Showing posts with label பிடிஎப். Show all posts
Showing posts with label பிடிஎப். Show all posts

Dec 8, 2011

13

பிடிஎப் ரிப்பேர் டூல் (PDF Repair Tool)

  • Dec 8, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: புதிதாக புகழ் வராவிட்டால் பழைய புகழும் தானே போய்விடுகிறது.

    வணக்கம் நண்பர்களே நம்மில் அநேகம் பேர் பிடிஎப் பயன்படுத்துபவர்கள் உண்டு அதற்கான காரணம் பிறருக்கு ஏதாவது ஒரு தகவலை அனுப்ப நினைக்கும் பொழுது ஃபாண்ட் (Font) பிரச்சினையை தவிர்க்க உதவும். அதே நேரத்தில் நாம் இனையத்தில் இருந்து தரவிறக்கிய பிடிஎப் தொகுப்பு புத்தங்கங்கள் அல்லது நம்மிடம் இருக்கும் ஏதாவது தொகுப்புகள் சில நேரங்களில் ஏதாவது ஒரு அறியாத காரணத்தில் திறக்க முடியாமலோ அல்லது பிழைச்செய்திகளையோ நாம் கண்டிருக்ககூடும். அந்த மாதிரி நேரங்களில் சில நேரம் நம்மால் பிடிஎப் தொகுப்பை திறக்க முடியாமல் போய்விடுவதும் உண்டு.

    நாம் இந்த பதிவின் வழியாக இந்த பிரச்சினையை தீர்ப்பது பற்றி பார்க்கலாம் இந்த மென்பொருள் எத்தனை விதமான பிழைகளை சரிசெய்து தரும் என்பது உறுதியாக என்னால் கூற இயலவில்லை ஆனால் நான் சோதித்து பார்த்த வரையில் சிதிலமடைந்த (Corrupt) பிடிஎப் தொகுப்புகளை அழகாய் சில நிமிடங்களில் ரிப்பேர் செய்து தந்துவிடுகிறது.

    இந்த மென்பொருளின் பயன்பாடு நமக்கு அடிக்கடி தேவைப்படுவதில்லை, நாம் எதிர்பார்க்காத நேரத்தில் சில நேரம் நமக்கு தேவைப்படும் எனவே இதை தரவிறக்க விரும்புகிறவர்களுக்கு பிடிஎப் ரிப்பேர் (PDF Repair) மேலும் தரவிறக்க விருப்பம் இல்லாதவர்கள் முடிந்தால் முகவரியை குறித்துக்கொள்ளுங்கள் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வழக்கம் போலான இன்ஸ்டாலேசன் முறைதான் இயக்குவதற்கும் பெரிதாய் சிரமம் இருக்காது சிதிலமடைந்த (Corrupt) பிடிஎப் தொகுப்பை தெரிவு செய்து மீண்டும் சேமிக்க விரும்பும் இடத்தை (Directory) தெரிவு செய்து Start Repair என்பதை கிளிக்கினால் போதும் சில நிமிடங்களில் சிதிலமடைந்த பிடிஎப் தொகுப்பை திறந்து படிக்க முடியும்.



    என்ன நண்பர்களே பதிவு தற்போது உங்கள் உபயோகப்பட்டிருக்கவோ அல்லது சோதித்து பார்த்திருக்கவோ முடியாது என்பதை உணர்கிறேன் அதே நேரத்தில் உங்களுக்கு எப்பொழுதாவது தேவைப்படலாம்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Nov 9, 2010

    9

    பிடிஎப் நிட்ரோ சூப்பர் பவர்புல் ஆல் இன் ஆல் (Nitro PDF)

  • Nov 9, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: புதிய உண்மையை விட பழைய தவறு தான் யாவருக்கும் தெரியும்.

    வணக்கம் நண்பர்களே நான் ஏற்கனவே பிடிஎப் பற்றி சில பதிவுகள் எழுதியிருக்கிறேன் அதில் நண்பர்கள் பலர் பயனடைந்திருக்க கூடும் அந்த பதிவுகளை இது வரை பார்க்காதவர்கள் கீழிருக்கும் மூன்று பதிவுகளையும் பாருங்கள் ஆனாலும் இப்போது எழுதப்போகும் பதிவைத்தான் இனி நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறேன்.

    பிடிஎப் வெட்டு ஒட்டு என்னவேணாலும் பண்ணு

    பிடிஎப்-பில் பாஸ்வேர்டு

    பூட்டிய பிடிஎப் பைலை திறக்கலாம்

    என்ன நண்பர்களே மேலிருக்கும் பதிவை பார்த்தீர்களா? சரி பரவாயில்லை இந்த அவசர யுகத்தில் அதற்கெல்லாம் உங்களுக்கு எங்கே நேரம் இருக்க போகிறது? விஷயங்களை கற்றுக்கொள்வோம் ஆனால் கற்றுக்கொடுத்தவருக்கு நம்மால் ஒரு சிறு அங்கீகாரம் கிடைத்துவிடக் கூடாது என நினைப்பவர்கள் தானே நம் மக்கள். இதை நான் சொல்லக் காரணம் நம் பதிவை எத்தனையோ பேர் படிக்கிறார்கள், எத்தனையோ நண்பர்கள் நம் தளத்தில் கொடுக்கும் மென்பொருளை தரவிறக்குகிறார்கள் ஆனால் அவர்களில் சிலர் நினைத்தாலும் நம் பதிவை மேலும் பலருக்கு சென்றடைய வைக்க முடியும் ஆனால் வரும் நண்பர்கள் வாக்களிக்க தயங்குகிறார்கள், கருத்துரை எழுத தயங்குகிறார்கள் நான் என்ன என்னைபற்றி புகழ்ந்து எழுதவா சொல்கிறேன்? பதிவின் சாரம்சத்தை பற்றி கருத்து தானே கேட்கிறேன்?மேலும் நீங்கள் நினைத்தால் நம் தளத்தில் நண்பர்கள் பட்டியலில் இனையலாம் இப்படி இனைவதால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை அதே நேரத்தில் எனக்கொன்றும் பெரிய இலாபமும் இல்லை ஆனால் படிக்க வருபவர்களுக்கு நம் தளத்தை நம்பிக்கைக்குறிய தளமாக காட்டுவதில் நண்பர்களாகிய உங்களுக்கு பங்கில்லையா?.

    இந்த நிட்ரோ பிடிஎப்-பில் நிறைய வசதிகள் இருக்கிறது ஆனாலும் தமிழ் கன்வெர்ட் செய்யும் போது பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. மென்பொருளை பற்றி முழுவதுமாக சொல்வதென்றால் இதைப்பற்றி குறைந்து ஐந்து பதிவுகள் வேண்டிவரும் முதலில் Nitro PDF (நிட்ரோ பிடிஎப்) செய்யுங்கள் இது ஒரு புரொபசனல் மென்பொருள்.

    இந்த பதிவில் புக்மார்க் பற்றி பார்க்கலாம் சாதரணமாக சில பிடிஎப்-களில் இடது பக்கம் ஒவ்வொரு தலைப்பையும் அழகாக தொகுத்து புக்மார்க் செய்திருப்பார்கள் ஆனால் இது போன்ற வசதிகள் நாம் தரவிறக்கும் எல்லா பிடிஎப் பைல்களிலும் கிடைப்பதில்லை அதே நேரத்தில் சாதரணமாக இதை உருவாக்கி விடலாம். கீழிருக்கும் படத்தை பாருங்கள் இது தான் புக்மார்க்.



    இந்த வசதி நாம் பிடிஎப் உருவாக்கும் போதே தானக உருவாகி விடும் இதைப்பற்றி கவலையில்லை.



    இப்போது நமக்கு தேவையான புக்மார்க் உருவாக்குவது எப்படி என பார்க்கலாம் இதில் இரண்டு வழிமுறைகள் இருக்கிறது முதலில் நிட்ரோ பிடிஎப் திறந்து உங்களுக்கு தேவையான பிடிஎப் பைலை திறக்கவும் இதில் Insert and Edit என்கிற டேப் திறந்து படத்தில் உள்ள வழிமுறையை பின்பற்றவும். இப்போது நீங்களே உங்கள் தளத்தில் உள்ள பதிவுகளை மொத்தமாக ஒரு பிடிஎப் ஆக மாற்றி உங்கள் வாசகர்களுக்கு கொடுக்க நினைத்தால் அவர்கள் மொத்த பக்கங்களையும் புரட்ட முடியாது அதற்கு வசதியாக தான் இந்த புக்மார்க் பதிவின் தலைப்பை வைத்து புக்மார்க் செய்து விட்டால் படிப்பதற்கு எளிதாய் இருக்கும். எல்லாம் முடிந்ததும் அந்த பைலை Save as கொடுத்து சேமித்து விடுங்கள்.



    இனி இன்னொரு வழிமுறையையும் பார்க்கலாம் ஏதாவது ஒரு பதிவின் தலைப்பை படத்தில் உள்ளது போல் செலக்ட் செய்து அதில் வலது கிளிக்கினால் திறக்கும் மெனுவில் Add Bookmark என்பதை கிளிக்கவும் இப்போது இடது பக்கம் படத்தில் உள்ளது போல வந்திருக்கும் பின்னர் அதை பெயர் மாற்றிக்கொள்ளவும் அவ்வளவுதான் இதிலேயே Signature வசதியும் இருக்கிறது.



    இனி இந்த மென்பொருளில் இருக்கும் வசதிகளை பார்க்கலாம் வேர்டு அல்லது எக்‌ஷெல் பைலை இருந்து நேரடியாக பிடிஎப் ஆக மாற்றலாம் இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் வேர்டு, எக்‌ஷெலில் இதுவும் இரு டேப்பாக வந்து அமர்ந்துகொள்ளும்.





    நிட்ரோவில் இருந்து நேரடியாக பிடிஎப் உருவாக்க முடியும் பிடிஎப் பைலை நேரடியாக வேர்டு அல்லது எக்‌ஷெல், அல்லது நோட்பேடில் அல்லது அதிலிருக்கும் இமேஜ் மட்டும் பிரித்தெடுப்பது என எல்லா வசதிகளும் இந்த நிட்ரோ பிடிஎப்பில் இருக்கிறது.


    Header மற்றும் Footer வசதி பேஜ் நம்பர் கொடுக்கும் வசதி இமேஜ் உள்ளிடுவது, வாட்டர் மார்க் மற்றும் எழுத்துகளை எடிட் செய்வது என இல்லாத வசதிகளை இல்லை எனுமளவில் இருக்கிறது.



    ஏதாவது ஒரு இடத்தை குறிப்பிட்டு காண்பிக்கும் வகையில் ஹைலைட், கமெண்ட் வசதி இப்படி இன்னும் ஏரளானமான வசதிகளை கொண்டிருக்கிறது இந்த பிடிஎப்.



    கோம்போ பாக்ஸ், ரேடியோ பட்டன் என வசதிகள் பெருகி கிடக்கிறது உண்மையில் நான் இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம்.



    பிடிஎப் பைலில் பாஸ்வேர்டு இடுவது பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இந்த நிட்ரோ பிடிஎப்பிலும் இந்த வசதி கிடைக்கிறது.



    பிடிஎப் பக்கங்களை அலைன்மெண்ட் செய்வதில் இருந்து திருப்புவதில் இருந்து அதாவது vertical ஆக இருக்கும் பிடிஎப் பைலை Horizontal ஆக மாற்றி பார்க்கவும் படிக்கவும் முடியும்.



    நான் ஏற்கனவே எழுதிய எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம் பதிவு நான் மிகவும் விரும்பினேன் இன்று அதைப்போலவை இந்த பதிவை மகழ்சியுடன் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன், இன்னும் சில நல்ல பதிவுகள் நம் தளத்தில் இருக்கின்றன அவசியம் படித்து பாருங்கள்.

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர