Mar 18, 2010

8

தாய்க்கு தாயாவோம்

  • Mar 18, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:மற்ற எந்த அறிமுக கடிதத்தையும் விட அன்பே சிறந்த பரிந்துரை.

    தாய்க்கு தாயாவோம்

    இந்த உலகத்தில் நம்மை புதிதாய் படைத்தவள் உயிர் கொடுத்து தன் வயிற்றில் சுமக்கும் போதும் நமது உதைகளையும் அசைவுகளையும் வலியிலும் அழகாய் ரசித்து சந்தோசமாக ஏற்றுக்கொண்டவள் உதிரத்தை பாலாய் மாற்றும் சக்தி பெற்றவள்,படைப்பதிலே தாயும் பிரம்மாதான்,நமது ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்டு பூரித்து போவாள் அப்படிப்பட்ட தாய்க்கு நம்மாள பெருசா என்ன செய்திடமுடியும் கடவுளை பிராத்திப்போம் மறு ஜென்மத்திலாவது தாய்க்கு தாயாக.

    என் தாய்க்கு தாயாவேன்

    என்னை
    கருவரையில் தாங்கிய
    என் தெய்வம்

    துக்கங்களை தூரத்தள்ளி
    எனக்காய் –சந்தோசமாய்
    இருக்க முயன்றவள்

    நிம்மதியாய்
    நான் தூங்க – பல
    இரவுகளை தூங்காமல் விழித்தவள்

    பவுர்னமி சிதறல்களில்
    வெளிச்சம் காட்டி
    பால்சோறு ஊட்டியவள்

    புரியாத பாஷையில்
    நான் பேசும் அத்தனையையும்
    புரிந்துகொள்ளும் அற்புத மனுஷி

    தன் உதிரத்தையை
    பாலாய் மாற்றி
    என் பசியாற்றியவள்

    கருவரையில் கல்லாய் இருக்கும்
    சிலை அல்ல தெய்வம்
    தாய்தான் உயிருள்ள தெய்வம்

    வரும் ஜென்மத்திலாவது
    என் தாய்க்கு நான் தாயகி
    அவள் என் சேயாக வேண்டும்

    குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவை பல மடங்கு அதிகரிக்கும், பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், என் பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் சென்றடைய நீங்களும் மனது வையுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.




    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    8 Comments
    Comments

    8 Responses to “தாய்க்கு தாயாவோம்”

    Anonymous said...

    August 17, 2010 at 9:28 AM

    அம்மாவை பிரிஞ்சு இருக்கிறவங்க எல்லாம் அழப்போறாங்க..மனதை தொட்ட கவிதை.


    ம.தி.சுதா said...
    October 31, 2010 at 11:05 PM

    ஃஃஃஃஃதுக்கங்களை தூரத்தள்ளி
    எனக்காய் –சந்தோசமாய்
    இருக்க முயன்றவள்ஃஃஃஃ
    அம்மா ஒரு ஈடு இணையற்ற தெய்வம்... எனக்காக வைர முத்தவின் 1000 தான் பொய் சொன்னேன் பாடலை கேளுங்க சகோதரா....
    http://isaitamil.in/load.php?id=16084


    ஜிஎஸ்ஆர் said...
    November 1, 2010 at 11:37 AM

    @ஆர்.கே.சதீஷ்குமார்எல்லோருக்குமே தாய் என்றால் தவிர்க்க முடியாதவளே


    ஜிஎஸ்ஆர் said...
    November 1, 2010 at 11:45 AM

    @ம.தி.சுதாபகிர்வுக்கு நன்றி நண்பா இதில் இரண்டு வரிகளையும் நான் அனுபவிக்கிறேன், அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் நண்பா இந்த கவிதை எனக்கு மிகச்சரியா பொருந்துகிறது நண்பா

    \\பாசமுள்ள வேளையிலே காசு பணம் கூடலேயே
    காசு வந்த வேளையிலே பாசம் வந்து சேரலேயே\\

    \\எனக்கொன்னு ஆனதுன பிள்ளை உனக்கு வேறு இருக்கு

    உனக்கொன்னு ஆனதுனா எனக்கு வேறு யாரு இருக்கா?\\

    நன்றி நண்பா


    Vengatesh TR said...
    November 30, 2010 at 5:28 AM

    .உண்மை தான், நண்பரே !


    .தெய்வம், அஹிம்சாவதிகளை வென்றதும், இதன் மூலம் தான் !


    .அஹிம்சாவதிகளுக்கு தன் தாயை வணங்கி ஆசிர்வாதங்கள் பெற்று செயலில் இறங்குவார்கள் !


    .தாயே தெய்வம் தானே !



    .[தவறேதும் இருப்பின், மன்னிக்கவும்]


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:13 PM

    @சிகப்பு மனிதன் நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீர்கள்


    Vengatesh TR said...
    December 2, 2010 at 11:43 PM

    .தங்கள், பின்னூட்டத்துக்கு(reply) நன்றி, நண்பரே !


    தர்சிகன் said...
    January 18, 2011 at 4:03 PM

    சிறப்பான கருத்துக்கள்..


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர