Jun 3, 2010
நீங்கள் பதிவுலக வாசகரா?
நண்பர்களே ஓவ்வொரு நாளும் பதிவர்கள் எழுதும் பதிவை பலரும் படிக்கின்றனர் சிலர் அதற்கு கருத்துரைகள் எழுதுகின்றனர் சிலர் எழுத நேரமின்மை அல்லது தெரியாமை போன்ற காரணங்களாலும் இன்னும் சிலர் வெரும் வாசிப்போடு நிறுத்தகொள்வார்கள் அப்படிபட்ட நண்பர் என்னிடம் உங்கள் தளத்தில் எப்படி கருத்துரை எழுதுவது என மின்னஞ்சல் வழி கேட்டிருந்தார் இது பற்றி பதிவர்களுக்கு மிக நன்றாக தெரியும் ஆனால் பதிவு எழுதாத வாசகர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை தானே அதற்காகத்தான் இந்த பதிவு தெரிந்தவர்கள் மன்னிக்கவும.
என் தளத்திற்கு வருகின்ற வாசகர்கள் நீங்கள் விரும்பினால் Post a Comment என்கிற ஒரு கட்டம் காணப்படும் அதில் நீங்கள் உங்கள் கருத்துகளை தட்டச்சு செய்து நீங்கள் உபயோகப்படுத்தும் மின்னஞ்சல் மூலம் கருத்துரை இடலாம்.
சரி நீங்கள் தினமும் விரும்பி படிக்கும் பதிவர் புதிதாக ஏதாவது பதிவு எழுதியிருக்கிறாற என தெரிந்துகொள்ள ஒவ்வொரு முறையும் தளத்திற்கு சென்று பார்க்க முடியாது தானே அதற்காக தான் இந்த கூகுள் வழங்கும் Feed Burner வசதி இருக்கிறது இதில் நீங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து ஒப்புதல் கொடுத்த பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு செய்தி வரும் அதில் ஒரு தொடுப்பு இருக்கும் அதில் கிளிக்கி உறுதிபடுத்தி விடுங்கள் இனி உங்கள் விருப்ப பதிவர் பதிவை எழுதி வெளியிட்டதும் அதற்கான அறிவிப்பு உங்கள் மின்னஞ்சலில் வந்துவிடும்.
உஙகளுக்கு பிடித்தமான வலைத்தளத்தில் நீங்களும் பங்காளி ஆக விரும்புகிறீர்கள் அதாவது அவர்களின் தளத்தில் இனைந்திருக்க விரும்புகிறீர்கள் இதனால் என்ன நண்மை ஒன்றுமில்லை நீங்கள் விரும்பும் பதிவருக்கு உங்கள் ஆதரவை வழங்குகிறீர்கள் படத்தை பாருங்கள் இதில் Follow என்பதில் கிளிக்கி உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்வதன் மூலம் நீங்கள் அந்த தளத்தின் பெருமைக்குறியவர்கள் ஆகிறீர்கள் அதன் மூலம் அந்த தளம் நல்ல தளம் என நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.
நீங்கள் ஒரு தளத்தில் ஒரு கருத்துரையை எழுதியிருக்கிறீர்கள் சரி அதற்கு அவர் தங்களுக்கு அவர் என்ன பதில் அளித்திருக்கிறார் என தெரிந்துகொள்ள நீங்கள் அந்த தளத்தில் இருக்கும் Comment RSS என்கிற சேவையை பயன்படுத்துங்கள்.
தமிழிஷ் தள ஓட்டு பட்டையை நீங்கள் விரும்பும் தளத்தில் இனைத்திருந்தால் அதில் வாக்களிக்க தமிழிஷ் தளம் சென்று ரிஜிஸ்டர் செய்துவிடுங்கள் ஒரு வேளே நீங்கள் ஏற்கனவே தமிழிஷில் பதிவு செய்திருந்தால் Login என்பதை கிளிக்கி உள்ளே செல்லவும்.
வாக்கு அளிக்க விருப்பிய பதிவிற்கு Voted என்பதில் கிளிக்கினால் போதும் ஒரு பதிவிற்கு நீங்கள் ஒரு முறை மட்டுமே வாக்கு அளிக்க இயலும் இப்படி நீங்கள் வாக்கு அளிப்பதால் நீங்க்ள் விரும்பும் பதிவு தமிழிஷின் பிரபல பகுதிக்கு வந்துவிடும் இதன் மூலம் மேலும் அதிக நபரை சென்றடையும் மேலும் இதில்More from என்பதை கிளிக்கினால் அவருடைய மற்ற பதிவுகளையும் காணலாம்.
தமிழிஷில் மேலே வலது பக்க மூலையில் இருக்கும் Log In செய்தபிறகு Profile என்பதை கிளிக்கி திறக்கும் விண்டோவில் Modify என்பதை தெரிவு செய்து அதில் உங்களை பற்றிய சுய விபரங்களை கொடுக்கலாம் இதன் மூலம் நீங்கள் விரும்பும் பதிவர் உங்களை பற்றி அறிந்துகொள்ள உதவியாய் இருக்கும்.
என்ன நண்பர்களே உங்கள் வாக்குகளும் கருத்துரையும் தான் ஒரு தளத்தின் மிகச்சிறந்த மதிப்பீடாக இருக்கமுடியும் நீங்கள் அளிக்கும் ஒரு வாக்கின் மூலம் அந்த பதிவு மேலும் பலரை சென்றடைய வாய்ப்பிருக்கிறது நீங்கள் எழுதும் பதிவை பற்றிய கருத்துரைகள் மேலும் அதன் நம்பகத்தன்மையை உறுதிபடுத்துவதாக இருக்கும் முடிந்தவரை நல்ல பதிவுகளை ஆதரியுங்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
15 Responses to “நீங்கள் பதிவுலக வாசகரா?”
-
Kousalya Raj
said...
June 3, 2010 at 12:22 PMபிளாக் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கும்.நன்றி வாழ்த்துக்கள்
-
உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)
said...
June 3, 2010 at 1:02 PMநல்ல தகவல்கள்
அருமை.............. -
Jey
said...
June 3, 2010 at 5:04 PMthakavalukku nantri.
-
Unknown
said...
June 3, 2010 at 8:28 PMவாழ்த்துக்கள் !
-
Saravanan MASS
said...
June 4, 2010 at 9:13 PMதகவலுக்கு நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
June 5, 2010 at 9:13 AM@Kousalya
தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
June 5, 2010 at 9:14 AM@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)
தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
June 5, 2010 at 9:14 AM@Jeyakumar.G
வாருங்கள் நண்பா நம் தளத்தோடு இனைந்திருங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
June 5, 2010 at 9:15 AM@കെ.പി.സുകുമാരന്
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
June 5, 2010 at 9:16 AM@பட்டாபட்டி..
தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
June 5, 2010 at 9:17 AM@Saravanan
தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
June 6, 2010 at 11:51 AMமனதில் பதிந்த பதிவாக இடம்பிடிக்கிறது @
http://www.sinhacity.com/ -
Mohamed Faaique
said...
July 13, 2010 at 12:22 PMகுழப்பமாக இருந்தது. தெளிவுக்கு நன்றி.
-
ஜிஎஸ்ஆர்
said...
July 14, 2010 at 5:07 PM@Faaique Najeeb
தங்களின் சரியான புரிதலுக்கு மிக்க நன்றி -
Azhagar Shankar
said...
October 10, 2010 at 11:29 AMவணக்கம் GSR,
உங்கள் பனி மெச்ச தகுந்தது. பாராட்டுக்கள். நான் நிறைய ப்ளாக் படிக்கிறேன். ஆனால் பின்னூட்டம் இடுவதில்லை. ஏனென்றால் எனக்கு தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. தமிழில் எப்படி பின்னூட்டம் இடுவது என்று ஒரு ப்ளாக் போடவும்
நன்றி
Azhagar
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>