Mar 29, 2010

4

ஜிமெயில் அரட்டையில் ட்டிரிக்ஸ்

  • Mar 29, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:கற்றுக்கொள்வது ஒரு கசப்பான வேர்.ஆனால் அது இனிய கனிகளைச் சுமந்துள்ளது

    இனையத்தில் கூகுளை தெரியாதவர்கள் இருக்கமுடியாது அப்படி தெரிந்தவர்கள் அதன் சேவைகளை பயன்படுத்தாதவர்கள் இருக்கமுடியாது அவர்களின் சேவையில் உள்ள GTALK பற்றித்தான் இந்த பதிவு நம் நண்பர்கள் சிலரை பார்த்திருப்போம் அவர்கள் ஆப்லைனில் இருந்துகொண்டே நம்முடன் அரட்டையடித்து கொண்டிருப்பார்கள் அது எப்படி அவர்களுக்கு சாத்தியப்படுகிறது சரி அப்படி மறைந்து இருப்பவர்களை நாம் எப்படி ஆன்லைனில் இருக்கிறாரா,இல்லையா என கண்டறிவது என பார்க்கலாம்.

    முதலில் GTALK New தரவிறக்கி வழக்கம்போல கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள் சரி அடுத்து என்ன? எப்பவும் போல மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து நுழையவும் இப்பொழுது புதிதாய் விண்டோ திறந்திருக்கிறதா அதில் படத்தில் உள்ளது போல Invisible எனபதை தேர்ந்தெடுங்கள் இனி நீங்கள் உங்கள் நண்பர்களின் ஜிமெயில் அரட்டையில் ஆப்லைனாக இருப்பீர்கள் உங்களுக்கு தேவைப்படும்போது மட்டும் நண்பர்களோடு அரட்டையடிக்கலாம் மற்றவர்கள் உங்களை தொடர்புகொள்ளமுடியாது ஆனால் இதை பற்றி தெரிந்தவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்



    இனி உங்களுக்கு தெரியாமல் உங்கள் நண்பர்கள் யாராவது ஆனலைனில் இருக்கிறார்களா என எப்படி தெரிந்துகொள்வது என பார்க்கலாம் ஆப்லைனில் இருப்பவர்களை தெரிந்துகொள்ள நீங்கள் தெரிந்துகொள்ள நினைக்கும் நபரின் பெயரை தேர்வு செய்யவும் அதில் படத்தில் காட்டியுள்ளதுபோல் Go Off the record என்பதை தேர்ந்தெடுக்கவும் படத்தை பாருங்கள் புதிய டேப் ஒன்று திறந்திருக்கும் முன்பெல்லாம் தனியாக ஒரு விண்டோ திறக்கும் இதில் டேப் முறையை பயன்படுத்தியிருக்கிறார்கள் மற்றும் ஸ்மைலி முறையும் கொடுத்திருக்கிறார்கள்.

    இனி GO Off the record என்பதை தேர்ந்தெடுத்த பின் வழக்கம்போல மெஜேஜ் அனுப்பும் முறையில் அனுப்பவும் அப்பொழுது உங்களுக்கு “அவருடைய பெயர்” may not have received your message என வருமேயானால் அவர் நிச்சியமாக ஆப்லைனில் தான் இருக்கிறார் ஒருவேளை உங்களுக்கு எந்தவிதமான Reply-யும் இல்லாதிருக்குமானால் அவர் ஆன்லைனில் இருந்துகொண்டு Invisible-ஆக இருக்கிறார் நீங்கள் அனுபிய தகவல் அவர் பெற்றுக்கொண்டார் என்பதே அதன் அர்த்தம்



    மேலும் சில புதிய வசதிகளையும் இனைத்திருக்கிறார்கள் அது என்னவென்று நான் சொல்வதை விட நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்களேன்



    சரி ஜிமெயில் அரட்டையில் எழுத்துகளை போல்டு மற்றும் இட்டாலிக் முறையில் எப்படி அனுப்புவது எப்படி என பார்க்காலாம்

    *ஞானசேகர்* இப்படி எழுதினால் ஞானசேகர்
    _ஞானசேகர்_ இப்படி எழுதினால் ஞானசேகர்
    _*ஞானசேகர்*_ இப்படி எழுதினால் ஞானசேகர்
    நண்பர்களே புரிந்திருக்குமென்றே நம்பிகிறேன்

    ஒரு கொசுறு தகவல் நாம் ஒரு நண்பருக்கோ அல்லது அலுவல் சம்பந்தபட்ட ஒரு தகவலையோ மின்னஞ்சல் செய்கிறோம் அப்படி நாம் அனுப்பிய மின்னஞ்சலை படித்து விட்டார்களா இல்லையா என தெரிந்துகொள்ள
    Spypig தளம் செல்லுங்கள் உங்களை ஏமாற்றமுடியாது

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    4 Comments
    Comments

    4 Responses to “ஜிமெயில் அரட்டையில் ட்டிரிக்ஸ்”

    Vengatesh TR said...
    November 28, 2010 at 1:09 PM

    .நானும் இதை, உபயோகித்து வந்தேன் !


    .portabale-chat சாப்ட்வேர் ஏதேனும், உள்ளனவா, நண்பரே ?

    .சில கல்லூரி/ஆபீஸ்'களில், சாப்ட்வேர்-இன்ஸ்டால்(gtalk) செய்ய ரைட்ஸ்(rights), இல்லாமையால், சிரமப்பட வேண்டியுள்ளது !


    .தகவலை பகிர்ந்தமைக்கு, நன்றி, நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:31 AM

    @சிகப்பு மனிதன் நிச்சியம் முயற்சி செய்கிறேன் ஏதாவது அப்படி முடியுமென்றால் உங்க்ள் மின்னஞ்சல் தேடி வரும்


    Vengatesh TR said...
    November 30, 2010 at 5:02 AM

    .நன்றி நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:18 PM

    @சிகப்பு மனிதன்புரிதலுக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர