Mar 30, 2010

13

ஜிமெயிலில் HTML கையெழுத்து

  • Mar 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
    இந்த வாசகம் பிகேபி தளத்தில் படித்தது

    ஜிமெயிலில் கட்டற்ற வசதிகள் இருந்தாலும் இதுவரை HTML ஹெச் டி எம் எல் சப்போர்ட் வசதி இல்லை இதனால் ஜிமெயில் கையெழுத்து பகுதியில் நாம் விரும்பியபடி நமக்கு விருப்பமான போட்டோவையோ அல்லது நிறுவனத்தின் அடையாள சின்னத்தையோ இனைக்கமுடியாது வேறு சில வழிகளில் இனைக்கலாம் என்றாலும் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் தனித்தனியாக இனைப்பதில் கால விரயம் ஏற்படும் அதற்கான மாற்றுவழிகள் இரண்டு உள்ளன தெரிந்தவர்களுக்கு இது உபயோகப்படாது தெரியாதவர்களுக்கு நிச்சியம் உதவியாக இருக்கும்

    முதலில் ஜிமெயிலில் தங்கள் பெயர் மற்றும் முகவரி மட்டும் போதும் என நினைப்பவர்களுக்காக

    உங்கள் மின்னஞ்சலை திறந்து வலது பக்கம் மேல் மூலையில் இருக்கும் செட்டிங்ஸ் திறந்து அதில் முதலாவதாக வரும் ஜெனரல்General டேப்பில் கீழே பாருங்கள் Signature என இருக்கும் அதில் தங்கள் பெயர் மற்றும் தேவையான விபரம் கொடுத்து சேமித்துக்கொள்ளவும் இனி தாங்கள் எப்போது புதிதாய் மின்னஞ்சல் Compose செய்ய திறந்தாலும் அங்கே தாங்கள் பதிந்த விபரங்கள் இருக்கும் இந்த முறையில் எந்த கணிணியில் இருந்து திறந்தாலும் செட்டிங்ஸ் மாறாது

    இனி எனக்கு இது முன்பே தெரியும் ஆனால் ஜிமெயில் கையெழுத்து பகுதியில் நான் விருப்பப்படும் போடோவோ அல்லது நிறுவண முத்திரையோ எனக்கு வரவேண்டும் என நினைப்பவர்களுக்காக இரண்டு வழிகள் இருக்கின்றன இந்த இரண்டு வழிமுறைகளுமே எந்த கணிணியில் இருந்து இந்த செட்டிங்ஸ் மேற்கொள்கிறீர்களோ அந்த கணியில் மட்டுமே செயல்படும்(அதில் எந்த பிரச்சினையும் வராது) ஆனால் இந்த செட்டிங்ஸ் மேற்கொள்ளாத வேறு ஒரு கணிணியில் உங்களால் நீங்கள் பதிந்த விபரங்கள் காண இயலாது

    வழிமுறை 1

    உங்கள் மின்னஞ்சலை திறந்து வலது பக்கம் மேல் மூலையில் இருக்கும் செட்டிங்ஸ் திறந்து அதில் Laps என இருக்கும் டேப்பை திறந்து அதன் கீழே பாருங்கள் Inserting Image , Canned Responses என இரண்டையும் Enable செய்து சேமித்துவிடவும் கீழே படத்தை பாருங்கள்






    புரிந்ததா நண்பர்களே இனி நீங்கள் புதிதாய் மின்னஞ்சல் Compose செய்ய திறக்கும் போது கீழே உள்ள படத்தை பாருங்கள் நான் வட்டமிட்டு காண்பித்துள்ள இரண்டு புதிய வசதிகள் வந்திருக்கும்.



    இனி கீழே உள்ள படத்தை பாருங்கள் 1 என குறிப்பிட்டுள்ள படத்தை Insert செய்வதற்கான வழிமுறையில் பிரவுஸ் செய்து தங்களுக்கு வேண்டிய படத்தை தேர்வு செய்து கொள்ளவும் வேண்டுமென்றால் நான் கீழே எழுதியுள்ளது போல் உங்களுக்கு தேவையான விபரத்தையும் உள்ளீடவும் சரி எல்லாம் முடிந்தாயிற்று அடுத்து என்ன செய்வது Canned Responses என்பதை கிளிக்குங்கள் படத்தில் உள்ளது போல வரும் அதில் உங்களுக்கு பிடித்தமான பெயர் கொடுத்து சேமித்துக்கொள்ளவும்



    இனி புதிதாய் மின்னஞ்சல் Compose செய்ய திறக்கும் போது நாம் சேமித்த தகவல்கள் எதுவும் தானக வராது அதனால் வழக்கம் போல புதிய மின்னஞ்சல் எழுதி முடித்துவிட்டு மேலே படத்தில் உள்ளதுபோல் Canned Responses என்பதை தேர்ந்தெடுத்தால் அதில் புதிதாய் இரண்டு வசதிகள் வந்திருக்கும் ஒன்று Insert மற்றொன்று Delete இனி Insert என்பதை தேர்ந்தெடுத்தால் நீங்கள் முன்னமே பதிந்து வைத்த தகவல் படமும் உள்பட வந்திருக்கும் இதே அடிப்படையில் எத்தனை வேண்டுமானலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம்

    வழிமுறை 2

    இந்த முறை நெருப்பு நரி(FireFox) பயன்படுத்துபவர்களுக்கே பயன்படும் வழக்கம் போல இனையத்தை திறந்துகொண்டு நெருப்பு நரியில் உள்ள Tools மெனுவில் Add-Ons எனபதை தேர்ந்தெடுத்து அதில் புதிதாய் ஒரு விண்டோ திறக்கும்.



    கீழே படத்தை பாருங்கள் அதில் உள்ளது போல Wisestamp என கொடுத்து தேடுங்கள் படத்தில் உள்ளது போலவே வந்திருக்கும் அதை என்பதை தேர்வு செய்து இன்ஸ்டால் செய்துவிடுங்கள் இன்ஸ்டால் முடிந்த்தும் தானகவே நெருப்பு நரி இயக்கம் முடிந்து மீண்டும் திறக்கும்



    இனி நீங்கள் செய்யவேண்டியது மிகவும் எளிது உங்களுக்கு தேவையான படம் அல்லது அடையாள அட்டை எதுவேண்டுமானலும் உங்களுக்கு பிடித்த தளத்தில் அப்லோட் செய்து அந்த URL முகவரியை படத்தில் வட்டமிட்டது போல உள்ள இடத்தில் கிளிக்கி புதிதாக திறக்கும் விண்டோவில் நீங்கள் போட்டோ அப்லோட் செய்தபோது குறித்து வைத்த URL முகவரியை உள்ளீட்டு சேமித்து விடவும் இதில் வேண்டுமென்றால் HTML உபயோகபடுத்தலாம்.



    இனி புதிய மின்னஞ்சல் எழுத திறக்கும்போதே நாம் ஏற்கனவே உள்ளிட்ட நமது கையெழுத்து தானகவே வந்திருக்கும் இதிலும் பிரச்சினை இருக்கிறது உங்கள் கணிணியில் பத்து நபர்கள் தாங்கள் சொந்த மின்னஞ்சலை திறக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம் யார் திறந்தாலும் அவர்கள் புதிதாய் திறக்கும் மின்னஞ்சலில் நாம் மேற்கொண்ட செட்டிங்ஸ் இருக்கும் எனக்கு வேறு வழிமுறைகள் தெரியவில்லை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பதியலாம் அனைவருக்குமே உதவியாக இருக்கும்.

    குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், என் பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் சென்றடைய நீங்களும் மனது வையுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    13 Comments
    Comments

    13 Responses to “ஜிமெயிலில் HTML கையெழுத்து”

    நண்பன் said...
    April 20, 2010 at 7:58 AM

    romba nalla puriyum padiyaga ezuthi irikkireerkal thambi


    vazga valamudan enrum

    buruhani


    SUMAN said...
    April 29, 2010 at 5:51 AM

    சேவைக்கு நன்றி....

    கையெழுத்துப்பிரச்சினைக்கு சரியான தீர்வு கண்டால் தெரியப்படுத்தவும்


    mkr said...
    July 28, 2010 at 4:06 PM

    எளிதில் புரிந்து கொள்ளும் படி இருக்கிறது உங்கள் பதிவு.பயனுள்ள தகவல்களை தொடர்ந்து தரும் உங்களுக்கு பாரட்டுகள்


    ஜிஎஸ்ஆர் said...
    July 28, 2010 at 5:32 PM

    @சுமன்இப்பொழுது நேரடியாக உங்கள் கையெழுத்தை ஜிமெயிலில் இனைக்கலாம் Settings-Signature


    ஜிஎஸ்ஆர் said...
    July 28, 2010 at 5:34 PM

    @mkrநன்றி நண்பரே, அனைவருக்கும் எளிதில் புரியவேண்டும் என்பதே நமது ஆசையும்


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 12:00 PM

    ஃஃஃஃ(எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
    இந்த வாசகம் பிகேபி தளத்தில் படித்தது)ஃஃஃஃஃ
    உண்மை தான் சகோதரா உன்னை நீ திருத்திக் கொண்டால் உலகம் தானாய் திருந்தும் அல்லவா...


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 12:02 PM

    நல்ல தகவல் இதற்காய் சிரமப்பட்டிருப்பீர்கள் என்பது தெரிகிறது...


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:24 PM

    @ம.தி.சுதா நானும் இதை நம்புகிறவன் தான் முதலில் நம் தவறை திருத்த முயற்சி செய்வோம் அதற்கு பின் மற்றவர்களை திருத்த முயற்சிப்போம்


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:26 PM

    @ம.தி.சுதா//நல்ல தகவல் இதற்காய் சிரமப்பட்டிருப்பீர்கள் என்பது தெரிகிறது...//

    ஆனால் இப்போது ஜிமெயில் எந்த பிரச்சினையும் இல்லாமல் போட்டோவை இனைக்கமுடியும் அதற்கான வசதியை அவர்கள் செய்துகொடுத்து விட்டார்கள்


    Vengatesh TR said...
    November 28, 2010 at 1:00 PM

    .ஆம்,நீங்கள் கூறியதுபோல, தற்போது மிக-எளிமையாக்கி விட்டார்கள் !


    .பகிர்ந்தமைக்கு, நன்றி, நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:32 AM

    @சிகப்பு மனிதன்இப்போது இந்த பதிவின் அவசியமே இல்லை


    Vengatesh TR said...
    November 30, 2010 at 5:01 AM

    .பொக்கிஷம், இவை !

    .வரலாறு மிக முக்கியம் அல்லவே, நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:19 PM

    @சிகப்பு மனிதன் வரலாறு படைத்தவர்களுக்கு தான் வரலாறு அதை படிப்பவன் நான் ஆனால் எனக்குள்ளும் ஆசை இருக்கிறது நானும் வரலாற்றை படைக்கவே விரும்புகிறேன்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர