 at 10:46 AM@Faaique Najeebஉண்மைதான் நண்பரே விண்டோஸ் 7-ல் உபயோகிக்க முடியாது விரைவில் மாற்று வழி இருந்தால் நிச்சியம் தெரிவிக்கிறேன்
-
Kanini Menporul
said...
September 4, 2010 at 4:25 PMநிச்சயம் பயனுள்ள தகவல் நண்பரே! தொடர்க தங்கள் சேவை. வாழ்த்துகள்.
-
ஜிஎஸ்ஆர்
said...
September 5, 2010 at 9:10 AM@ரமேஷ் நன்றி நண்பரே
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 7:33 PM.NHM Writer endraal, enna ??
.etharkkellaam, ithu upoyaga padukirathu, sir ? -
Vengatesh TR
said...
November 26, 2010 at 7:34 PM.Useful Article Sir
.I also had doubt on creating how creating portable apps !
.thank you,For removing that Doubt from my mind.. ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 9:44 PM@சிகப்பு மனிதன்உங்கள் கேள்விக்கு இங்கு பதில் இருக்கிறது
http://gsr-gentle.blogspot.com/2010/06/blog-post_9800.html -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 9:45 PM@சிகப்பு மனிதன் நல்லது நண்பரே இனி விரும்பும் மென்பொருளை போர்ட்டபிளாக மாற்றுங்கள் ஆனால் இந்த மென்பொருள் விண்டோஸ்7 ல் இயங்குவதில்லை
-
rtvenkat
said...
April 23, 2012 at 12:51 AMமிக அருமை நண்பரே! உஙகள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
-
Gobinath
said...
April 23, 2012 at 7:19 AMமிகவும் பயன்வாய்ந்த பதிவு நண்பரே.
-
April 23, 2012 at 11:05 AMUse full Post thanks
-
ஜிஎஸ்ஆர்
said...
April 23, 2012 at 7:59 PM@rtvenkat நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
April 23, 2012 at 8:00 PM@Gobinath புரிதலுக்கு நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
April 23, 2012 at 8:00 PM@wesmobபுரிதலுக்கு நன்றி
-
Unknown
said...
April 24, 2012 at 6:45 AMvery good information. Thanks
-
yuvan
said...
April 24, 2012 at 9:57 AMபயனுள்ள தகவல். மேலும் தொடர வேண்டுகிறேன்.
-
ஜிஎஸ்ஆர்
said...
April 24, 2012 at 10:29 AM@sekar நன்றி நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
April 24, 2012 at 10:30 AM@yuvanஉங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ய விழைகிறேன்
-
LazySystemAdmin
said...
April 24, 2012 at 11:28 AMபயனுள்ள தகவல். மேலும் தொடர வேண்டுகிறேன்.
-
ரவி சேவியர்
said...
April 24, 2012 at 12:11 PMVERY VALUABLE POST LOT OF HEARTFUL THANKS FOR YOU.
RAVI - PALLAVARAM,CHENNAI. -
ஜிஎஸ்ஆர்
said...
May 8, 2012 at 4:04 PM@Parthiban Ponnusamy, @ரவி சேவியர்2 புரிதலுக்கு நன்றி@Parthiban Ponnusamy
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>