Jul 21, 2010

25

பிளாக்கர் டிப்ஸ் (ஆல் இன் ஆல்)

 • Jul 21, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: நீ நிமிடங்களை கவனித்து கொண்டால், மணி நேரங்கள் அவைகளாகவே கவனித்துக் கொள்ளும்.

  வணக்கம் நண்பர்களே கடந்த சில நாள்களாக எதையும் எழுதமுடியவில்லை இப்போதும் எழுதுவதற்கு மனமில்லாமல் தான் எழுதுகிறேன் நாம் பலமுறை ஒவ்வொரு காரியத்தையும் மெனக்கெட்டு நேரம் செலவழித்து முடிந்த வரை அனைவருக்கும் புரியும் படியாகவே தான் எழுதுயிருக்கிறேன் என நினைக்கிறேன் ஆனால் அவற்றுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை உண்மையை சொல்லவேண்டுமென்றால் போதுமான வாக்கோ கருத்துரையோ பதிவிற்கு இல்லாத போது நிச்சியமாய் எழுதுவதற்கான ஊக்கம் இல்லை என்பதே உண்மை இதை நானே பலமுறை உணர்ந்திருக்கிறேன் என் பதிவுகள் பிரபலமாகும் போது உடனேயே அடுத்த பதிவு எழுதி விடுவேன் அதே நேரத்தில் என் பதிவுகள் போதிய வாக்கு இல்லாமால் முடங்கி போகும் போது அடுத்து எழுதுவதற்கு எண்ணமே வர மறுக்கிறது இருந்தாலும் எழுத்து சிரங்கு பிடித்தவன் போல மீண்டும் எழுதவே நினைக்கிறேன்.

  சரி இப்பவும் பெரிதாக ஒன்றும் எழுத போவதில்லை இது பிளாக்கர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உதவும் இங்குள்ள தகவல்கள் தான் பல தளங்களிலும் காணப்படுகிறது அதனால் உங்களுக்கு தேவையானதை எல்லா இடங்களிலும் தேடாமல் கீழிருக்கும் ஏழு தளங்களில் தேடினால் போதும் நிச்சியம் விடை இருக்கும்.

  http://www.mybloggertticks.com

  http://trick-blog.blogspot.com

  http://www.blogspottutorial.com

  http://bloggerstop.net

  http://www.bloggertipsandtricks.com

  http://www.blogger-tips.com

  http://thebloggertips.com

  என்ன நீங்கள் வலைத்தளம் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கிறத இந்த தளங்கள் பயனுள்ளதாய் இருப்பின் மேலும் பலரை சென்றடைய வாக்கும் கருத்துரையும் அளிக்கவும் (கடைசியில் என்னையும் ஓட்டு கேட்கும் பிச்சைகாரணாக மாற்றிவிட்டது இந்த பதிவுலகம்) உண்மையில் இந்த திரட்டிகள் வாக்களிப்பவர் பற்றிய விபரத்தை மறைத்தால் நல்லது ஓரளவிற்கு நல்ல பதிவுகள் மட்டுமே வெளிவர வாய்ப்பு இருக்கிறது இல்லையென்றால் எத்தனை நல்ல பதிவுகள் எழுதினாலும் யாருக்கும் பயன்படமலே முடங்கிவிடும், சிலர் என்ன ம$%^&ர் எழுதினாலும் வாக்களிக்க ஒரு கூட்டமே பின்னால் இருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  25 Comments
  Comments

  25 Responses to “பிளாக்கர் டிப்ஸ் (ஆல் இன் ஆல்)”

  BOSS said...
  July 21, 2010 at 12:04 PM

  நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ,ஆனால் மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்


  ராஜன் said...
  July 21, 2010 at 12:27 PM

  தும் ததா!


  kannaki30 said...
  July 21, 2010 at 12:57 PM

  விடாமல் எழுதுங்க சார். படிக்க நாங்கள் இருக்கிறோம்..


  போகன் said...
  July 21, 2010 at 1:30 PM

  உபயோகமாக இருந்தது.நீங்கள் கருத்துரைப் பெட்டியில் google transliterator இணைத்தால் வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்


  Kousalya said...
  July 21, 2010 at 1:38 PM

  ஏன் இவ்வளவு கோபம் ? ஆனால் உங்கள் கோபத்திலும் நியாயம் இருக்கவே செய்கிறது என்பதுதான் உண்மை.

  நல்லவை மெதுவாகவே மற்றவர்களை சென்று அடையும், மனம் தளராதீர்கள் நண்பரே.


  கிரி said...
  July 22, 2010 at 12:41 AM

  ஞானசேகர் சார்....

  இந்த ஓட்டை எல்லாம் நம்பாதீங்க. அதெல்லாம் வெத்து விஷயங்கள். சுத்த ஹம்பக் அப்படிங்கறது என் எண்ணம். நல்ல quality எழுத்துக்களை நாலே பேரு படிச்சாக்கூட போதும். அப்படி feel பண்ணுங்க.

  கடந்த அஞ்சு மாசமாத்தான் நீங்க எழுதறீங்க. ஆனா பாருங்க உங்களை நூத்தி ரெண்டு பேரு follow பண்றாங்க. நான் வருஷ வருஷமா எழுதறேன். என்னை follow பண்றவங்க இன்னும் நாற்பதை எட்டலை. ஆனாலும் மனசு தளராம இருநூறு போஸ்ட் எழுதி முடிச்சிட்டேன்.

  நீங்க விரும்பறீங்களோ விரும்பலையோ உங்களை படிக்க இருக்கற அந்த நூத்தி ரெண்டு பேருக்காக நீங்க தொடர்ந்து எழுதுங்க. எழுத்து மத்தவங்களுக்காக அப்படின்னு இல்லாம உங்க உள் உந்துதல்ல இருந்து வர்ற விதமா வெச்சுக்கங்க. நெறைய எழுதுவீங்க. படிக்க நாங்க எல்லாம் இருக்கோம்.

  உங்கள் தளத்துல தினத்தந்தி பாணியில் எளிமையாக நிறைய நல்ல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.


  rk guru said...
  July 22, 2010 at 2:27 AM

  உங்கள் வருத்தம் போல் என் வருத்தமும் உள்ளது.......


  ஜிஎஸ்ஆர் said...
  July 22, 2010 at 10:02 AM

  @BOSS
  தங்களின் சரியான புரிதலுக்கு மிக்க நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  July 22, 2010 at 10:03 AM

  @ராஜன்
  இதற்கு அர்த்தம் என்னவென்று புரியவில்லையே நண்பரே


  ஜிஎஸ்ஆர் said...
  July 22, 2010 at 10:04 AM

  @kannaki30

  நன்றி அன்பின் சகோதரி நீங்கள் படித்து பயனுள்ளது என நினைத்தால் மறக்காமல் பதிவை பற்றிய கருத்தும் வாக்கும் அளிப்பதன் மூலம் மேலும் பலரை சென்றடையுமே


  ஜிஎஸ்ஆர் said...
  July 22, 2010 at 10:06 AM

  @போகன்
  எப்படி இனைப்பது என ஏதாவது தளம் இருந்தால் அந்த உரலை கொடுங்களேன் நிச்சியம் இனைத்து விடுகிறேன்


  ஜிஎஸ்ஆர் said...
  July 22, 2010 at 10:12 AM

  @கிரி
  ஓட்டு என்பது வெத்து வேட்டுதான் ஏனென்றால் என் சில பதிவுகள் 1500 ஹிட்ஸ் வாங்கியிருக்கிறது ஆனால் அதன் வாக்குகளோ 35 முதல் 38க்குள் இருக்கும் ஆனால் அத்தனை நபர்கள் படிக்க முடிந்ததென்றால் அது பிரபல பகுதிக்கு வந்தாலே மட்டுமே சாத்தியம் எனவே தான் இந்த ஓட்டு அவசியமாகிறது மேலும் உண்மைதான் என்னை தற்போது 104 நண்பர்கள் பாலோ செய்கிறார்கள் 245 மின்னஞ்சல் ரீடர்கள் இருக்கிறார்கள் அவை எல்லாமே சந்தோஷம் தான் ஏன் என் பதிவுகள் இனையத்தில் நிறைய இடங்களில் காப்பி எடுக்கப்பட்டு எழுதபட்டிருக்கிறது அதில் ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட நம்மை போன்ற்வர்களுக்கு கிடைக்காத போது வருத்தம் ஏற்பட்த்தான் செய்கிறது


  ஜிஎஸ்ஆர் said...
  July 22, 2010 at 10:14 AM

  @rk guru

  உண்மைதான் நண்பரே நல்லதே செய்தாலும் அதற்கும் விளம்பரம் தேவைப்படுகிறது அதிலும் சில பதிவர்கள் பதிவை கண்டாலே எரிச்சல் வரும் அதில் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லாத விஷயத்துக்கு இருக்கும் வரவேற்பு ஆச்சரியமாய் இருக்கிறது


  ஜிஎஸ்ஆர் said...
  July 22, 2010 at 10:17 AM

  @Kousalya

  வருத்தமாக இருக்கிறது சகோதரி நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைத்தான் நம் பதிவில் வழங்குகிறோம் அவசியமில்லாத பயன்பெறாத கணினி பதிவுகள் கூட எழுதுவதில்லை ஆனால் உபயோகம் இல்லாத பதிவுகளுக்கு இருக்கும் வரவேற்பு நம் பதிவுக்கு இல்லேயே என்கிற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது


  Faaique Najeeb said...
  July 22, 2010 at 12:13 PM

  கூட்டம் சேத்தவன் எல்லாம் ஜெயிக்க முடியாது பாஸ் .. நாம கொஞ்சம் பேரு பின்னூட்டம் இட்டாலும் எதோ ஒரு விதத்தில் பயனடைந்து நன்றிக்கடனாகவே இடுகிறோம். இது போதாதா .......


  ஜிஎஸ்ஆர் said...
  July 24, 2010 at 11:06 AM

  @Faaique Najeeb மற்றவர்களை குறை சொல்லி பயன் இல்லை நண்பா தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி


  ம.தி.சுதா said...
  November 19, 2010 at 1:06 PM

  அட இதுலதான இம்புட்டும் இருக்கிறது...


  ஜிஎஸ்ஆர் said...
  November 19, 2010 at 4:41 PM

  @ம.தி.சுதா நீங்கள் நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் பொறுமையாய் பாருங்கள் லேட்டஸ்ட் தகவல்கள் முதற்கொண்டு இருக்கும் எனக்கு தெரிந்தவரை இவர்களிடமிருந்து தான் பல நண்பர்களுக்கு செல்கிறது


  சிகப்பு மனிதன் said...
  November 26, 2010 at 7:06 PM

  .நான் ப்ளாக் ஆரம்பிக்கும் போது, உதவும் என்று நினைக்கிறேன் ... !

  .எழுதானிக்கு நன்றி, ஆசிரியரே !


  ஜிஎஸ்ஆர் said...
  November 26, 2010 at 9:41 PM

  @சிகப்பு மனிதன் நிச்சிய்மாக உதவும் மேலும் உதவிக்கு நானும் இருக்கிறென் எனக்கு தெரிந்ததை சொல்லித்தர


  சிகப்பு மனிதன் said...
  November 26, 2010 at 9:48 PM

  .நன்றி நண்பரே !


  shathath said...
  May 12, 2011 at 1:00 PM

  அன்பார்ந்த எழுத்தாளருக்கு என் நன்றிகள் உரித்தாகட்டும்.
  தங்களது எழுத்துகளுக்கு சரியான வரவேற்பு கிடைக்க வில்லை என்று மிகவும் மன வேதனையுடன் உள்ளதை நான் அறிய முடிந்தது. நீங்கள் ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்வது நல்லது. தங்களது ஆக்கங்களை மற்றவர்கள் வரவேற்பதை விட, எத்தனை பேர் சரியாக பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்தீர்கள் என்றால் தாங்கள் மிக வேதனை பட மாட்டீர்கள் என்பதை தெரிவிக்கின்றேன். நானும் தங்களது ஆக்கங்களை பயன்படுத்தும் ஒரு வாசகன்தான் என்பதனை தெரிவிக்கின்றேன்.


  u.anuraaj said...
  July 5, 2012 at 2:35 AM

  போக முடிவெடுத்தும் உங்களால் போக முடியவில்லை என்னும் போதே......நீங்கள் ஏதாவது ஒன்றை சாதிக்க தயாராகி விட்டது தெரிகிறது....தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே........நிச்சயம் சாதிக்க முடியும்...............


  ஜிஎஸ்ஆர் said...
  July 25, 2012 at 11:21 AM

  @shathathசரியானவற்றை கொண்டு சேர்க்க கூட இந்த உலகத்தில் மார்கெட்டிங் அவசியமாகிறது என்ன செய்ய, உங்கள் அறிவுறையை ஏற்றுக்கொள்கிறேன்.

  வாழ்க வளமுடன்


  ஜிஎஸ்ஆர் said...
  July 25, 2012 at 11:22 AM

  @u.anuraajஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பா, எழுதுவது கொஞ்சம் பிடித்தமான விஷயம் ஒருவேளை சில விஷயங்கள் பாரம்பரியமாக இருக்கலாம்...


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர