Jan 30, 2012
வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பதிவுகள் எழுதும் நண்பர்களுக்காக, உங்களில் சிலர் சில வலைத்தளங்களில் ஏதாவது ஒரு தகவலை காப்பி எடுத்து வேர்ட் பைலிலோ அல்லது இன்ன பிறவற்றில் பேஸ்ட் செய்யும் போது நாம் காப்பி எடுத்த தகவலோடு அந்த பதிவின் உரலும் (Read more :-http://gsr-gentle.blogspot.com) கூடவே உங்கள் கிளிப்பேர்டில் வந்து இருக்கும் நாம் இந்த பதிவின் வழியாக பார்க்க போவதும் இதைப்பற்றி தான். நான் என்ன சொல்கிறேன் என்பது சரியாக புரியாதவர்கள் என் தளத்தில் இருந்து ஏதாவது ஒரு பகுதியை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து பாருங்கள் புரியும்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது tynt™ publisher tools தளத்திற்கு சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுத்து உங்களுக்கென ஒரு அக்கவுண்ட் உருவாக்கவும்.
நீங்கள் அக்கவுண்ட் உருவாக்கியதும் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பக்கம் திறக்கும் அதில் உங்கள் தளத்துக்கான ஸ்கிரிப்ட் வந்திருக்கும், ஸ்கிரிப்ட் காப்பி எடுத்து உங்கள் பிளாக்கர் தளம் திறந்து Design-> Edit Html சென்று Ctrl +F அழுத்தி <head> என்பதை கண்டுபிடித்து அதற்கு மேலாக நீங்கள் காப்பி எடுத்த ஸ்கிரிப்ட்டை பேஸ்ட் செய்து விடவும் அவ்வளவு தான். முடிந்தால் ஸ்கிரிப்ட் பேஸ்ட் செய்யும் முன், ஸ்கிரிப்டின் தொடக்கத்தில் <!—XXXXXXX Start--> ஸ்கிரிப்டின் முடிவில் <!—XXXXXXX End--> இப்படியாக சேர்த்து விடுங்கள் XXXXXXX என்பதில் உங்களுக்கு புரியும் வகையிலான தலைப்பை கொடுத்து விடுங்கள் பின்னாளில் தேவையில்லையென்றால் நீக்குவதற்கு ஸ்கிரிப்ட் கண்டுபிடிக்க உதவியாய் இருக்கும்.
நீங்கள் இதில் கூடுதலாக மாற்றங்கள் செய்ய விரும்பினால் Customize Attribution கிளிக்குவதன் மூலம் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ள முடியும்.
கூடவே ஒரு செய்தி இதை வைப்பதால் மட்டும் காப்பி எடுத்தவர்கள் உங்கள் பதிவின் உரலை இனைப்பார்கள் என்று கணவு காண வேண்டாம் அழகாக டெலிட் செய்து விடுவார்கள் அது மட்டுமல்லாமல் இது போன்ற தளங்களில் காப்பி எடுக்கும் போது கூடவே வரும் URL வராமல் செய்வதற்கான வழிகளும் இனையத்தில் இருக்கிறது.
என்ன நண்பர்களே பதிவு உங்களுக்கு உதவியானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்

இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr


15 Responses to “வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும்.”
-
திண்டுக்கல் தனபாலன்
said...
1
January 30, 2012 at 11:47 AMநல்ல பதிவு ! வாழ்த்துக்கள்! நன்றி!
-
stalin wesley
said...
2
January 30, 2012 at 12:57 PMஉபயோகமான பதிவு நன்றி
-
Vengatesh TR
said...
3
January 30, 2012 at 1:49 PMதகவல் பகிர்வுக்கு நன்றி !
-
ஜிஎஸ்ஆர்
said...
4
January 30, 2012 at 4:09 PM@திண்டுக்கல் தனபாலன் நன்றி நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
5
January 30, 2012 at 4:10 PM@stalin wesley நன்றி நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
6
January 30, 2012 at 4:11 PM@சிகப்பு மனிதன் நீண்ட நாட்களுக்கு பிறகான வருகைக்கு நன்றி.
-
MARI The Great
said...
7
January 30, 2012 at 4:40 PMதகவலுக்கு நன்றி
-
மாணவன்
said...
8
January 30, 2012 at 5:10 PMப்ளாக்கர்களுக்கு பயனுள்ள புதுமையான தொழிற்நுட்ப தகவலை பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்கண்ணே!
-
smibrahim
said...
9
January 30, 2012 at 5:11 PMன் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
மேலும் படிக்க: வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும். ~ புரியாத கிறுக்கல்கள் http://gsr-gentle.blogspot.com/2012/01/add-read-more-url-when-text-copied-your.html#ixzz1kwP8A1ym
ஜிஎஸ்ஆர் -
ஜிஎஸ்ஆர்
said...
10
February 5, 2012 at 5:48 PM@வரலாற்று சுவடுகள்புரிதலுக்கு நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
11
February 5, 2012 at 5:49 PM@மாணவன்சமீபத்தில் தெரிந்துகொண்டேன் சரி இது யாருக்காவது பயன்பட்டால் பயன்படட்டுமே என்கிற நோக்கில் எழுதியது...
-
ஜிஎஸ்ஆர்
said...
12
February 5, 2012 at 5:50 PM@smibrahimபரவாயில்லையே கருத்துரை பெட்டியை சோதனை பெட்டியாக மாற்றி விட்டீர்களே இதற்கு பதிலாக பதிவை பற்றி ஏதாவது எழுதியிருக்கலாம்...
-
Unknown
said...
13
April 2, 2012 at 11:53 AMபதிவர்களுக்கு பயனாகக்கூடிய பதிவு. வழிகாட்டலுக்கு மிக்க நன்றிகள்..
-
ஜிஎஸ்ஆர்
said...
14
April 23, 2012 at 7:57 PM@பாரத்... பாரதி... நன்றி தம்பி
-
Rajkumar R
said...
15
January 22, 2013 at 2:57 AMநல்ல பதிவு ! வாழ்த்துக்கள்! நன்றி!
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>