Mar 25, 2010
எங்கே என் தேசம்
நம்ம நாடு ஊழல் பட்டியலில் உலகிலேயே பத்தொன்பதவாது நாடாக இருக்கிறதாம் இன்னும் சில ஆண்டுகளில் நாம் வல்லரசாக மாறுகிறோமோ இல்லையோ நிச்சியம் ஊழல் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துவிடுவோமோ என பயமாயிருக்கிறது இந்த நேரத்தில் இந்தியன் என்கிற படத்தில் உள்ள வசனம் தான் ஞாபகம் வருகிறது எல்லா நாடுகளிலும் ஊழல் இருக்கதான் செய்கிறது என்ன அங்கெல்லாம் அதாவது ஒரு வேலையை வரம்பு மீறி செய்துமுடிக்க கைக்கூலி இங்கே ஒருவன் அவன் வேலையே செய்வதற்கே கைக்கூலி கொடுக்கவேண்டும்
எங்கே என் தேசம்
அறிஞர் அண்ணாவின்
கையிலிருக்கும் புத்தகம் வாசிக்கும்
காக்கைக்கும் தெரிந்திருக்கும்
நம் தேசத்தின் அவலம்
காஷ்மீர் யுத்தத்தில்
தொடங்கியது பேரம்
எதிரிகளை அழிக்க செல்ல
வாங்கிய வாகனத்தில் ஊழல்
விவாசாயிக்கு உரம்
மானையத்தில் வழங்குவோமென
துருக்கி கம்பெனியில்
வாங்காத யூரியாவில் ஊழல்
பணம் பண்ணலாமென
கனவோடு பங்கு வர்த்தகம்
சென்றால் அங்கேயும்
பங்கு பத்திர ஊழல்
உலகத்தை உள்ளங்கையில்
நிறுத்திய அலைபேசியில்
அலைக்கற்றை வழங்கியதில்
முறைகேடான ஊழல்
பொங்கலுக்கு புதுச்சேலை
கிடைக்குமென காத்திருந்த
பொக்கைவாய் கிழவியின்
சந்தோஷத்திலும் ஊழல்
பேருந்தில் சில்லரை
இல்லையென்கிற பெயரில்
நாம் அறிந்தே நடக்கும்
பகற்கொள்ளை ஊழல்
இறந்தவனே அலறி எழுந்து
ஆச்சரியப்படும்
அளவிற்கு இருந்தது
சுடுகாட்டு ஊழல்
யுத்தத்தில்
இறந்தவனை- அடக்கம்
செய்த சவப்பெட்டியிலும்
சவப்பெட்டி ஊழல்
எங்கே போய் சொல்ல
நம் பாதுகாப்புக்காக
வாங்கிய பீரங்கியிலும்
இருந்ததாம் ஊழல்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
8 Responses to “எங்கே என் தேசம்”
-
ஜிஎஸ்ஆர்
said...
April 20, 2010 at 9:41 AM@buruhaniibrahim
தங்களை போன்றவர்களின் அன்பும் ஊக்கமும் மேலும் என்னை எழுத தூண்டுகிறது என்றால் அது மிகையில்லை
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
Kumar
said...
August 18, 2010 at 10:58 PMமக்கள் தான் ஊழலுக்கு அடிப்படை காரணம். தேர்தலில் அதிகம் செலவழிக்கும் வேட்பாளர்க்கு தான் வோட்டு போடுவார்கள். வெற்றி பெற்றவன் போட்ட Investmenta எடுக்காம மக்கள் சேவையா பண்ணுவான்??
காமராஜர், கக்கன் போன்ற போன்ற ஊழலுக்கு எதிரானா அரசியல்வாதிகளை தோற்கடித்த பெருமை நம் மக்களுக்கு உண்டு. கருணாநிதி மக்களின் இந்த சரியான நாடிய பிடிச்சு சக்க போடு போடுறாரு... -
ஜிஎஸ்ஆர்
said...
August 21, 2010 at 9:11 AM@Kumar உண்மைதான் நண்பரே மக்களாகிய நாமும் ஊழலுக்கு ஒரு காரணமாகத்தான் இருக்கிறோம்
\\மக்கள் தான் ஊழலுக்கு அடிப்படை காரணம். தேர்தலில் அதிகம் செலவழிக்கும் வேட்பாளர்க்கு தான் வோட்டு போடுவார்கள். வெற்றி பெற்றவன் போட்ட Investmenta எடுக்காம மக்கள் சேவையா பண்ணுவான்??
காமராஜர், கக்கன் போன்ற போன்ற ஊழலுக்கு எதிரானா அரசியல்வாதிகளை தோற்கடித்த பெருமை நம் மக்களுக்கு உண்டு. கருணாநிதி மக்களின் இந்த சரியான நாடிய பிடிச்சு சக்க போடு போடுறாரு... \\
\\வெற்றி பெற்றவன் போட்ட Investmenta எடுக்காம மக்கள் சேவையா பண்ணுவான்??\\
அதைத்தானே வந்ததும் பண்றாங்க
\\காமராஜர், கக்கன் போன்ற போன்ற ஊழலுக்கு எதிரானா அரசியல்வாதிகளை தோற்கடித்த பெருமை நம் மக்களுக்கு உண்டு. \\
அந்த பெருமை நம் மக்களையே சேரும் நமக்குத்தான் நல்லவர்களேயே பிடிக்காதே
\\கருணாநிதி மக்களின் இந்த சரியான நாடிய பிடிச்சு சக்க போடு போடுறாரு.\\
நானும் இதை ஆமோதிக்கிறேன் -
ம.தி.சுதா
said...
October 31, 2010 at 11:10 PMஃஃஃஃஃபொங்கலுக்கு புதுச்சேலை
கிடைக்குமென காத்திருந்த
பொக்கைவாய் கிழவியின்
சந்தோஷத்திலும் ஊழல்ஃஃஃஃஃ
அருமை என்ன ஒரு எடுத்தக் காட்டு -
ஜிஎஸ்ஆர்
said...
November 1, 2010 at 11:50 AM@ம.தி.சுதாநம் அரசியல்வாதிகள் தான் யார் வயிற்றில் அடித்தாவது தன் 21 பரமபரை வாழ கொள்ளையடிக்கிறார்களே
-
Vengatesh TR
said...
November 28, 2010 at 1:27 PM.ஊழலுக்குள்ளே பிறக்கிறோம்(வரதட்சனை), ஊழலுக்குள்ளே வாழ்கிறோம்(govt), ஊழலுக்குள்ளே சாகிறோம்(LIC) !
.தான் வாங்கும் லஞ்சத்தில், தினமும் பாதி-அளவை நல்ல-செயல்களை செய்ய செலவிட முற்பட்டாலே போதும், விஞ்ஞானத்தில் நமது தேசத்தின் பெயர் கட்டாயம் முதல் இடம் பிடிக்கும் !
.ஊழலை பகிர்ந்து கொண்டதற்கு, நன்றி நண்பரே ! -
Vengatesh TR
said...
November 28, 2010 at 1:29 PM.மன்னிக்கவும், பொருள் பிழை ஆகிவிட்டது
.ஊழலை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு, நன்றி நண்பரே ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 11:20 AM@சிகப்பு மனிதன்பரவாயில்லை நண்பரே
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>