Nov 21, 2011

7

ஜிமெயிலில் ஷார்ட்கட் கீகள் நம் விருப்பம் போல அமைக்கலாம்

  • Nov 21, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

    வணக்கம் நண்பர்களே கடந்த பதிவான ஜிமெயிலுக்கு தேவையில்லை மவுஸ் வழியாக ஜிமெயிலில் ஷார்ட்கட் கீகளை பயன்படுத்துவது பற்றி பார்த்தோம் அது தங்களுக்கு உபயோகமாக இருந்திருக்குமென்றே நம்புகிறேன் ஆனாலும் நடைமுறையில் உங்களுக்கு உதவியாக இருந்ததா? இல்லை என்பதே எனது பதிலாக கூட இருக்கும். அந்த பதிவை பொறுத்த வரை தங்களுக்கு ஒரு செய்தி எனக்கு ஒரு பதிவு என் பதிவுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியதே தவிர பெரிதாய் பயன்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதே என் நிலைப்பாடாக இருக்கிறது.

    ஆனால் இந்த பதிவு நிச்சியம் உங்களுக்கு நடைமுறைக்கு உகந்ததாக இருக்கும் நாம் ஏற்கனவே பார்த்த ஷார்ட்கட் கீகளை இனி நம் இஷ்டத்திற்கு மாற்றி அமைத்துக்கொள்ளலாம். உதாரணமாக முந்தைய பதிவில் Compose என்பதற்கு ஷார்ட்கட் கீ c என்பதாக இருந்தது ஆனால் இனி இந்த c எனும் எழுத்தை நினைவில் வைக்க கடினமாக இருப்பதாக நினைத்தால் உங்களுக்கு நினைவில் நிற்கும் படியான ஒரு எழுத்தை மாற்றி அஸைன் செய்துகொள்ள முடியும்.

    ஜிமெயில் செட்டிங்க்ஸ் சென்று Labs தெரிவு செய்து Custom Keyboard Shortcuts என்பதை எனாபிள்(Enable) செய்யவும் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பார்க்கவும்.



    இனி கீழிருக்கும் படத்தில் உள்ளது போல புதிதாய் ஒரு தெரிவு வந்திருக்கும் இனி என்ன உங்கள் விருப்பம் போல ஷார்ட்கட் கீகளை மாத்துங்க ஜிமெயில் பயன்படுத்தும் போது ஷார்ட்கட் கீகளை உபயோகிச்சு வேலையை விரைவாகவும் மத்தவங்களுக்கு ஆச்சரியத்தையும் கொடுங்க.



    என்ன நண்பர்களே ஜிமெயிலுக்கு தேவையில்லை மவுஸ் என்கிற பதிவை விட பயனுள்ளதாய் இருக்குமென்று நம்புகிறேன் பயன்படுத்தி பார்த்து உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள் மேலும் சிலருக்கு உங்கள் கருத்துரை வழியாக பதிவுகள் எளிதாய் சென்றடையும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    7 Comments
    Comments

    7 Responses to “ஜிமெயிலில் ஷார்ட்கட் கீகள் நம் விருப்பம் போல அமைக்கலாம்”

    K.s.s.Rajh said...
    November 21, 2011 at 8:47 PM

    நல்ல தகவல்கள் பாஸ் நன்றி


    Anand said...
    November 21, 2011 at 9:14 PM

    பயனுள்ள தகவல்.


    மாணவன் said...
    November 22, 2011 at 4:50 AM

    ஜிமெயிலில் விரைவாக பணிபுரிய நல்லதொரு பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டுள்ளீர்கள் நன்றிண்ணே!


    ஜிஎஸ்ஆர் said...
    November 24, 2011 at 12:06 PM

    @K.s.s.Rajh புரிதலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 24, 2011 at 12:07 PM

    @Anand புரிதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 24, 2011 at 12:09 PM

    @மாணவன்தம்பி நலமா? எங்கோ படிக்கிறோம் எங்கோ கற்கிறோம் கற்றவற்றையும் படித்தவற்றையும் இங்கே பகிர்கிறோம் சரிதானே?!


    ஜிஎஸ்ஆர் said...
    December 23, 2011 at 5:08 PM

    @Part Time Jobs நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர