Dec 31, 2011
போல்டர் பேக்கிரவுண்ட் கலர், புகைப்படம் மாற்றலாம் (Windows Folder Background Change)
வணக்கம் நண்பர்களே புத்தாண்டு வாழ்த்துகள் 2012 இந்த பதிவின் வழியாக விண்டோஸின் டிபால்ட் பேக்கிரவுண்ட் மாற்றுவது பற்றி பார்க்கலாம் வழக்கமாக நம் கணினியில் விண்டோஸின் பேக்கிரவுண்ட் வெள்ளை நிறமாக மட்டும் இருக்கும், அந்த வெள்ளை நிறத்துக்கு பதிலாக நமக்கு பிடித்த ஏதாவது ஒரு நிறம் அல்லது நம் நிழல்படம் இப்படி ஏதாவது இருந்தால் கொஞ்சம் அழகாகவும் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தையும் சேர்த்து கொடுக்கலாமே?
சரி இதற்கு மூன்று வகையான வழிமுறைகள் இருக்கிறது முதலாவதாக ரிஜிஸ்டரியில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் போல்டரின் பேக்கிரவுண்ட் நிறத்தை மாற்ற முடியும் அல்லது நிழல்படத்தை வைக்க முடியும் ஆனால் இந்த முறை எனக்கு சரியாக செயல்படவில்லை விரும்புவர்கள் perishablepress.com அல்லது askvg.com சென்று முயற்சித்து பாருங்கள் சந்தேகங்களுக்கு அந்த கட்டுரையின் கருத்துக்களை அவசியம் படிக்கவும்.
இரண்டாவதாக இதற்கென ஒரு மென்பொருள் இருக்கிறது இந்த மென்பொருள் வழியாக எந்த சிரமமும் இல்லாமல் எளிதாக மாற்றிக்கொள்ள் முடியும் உதவிக்கு கீழிருக்கும் படங்களை பாருங்கள், மென்பொருள் தரவிறக்கத்துக்கு
Windows Folder Background Change செல்லுங்கள்.
மென்பொருளை இன்ஸ்டால் செய்து திறந்து கீழிருக்கும் பட்த்தில் உள்ள வழிமுறைகளின் படி உங்கள் போல்டரின் நிறத்தை அல்லது நிழல்படம் மாற்றுங்கள்
இப்பொழுது பாருங்கள் நான் எனது போல்டருக்கு இப்படி ஒரு நிழல்படம் சேர்த்திருக்கிறேன் இனி உங்கள் கணினியிலும் நீங்கள் கஷ்டமைஸ் செய்த போல்டரின் பின்னனி மாறியிருக்கும்.
இனி மூன்றவதாக XP Folder BackgroundChange தரவிறக்கி அதனுள்ளே இருக்கும் ieshwiz என்பதை காப்பி எடுத்து உங்கள் கணினி இயங்குதளம் Cயில் நிறுவப்பட்டிருக்குமேயானால் C:\WINDOWS\system32-ன் உள்ளே பேஸ்ட் செய்துவிட்டு மீண்டும் நீங்கள் தரவிறக்கிய போல்டரில் இருக்கும் ரிஜிஸ்டரி பைலை கிளிக்குவதன் மூலம் உங்கள் ரிஜிஸ்டரியை அப்டேட் செய்துவிடவும் அவ்வளவு தான் இப்போது இனி உங்கள் விருப்பம் போல கலரையோ அல்லது நிழல்படத்தையோ மாற்றிக்கொள்ள முடியும் அதற்கான வழிமுறைகளையும் கீழே இருக்கும் நிழல்படங்கள் வழியாக தெரிந்துகொள்ளுங்கள்.
அட என்ன நண்பா எல்லாமே விண்டோஸ் எக்ஸ்பிக்கு மட்டுமே இருக்கு விண்டோஸ் 7 பயன்படுத்துற எங்களுக்கு இல்லையா எனக் கேட்கும் அன்பர்களுக்காக windows 7 folder background change பயன்படுத்தி பாருஙக்ள்.
இனி வேறு ஒரு மென்பொருள் பற்றியும் பார்க்கலாம் விண்டோஸ் 7ல் தானாகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் டெஸ்க்டாப் பேக்கிரவுண்ட் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது ஆனால் நமது XPயில் இந்த வசதி இல்லை விருப்பபடுவர்கள் XP Auto Wall Paper Change தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் பிடித்திருந்தால் உபயோகபடுத்துங்கள் இல்லையென்றால் நீக்கி விடுங்கள்.
என்ன நண்பர்களே பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா, உபயோகமாக இருக்கிறதா? உங்களுக்கு உபயோகாமாகவே இருக்குமென்று நம்புகிறேன் பயன்படுத்தி பார்த்து உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள் மேலும் சிலருக்கு உங்கள் கருத்துரை வழியாக பதிவுகள் எளிதாய் சென்றடையும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு

இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr


15 Responses to “போல்டர் பேக்கிரவுண்ட் கலர், புகைப்படம் மாற்றலாம் (Windows Folder Background Change)”
-
சேலம் தேவா
said...
1
December 31, 2011 at 3:24 PMஅருமை நண்பரே...முயற்சித்து பார்த்து மகிழ்ந்தேன்.பதிவிற்கு நன்றி..!!
-
ம.தி.சுதா
said...
2
December 31, 2011 at 8:01 PMமிகவும் சிறப்பாக முயற்சித்துள்ளீர்கள்... நன்றி சகோதரம்...
தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்... -
மாணவன்
said...
3
January 2, 2012 at 7:12 AMஉங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
-
திண்டுக்கல் தனபாலன்
said...
4
January 2, 2012 at 11:14 AMசெய்து பார்த்தேன். நன்றாக இருந்தது! நன்றி நண்பரே! வாழ்த்துக்கள்!
-
Unknown
said...
5
January 2, 2012 at 5:48 PMIts useful information.
-
ஜிஎஸ்ஆர்
said...
6
January 3, 2012 at 10:31 AM@சேலம் தேவாதங்கள் சந்தோஷம் என் சந்தோஷமும் கூட...
-
ஜிஎஸ்ஆர்
said...
7
January 3, 2012 at 10:32 AM@♔ம.தி.சுதா♔ வாழ்த்துகளுக்கு நன்றி சுதா.
-
ஜிஎஸ்ஆர்
said...
8
January 3, 2012 at 10:33 AM@மாணவன்உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தம்பி, சந்தோஷம்...
-
ஜிஎஸ்ஆர்
said...
9
January 3, 2012 at 10:34 AM@திண்டுக்கல் தனபாலன் என் தகவல்களை முயற்சித்து பார்த்துவிட்டு எழுதும் கருத்துக்களையே நானும் விரும்புகிறேன்..
-
ஜிஎஸ்ஆர்
said...
10
January 3, 2012 at 10:34 AM@UnknownThanks for your right understanding.
-
Unknown
said...
11
July 15, 2012 at 7:36 PMபதிவிற்கு நன்றி..!!
-
ஜிஎஸ்ஆர்
said...
12
July 25, 2012 at 11:23 AM@Kutti Raviபயன்படுத்தி பார்த்து கருத்தளித்தமைக்கு நன்றி
-
Swami Vedanishthananda Saraswati
said...
13
July 28, 2012 at 12:49 PMஅன்பரே
அன்பு வணக்கங்கள்
தங்கள் பதிவுகள் மிகவும் அருமை.
தனக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென வாழ்நர் உண்மையானே - என்ற சங்கப்பாடலுக்குத் தக்க வாழ்கிறீர்கள்.THEY ALONE LIVE WHO LIVE FOR OTHERS, THE REST ARE DEAD என்ற விவேகாநந்தர் கூற்றையும் நினைவுபடுத்துகிறீர்கள். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம். -
ஜிஎஸ்ஆர்
said...
14
August 5, 2012 at 2:37 PM@VEDANISHTHANANDAஉங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, உண்மையில் உங்கள் பாராட்டுகளுக்கு தகுதியானவன் நானில்லை என்பது தான் நிதர்சன உண்மை
-
Chiến SEOCAM
said...
15
February 28, 2019 at 12:52 PMTikuyembekeza kuti muli ndi nkhani zabwino. Takulandirani
Máy massage chân
Chậu ngâm chân
Bồn ngâm massage chân
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>