Dec 21, 2010

35

மனதை படிக்கும் மந்திரம்

 • Dec 21, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: மனம் ஒரு குரங்கு முயன்றால் வசப்படுத்தலாம்.

  வணக்கம் நண்பர்களே மனதை படிக்கும் மந்திரம் என்றவுடன் எளிதாக யார் மனதையும் படித்து விடலாம் என நினைக்கவேண்டாம் ஆனால் அதே நேரத்தில் நாம் மிகவும் நேசிக்கும் விரும்பும் நபர்களை நாம் நினைக்கும் நேரத்தில் நமது எண்ண அலைகளை அவர்களுக்கு எளிதாய் உணர்த்த முடியும். பொதுவாக இந்த வகையான அலைகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கும் ஆனால் யாரும் அதை சரியாக புரிந்து வைத்திருப்பதில்லை.

  இந்த மாதிரியான அனுபவங்களை நாம் ஒவ்வொருவரும் பல தருணங்களில் உணர்ந்திருப்போம் ஆனால் அதை ஆழமாய் சிந்தித்திருக்க மாட்டோம்.கொஞ்சம் சுருக்கமாக எளிதாக புரியும் வகையில் சொல்வதென்றால் நாம் நினைக்கும் நேரத்தில் நாம் நினைத்த நபர் நம்மை நினைப்பார் இதைத்தான் விஞ்ஞானிகள் இதற்கென இருக்கும் சைக்கிகள் டெலிபதி என்கிறார்கள் இதையே வேறுவிதாமக சைக்காலிச்சிக்கலாக பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.

  இதிலும் கொஞ்சம் ஒரு படி மேலே போய் பார்த்தால் இதைவிட அதிசியம் இருக்கும் உதாரணமாக நமக்கு நெருங்கிய நண்பர், உறவினர் இப்படி யாராவது ஒருவருக்கு ஆபத்து என்றாலும் நாம் உணரமுடியும், நான் உணர்ந்திருக்கிறேன் நாம் அன்றாடம் சந்திக்கும் சில நபர்களிடமிருந்து சில உரையாடல்களை கவணித்தால் நமக்கு தெரியும் சிலர் சொல்லக்கூடும் என்னையறியாமல் என் கண் முன்னால் படக்காட்சி ஓடுவது போல தெரிந்தது ஆனால் அதைபோலான ஒரு சம்பவம் அருகிலோ அல்லது வேறு எங்கோ நடந்திருக்கும் அதை அவர்களே கூட பத்திரிகையிலோ அல்லது யாரவது சொல்லியோ கேட்டிருப்பார்கள் பொதுவாக மனிதனின் மனதில் இருந்து வெளிவரும் அலையானது மிகச்சக்தி வாய்ந்ததாக இருக்கிறது நம் மனதை ஒருமுகபடுத்தினால் யார் மனதையும் எளிதாக படிக்க முடியும் இதைத்தான் பண்டைய காலத்தில் நாம் புராணக்கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் வழியாக பல சம்பவங்களை கேட்டிருப்போம் முனிவனின் தவம், அரக்கனின் தவம் கூட இந்த வழிமுறைதான்.

  சில நேரங்களில் நாம் எதையாவது முழுமையாக யோசித்துக்கொண்டிருப்போம் திடீரென அந்த விஷயத்தை மறந்தே விட்டிருப்போம் ஆனால் நாம் மீண்டும் எத்தனை முயற்சித்தாலும் நம்மால் அந்த நினைவை மீட்டெடுக்க முடியாது அந்த மாதிரியான நேரங்களில் நாம் விஷயத்தை சொல்லாமலேயே தொண்டை வரை இருக்கிறது ஆனால் வெளியில் வரவில்லை என்பதாக சொல்லும் போது நம் வீட்டில் உள்ளவர்களோ அல்லது அருகில் இருக்கும் நமது நண்பனோ அந்த விஷயத்தை சரியாக நமக்கு நினைவு படுத்துவான் அதற்கு பெயரும் மனதை படிக்கும் மந்திரம் தான்.

  நீங்கள் முழுமையாக நேசிக்க தொடங்கினால் நீங்கள் பார்த்திராத ஒருவரின் குரலை மட்டும் வைத்து அவர் உருவத்தையும் உணரமுடியும். இப்படித்தான் நம் வலைத்தளம் வழியாக நான் ஓரிரு நண்பர்களோடு ஜிமெயில் அரட்டையில் உரையாடி இருக்கிறேன் இதை நீங்கள் நம்புவீர்களா எனபதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் நான் அந்த தம்பியிடம் பேசியபோது என் மனதிற்குள் இருந்த குரலைத்தான் அவரிடம் கேட்டேன். பொதுவாக வலைத்தளத்தை பொருத்தவரை இரு முகங்களாகத்தான் இருக்கின்றனர் ஒருவரின் எழுத்தை வைத்தெல்லாம் ஒருவரை நல்லவர் கெட்டவர் என்பதை தீர்மானிக்க முடியவில்லை நாம் சில நேரங்களில் நல்லவர் என நினைத்தால் அவர்களின் நடவடிக்கை அதற்கு நேர்மாறாக இருக்கிறது எழுத்துக்களில் கடுமையை வீசுபவர்கள் எதார்த்தத்தில் மிக அருமையானவர்களாய் இருக்கிறார்கள் மேலும் பொதுவாகவே வலைத்தளம் வாயிலாக நிறைய நண்பர்களை சந்திக்கலாம் ஆனால் அவர்கள் எல்லாம் எந்தளவிற்கு உண்மையானவர்களாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறியே!

  இரு நபர்களுக்குள் பரஸ்பரம் அன்பும் புரிதலும் காதலும் இருந்தால் தொலைவில் இருந்தாலும் நமக்கு வேண்டியவர் நம்மை நினைக்கும் போதே நாம் அதை உணர்ந்து விடுவோம் அதே நேரத்தில் நமக்கு வேண்டியவர் பிணியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நம் மனம் நமக்கு அதை அறிவிக்கும் ஆனால் இவையெல்லாம் சாதிப்பதற்கு உண்மையான அன்பு வேண்டும். உங்களை சுற்றியுள்ளவர்களை நேசியுங்கள், உன்மையாய் இருங்கள் இந்த விஷயங்களையே கொஞ்சம் தீவிரமாக செயல்படுத்தினால் யார் மனதையும் எளிதாக படித்துவிட முடியும்.

  இதைப்பற்றி இனையத்தில் தேடும் போது நமது சைக்காலிச்சிக்கல் திறனை மதிப்பிடும் வகையில் ஒரு தளத்தை கண்டேன் ஆனால் இதை அப்படியே நம்பி விடவேண்டாம் சும்மா ஒரு டிரையல் பார்க்க நினைப்பவர்கள் இங்கு சென்று பார்க்கலாம்.

  இந்த படத்தில் காட்டியிருக்கும் பச்சை நிற பட்டனை கிளிக்கி மேலிருக்கும் ஏதாவது ஒரு படத்தை தெரிவு செய்து பாருங்கள் உங்களால் எந்தளவிற்கு சைக்காலிச்சிக்களாக சிந்திக்க முடிகிறது என்பதை பார்க்கலாம்.  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  35 Comments
  Comments

  35 Responses to “மனதை படிக்கும் மந்திரம்”

  மாணவன் said...
  December 21, 2010 at 8:56 AM

  //சில நேரங்களில் நாம் எதையாவது முழுமையாக யோசித்துக்கொண்டிருப்போம் திடீரென அந்த விஷயத்தை மறந்தே விட்டிருப்போம் ஆனால் நாம் மீண்டும் எத்தனை முயற்சித்தாலும் நம்மால் அந்த நினைவை மீட்டெடுக்க முடியாது அந்த மாதிரியான நேரங்களில் நாம் விஷயத்தை சொல்லாமலேயே தொண்டை வரை இருக்கிறது ஆனால் வெளியில் வரவில்லை என்பதாக சொல்லும் போது நம் வீட்டில் உள்ளவர்களோ அல்லது அருகில் இருக்கும் நமது நண்பனோ அந்த விஷயத்தை சரியாக நமக்கு நினைவு படுத்துவான் அதற்கு பெயரும் மனதை படிக்கும் மந்திரம் தான்.//

  உண்மைதான் நண்பரே,இந்த நினைவு விசயத்தில் நான் பலமுறை அனுபவபட்டிருக்கிறேன்

  தெளிவாக சொன்னீர்கள்.... அருமை


  மாணவன் said...
  December 21, 2010 at 9:00 AM

  //பொதுவாக வலைத்தளத்தை பொருத்தவரை இரு முகங்களாகத்தான் இருக்கின்றனர் ஒருவரின் எழுத்தை வைத்தெல்லாம் ஒருவரை நல்லவர் கெட்டவர் என்பதை தீர்மானிக்க முடியவில்லை நாம் சில நேரங்களில் நல்லவர் என நினைத்தால் அவர்களின் நடவடிக்கை அதற்கு நேர்மாறாக இருக்கிறது எழுத்துக்களில் கடுமையை வீசுபவர்கள் எதார்த்தத்தில் மிக அருமையானவர்களாய் இருக்கிறார்கள் மேலும் பொதுவாகவே வலைத்தளம் வாயிலாக நிறைய நண்பர்களை சந்திக்கலாம் ஆனால் அவர்கள் எல்லாம் எந்தளவிற்கு உண்மையானவர்களாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறியே! //

  விரிவான பார்வையுடன் மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே

  சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி

  தொடரட்டும் உங்கள் பணி


  மாணவன் said...
  December 21, 2010 at 9:06 AM

  //இரு நபர்களுக்குள் பரஸ்பரம் அன்பும் புரிதலும் காதலும் இருந்தால் தொலைவில் இருந்தாலும் நமக்கு வேண்டியவர் நம்மை நினைக்கும் போதே நாம் அதை உணர்ந்து விடுவோம் அதே நேரத்தில் நமக்கு வேண்டியவர் பிணியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நம் மனம் நமக்கு அதை அறிவிக்கும் ஆனால் இவையெல்லாம் சாதிப்பதற்கு உண்மையான அன்பு வேண்டும். உங்களை சுற்றியுள்ளவர்களை நேசியுங்கள், உன்மையாய் இருங்கள் இந்த விஷயங்களையே கொஞ்சம் தீவிரமாக செயல்படுத்தினால் யார் மனதையும் எளிதாக படித்துவிட முடியும்.//

  நல்ல தெளிவான விளக்கத்துடன் அனைவருக்கும் புரியும்படி கூறியுள்ளீர்கள் நீங்கள் சொல்வதுபோலவே அனைவரையும் உண்மையாக அன்புடன் நேசித்து அவர்களின் மனதை படிப்பதற்கு முயற்சி செய்வோம்...

  நன்றியுடன்
  உங்கள்.மாணவன்


  avvavm said...
  December 21, 2010 at 10:56 AM

  நண்பர் GSR அவர்களுக்கு,

  நண்பரே, உங்களின் 'மனதை படிக்கும் மந்திரம்' பதிவு அருமை. இதை வைத்து என் வாழ்வில் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி.

  என் அம்மாவுக்கு அவரின் கல்யாணத்திற்கு எடுத்த பட்டு புடவையை உடுத்தி பார்க்க எனக்கு ஆசை. ஆனால் என் அம்மா வேண்டாம் வேண்டாம் என்றார். சரி என்றுவிட்டு நானும் என் வேலையை கவனிக்க கேரளா சென்றுவிட்டேன். அங்கு ஒரு நண்பர் இந்த டெலிபதி பற்றி சொன்னார். சரி சும்மா முயற்சி பண்ணிதான் பார்ப்போமே என்று எனக்கு டைம் கிடக்கும்போது ஒரு நாளைக்கு சுமார் 5 அல்லது 6 முறை நான் தமிழ்நாடு திரும்புவதற்குள் (சுமார் ஒரு மாதம்) மனதுக்குள் 'அம்மா உன் கல்யாண பட்டு புடவையை கட்டு' என்று மந்திரம்போல் சொன்னேன். ஆச்சர்யம் நான் வீட்டுக்கு வரும்போது என் அம்மா பட்டு புடவை கட்டி மகாலட்சுமி மாதிரி இருந்த photo வை காட்டினார். எனக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டது. எப்படி அம்மா என்றதற்கு 'என்னமோ தெரியலடா செய்யணுமுன்னு தோனுச்சு' என்றார். இதை நினைத்தால் இன்று கூட என் உடம்பு சிலிர்க்கிறது.

  அதனால்தான் சொல்கிறேன் நண்பரே. இது நடந்து சுமார் இரண்டு வருடங்கள் இருக்கும். ஆனால் இதை சொல்கிற மனபக்குவம் என்னிடம் இல்லை. அந்த பக்குவம் உங்களிடம் இருக்கிறது. அதனால் நண்பரே எதற்காகவும் யாருக்காகவும் உங்கள் பதிவை நிறுத்திவிட வேண்டாம்.


  Speed Master said...
  December 21, 2010 at 11:54 AM

  சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி

  தொடரட்டும் உங்கள் பணி


  ம.தி.சுதா said...
  December 21, 2010 at 1:27 PM

  ஃஃஃஃஃநீங்கள் முழுமையாக நேசிக்க தொடங்கினால் நீங்கள் பார்த்திராத ஒருவரின் குரலை மட்டும் வைத்து அவர் உருவத்தையும் உணரமுடியும்.ஃஃஃஃஃ

  உண்மை தான் இதை காதல் வயப்பட்டோர் பலர் உரைத்திருக்கிறார்கள்...

  என் இப்பதிவிற்கு தங்களை ஒரு தடவை அழைக்கிறேன்..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.


  avvavm said...
  December 21, 2010 at 1:40 PM

  நண்பர் GSR அவர்களுக்கு,

  நண்பரே சமீபத்தில் குழந்தைகளுக்கான ஒரு website ஐ பார்க்க நேர்ந்தது. அதில் கணக்குகள் puzzles and maths இன்னும் எவ்வளவோ? இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் என தாரளமாக சொல்லலாம். சிலதை படம் வரைந்து புரிய வைக்கிறார்கள்.

  Above site link:http://www.gymnasiumforbrain.com/


  avvavm said...
  December 21, 2010 at 1:52 PM

  நண்பர் GSR அவர்களுக்கு,

  நண்பரே சில பின்னூட்டங்களில் 'இங்கே' என்னும் இடத்தில் அதற்கான link ஐ கொடுக்கிறார்கள் (கொடுக்கிறீர்கள்) எப்படி ?


  Myilsami said...
  December 21, 2010 at 5:53 PM

  I Have also have been the same experience. But I could not recall the same now. However I thank you for remind the experience.


  ஜிஎஸ்ஆர் said...
  December 21, 2010 at 6:22 PM

  @மாணவன்அனுபவம் தான் வாழ்க்கையின் வழிகாட்டி


  ஜிஎஸ்ஆர் said...
  December 21, 2010 at 6:24 PM

  @மாணவன்உண்மையை சொல்கிறேன் நண்பரே நான் முடிந்தவரை இனையவட்டத்தில் சிக்கிக்கொள்ளலாமல் இருப்பதேயே விரும்புகிறேன் உங்களுக்கு தெரியும் இங்கு நடக்கும் கூத்து சேர்ந்திருப்பார்க்ள் பிரிந்துவிட்டால் அவ்வளவுதான் ஒருவருடைய அந்தரகத்த்தை பற்றியெல்லாம் பேசுவார்கள்


  ஜிஎஸ்ஆர் said...
  December 21, 2010 at 6:25 PM

  @மாணவன் நண்பர் பிகேபி சொல்வது போல முடிந்தவரை மற்றவர்களிடம் அன்பாக இருந்து எதிரிகளை குறைத்துகொள்வது தான் நல்லது அல்லது எப்பொழுதுமே தாமரை இலையில் ஒட்டாத தண்ணீரை போல இருப்பது நல்லது


  ஜிஎஸ்ஆர் said...
  December 21, 2010 at 6:26 PM

  @avvavm நன்றி நண்பரே உங்களுடைய இந்த பின்னுட்டமானது நமது கருத்துக்கு வலு சேர்ப்பதாய் அமைந்திருக்கிறது.

  \\இது நடந்து சுமார் இரண்டு வருடங்கள் இருக்கும். ஆனால் இதை சொல்கிற மனபக்குவம் என்னிடம் இல்லை. அந்த பக்குவம் உங்களிடம் இருக்கிறது. அதனால் நண்பரே எதற்காகவும் யாருக்காகவும் உங்கள் பதிவை நிறுத்திவிட வேண்டாம்.\\

  அப்படி என்ன நண்பா என்னிடம் பக்குவம் இருக்கிறது?


  ஜிஎஸ்ஆர் said...
  December 21, 2010 at 6:27 PM

  @Speed Masterவரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  December 21, 2010 at 6:28 PM

  @ம.தி.சுதாஅவசியம் வருகிறேன் பதிவின் தலைப்பிலேயே திரைப்படம் என்பதாக இருக்கிறது பொதுவாகவே நான் அதிகம் விரும்பாத ஒரு பகுதி அது இருப்பினும் அவசியம் வருகிறேன்


  ஜிஎஸ்ஆர் said...
  December 21, 2010 at 6:29 PM

  @avvavm நானும் பார்க்கிறேன் நண்பரே பகிர்வுக்கு நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  December 21, 2010 at 6:31 PM

  @avvavm
  உங்களுக்கு இது உதவக்கூடும்

  பிளாக்கரின் கமெண்ட்டில் HTML பயன்படுத்தலாம்


  ஜிஎஸ்ஆர் said...
  December 21, 2010 at 6:33 PM

  @Myilsamiஉண்மைதான் நண்பரே ஒவொவொருவரும் வாழ்க்கையில் அன்றாடம் சந்தித்து கேட்டு பார்த்திருப்போம் ஆனால் அவற்றை ஏன் என்பதாக ஆழ்ந்து சிந்தித்திருக்க மாட்டோம்


  அரசன் said...
  December 21, 2010 at 6:57 PM

  அருமையான பதிவு ... தொடருங்க ...


  சிகப்பு மனிதன் said...
  December 21, 2010 at 6:58 PM

  // தாமரை இலையில் ஒட்டாத தண்ணீரை போல இருப்பது நல்லது


  .பதிவை விட, இந்த வார்த்தை தான், எனக்கு பிடித்திருக்கிறது, நண்பரே !  .தகவலை பகின்றமைக்கு, நன்றி நண்பரே !


  Myilsami said...
  December 21, 2010 at 8:01 PM

  I Could not type in Tamil.Help me. myilsami.blogspot.com


  myilsami said...
  December 21, 2010 at 8:18 PM

  your entries reflect the most of the people' inner voice


  jon said...
  December 21, 2010 at 10:25 PM

  உங்கலுடைய கருத்து சரி ஆனால் இன்னும் விளக்கமாக இருந்திருந்தால் நல்லம் மச்சான்


  நண்பன் said...
  December 21, 2010 at 11:16 PM

  anbulla thambi kku vanakkam

  migavum sariyaga eluthi irukkireergal
  thangalathu ayaratha ulaippu
  ennai viyakka vaikkirathu
  ellorathu manathilum nengatha idam pidithu vittergal enpathu than unmai
  valga vala mudan
  enranrum H.buruhani .kodavasal.


  ஜிஎஸ்ஆர் said...
  December 22, 2010 at 6:41 PM

  @அரசன் தங்களின் அன்போடு தொடர்கிறேன்


  ஜிஎஸ்ஆர் said...
  December 22, 2010 at 6:43 PM

  @சிகப்பு மனிதன்நல்லது நண்பா நம் தளத்தை முழுமையாய் வாசிக்கிறீர்கள் என நினைக்கிறேன். நல்லது தொடருங்கள்


  ஜிஎஸ்ஆர் said...
  December 22, 2010 at 6:43 PM

  @Myilsamiஇது உங்களுக்கு உதவலாம்

  http://gsr-gentle.blogspot.com/2010/06/blog-post_9800.html


  ஜிஎஸ்ஆர் said...
  December 22, 2010 at 6:44 PM

  @myilsamiஒவ்வொன்றும் வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவம் தான்


  ஜிஎஸ்ஆர் said...
  December 22, 2010 at 6:46 PM

  @jonநல்லது நண்பா இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதினால் அது படிப்பதற்கு கதை போல இருக்கும் ஆனால் உங்கள் உள் மனதில் இருக்கும் சிந்தனையை கிளறாது அதனால் தான் சுருக்கமாகவே எழுதினேன்


  ஜிஎஸ்ஆர் said...
  December 22, 2010 at 6:49 PM

  @நண்பன்எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்துவிட பேரசை தான் அதிலும் நிரந்தரமான இடமாக இருப்பதை விரும்புகிறேன் தற்காலிகமாக இருப்பதை விரும்பவில்லை.


  Myilsami said...
  December 22, 2010 at 10:56 PM

  «Æ¸¢ ¾Á¢ú ÀÂýÀÎò¾¢ þô§À¡Ð ¸ÕòШÃ츢§Èý.¿ýÈ¢


  ஜிஎஸ்ஆர் said...
  December 23, 2010 at 9:16 AM

  @Myilsami

  \\«Æ¸¢ ¾Á¢ú ÀÂýÀÎò¾¢ þô§À¡Ð ¸ÕòШÃ츢§Èý.¿ýÈ¢\\

  அழகி தமிழ் பயண்படுத்தி இப்போது கருத்துரைக்கிறேன் நன்றி

  என எழுதியிருக்கிறீர்கள் ஆனால் அதையும் என்னால் வாசிக்க முடியாத நிலையில் இருந்தது நீங்கள் NHM Writer பயன்படுத்தலாமே அது அழகியை விட எளிமையாய் இருக்கும்.


  தங்கம்பழனி said...
  December 30, 2010 at 12:35 PM

  மிகச்சிறப்பாக எழுத்தியிருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..! எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..! தொழில் நுட்பம் சாராமல் ஒரு சில இடுகைகள் இவ்வாறு இட்டிருப்பது மிகவும் வித்தியாசமாய் இருக்கிறது.. நன்றி! வாழ்த்துக்கள்..!


  வருணன் said...
  January 2, 2011 at 12:43 AM

  விழங்குகிறது ஆனால் விழங்கவில்லை..விழங்கவில்லை ஆனால் விழங்குகிறது...


  இராஜராஜேஸ்வரி said...
  February 18, 2011 at 8:33 PM

  வித்தியாசமான் ப்திவு. நிறைய உணர்ந்திருக்கிறேன்.


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர