Showing posts with label காமம். Show all posts
Showing posts with label காமம். Show all posts

Nov 3, 2011

8

அனானி ஹேக்கர்களை ஆதரிப்போம்..(We Support Anonymous Hackers)

  • Nov 3, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பணம் சேர்த்து வைத்திருப்பவனுக்கு பயம், இல்லாதவனுக்கு கவலை.

    பொதுவாக ஹேக்கர்கள் என்றாலே இனைய தொழில்நுட்பம் சார்ந்து இயங்குபவர்களுக்கு கொஞ்சம் அலர்ஜியாகத்தான் இருக்கும் ஆனால் இப்பொழுது கூடவே கூகுலின் பிளாக்கர் வசதியை பயன்படுத்துபவர்களுக்கும் கொஞ்சம் பயமும் இருக்கிறது காரணம் வலைப்பதிவுகளும் இப்போது தனிமனித துவேஷம் கொண்டு ஹேக்காவது அவ்வப்போது வலைத்தளங்களின் வழியாக அறிய முடிகிறது.

    நம் வலைத்தளத்தின் வழியாக பாலியல் தூண்டும் அடிப்படை குறித்தான சில பதிவுகள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன் அதில் சில மாற்றுக் கருத்துகளும் கூட இருந்தது எப்பொழுதும் நம் சிந்தனையை போலவே மற்றவர்களின் சிந்தனையும் இருக்குமென்பது எதிர்பார்க்க கூடாதுதானே?

    இப்பொழுது இனையத்தில் தேவையான ஒரு எச்சரிக்கையை அனானி ஹேக்கர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் ஆபரேஷன் டார்க்நெட் (Operation Darknet) அவர்களுடைய கோரிக்கை குழந்தைகளை பலிகடாவாக்கி கொழிக்கும் குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் (Child Pornography) தளங்களை முடக்குவோம் என்பது தான் அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை.

    குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் (Child Pornography) தளங்களை நடத்தும் உரிமையாளர்கள் அவர்களுக்கான வழங்கிகள் என அவர்கள் கண்டறியும் அனைத்து தளங்களையும், இனைய வழங்கிகளையும் முடக்க இருக்கிறார்கள் இதுவரை பல தளங்களை முடக்கியும் இருக்கிறார்கள் மேலும் அவர்களின் கொள்கைகள் மற்றும் டார்க்கெட் என்னவெண்பதை மிக தெளிவாக Anonymous Hackers
    தளத்தில் சொல்லியிருக்கிறார்கள் இவர்கள் சாதரணமானவர்கள் இல்லை என்பதற்க்கு இவர்கள் வெளியிட்ட எச்சரிக்கையை பார்த்தவுடன் சில தளங்கள் முகவரிகளையும் லிங்குகளையும் மாற்றியிருக்கிறார்கள் என்பதே இவர்கள் திறமைக்கு சிறந்த உதாரணம்.

    ஆபரேஷன் டார்க்நெட் (Operation DarkNet)



    அனானி ஹேக்கர்களின் (Anonymous Hackers) கைவரிசையில் சோனி நிறுவணம் (Sony Corporation) மற்றும் நியுயார்க் ஸ்டாக் எக்ஞ்சேஞ் (New york Stock Exchage) இரண்டும் பட்ட கஷ்டங்கள் அவர்களுக்கு தான் தெரியும் அதிலும் சோனி நிறுவணம் தான் அதிகமான சேதாரங்களை சந்தித்திருக்க வேண்டும். அனானி ஹேக்கர்கள் சோனி நிறுவணத்துக்கு எதிராக வெளியிட்ட அறிவிப்பை படித்து பாருங்கள் Anonymous wrote to Sony Corporation
    ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் சோனி நிறுவண சேர்மேன் Sony Board of Director யுஎஸ் அரசுக்கு எட்டு பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதியிருக்கிறார் அந்த கடிதத்தை Sony Chairman Letter to the US Govt.
    படித்து பாருஙகள் ஒரு கட்டத்தில் புலம்பியிருக்கிறார் நாங்கள் என்னதான் பாதுகாப்பு நடவடிக்க எடுத்து ஒரு ஆபத்தில் இருந்து தப்பித்தாலும் அடுத்த சில மணி நேரங்களிலேயே அடுத்து புதுவிதமான தாக்குதலை தொடர்கின்றனர் என்பதாக நீண்ட கடிதமாக இருக்கிறது.

    கிட்டத்தட்ட இதுவரை 100ஜிபி அளவிலான குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் (Child Pornography)தள தகவல்களை எடுத்து அழித்திருக்கிறார்கள் இனியும் தொடரும் இதை முற்றிலுமாக ஒழித்தால் நமக்கும் சந்தோஷம் இன்றைய குழந்தைகள் நாளைய நம் எதிர்காலம் நிச்சியமாய் அவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கப்பட வேண்டும். மேலும் இவர்கள் குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் தளங்களின் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கையாக நீங்கள் யாராக வேண்டுமானலும் இருங்கள் உங்களை நாங்கள் கண்டுபிடிக்கிறோம் என்பதாக இருக்கிறது.

    பொதுவாக ஹேக்கர்கள் என்றாலே பயம் வரும் ஆனால் அனானி ஹேக்கரிகள் மீது மரியாதையும் மதிப்பும் வருகிறது. அனானி ஹேக்கர்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள கூகுலில் சென்று Anonymous Hackers என்று தேடினால் போதும். அப்படியே நான் முன்பு எழுதிய பிரபல ஹேக்’கிங்’குகள் மற்றும் கீலாக்கர் அபாயம்
    என்பதையும் படித்து பாருங்கள்.

    மேலும் அனானி ஹேக்கர்கள் தங்களை பற்றி சொல்வது இப்படித்தான்...
    • We are Anonymous.
    • We are Legion.
    • We do not forgive.
    • We do not forget.
    • Expect us.

    இது ஒரு புறம் இருக்க பொழுதுபோக்கு தளங்களில் முதன்மையாக இருக்கும் முகப்புத்தக (Facebook) தளத்தையும் வருகிற நவம்பர் 5 ம் தேதி (Facebook will fall Nov 5, 2011) முடக்கப்படும் என்பதாக ஒரு யூடியுப் வீடியோ இருக்கிறது உண்மையை சொல்லப்போனால் இந்த பேஸ்புக்கால் சீரழிந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் இதற்கு சமீபத்திய ஒரு உதாரணம் மகேஷ் என்பவரின் தற்கொலையும் அவர் செய்த கொலையும்.

    ஆபரேஷன் பேஸ்புக் (Operation Facebook)



    என்ன நண்பர்களே அனானிகளின் ஆபரேசன் டார்க்நெட் தேவையான ஒன்றே என்று நம்புகிறேன் இனையத்தில் வலம் வரும் போது குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் (Child Pornography) தளங்களை கண்டால் Anonymous Hackers
    களிடம் தெரியபடுத்தினால் போதும் மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Jun 27, 2011

    8

    இதற்கு பெயரும் காதலாமே!

  • Jun 27, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: காதலில் பைத்தியக்காரத்தனம் இல்லையென்றால் அது காதலே இல்லை.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நான் சந்தித்த, கேட்டறிந்த விஷயத்தை பற்றி பதிகிறேன் சில பல நாட்களாக லிவின் டு கெதர் என்கிற ஒரு கலாச்சாரத்தை இருவிதமான கருத்துகளை பல இடங்களிலும் கேட்க நேர்ந்தது, படிக்க நேர்ந்தது நான் நிச்சியமாய் இதைப் பற்றி எழுதபோவதில்லை அதே நேரத்தில் காதலோடு தொடர்புடைய சில பிரச்சினைகளை கண்டு காதலித்தவர்கள் தம்மில் தம் பிரிந்து செல்கிறார்கள் இதை பலர் வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்கள் இன்னும் சிலர் இதற்காக இன்னும் சிலர் ஏதேதோ காரணங்கள் சொல்லி விலகி செல்கிறார்கள்.

    பொதுவாகவே காதலை எந்த பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை சினிமாவில் மட்டும் வேண்டுமானால் காதலை ஏற்றுக்கொண்டு அதை ஆசிர்வதிக்கும் தாய் தந்தையரை, உறவினரை பார்க்கலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் என்னவோ கசக்கும் வேப்பாங்காய் தான் பெற்றோருக்கும் சரி உறவிணர்களுக்கும் சரி சம்பந்தமே இல்லாத ஊராரும் சரி இந்த விஷயத்தில் எல்லோர் மன நிலையும் ஓரே மாதிரியாகத்தான் இருக்கிறது இதை பற்றி எழுதும் எனது மனநிலையும் கூட மேலே சொன்னவர்களை போலத்தான் இருக்கிறது.

    காதல் என்பதன் அர்த்தம் அன்பு என்பது தானே அப்படியானால் எல்லோருக்கும் காதல் உணர்வு இருக்கிறது தாம் பெற்ற பிள்ளை மேல் தாய் தந்தையர் வைத்திருக்கும் அன்பிற்கு பெயரும் காதல் தானே! தங்கள் அன்பை மட்டுமே பிரதானமாக நினைக்கும் தாய் தந்தையர் உறவிணர்கள் ஏன் பருவம் அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ காதல் வருவதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை? இந்த நேரத்தில் உங்களுக்கு வரும் கேள்வியை நான் மறுக்கவில்லை நியாயம் தான் எல்லோருக்கும் இயல்பாய் இருப்பது தான் நம் குழந்தைகள் நல்ல இடத்தில் திருமணம் செய்து நம் மகளை, அல்லது மகனை நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்கிற இயல்பான ஆசைதான்! இருக்கத்தான் செய்யும்! பிறந்ததில் இருந்து பார்த்து பார்த்து ஈ, எறும்பு, அழுத்தமான காற்று கூட படாமல் வளர்த்தவர்களாயிற்றே அவர்கள் எதிர்பார்ப்பதில் பெரிதாய் தவறு ஒன்றும் இருப்பாதாய் தெரியவில்லை இந்த விதத்தில் அவர்கள் நிலையில் அவர்கள் சரியாகவே இருக்கிறார்கள்.

    ஆனால் நீங்கள் உங்கள் குடும்பம், சூழ்நிலை எல்லாம் தெரிந்தும்,வளர்த்த தாய் தந்தையரின் மீதான அன்பையும் மீறி காதலிக்கிறீர்கள் காதல் அந்தளவிற்கு உங்களை தூண்டும் இந்த நேரத்தில் எல்லாம் ஒரு தூசி போல தெரியும் ஆனால் ஒரு பெண் அல்லது ஆணின் ஏற்படும் ஒருவித ஈர்ப்பு அது காதலா, காமாம, அல்லது வெறும் ஈர்ப்பு மட்டும் தானே என்பதை கூட அறிய முடியாத நிலையில் காதலிக்கிறீர்கள் காதலிக்கும் போது பெற்றோரின் கண் வெட்டி கண்களால் பேசவும் தெரிந்த உங்களுக்கு காதலின் அடுத்த கட்டமான திருமணம் என்கிற நிலையில் உங்கள் தைரியம் தன்னம்பிக்கை எங்கே போகிறது?

    காதல் என்றாலே பிரச்சினை என்பதை நீங்கள் காதலிக்கும் போதே உணர்ந்திருப்பீர்கள். உங்களவரை முதன் முதலில் காணும் போது உங்கள் கண் முன் மின்மினி பூச்சி அழகாய் பறந்து கீர்ன் சிக்னலை உங்கள் மனது கொடுத்து விடும் ஒரு வழியாய் தனிமையாய் சந்திக்க நேர்ந்தால் உங்கள் காதலை விட அவரவர் குடும்ப பாரம்பரியம் சாதி மதம் உறவிணர்கள் என எல்லாவற்றையும் நிச்சியம் பரிமாறிக்கொள்வீர்கள் தானே அப்பொழுதே உங்களுக்கு உங்கள் காதலின் முடிவு தெரிந்திருக்கும் அப்பொழுது குருட்டு நம்பிக்கையில் எப்படியும் சமாளித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் காதலை விட மனமிருக்காது உங்கள் குருட்டு தன்னபிக்கையை உங்களவர் தன்னம்பிக்கை என நினைத்து கண்ணே மணியே என கனவில் கோட்டை கட்ட ஆரம்பித்து விடுவார்.

    விளைந்த பொருள் விற்பனைக்கு வந்து தானே ஆகவேண்டும்! அப்படித்தான் உங்கள் காதலும் பெற்றோரின் வரட்டு பிடிவாதத்திலும் உங்கள் மீதான அக்கரையாலும் உங்களுக்கென வரன் பார்க்க தொடங்குவார்கள் அப்பொழுதே பிரச்சினை வந்துவிடும் உங்கள் காதலிலும் சலசலப்பு தொடங்கும்.ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சொல்வீர்கள் எப்படியாவது உன் வீட்டில் சொல்லி சம்மதிக்க வை என்பதான விவாதங்கள் தொடங்கி விடும் ஆனால் உங்கள் வீட்டிலோ கோவிலில் பலி கொடுக்க போகும் ஆடு போலத்தான் உங்கள் நிலைமை ஆட்டிற்காவது மஞ்சல் தண்ணி தலையில் ஊத்தி அதன் உடம்பை சிலிர்க வைத்து சம்மதம் கொடுத்துவிட்டது என சந்தோஷத்தில் பலி கொடுத்து விடுவார்கள் ஆனால் இந்த விஷயத்தில் பெற்றோர்கள் உங்களின் சம்மத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் நீங்கள் குழந்தையாம், உங்களுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது என்று தமக்கு தாமே சொல்லிக் கொள்வார்கள்.

    அவர்களுக்கே தெரியாமால் கண் வெட்டி காதலிக்க தெரிந்த நீங்கள் குழந்தையாம்! ஒன்றுமே தெரியாதம்! ஆனால் குடும்பம் நடத்த மட்டும் தெரியுமாம்! திடீரென்று வாழ்வில் வந்த ஒருவரை பேசி காதலிக்க தெரிந்த உங்களுக்கு உங்கள் பெற்றோருடன் உங்கள் காரியங்களை பகிர்ந்துகொள்ள முடியாதா? உங்கள் நிலையை அவர்களுக்கு சொல்லித்தான் புரிய வைக்க முடியாதா? பிரச்சினை என வரும் போது பிரச்சினைகளை சமாளிக்க முடியாமால் உடனே ஆசையாய் காதலித்த உங்களவரை மெர்ச்சுரிட்டியாக ஒருவரை ஒருவர் பிரிந்து செல்ல முடிவெடுக்கிறீர்கள் இது தான் உங்கள் காதலா? மனசு முழுவதும் உங்களவரோடான வாழ்க்கையை கனவில் வாழ்ந்து விட்டு வெறும் சதை பிண்டாமாய் அப்பா சொன்னார், அம்மா சொன்னார் என நொண்டிச்சாக்கு சொல்வதற்கு பெயர் தான் காதாலா?

    சரி அப்படியே பிரிந்து சென்று நீங்கள் வேறு ஒருவரோடு உங்கள் குடும்பத்தினர் கட்டாயத்தின் பேரில் வேறொருவரை திருமணம் செய்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம், நீங்களோ ஒருவரை காதலித்தீர்கள் ஆனால் வேறு ஒருவரை திருமணம் செய்கிறீர்கள் இதைபோலவே நீங்கள் திருமணம் செய்யப்போகும் நபருக்கும் இது போன்ற ஒரு பின்னனி இருந்தால் எப்படியிருக்கும்? அப்பொழுது உங்களால் திருமண பந்தத்தில் மனதளவில் சந்தோஷமாகத்தான் இருக்க முடியுமா? சரி ஏதோ ஒரு தருணத்தில் உங்கள் முன்னால் உங்களவரை எதிர்கொள்ள நேர்ந்தால் உங்களால் இயல்பாய் இருக்க முடியுமா? என்னடா அப்படியென்றால் இவன் கூட்டிக்கொண்டு ஓடச் சொல்கிறானோ! என நினைக்க வேண்டாம் வாழ்க்கை முழுவதும் மனதுக்குள் வருந்துவதற்கு பதிலாக உங்களால் முடிந்தவரை போராடி பார்க்கலாமே மனதில் ஒருவரும் கட்டிலில் ஒருவரும் என்பது வாழ்க்கைக்கு சுகமாக இருக்காது.

    தயவு செய்து காதலியுங்கள் அது ஒரு அழகான உணர்வு, சந்தோஷம் அப்படியே ஒருவேளை உங்களுக்கு திரைப்படங்களில் வருவது போல கண்டதும் காதல் வந்தால் எதார்த்தமாய் யோசித்து பாருங்கள் வண்டி வண்டியாய் ஆசைகள் சுமந்து கனவுக்கோட்டை காட்டி சுமக்க முடியாமல் வீழ்ந்து விடாதீர்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் சேர்த்தே பாதிக்கும். இந்த சமுதாயத்தை பொருத்தவரை காதல் இன்னமும் தீண்டப்பட கூடாத ஒன்று தான் ஆனால் காதலால் மட்டுமே சாதி மதம் ஒழித்து சமத்துவம் தர முடியும்.

    அன்பான பெற்றோர்களே நீங்களும் யோசியுங்கள் காதலிப்பது ஒன்றும் மிக பெரிய தவறு இல்லை அது மனிதனுக்குள் இருக்கும் இயல்பான ஒன்று தான் உங்கள் பிடிவாதத்தில் திருமணம் செய்து கொடுத்து இரண்டாவது நாளே உங்கள் பெண் வீட்டிற்கு வந்தால் அவளின் நிலை என்னாவாக இருக்கும் அல்லது கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த உங்கள் மகன் திருமணம் முடிந்த சில நாளிலியே துனைவியை பிரிந்தால் அவருக்கு உங்களால் என்ன ஆறுதலை சொல்லி விடமுடியம்? காலம் கடந்த ஆறுதலில் தொலைந்த சந்தோஷம், வாழ்க்கை நிம்மதி, அந்தஸ்து என ஏதாவது கிடைத்து விடுமா?

    நண்பர்களே காதலிக்க நினைப்பவர்கள், இப்போது காதலித்து கொண்டிருப்பவர்கள் என அனைவருக்கும் நம்பிக்கை தரும் வகையிலோ அல்லது எதார்த்தத்தை உணர்த்தும் வகையிலான உங்கள் கருத்துகளை எழுதுங்கள் படிப்பவர்களுக்கு உதவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Oct 22, 2010

    24

    மாறி வரும் காதல்,காமம், கலாச்சாரம்

  • Oct 22, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: இல்லறத்தாருக்கும், துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம் ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மான்ந்தம் கிடையாது.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சிலருக்கு பிடிக்காமல் போகலாம் சிலர் இந்த கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கலாம், இன்னும் சிலர் படித்த சுவடே தெரியாமல் படித்துவிட்டுச் செல்லலாம். எது எப்படியிருந்தாலும் நான் எனக்கு தெரிந்த விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

    நம் சமுதாயத்தை சீர்குலைப்பதில் சினிமாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது பொதுவாகவே நம் மக்கள் அப்படித்தான் செய்தித்தாள்களில் வரும் கள்ளக்காதல் செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், சினிமா செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எப்பவும் அதிகமாகவே இருக்கிறது உடனே ஒன்றிரண்டு நபர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் அதற்காக உண்மை என்பது பொய்யாகிவிடாது.

    நடு நிலையாய் இருக்க வேண்டிய செய்தித்தாள்கள் முதற்கொண்டு அதை வியாபார ரீதியாகவே ஒரு செய்தியை கவர்ச்சியுடன் வெளியிடுகின்றன, அதை விட தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளோ வெறும் ஆபாசத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கின்றன சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ஒரு ஆடல் நிகழ்ச்சி அதில் இருக்கும் நடுவர் ஒரு பெண் தான் ஆனால் அவர் ஆடல் பற்றி குறிப்பிட்டு அவர் உடை குறைத்து தொப்புள் காண்பிக்கவேண்டும் என்பதை நேரடியாக கூறாமல் வேறு ஏதேதோ சொல்லி வற்புறுத்துகிறார் அவர்கள் என்ன செய்வார்கள் இந்த உலகம் மொத்தமும் அன்பு, பண்பு, பகுத்தறிவு இவையெல்லாவற்றையும் நடிப்பாகவும், நாடகமாகவும் மாற்றி பணம் சம்பாதிக்கும் குறிக்கோளையை கொண்டுள்ளன இதில் தமிழ் தொலைக்காட்சிகள் இந்த பணியை மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.

    எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் சினிமாவில் மட்டுமே காதல் காட்சிகளை கண்டிருக்கிறேன் ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நிறையவே கண்டிருக்கிறேன் ஆனால் இந்த வகையான காதல், கள்ளக்காதல் இரண்டுமே வளர்ந்த நகரங்கள், கிராமங்கள் என பாகுபாடில்லாமல் வியாபித்து கிடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை இதில் கண்ணால் கண்டதும், காதால் கேட்டதும், செய்தித்தாள்களில் படித்ததும் அடங்கும்.

    சில வருடங்கள் வேலை நிமித்தம் சென்னையில் வசித்திருக்கிறேன் அன்றைய காலக்கட்டத்தில் பொழுதுபோக்கிற்காக மெரினா பீச் செல்வது வழக்கம் ஆனால் நாளடைவில் அங்கு செல்வதென்பதை அருவருக்கும் வகையில் அமைந்தது அங்கு இரவு 8.30 மணியை தாண்டிவிட்டால் அங்கே கனஜோராக வியாபரம் தொடங்கிவிடும் இது அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியும் ஆனால் அவர்கள் அதை கண்டுகொண்டதாக கூட காட்டிக்கொள்ள மாட்டார்கள் சரி அவர்கள் தான் பிழைக்க வழியில்லை என்று நொண்டிசாக்கு சொல்கிறார்கள் சரி என விட்டுவிடுவோம் படிக்கும் கல்லூரி பெண்கள், இளைஞர்கள், இளைஞிகள் அவர்களும் அவர்கள் பங்குக்கு எந்தளவிற்கு இந்த சமுதாயத்தை சீர்குலைக்க முடியுமோ அந்தளவிற்கு சீர்குலைக்கிறார்கள் இதில் யாரை குற்றம் சொல்வது இளைஞனையா? இளைஞியையா? பெற்றவர்களையா? கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களையா? இல்லை எது நடந்தாலும் அதையும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கும் சராசரி மனிதனையா? எங்கு தொடங்குகிறது இந்த பிழை?

    நான் நினைக்கிறேன் இந்த உலகத்தில் பலவிதமான மக்கள், பலவிதமான நாகரீகம் , பலவிதமான மதம், சாதி அமைப்பு இருக்கிறது ஆனாலும் ஒட்டுமொத்தமாக தமிழர்களின் கலாச்சாரம் மற்றவர்களால் மதிக்கக்கூடியாதாகவே இருக்கிறது அப்படித்தானே? நம்மில் தான் உறவுகளுக்கு மதிப்பும், முன்னுரிமையும் கொடுக்கபடுகிறது ஆனால் அதே நம் சமூகத்தில் குறுகிய நாட்களுக்குள் எத்தனை மாற்றம்? இது காலம் கொண்டுவந்ததா இல்லை மனிதன் மிருகமாகின்றான?

    நம் மக்களில் தான் மாமா, அத்தை பெண்ணை திருமணம் செய்கிறோம், இன்னும் சிலர் தனது அக்கா மகள் அதாவது மருமகளை திருமணம் செய்கின்றனர் ஆனால் இதை பற்றி அண்டை மாநிலத்தவர்கள் கேட்டால் எப்படியாவது வியாக்கினயம் பேசி சமாளித்து விடுவோம் இன்னமும் இந்த மாதிரியான திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன ஆனால் இதிலும் இஸ்லாம் மக்களை பற்றி கேட்கவே வேண்டாம் அவர்கள் இதற்கு வேறு ரீதியில் நமக்கு பதில் சொல்லி குழப்புவார்கள் நாம் அதற்குள் போகவேண்டாம் அதே நேரத்தில் நமது அண்டை மாநிலம் கேரளா அங்குள்ளவர்கள் நாம் நியாயப்படுத்தும் மாமா, அத்தை மகள், மகன், அல்லது அக்கா மகள் இந்த உறவுமுறையில் கூட திருமணம் செய்வதில்லை ஆனால் அங்கும் சில திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன ஆனால் பெருமளவில் இல்லை என ஆறுதல் அடையளாம்.

    சில நேரங்களில் செய்தித்தாள்களில் படிக்கிறோம் ஓரே வீட்டில் வசித்த சகோதர, சகோதரி வீட்டை எதிர்த்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்கின்றனர் சரி அவர்கள் என்ன படிக்காதவர்களா? நன்கு படித்தவர்கள், சகோதர,சகோதரி முறை தெரிந்தும் திருமணம் செய்பவர்களை முற்போக்கு சிந்தனைவாதிகளா? சட்டம் இருக்கிறது என்பதால் எந்தவித தவறுகளையும் செய்யலாமா? இன்னும் சிலர் இதற்கும் மேலே சென்று ஓரே பால் இனத்தவர்கள் ஒருமித்து வாழ்கிறார்கள் இதை என்ன சொல்வது, எங்கு தொடங்குகிறது இந்த தவறுகளுக்கான சூழல்? இது சரியா இல்லை மாற்றப்படவேண்டுமா?

    காதலின் அர்த்தம் தெரியாமல் இளைய சமுதாயம் சீர்கெட்டு கிடக்கிறது இப்பொழுதெல்லாம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் காதல் செய்ய ஆரம்பிக்கின்றனர், காதல் என்றால் என்ன என்று உணர்வதற்குள்ளாகவே காதல்! உண்மையில் இது அவர்களுக்கு ஒரு சந்தோஷாமான நிகழ்வாக உணர்கிறார்கள் இப்படித்தான் ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னர் நம்மூரில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் இருவர் சராசரி வயது 15க்குள்ளே தான் இருந்திருக்கும் இருவருக்கும் காதல் அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் இருப்பிடத்துக்கும் நான் வசிக்கும் இடத்திற்கும் குறைந்தபட்சம் ஆறு கிலோமீட்டர் இருக்கும். ஆனால் என்ன செய்வதென்று அறியாத பாலகர்கள் சினிமாவில் தஞ்சம் சென்றடைவது போல நானும் என் நண்பனும் நிற்கும் இடத்தில் கண்ணில் பட்டார்கள் நமக்கு நமது பாகத்தில் உள்ளவர்களை முழுவதுமாக தெரியும் அதே போல நம்மையும் நன்கு அறிவார்கள். இந்த இருவருமே நம் கண்ணில் பட்டதே இல்லையே என கூப்பிட்டு விசாரித்தால் காதல் திருமணம் செய்ய வந்தார்களாம் சரி கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்த்தால் 150க்கு மேலே போகாது இதை வைத்துக்கொண்டு இவர்கள் புது வாழ்க்கை தொடங்க போகிறார்களாம், பின்னர் நாங்களே விசாரித்து அவர்கள் வீட்டிற்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்னரே அவர்கள் குடும்பத்தார்கள் நமது பாகத்திற்கு வந்து விட்டிருந்தார்கள்.

    இனிமேல் தான் விஷயமே இருக்கிறது நான் முன்னமே சொன்ன அவர்கள் வயதை ஞாபகபடுத்திக்கொள்ளுங்கள், இருவரின் குடும்பத்தார் வந்ததும் கோபத்தில் அடித்து விட்டார்கள் அப்போழுது தான் நாம் சினிமாவில் காண்பது போல இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்துக்கொண்டு பிரியமாட்டேன் என அடம்பிடிக்கிறார்கள் இது எதன் பாதிப்பு நீங்கள் தான் சொல்லவேண்டும்.

    இனி இந்த கள்ளக்காதால் சாதரன ஒரு நபர் திருமணம் முடிந்தவர் அவர் அவர் மணைவி, கணவன் அல்லாத அல்லது சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு காதல் அதற்கு பெயர் கள்ளக்காதால். இந்த காதலுக்கு இடத்திற்கு தகுந்தாற் போல இருவிதமான பெயர்கள் அழைக்கப்படுகிறது பிரபலமல்லாத ஒரு சராசரி நபர் இந்த தவறை செய்தால் இதற்கு பெயர் கள்ளக்காதல் அதே நேரத்தில் பிரபலமானவர்கள் இந்த தவறை செய்தால் அதற்கு பத்திரிக்கைகள் வழங்கும் பெயர் காதல் இந்த கள்ளக்காதல் தான் நெஞ்சை பதை பதைக்க செய்கிறது சமீபத்தில் நடந்த ஒரு சிறுவனின் கொலை, மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனின் கொலை, தலையில் அடித்து கொலை என புதிது புதிதான வக்கிரமான முறையில் கொலைகள் நடைபெறுவது இந்த கள்ளக்காதலில் தான். இதை பற்றி நான் அதிகம் எழுதப்போவதில்லை. என்னுடைய கேள்வி எதனால் இந்த மாற்றம் ஏற்படுகிறது எங்கு தவறு நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது ஆனாலும் இதில ஒரு விஷயம் இந்த கள்ளக்காதலில் குற்றவாளிகள் பெரும்பாலும் ஒரு பால் இனத்தவராகவே இருக்கின்றனர் என்பதை பத்திரிக்கைகள் விளம்படுத்தும் போது தான் நமக்கும் தெரிகிறது.

    இனி நாம் மேலே பார்த்த இரண்டிலுமே சேராத காட்டுமிராண்டித்தனமான ஒரு செயல் இருக்கிறது அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம் ஆனால் பெரும்பாண்மையான செய்திகள் வெளிநாடுகளில் நடந்தவை தான் அதாவது பெற்ற மகளேயே வன்புணர்வு செய்து வீட்டிலே அடைத்து வைத்து கொடுமை படுத்தப்பட்டு பின்னர் சட்டத்தால் மீட்கப்பட்டதாக செய்திகளில் படிக்கிறோம் ஆனால் இதெல்லாம் வெளிநாடுகளில் தான் கலாச்சாரம் தெரியமால் மனித நேயம் இல்லாமல் , உறவு முறை தெரியாமல் சிதைக்கிறார்கள் என நினைத்திருந்த நேரத்தில் தான் மிக சமீபத்தில் ஒரு சம்பவம் அறிய நேர்ந்தது இதை வாசிக்கும் போது முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த யாரவது இருந்தால் இந்த உண்மை அவர்களுக்கு தெரியும் இது நடந்து பல வருடங்கள் இருக்கும். முதுகுளத்தூரில் இருக்கும் குடிகாரன் மனைவி இறந்த சில நாட்களிலியே குடித்து விட்டு 18 வயது கூட நிரம்பாத மகளை வன்புணர்வு செய்திருக்கிறான் பாவம் அந்த பெண் என்ன செய்வதென்றே தெரியாமல் சகித்திருக்கிறார்கள் இறுதியில் நடந்தது தான் ஆச்சரியம் கடைசியில் தகப்பனும் மகளுமே குடித்தனம் நடத்த தொடங்கிவிட்டனர் இப்போது அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருவருமே தாமாகவே பிடித்தவர்களோடு திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனராம் காரணம்? இந்த குடும்பத்தை பற்றி தெரிந்தவர்கள் எப்படி பெண் எடுப்பார்கள் இதில் தவறு யாரை சொல்வது குடிகார தகப்பனையா? பெற்ற தகப்பன் இப்படியான ஒரு தவறை செய்யும் போது அதை ஏற்றுக்கொண்டிருக்கும் பெண்ணையா? இல்லை சந்தர்ப்ப சூழலையா? என்னைப்பொருத்த வரை நான் சந்தர்ப்ப சூழல் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் உங்கள் பதில் என்ன? எதை குற்றப்படுத்துவீர்கள்.

    மனிதர்கள் தோன்றிய காலத்தில் மிருகம் போலத்தான் இருந்திருக்கிறான் ஆனால் நாளடைவில் எத்தனையோ மாற்றங்களை உணர்ந்திருக்கிறான் நல்லது கெட்டது, சரி,தவறு, உறவுகளுக்கு மரியாதை, முக்கியத்துவம் எல்லாமே படிப்படியாக வளர்ந்து தான் வந்திருக்கிறது ஆனால் வளர்ந்து வரும் சூழலில் மீண்டும் மிருகமாக ஐந்தறிவு ஜீவியை போல மாறுகிறார்களை எதனால் இந்த மாற்றம், இது தான் நாகரீகமா? முற்போக்கான எண்ணமா? உறவுகள் என்பது வெறும் பாலியல் சார்ந்ததா?

    இந்த பதிவில் வரும் சில விஷயங்களை தவிர்க்க நினைக்கவே விரும்பினேன் ஆனால் தவிர்க்க முடியவில்லை முடிந்தவரை சொல்ல வந்த விஷயத்தை மட்டும் தான் தொட்டிருக்கிறேன் யாரும் இதை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளவேண்டாம், இதை விழிப்புணர்வாக, இப்படியும் நடக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது என்பதை விளக்கவே இந்த பதிவு. நண்பர்களே இதை குறித்தான ஆரோக்கியமான சிந்தனைகளை முன்வையுங்கள், நடைமுறைக்குட்பட்ட பதிவு என்றென்னினால் அவசியம் பதிவிற்கு வாக்கும், பதிவை பற்றிய ஆரோக்கியமான கருத்தை உங்கள் விவாதமாக வைக்கவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர