Dec 8, 2011

13

பிடிஎப் ரிப்பேர் டூல் (PDF Repair Tool)

 • Dec 8, 2011
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: புதிதாக புகழ் வராவிட்டால் பழைய புகழும் தானே போய்விடுகிறது.

  வணக்கம் நண்பர்களே நம்மில் அநேகம் பேர் பிடிஎப் பயன்படுத்துபவர்கள் உண்டு அதற்கான காரணம் பிறருக்கு ஏதாவது ஒரு தகவலை அனுப்ப நினைக்கும் பொழுது ஃபாண்ட் (Font) பிரச்சினையை தவிர்க்க உதவும். அதே நேரத்தில் நாம் இனையத்தில் இருந்து தரவிறக்கிய பிடிஎப் தொகுப்பு புத்தங்கங்கள் அல்லது நம்மிடம் இருக்கும் ஏதாவது தொகுப்புகள் சில நேரங்களில் ஏதாவது ஒரு அறியாத காரணத்தில் திறக்க முடியாமலோ அல்லது பிழைச்செய்திகளையோ நாம் கண்டிருக்ககூடும். அந்த மாதிரி நேரங்களில் சில நேரம் நம்மால் பிடிஎப் தொகுப்பை திறக்க முடியாமல் போய்விடுவதும் உண்டு.

  நாம் இந்த பதிவின் வழியாக இந்த பிரச்சினையை தீர்ப்பது பற்றி பார்க்கலாம் இந்த மென்பொருள் எத்தனை விதமான பிழைகளை சரிசெய்து தரும் என்பது உறுதியாக என்னால் கூற இயலவில்லை ஆனால் நான் சோதித்து பார்த்த வரையில் சிதிலமடைந்த (Corrupt) பிடிஎப் தொகுப்புகளை அழகாய் சில நிமிடங்களில் ரிப்பேர் செய்து தந்துவிடுகிறது.

  இந்த மென்பொருளின் பயன்பாடு நமக்கு அடிக்கடி தேவைப்படுவதில்லை, நாம் எதிர்பார்க்காத நேரத்தில் சில நேரம் நமக்கு தேவைப்படும் எனவே இதை தரவிறக்க விரும்புகிறவர்களுக்கு பிடிஎப் ரிப்பேர் (PDF Repair) மேலும் தரவிறக்க விருப்பம் இல்லாதவர்கள் முடிந்தால் முகவரியை குறித்துக்கொள்ளுங்கள் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

  வழக்கம் போலான இன்ஸ்டாலேசன் முறைதான் இயக்குவதற்கும் பெரிதாய் சிரமம் இருக்காது சிதிலமடைந்த (Corrupt) பிடிஎப் தொகுப்பை தெரிவு செய்து மீண்டும் சேமிக்க விரும்பும் இடத்தை (Directory) தெரிவு செய்து Start Repair என்பதை கிளிக்கினால் போதும் சில நிமிடங்களில் சிதிலமடைந்த பிடிஎப் தொகுப்பை திறந்து படிக்க முடியும்.  என்ன நண்பர்களே பதிவு தற்போது உங்கள் உபயோகப்பட்டிருக்கவோ அல்லது சோதித்து பார்த்திருக்கவோ முடியாது என்பதை உணர்கிறேன் அதே நேரத்தில் உங்களுக்கு எப்பொழுதாவது தேவைப்படலாம்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  13 Comments
  Comments

  13 Responses to “பிடிஎப் ரிப்பேர் டூல் (PDF Repair Tool)”

  தங்கம் பழனி said...
  December 8, 2011 at 9:24 PM

  உண்மையிலேயே பயனுள்ள பகிர்வுதான். இன்றைய காலகட்டத்தில் நிறைய பி.டி.எப் பைல்களை பயன்படுத்துகிறோம். அத்தகைய கோப்புகளை எப்போதாவது திறக்க முடியாமல் போகும்போது நிச்சயம் இந்த மென்பொருள் உதவும். நன்றி ஜ.எஸ்.ஆர் அவர்களே..!!


  Mohamed Faaique said...
  December 8, 2011 at 9:35 PM

  அருமையானதொரு விஷயத்தை அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி


  guna said...
  December 9, 2011 at 2:59 AM

  good thankyou


  கணேஷ் said...
  December 9, 2011 at 10:19 AM

  நல்லதொரு விஷயத்தை அனைவருக்கும் பயன்படும் வண்ணம் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.


  மாணவன் said...
  December 9, 2011 at 11:18 AM

  நீங்கள் சொல்வதுபோல் சிலசமயங்களில் பிடிஎப் கோப்புகள் கரப்ட் ஆகிவிடுவது உண்டு அதுபோன்ற சமயங்களில் இந்த மென்பொருள் நிச்சயம் உதவியாய் இருக்கும். பயனுள்ளதொரு பகிர்வை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே!


  S.ரவிசங்கர் said...
  December 11, 2011 at 1:37 PM

  அருமையான மென்பொருள்.

  நன்றி.


  ஜிஎஸ்ஆர் said...
  December 23, 2011 at 4:50 PM

  @தங்கம் பழனிசமீபத்தில் இந்த பிரச்சினையை சந்திக்க நேர்ந்தது அதனால் தான் இந்த பதிவை எழுதும் வாய்ப்பும் அமைந்தது...


  ஜிஎஸ்ஆர் said...
  December 23, 2011 at 4:50 PM

  @Mohamed Faaique நண்பர்களுக்கு பயன்பட்டால் அதுவே என் சந்தோஷம்


  ஜிஎஸ்ஆர் said...
  December 23, 2011 at 4:51 PM

  @guna நன்றி நண்பரே


  ஜிஎஸ்ஆர் said...
  December 23, 2011 at 4:52 PM

  @கணேஷ்எனக்கு தெரிந்த விஷயம் எனக்குள்ளே புதைத்து வைத்தால் என்னை விட முட்டாள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது..


  ஜிஎஸ்ஆர் said...
  December 23, 2011 at 4:52 PM

  @மாணவன்சமீபத்திய அனுபவமே இந்த பதிவு. புரிதலுக்கு நன்றி தம்பி...


  ஜிஎஸ்ஆர் said...
  December 23, 2011 at 4:53 PM

  @S.ரவிசங்கர்புரிதலுக்கு நன்றி நண்பரே


  Jyoti Gupta said...
  February 23, 2015 at 9:51 AM

  Very good creative information is provided on this website. This images helps us to pleased us like we are getting up as fresh in the morning. Thanks for doing such creative work and making people happy. i also tried do such kind of good work for job hunter and providing support to all job hunter via portal @ http://www.abhilashatechnology.com/2015/02/current-government-jobs-openings.html


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர