Dec 24, 2010

26

எதிர்காலத்தில் பணம் எப்படி இருக்கும்? எனது பார்வையில்!

 • Dec 24, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது.

  வணக்கம் நண்பர்களே நம் வாழ்க்கையில் பணம் எனும் அத்யாவசிய தேவையை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உங்களுக்கு ஒவ்வொருவருக்கும் பணத்தின் தேவை அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த விரும்பும் வசதிகளுக்கேற்ப பணத்தின் தேவை கூடியோ அல்லது தேவைக்கோ தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது அதே நேரத்தில் நாம் முன்னோர்கள் உப்யோகித்த நாணயமும் நாம் இப்போது உபயோகிக்கிற நாணயமும், முன்னோர்கள் உபயோகித்த பணத்திற்கும், நாம் இப்போது உபயோகித்து கொண்டிருக்கும் பணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது அதில் நம் நாகரிகத்தின் வளர்ச்சியும் நம் சிந்தனையின், அறிவு கூர்மையின் வளர்ச்சியையும் ஒத்ததாக தான் வடிவமைப்பு இருந்திருக்கிறது ஆனால் நாம் இந்த பதிவின் வாயிலாக பார்க்க போவது எதிர்காலத்தில் பணத்தின் அடையாளம் எப்படி இருக்கும் அல்லது அதன் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றிய எனது சிந்தனை மட்டுமே இது மற்றவர்களோடு ஒத்து போகவேண்டுமென்பதில்லை.

  நான் கொடுத்திருக்கும் படங்கள் கூகுள் வழியாக இனையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை படத்தில் உள்ள நாணயங்கள் மற்றும் கரண்சிகள் பல காலக்கட்டத்தை சேர்ந்தவை வெறும் உதாரணத்துக்கு மட்டுமே படம் இனைத்திருக்கிறேன்

  மேலும் படங்களிற்கு கூகுலில் தேடுங்கள் கொட்டிக்கிடக்கிறது.என்ன நண்பர்களே மேலே உள்ள படத்தை பார்த்தீர்கள் தானே இனி எதிர்காலத்தில் நமது பணம் எப்படி இருக்க போகிறது என்பதையும் கிழே பாருங்கள்.
  என்ன வெற்றிடமாக இருக்கிறது என நினைக்கிறீர்களா?ஆம் உண்மைதான் இன்னும் 20 வருடங்களில் இந்த பணத்திற்கான வடிவமோ,தாளோ இருக்காது இனி இதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

  நாம் இப்போதே பணத்தை கண்ணில் பார்க்கும் வாய்ப்பை குறைத்து கொண்டே வருகிறோம் அதற்கு இப்போதுள்ள கணினி வளர்ச்சியும் தொழில்நுட்பங்களும் வலுச்சேர்க்கிறது உதராணமாக நீங்கள் ஒரு அரசு ஊழியர் அல்லது தனியார் நிறுவணங்களில் வேலை பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் இப்போது உங்கள் வேலைக்கான கூலி நேரடியாக வங்கியில் செலுத்தி விடுகிறார்கள் அதன் பின் தேவைப்படுபவர்கள் பணத்தை கையில் எடுக்கிறார்கள் இன்னும் சிலர் பற்று அட்டை (Debit Card) வழியாக பொருள்கள் வாங்குகிறார்கள் செலுத்த வேண்டிய தொகையை வங்கி கணக்கில் இருந்தே செலுத்தி விடுகிறார்கள் ஒரு வகையில் இதை பாதுகாப்பாக உணர்கிறார்கள் இன்னும் சிலர் கடன் அட்டை வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள் இதில் இன்னும் ஒரு படி மேலே போய் பணத்தை அலைபேசி வழியாக செலுத்துபவர்களும் இருக்கிறார்கள் இந்த வகையினரும் பணத்தை கையில் வைத்திருப்பதை விரும்பவில்லை ஆனால் இதில் நான் சாதரண தொழிலாலர்களை இந்த வகையில் உட்படுத்த முடியாது அதற்க்கு தான் நாம் மேலே சொன்ன 20 வருடங்கள்.

  இனி எப்படி சில ஆண்டுகளில் பணம் மொத்தத்தையும் நிறுத்தி வெறும் எண்கள் வரும் என்பதை பார்க்கலாம் இப்படியாக நடக்கும் போது நிச்சியம் நம் நாடு வல்லரசு ஆகிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை கருப்பு பணம் லஞ்சம் இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டிவிடலாம் இந்தியாவில் இருந்து கருப்பு பணமாக ஒரு பைசா கூட வெளியில் செல்லமுடியாது ஆனால் எல்லாவற்றிற்கும் அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் புதிய நியமங்கள் கொண்டுவரவேண்டும், அதற்கான சாத்தியகூறுகள் நிறையவே இருக்கின்றன நமது இந்தியாவில் இப்போது அமுலுக்கு கொண்டு வந்திருக்கும் அடையாள அட்டையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்யவேண்டி வரும், அதை இப்போதே இன்போசிஸ் நிறுவணத்தினர் அரசின் உத்தரவின் பேரில் சில மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் ஆனால் அதையும் நிறைய மேம்படுத்த வேண்டி இருக்கும்.

  முன்பு ஒரு முறை வருடமோ யாருடையை ஆட்சி என்பதை நினைவில் கொண்டுவர முடியவில்லை 1000 ரூபாய் கள்ள நோட்டு அதிகமாக் புழக்கத்தில் இருந்த போது அரசு ஒரு சிறப்பான முடிவை எடுத்தது அதில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு விதித்து தங்களிடம் இருக்கும் 1000 ரூபாயை வங்கியில் ஒப்படைத்து அதற்கு பதிலாக வேறு பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தி ஒரு தேதியையும் அறிவித்த்து அந்த தேதிக்கு பின்னால் அந்த பணத்தின் மதிப்பு வெறும் பூஜ்யம் என்பதை தெளிபடுத்தி ஆனையிட்டது அரசு எதிர்பார்த்தது போலவே கறுப்பு பணம் அரசுக்குள் வந்துவிட்டது அப்படி செலுத்தாதவர்களின் பணம் வெறும் பேப்பராக மாற்றிவிட்டிருந்தது.

  இனி இந்தியனுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் அடிப்படை தகவல்கள், சொந்த விபரங்கள், சொத்து விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், மருத்துவ விபரங்கள் இன்னும் பிற இத்யாதிகள் அடங்கியதாக இருக்கும் அதன் வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டிவரும், கடைக்கு சென்று விளக்கெண்ணைய் வாங்குவதென்றாலும் தீப்பெட்டி வாங்குவதென்றாலும் ஒவ்வொரு பரிமாற்றமும் அரசினால் வழங்கப்படும் அடையாள அட்டையில் இருக்கும் வங்கி கணக்கின் வழியாகவே மேற்கொள்ளப்படும், இந்த அடையாள அட்டை இல்லாமல் எந்த ஒரு வங்கி கணக்கோ, பணப் பரிவர்த்தனையோ அல்லது வேறு தகவல்களோ பரிமாற்றம் செய்யமுடியாத வகையில் இருக்கும்.

  ஒரு இடம் வாங்க நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் உரிய விலை கொடுக்காமல் நிலத்தை வாங்க முடியாது அப்படி நிலம் வாங்கும் போது அதற்கான பரிவர்த்தனை அரசின் அடையாள அட்டையின் வழியால் நடைபெறுவதால் உங்களால் அரசுக்கான வரியை ஏய்ப்பு செய்ய முடியாது அப்படி செய்ய நினைத்தாலும் அரசுக்கு கண்டுபிடிப்பதில் எந்த பிரச்சினையும் வராது இதனால் சில இடங்களில் கருப்பு பணம் சேர வழியில்லை.

  மொத்த பண பரிவர்த்தனையும் வங்கியின் வழி மேற்கொள்வதால் கள்ளப்பணம் வெளியிட முடியாது காரணம் பணத்திற்கான வடிவம் காணமல் போய் அரசால் நியுமரிக் எண்கள் வழங்கப்பட்டிருக்கும் அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் நியுமரிக் எண்ணில் இடைச்செறுகலாக ஒரே எண்ணில் மீண்டும் ஒரு எண்ணை உட்செலுத்த முடியாது சரி புதிதாக எண்களை வழங்க நினைத்தாலும் அரசின் இயந்திரங்கள் அதை அனுமதிக்காது யோசித்து பாருங்கள் அரசியல்வாதியோ பெறும் பண முதலைகளோ அரசை ஏமாற்றி பணத்தை வெளியில் கொண்டு செல்லமுடியுமா?பணத்தை வேறு ஒரு நாட்டு பணமாக மாற்ற நினைத்தாலும் அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியுமா?ஆக பணம் என்பது வெறும் எண்களாகவும் கண்களில் பார்க்க முடியாததாகவும், நம்முடைய பணம் வெளி நாட்டில் இருந்தால் பத்திரங்களாக மாறியிருக்கும் ஆக இதன் வழியாக வெளிநாட்டில் இருந்து அந்நிய நாட்டு பணத்தையும் அரசின் அனுமதி இல்லாமல் உள்ளே கொண்டு வரமுடியாது!

  சரி நம் அடையாள அட்டை காணமால் போய்விட்டது அல்லது அடுத்தவர்களால் களவாடப்பட்டது என்றாலும் நமக்கு பாதிப்பு இருக்காது காரணம் அடையாள அட்டையை பயன்படுத்துவதற்கு நம் கண், கைரேகை மற்றும் கூடுதலாக கடவுச்சொல்லும் பயன்படுத்தினால் மட்டுமே நம் தகவல்கள் மற்றவர்கள் பார்க்க முடியும் என்பதாக இருந்தால் திருடுவது எளிமையான விஷயமா? இதையும் உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.

  இனி எப்படி இதன் வளர்ச்சியும் சாதகமும், பாதகமும் இருக்குமென்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் ஆனால் இந்த நேரத்தில் பிக் பாக்கெட் திருடன் போய் நிறைய ஹைடெக் கணினி திருடர்கள் நிறைய முளைத்திருப்பார்கள். என்ன நண்பர்களே இது சாத்தியமில்லை என நினைக்கிறீர்களா? அல்லது சாத்தியம் என நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் இவையெல்லாம் சாத்தியப்படும் போது நாம் நிச்சியமாய் எவராலும் அசைக்க முடியாத வல்லரசாய் இருப்போம்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  26 Comments
  Comments

  26 Responses to “எதிர்காலத்தில் பணம் எப்படி இருக்கும்? எனது பார்வையில்!”

  மாணவன் said...
  December 24, 2010 at 9:07 AM

  தொலைநோக்குப் பார்வையோடு சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை நண்பா,

  சிறப்பான தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி


  மாணவன் said...
  December 24, 2010 at 9:17 AM

  //இனி எப்படி இதன் வளர்ச்சியும் சாதகமும், பாதகமும் இருக்குமென்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் ஆனால் இந்த நேரத்தில் பிக் பாக்கெட் திருடன் போய் நிறைய ஹைடெக் கணினி திருடர்கள் நிறைய முளைத்திருப்பார்கள். என்ன நண்பர்களே இது சாத்தியமில்லை என நினைக்கிறீர்களா? அல்லது சாத்தியம் என நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் இவையெல்லாம் சாத்தியப்படும் போது நாம் நிச்சியமாய் எவராலும் அசைக்க முடியாத வல்லரசாய் இருப்போம்.//

  ஒருசில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது பொருத்திருந்து பார்ப்போம்....


  மாணவன் said...
  December 24, 2010 at 9:20 AM

  //ஒரு வரி கருத்து: மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது.//

  நான் நண்பர்களிடம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை இது கணினி உலகுக்கு மிகச் சரியாக பொருந்தும்

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
  உங்கள்.மாணவன்


  மாணவன் said...
  December 24, 2010 at 9:26 AM

  உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த கிருஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா


  Speed Master said...
  December 24, 2010 at 11:58 AM

  பகிர்வுக்கு நன்றி
  கிருஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


  Myilsami said...
  December 24, 2010 at 12:17 PM

  very good imagination is yours


  Myilsami said...
  December 24, 2010 at 12:42 PM

  உங்கள் ஆலோசனைப்படியே இப்போது NHM மென்பொருள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன்.மிகச்சிறப்பாகச்செயல்படுகிறது.
  எதிர்கால நாணயங்கள் குறித்த தங்களது கற்பனைகள் பிரமிக்கவைக்கின்றன.
  கனவுகாணுங்கள் என இந்தியப் பெருந்தலைவர் கலாம் அய்யா கூறியதை நீஙகள் அடியொற்றி நடப்பது கண்டு மகிழ்கிறேன்.


  avvavm said...
  December 24, 2010 at 12:48 PM

  நண்பர் GSR அவர்களுக்கு,

  எதிர்காலத்தில் அல்ல நண்பரே, தற்போதே என் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. என் செல் பில்லில் இருந்து நான் குடியிருக்கும் மற்றும் தொழில் நிறுவன இடத்திற்கும் என் online bank அக்கௌன்ட் வழியாகவே (உரிமையானவர் account ற்கு)பணம் செலுத்துகிறேன். அதிகமாக போனால் என் பாக்கெட்-ல் பணமாக ஒரு 500 அல்லது 1000 ரூபாய் இருப்பதே பெரிய விஷயம்.

  இந்த நிலைமை எனக்கு மட்டும் அல்ல. சிலருடைய வாழ்க்கை முறையே இப்படிதான் இருக்கிறது.


  avvavm said...
  December 24, 2010 at 1:04 PM

  நண்பர் GSR அவர்களுக்கு,

  கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் நண்பரே. உங்களை ஈன்றெடுத்த பெற்றோர்க்கும், உடன் பிறந்தோர்க்கும், உங்களின் வாழ்க்கை துணைக்கும் எனது கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை சொல்லுங்கள்.


  hamaragana said...
  December 24, 2010 at 6:34 PM

  அன்புடன் வணக்கம் நண்பரே
  அசாத்தியமான திட்டமிடல் .. இது மட்டும் நமது நாட்டில் நிறைவேறியது என்றால் கருப்பு பணம் மக்கள் அதிக ஆசைப்பட்டு ஏமாறுவது இல்லாமலே போகும்.இன்னும் எவ்வளவு விஷயங்கள் இருக்கு !!!!!!. எந்த அரசு வந்தாலும் இந்த திட்டத்தை செயல்படுத்தாது/ ஏதாவது சர்வதிகாரம் வந்தால் உண்டு
  வாழ்த்துக்கள் உங்களுக்கு !!


  MANO நாஞ்சில் மனோ said...
  December 25, 2010 at 2:24 PM

  nalla pathivu super.....


  avvavm said...
  December 25, 2010 at 5:38 PM

  நண்பர் GSR அவர்களுக்கு,

  தங்கள் தளத்தை தமிழில் எழுதுவதற்காக சில இடங்களில் புரியாத தமிழ் வார்த்தைகளை உபயோக படுத்துகிறீர்கள். (அனுப்புமை, மீட்டமை) இதில் மீட்டமை என்பது எதை குறிக்கிறது. பல இடங்களில் ஆங்கில வார்த்தையை அப்படியே தமிழ் படுத்தி இருக்கிறீர்கள்
  (விண்டோஸ் இன்ஸ்டாலேசன்) இதை தொடரலாமே.

  இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பெரிய வெள்ளை பேப்பர் ல் ஒரு dot அளவு கருப்பு புள்ளி வைத்து, இதில் உங்களுக்கு என்ன தெரிகிறது என கேட்டால் 99 சதவீதம் பேர் ஒரு கருப்பு புள்ளி தெரிகிறது என்று குறையைத்தான் சொல்லுவார்கள். நிறைய வெள்ளை தெரிவதை யாரும் சொல்லமாட்டர்கள்.
  அந்த சிறு குறையை நாம் ஏன் சொல்ல விட வேண்டும். நாம் ஒன்றும் தமிழை வாழ வைக்க இந்த தளத்தை ஆரம்பிக்கவில்லையே. அப்படி தமிழ் மேல் ஒரு ஆர்வம் இருந்தால் அதற்கு வேறு தளத்தை பார்க்கலாம்.

  நமக்கு தெரிந்ததை சிலர் அல்லது பலர் சரியாக தெரிந்து, புரிந்து கொள்வதே நம் நோக்கம். இப்படி சொல்வதால் நான் ஒன்றும் தமிழுக்கு எதிரி என நினைக்க வேண்டாம். (நீங்கள் நினைக்க வில்லை என்றாலும் இந்த பின்னூட்டத்தை படிக்கும் மற்ற வாசகர்கள் நினைக்கலாம் என்பதால் இந்த தெளிவுரை)


  நண்பன் said...
  December 26, 2010 at 10:20 PM

  miga nalla pathivu


  ஜிஎஸ்ஆர் said...
  December 27, 2010 at 10:22 AM

  @மாணவன்தங்களின் வருகைக்கும் கருத்துக்கும், புரிதலுக்கும் நன்றி அதோடு தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்


  ஜிஎஸ்ஆர் said...
  December 27, 2010 at 10:22 AM

  @Speed Masterகாலம் தாழ்ந்த பதிலுக்கு நன்றி தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்


  ஜிஎஸ்ஆர் said...
  December 27, 2010 at 10:22 AM

  @Myilsami புரிதலுக்கு நன்றி நண்பரே


  ஜிஎஸ்ஆர் said...
  December 27, 2010 at 10:23 AM

  @avvavm நிச்சியம் கணவு நணவாகும் தூரம் வெகு தொலைவில் இல்லை. தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்


  ஜிஎஸ்ஆர் said...
  December 27, 2010 at 10:25 AM

  @hamaraganaஎந்தவொரு விஷயத்தையும் செய்து முடிக்க சரியான எதிர்கால நோக்குடைய திட்டமிடல் அவசியம் நாமும் காத்திருப்போம் இந்த அரசியல் சூலழ் மாறும் சட்ட திட்டங்களும் மாறும்


  ஜிஎஸ்ஆர் said...
  December 27, 2010 at 10:25 AM

  @MANO நாஞ்சில் மனோதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  December 27, 2010 at 10:27 AM

  @avvavm\\தங்கள் தளத்தை தமிழில் எழுதுவதற்காக சில இடங்களில் புரியாத தமிழ் வார்த்தைகளை உபயோக படுத்துகிறீர்கள். (அனுப்புமை, மீட்டமை) இதில் மீட்டமை என்பது எதை குறிக்கிறது. பல இடங்களில் ஆங்கில வார்த்தையை அப்படியே தமிழ் படுத்தி இருக்கிறீர்கள்
  (விண்டோஸ் இன்ஸ்டாலேசன்) இதை தொடரலாமே.

  இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பெரிய வெள்ளை பேப்பர் ல் ஒரு dot அளவு கருப்பு புள்ளி வைத்து, இதில் உங்களுக்கு என்ன தெரிகிறது என கேட்டால் 99 சதவீதம் பேர் ஒரு கருப்பு புள்ளி தெரிகிறது என்று குறையைத்தான் சொல்லுவார்கள். நிறைய வெள்ளை தெரிவதை யாரும் சொல்லமாட்டர்கள்.
  அந்த சிறு குறையை நாம் ஏன் சொல்ல விட வேண்டும். நாம் ஒன்றும் தமிழை வாழ வைக்க இந்த தளத்தை ஆரம்பிக்கவில்லையே. அப்படி தமிழ் மேல் ஒரு ஆர்வம் இருந்தால் அதற்கு வேறு தளத்தை பார்க்கலாம்.

  நமக்கு தெரிந்ததை சிலர் அல்லது பலர் சரியாக தெரிந்து, புரிந்து கொள்வதே நம் நோக்கம். இப்படி சொல்வதால் நான் ஒன்றும் தமிழுக்கு எதிரி என நினைக்க வேண்டாம். (நீங்கள் நினைக்க வில்லை என்றாலும் இந்த பின்னூட்டத்தை படிக்கும் மற்ற வாசகர்கள் நினைக்கலாம் என்பதால் இந்த தெளிவுரை)\\

  சிறு புள்ளியில் இருந்து தான் பெரிய தொடக்கம் இருக்கிறது.


  ஜிஎஸ்ஆர் said...
  December 27, 2010 at 10:27 AM

  @நண்பன்புரிதலுக்கு நன்றி


  வருணன் said...
  January 2, 2011 at 12:30 AM

  உலகம் அசுர வேக்த்தில் பறக்கிறது...நம்ப முடியாது 20வருடங்களில் என்ன 10 வருடங்களில் கூட காண்பது அரிதாகிவிடலாம்...

  .....////////இந்த நேரத்தில் பிக் பாக்கெட் திருடன் போய் நிறைய ஹைடெக் கணினி திருடர்கள் நிறைய முளைத்திருப்பார்கள்.////////............


  Asokan Kuppusamy said...
  March 20, 2016 at 12:49 PM

  பயனுள்ள தகவல்களை பதிவிட்டு உள்ளீர்கள். மிக்க பாராட்டுகள்


  Saravanan Santhanam said...
  November 12, 2016 at 11:13 PM

  Pangali nandru


  Saravanan Santhanam said...
  November 12, 2016 at 11:13 PM

  Pangali nandru


  Saravanan Santhanam said...
  November 12, 2016 at 11:14 PM

  Pangali nandru


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர