Mar 10, 2010

15

வாழ்க்கையில் எதிர் நீச்சல்

  • Mar 10, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி சில சமயம் இருட்டு சில சமயம் முழு நிலவு.

    நான் எழுத்துலகிற்கு புதியவன் அதனால் நான் சொல்ல வருபவை ஒருவேளை கோர்வை இல்லாமல் இருக்கலாம்

    நாம் எல்லோருக்குமே வாழ்க்கையில் பிரச்சினை இருக்கதான் செய்கிறது அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் ஆட்கொண்டு நம்மை முடக்குகிறது, அதுதான் எங்க எல்லாருக்குமே தெரியுமே நீ என்ன புதுசா சொல்லிடப்போறேனு நீங்க மனசுல நினைக்கிறத என்னால புரிந்துகொள்ள முடிகிறது இருந்தாலும் எனக்கு தெரிஞ்சத உங்களோட பகிர்ந்துகொள்ள விரும்பினேன், உங்களுக்கு இதை படிக்கனும்னு தோனுதா தாரளமா படிங்க சரி எனக்கு இதெல்லாம் விருப்பமில்லைனு நினைக்கிறவங்க தாரளமாக உங்களுக்கு பிடித்தவற்றை படிங்க, மற்றவர்கள் சொல்றதுக்காகவோ அல்லது அறிவுறுத்தலுக்காகவோ எதையும் செய்யாதிங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருங்க உங்க மனசுல ஒரு விஷயம் சரியாக தோன்றினால் அதையே பின்பற்றுங்க அதுக்காக தவறான வழியில போகக்கூடாது முடிந்தளவுக்கு நேர்மையான வழியில் நடங்க இந்த உலகத்தில் நேர்மையா வாழ நினைச்சா அதுக்கு நிறைய இழக்க வேண்டிவரும் ஆனால் ஒவ்வொரு இழப்புகளிலும் நீங்கள் வாழ்க்கையின் ஒரு உன்னதமான பாடத்தை படித்துவிட்டீர்கள் அதுதான் உண்மை இன்று நாம் உதாரணத்துக்கு நாம் கூறும் பலரும் அவர்களிடம் கேட்டால் எல்லாமே அனுபவம்தான் கற்றுக்கொடுத்த்து என்பார்கள்

    சரி நீங்க நல்ல படிப்பு நல்ல மதிப்பென் எடுத்து படிப்பில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் உங்களுக்கு பிடிச்ச துறையில் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்கிறீர்கள் அங்கு என்ன நடக்கும் உங்கள் கல்விச்சான்றிதழ் சோதனை அப்புறம் உங்களிடம் கேள்விகள் கடைசியா இதுக்குமுன்னாடி எங்கே வேலை பார்த்தீர்கள் என்னவாக வேலை பார்த்தீர்கள் இதுதான் உங்களுக்கான வேலையை தீர்மானிக்கும் கேள்வி சரி நீங்க சொல்றிங்க இப்பொழுதுதான் முயற்சி செய்கிறேன் உடனே அவர்கள் பதில் எப்படியிருக்கும் இந்த துறை மிகவும் கடினமானது முன் அனுபவம் இருந்தால் தங்களுக்கு வேலை தருவதில் எங்களுக்கு எந்த தடையும் இல்லை அல்லது தங்களின் படிப்புக்கோ தகுதிக்கோ பொருந்தாத ஒரு வேலையை வழங்கலாம்

    நாம் அந்த சூழ்நிலையில் என்ன செய்வோம் ஒன்று கிடைத்த வேலையில் இருந்துகொண்டு நமக்கு சரியான இலக்கை அடைய முயல்வோம் இல்லையென்றால் இது நமக்கு சரியான வேலை இல்லை என நினைத்து வேறு முயற்சி செய்ய தொடங்குவோம் சரி நமது தேர்வு கிடைத்த வேலையில் இருக்கலாம் என முடிவு எடுத்தால் உங்களுக்கு வருமானம் பின்னர் அனுபவம் இந்த இரண்டுமே கிடைக்கும் சரி படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற ஒரு வேலை தான் பார்க்கனும்னு நாம அடம்பிடிச்சா என்ன நடக்கும் வருமானம் இழப்பு அதைவிட அனுபவம் கிடைக்காது அனுபவம் இல்லையென்றால் என்றுமே நீங்கள் செல்கின்ற துறைக்கு புதியவர்தான் உதாரணமாக நீங்கள் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் உங்களின் நிறுவனத்திற்கு ஆள் எடுக்க நினைக்கிறீர்கள் வருகின்றவர்கள் நல்ல படிப்பு, நல்ல மதிப்பென் உடையவர் ஆனால் வேலைக்கோ புதியவர் மற்றவர் படிப்பு குறைவுதான் என்றாலும் முன் அனுபவம் உள்ளவர் நீங்கள் இப்பொழுது யாரை தேர்ந்தெடுப்பீர்கள்

    இந்த உலகத்தில் பணம் யாருக்காகவது தேவையில்லாமல் இருக்கா? அல்லது எனக்கு இது போதும் என்று சொல்கிற மனம் தான் இருக்கா? நூறு ரூபாய் வருமானம் வந்தால் நூற்றைம்பது கிடைத்தால் ஒருவிதம் சிரம்மமில்லாமல் வாழ்க்கையை கொண்டு செல்லாலாம் அப்படினு நினைப்போம் அப்ப நீங்கள் எதிர்பாரத நேரத்தின் உங்களின் நிறுவனத்தில் சம்பள உயர்வு கொடுக்கிறார்கள் அப்பொழுது உங்கள் வருமானம் இருநூறு கிடைக்கிறது அந்த முதல் மாதம் மட்டுமே உங்களுக்கு அது போதுமானதாக இருக்கும் ,மீண்டும் அடுத்த மாதம் கிடைக்கும் பணம் வாழ்க்கை செலவுகளுக்கு போதவில்லையே எனதான் நினைக்க தோன்றும் சரி இதுக்கு என்னதான் வழி? கதவை திற காற்று வரட்டும் அப்படினு அடுத்த வீட்டு கதவை திறக்கிறதா இல்லை வங்கியை திற பணம் கொட்டும் அப்படினு வங்கிய திறக்கிறதா இரண்டுக்குமே காவல்துறை உங்கள் வாசல் தட்டும் சரி அப்ப எதைத்தான் திறக்கலாம் இதுக்கு என் பதில் மனதை திற மகிழ்ச்சி பொங்கட்டும்

    சந்தோஷம் எதுல இருக்கு பணத்துலையா? அப்ப ஏன் பணம் அதிகமா இருக்கிறவங்க கண்ட கண்ட போலிச்சாமிகிட்ட போய் எனக்கு வாழ்க்கையில நிம்மதியே இல்லை எனக்கு நிம்மதி வேனும்னு பணத்தை கொண்டு போய் போலிகள் கிட்ட கொடுத்துட்டு பின்னாடி வருத்தப்படனும், சாமினு சொல்றவங்க எல்லாம் என்ன கடவுளோட அங்கீகாரத்தோட நிம்மதி விக்கிறவங்களா? அதுக்காக நான் கடவுள் இல்லைனு சொல்ற ஆளா நிச்சியாமா இல்லை நான் கடவுளை நம்புறேன் ஆனால் நான் கடவுளென சொல்லித்திரியும் போலி மனிதர்களை நம்புவதிலை (போலிச்சாமி என சொல்வது கூட சரியாக இருக்காது கடவுள் என்பது ஒன்றே அதில் போலிக்கு வேலையில்லை)

    என்னடா இவன் மனதை திறக்க சொல்லிட்டு அத சொல்லவேயில்லேயே நினைக்கிறிங்களா? பெரிசா ஒன்னுமே இல்லைங்க உங்க மனைவியோட மனம் விட்டு பேசுங்க உங்க குழந்தைகளோடு அன்பா இருங்க அந்த சந்தோஷம் தானகவே உங்கள ஓட்டிக்கும் நண்பர்களோடு உண்மையா இருங்க சும்மா சொல்றதுக்கெல்லாம் தலையாட்டாதிங்க தவறு என பட்டால் சுட்டிகாட்டுவதற்கு தயங்கவே வேண்டாம் உங்க வாழ்க்கையில் சந்தோஷம் உங்க்கிட்ட மட்டும்தான் இருக்கு சந்தோஷத்தை உங்களுக்குள்ள வச்சிக்கிட்டு வேறு எங்கேயோ தேடினா எப்படிங்க கிடைக்கும்

    சரி தலைப்பு எதிர் நீச்சல்-னு வச்சுட்டு வேற எதெயெல்லாமோ எழுதிகிட்டு இருக்கேன் சரி அத பத்தியும் இரண்டு வரி பேசலாம் ஒரு ஆற்றில் நாம் படகில போய்க்கிட்டு இருக்கோம் அப்ப நாம் போகவேண்டிய திசைக்கு எதிராக கடுமையான வெல்லபெருக்கு வருகிறது அப்ப நாம் அதே திசையில் போக முயற்சி பண்ணினால் நம்மால் போக நினைக்கிற இடத்துக்கு போய் சேரமுடியுமா? அப்படினா என்ன பண்ணனும் ஆற்றுவெல்லம் போகிறபோக்கில் கடலில் போய் மூழ்கி சாவதா? நிச்சியாமாய் அப்படி போய்விடக்கூடாது போகும் வழியில் நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கரை சேரவேண்டும்

    நான் எழுதியதையும் இத்தனை நேரமாக பொருமையாக படித்த முதல் நபர் நீங்கள்தான் தங்களின் வாசிப்புக்கு நன்றி உங்களால் முடிந்தால் கருத்துரை இட்டுச்செல்லவும்.

    குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், என் பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் சென்றடைய நீங்களும் மனது வையுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    15 Comments
    Comments

    15 Responses to “வாழ்க்கையில் எதிர் நீச்சல்”

    நண்பன் said...
    April 21, 2010 at 8:46 AM

    பெரிசா ஒன்னுமே இல்லைங்க உங்க மனைவியோட மனம் விட்டு பேசுங்க



    nan 3vathu aal thambi



    suppar suppar
    suppar unmailileye nenga ஞானசேகர் thaan
    buruhani


    ஜிஎஸ்ஆர் said...
    April 21, 2010 at 11:19 AM

    @buruhaniibrahim

    வணக்கம் அண்ணன் உங்களை போல வயதிலும் அனுபத்திலும் முதிர்ந்தவர்கள் என் பதிவை படித்து பாரட்டுவது எனக்கு மகிழ்ழ்சியளிக்கிறது

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Change Life said...
    July 12, 2010 at 7:31 PM

    சாதாரண சராசரி கருத்ததுகள், பழமையாக இருந்தாலும் பரவாயில்லை ரசனையாக
    எழுதுங்கள் தினம் புது புது தளங்கள் வந்து கொண்டிருக்கும் போது உங்கள் தளத்தையும் மற்றவர்கள் பார்க்க வேண்டாமா?


    ஜிஎஸ்ஆர் said...
    July 13, 2010 at 11:43 AM

    @ALWIN SAM ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன் தாங்கள் நேரமிருந்தால் எப்படி ரசனையாக எழுதுவது என சொல்லி கொடுத்தால் உதவியாய் இருக்கும் உதவுவீர்களா?


    Mohamed Faaique said...
    August 16, 2010 at 1:12 PM

    நல்ல கருத்துக்கள் நண்பரே..... இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்


    ம.தி.சுதா said...
    October 31, 2010 at 10:57 PM

    சகோதரா நீங்கள் சிந்தனைக்கு என்றும் ஒரு புளொக் தொடங்கி எழுதலாம்... அவ்வளவு நல்லாயிருக்கு...


    ஜிஎஸ்ஆர் said...
    November 1, 2010 at 11:33 AM

    @Mohamed Faaiqueதொடர்ந்து எழுத விருப்பமே படிப்பதக்கு ஆள் வேண்டுமே


    ஜிஎஸ்ஆர் said...
    November 1, 2010 at 11:34 AM

    @ம.தி.சுதாசும்மா இருங்க நண்பா ஒரு பிளாக் எழுதும் போதே படிக்க ஆள் இல்லை இதில் எங்கே இன்னொரு பிளாக் எழுதுவது?


    Vengatesh TR said...
    November 30, 2010 at 5:55 AM

    .கடவுள் என்ன தான் செய்வார் !


    .பணம் இல்லாதவன் நிம்மதி இருந்தாலும், பணத்தை வேண்டி கடவுளை அணுகுகிறான் !!

    .பணம் கிடைத்தவன், நிம்மதியை வேண்டி கடவுளை அணுகுகிறான் !


    .தகவலை பகின்றமைக்கு நன்றி, நண்பரே !


    Vengatesh TR said...
    November 30, 2010 at 5:58 AM

    \\ நான் எழுத்துலகிற்கு புதியவன் அதனால் நான் சொல்ல வருபவை ஒருவேளை கோர்வை இல்லாமல் இருக்கலாம்


    .நீங்கள் நகைச்சுவைக்கு தானே, கூறினீர்கள், நண்பரே ?


    Vengatesh TR said...
    November 30, 2010 at 6:00 AM

    .இனி, நீங்கள் தான், பதிவு எழுத வேண்டும் !

    .உங்கள் எல்லா எழுத்துக்களிலும், பயணம் செய்தாகிவிட்டது !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:11 PM

    @சிகப்பு மனிதன் நாம் சில விஷயங்களை எல்லோரிடமும் சொல்லமுடிவதில்லை சொல்லாமல் மனதில் வைத்திருந்தால் அதைவிட வேறு ஒரு நோயுமில்லை எல்லாவற்றிற்கும் வடிகால் தான் கடவுள்


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:11 PM

    @சிகப்பு மனிதன்இப்பவும் நான் புதியவன் தான்


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:12 PM

    @சிகப்பு மனிதன்எழுதுகிறேன் நண்பா என்ன செய்ய கொஞ்சம் வேலை அதிகமாகி விட்டது நேரம் ஒதுக்கமுடியவில்லை


    தர்சிகன் said...
    January 18, 2011 at 3:41 PM

    எழுத்துலகிற்கு புதியவன் என்றுவிட்டு கலக்கியுள்ளீர்கள்....


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர