Showing posts with label இன்டர்நெட். Show all posts
Showing posts with label இன்டர்நெட். Show all posts

Nov 21, 2011

7

ஜிமெயிலில் ஷார்ட்கட் கீகள் நம் விருப்பம் போல அமைக்கலாம்

  • Nov 21, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

    வணக்கம் நண்பர்களே கடந்த பதிவான ஜிமெயிலுக்கு தேவையில்லை மவுஸ் வழியாக ஜிமெயிலில் ஷார்ட்கட் கீகளை பயன்படுத்துவது பற்றி பார்த்தோம் அது தங்களுக்கு உபயோகமாக இருந்திருக்குமென்றே நம்புகிறேன் ஆனாலும் நடைமுறையில் உங்களுக்கு உதவியாக இருந்ததா? இல்லை என்பதே எனது பதிலாக கூட இருக்கும். அந்த பதிவை பொறுத்த வரை தங்களுக்கு ஒரு செய்தி எனக்கு ஒரு பதிவு என் பதிவுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியதே தவிர பெரிதாய் பயன்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதே என் நிலைப்பாடாக இருக்கிறது.

    ஆனால் இந்த பதிவு நிச்சியம் உங்களுக்கு நடைமுறைக்கு உகந்ததாக இருக்கும் நாம் ஏற்கனவே பார்த்த ஷார்ட்கட் கீகளை இனி நம் இஷ்டத்திற்கு மாற்றி அமைத்துக்கொள்ளலாம். உதாரணமாக முந்தைய பதிவில் Compose என்பதற்கு ஷார்ட்கட் கீ c என்பதாக இருந்தது ஆனால் இனி இந்த c எனும் எழுத்தை நினைவில் வைக்க கடினமாக இருப்பதாக நினைத்தால் உங்களுக்கு நினைவில் நிற்கும் படியான ஒரு எழுத்தை மாற்றி அஸைன் செய்துகொள்ள முடியும்.

    ஜிமெயில் செட்டிங்க்ஸ் சென்று Labs தெரிவு செய்து Custom Keyboard Shortcuts என்பதை எனாபிள்(Enable) செய்யவும் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பார்க்கவும்.



    இனி கீழிருக்கும் படத்தில் உள்ளது போல புதிதாய் ஒரு தெரிவு வந்திருக்கும் இனி என்ன உங்கள் விருப்பம் போல ஷார்ட்கட் கீகளை மாத்துங்க ஜிமெயில் பயன்படுத்தும் போது ஷார்ட்கட் கீகளை உபயோகிச்சு வேலையை விரைவாகவும் மத்தவங்களுக்கு ஆச்சரியத்தையும் கொடுங்க.



    என்ன நண்பர்களே ஜிமெயிலுக்கு தேவையில்லை மவுஸ் என்கிற பதிவை விட பயனுள்ளதாய் இருக்குமென்று நம்புகிறேன் பயன்படுத்தி பார்த்து உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள் மேலும் சிலருக்கு உங்கள் கருத்துரை வழியாக பதிவுகள் எளிதாய் சென்றடையும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Oct 10, 2010

    27

    இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் (Internet Download Manager)

  • Oct 10, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பூமியில் முற்றும் துறந்த முனிவனும் இல்லை. எல்லாம் கற்று தெளிந்த ஞானியும் இல்லை.

    வணக்கம் நண்பர்களே நம்முடைய கடந்த பதிவில் நண்பர் ம.தி.சுதா அவர்கள் இப்படியாக ஒரு கேள்வியை கேட்டிருந்தார் இந்த நேரத்தில் இதை பற்றி எழுத ஒரு வாய்ப்பு கொடுத்த நண்பருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.



    நாம் சாதரணமாக இனையதளங்களில் நமக்கு தேவையான டேட்டாக்களை நேரடியாக நாம் பிரவுசரில் இருந்தே தரவிறக்கி விடுவோம் ஆனால் அதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படலாம் அதற்கு தீர்வாக இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம் இதை தரவிறக்கி இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், தரவிறக்க வேகத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும் இதனை போல இன்னும் சில மென்பொருள்கள் இருக்கின்றன வருங்காலத்தில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

    இப்போது இந்த மென்பொருள் டிபால்ட்டாக மாறிவிடும் ஒரு வேளை அப்படி ஆகவில்லையென்றாலும் கவலையில்லி தரவிறக்க வேண்டிய மென்பொருளயோ அல்லது இன்ன பிற தகவல்களையோ கீழிருக்கும் படத்தில் இருப்பது போல் செலக்ட் செய்து கொடுத்து விடுங்கள்.



    இபோது உங்களிடம் இப்போதே டவுன்லோட் செய்யவா அல்லது பின்னர் செய்யலாமா எனக் கேட்க்கும் உங்கள் விருப்பம் போல தெரிவு செய்துகொள்ளுங்கள் தரவிறக்கம் சேமிக்க வேண்டிய இடத்தை தேவையானால் மாற்றிக்கொள்ளுங்கள்.



    இப்போது பைல் டவுன்லோட் ஆவதை பாருங்கள் எப்படி வேகமாக ஆகிறது என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.



    தரவிறக்கம் முடிந்ததும் கீழிருக்கும் படத்தை போல் வரும் திறந்து பார்த்துக்கொள்ளுங்கள் நிச்சியமாக நல்ல வேகமாக தரவிறக்க முடியும்.



    மேலும் இதில் உள்ள வசதிகளை பயன்படுத்தி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.



    என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர