Mar 17, 2010
மேல்மட்டம் கீழ்மட்டம்
வணக்கம் எனதருமை அன்புள்ளங்களே எனக்கு தெரிந்ததை ஏதோ பெரிய எழுத்தாளர் அளவிற்கு முடியாவிட்டாலும் எனக்கு தெரிந்த எழுத்து நடையில் என் கருத்துகளை எழுதி வருகிறேன் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும், சமுதாயத்தில் மேல்மட்ட கீழ்மட்ட மக்களின் எதார்த்தத்தை பிரதிபலிப்பதற்காகத்தான் இந்த இடுகை ஏதோஎனக்கு தெரிந்த வரையில் எழுதியிருக்கிறேன்
மேல்மட்டம் கீழ்மட்டம்
என்ன என்ன
இது என்ன வேதனை
நித்தம் நித்தம்
வந்து போகும் சோதனை
கணவினில் கேள்விகள் ஆயிரம்
நிஜத்தினில் பதில்கள் இல்லையே!
என்ன சமுதாயம் இது
நித்தமும் சல்லாப உல்லாசம் அங்கே
ஒரு வேளை சோற்றுக்கும்
உயிர் விடும் கூட்டம் இங்கே
மண்ணை விற்றாலும்
விலை போகும் அங்கே
மாணம் விற்றால்தான்
விலை போகும் இங்கே
வெட்டி போட்டாலும்
வேடிக்கை பார்க்கும் கூட்டம் அங்கே
சரிந்தவன் உதிரம் கண்டு
துடிதுடிக்கும் கூட்டம் இங்கே
லட்சம் லட்சம் கண்டும்
நிம்மதியில்லை அங்கே
ஒருவேளை சோற்றில்
உழைப்பின் நிம்மதி இங்கே
நெஞ்சம் இருந்தும்
நீதி இல்லை அங்கே
நெஞ்சத்தில் நீதி இருந்தும்
நீதிக்கு கண் இல்லை இங்கே
என்ன என்ன
இது என்ன வேதனை
நித்தம் நித்தம்
வந்து போகும் சோதனை
கணவினில் கேள்விகள் ஆயிரம்
நிஜத்தினில் பதில்கள் இல்லையே!
குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவை பல மடங்கு அதிகரிக்கும், பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், என் பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் சென்றடைய நீங்களும் மனது வையுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
4 Responses to “மேல்மட்டம் கீழ்மட்டம்”
-
ம.தி.சுதா
said...
October 31, 2010 at 11:04 PMஃஃஃஃஃவெட்டி போட்டாலும்
வேடிக்கை பார்க்கும் கூட்டம் அங்கே
சரிந்தவன் உதிரம் கண்டு
துடிதுடிக்கும் கூட்டம் இங்கேஃஃஃஃ
எம் அவலத்துக்காய் உணர்வு கொண்டமைக்கு நன்றி சகோதரா... -
ஜிஎஸ்ஆர்
said...
November 1, 2010 at 11:35 AM@Anonymousபெயரை வெளிப்படுத்தியே கருத்துரை இடுங்களேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
November 1, 2010 at 11:36 AM@ம.தி.சுதாஎன்ன செய்ய நண்பா கவிதை எழுத தெரிந்த எனக்கு என் மக்களை காக்க முடியவில்லையே
-
தர்சிகன்
said...
January 18, 2011 at 4:00 PMஆகா அருமை அருமை...
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>