Jun 27, 2011

8

இதற்கு பெயரும் காதலாமே!

 • Jun 27, 2011
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: காதலில் பைத்தியக்காரத்தனம் இல்லையென்றால் அது காதலே இல்லை.

  வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நான் சந்தித்த, கேட்டறிந்த விஷயத்தை பற்றி பதிகிறேன் சில பல நாட்களாக லிவின் டு கெதர் என்கிற ஒரு கலாச்சாரத்தை இருவிதமான கருத்துகளை பல இடங்களிலும் கேட்க நேர்ந்தது, படிக்க நேர்ந்தது நான் நிச்சியமாய் இதைப் பற்றி எழுதபோவதில்லை அதே நேரத்தில் காதலோடு தொடர்புடைய சில பிரச்சினைகளை கண்டு காதலித்தவர்கள் தம்மில் தம் பிரிந்து செல்கிறார்கள் இதை பலர் வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்கள் இன்னும் சிலர் இதற்காக இன்னும் சிலர் ஏதேதோ காரணங்கள் சொல்லி விலகி செல்கிறார்கள்.

  பொதுவாகவே காதலை எந்த பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை சினிமாவில் மட்டும் வேண்டுமானால் காதலை ஏற்றுக்கொண்டு அதை ஆசிர்வதிக்கும் தாய் தந்தையரை, உறவினரை பார்க்கலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் என்னவோ கசக்கும் வேப்பாங்காய் தான் பெற்றோருக்கும் சரி உறவிணர்களுக்கும் சரி சம்பந்தமே இல்லாத ஊராரும் சரி இந்த விஷயத்தில் எல்லோர் மன நிலையும் ஓரே மாதிரியாகத்தான் இருக்கிறது இதை பற்றி எழுதும் எனது மனநிலையும் கூட மேலே சொன்னவர்களை போலத்தான் இருக்கிறது.

  காதல் என்பதன் அர்த்தம் அன்பு என்பது தானே அப்படியானால் எல்லோருக்கும் காதல் உணர்வு இருக்கிறது தாம் பெற்ற பிள்ளை மேல் தாய் தந்தையர் வைத்திருக்கும் அன்பிற்கு பெயரும் காதல் தானே! தங்கள் அன்பை மட்டுமே பிரதானமாக நினைக்கும் தாய் தந்தையர் உறவிணர்கள் ஏன் பருவம் அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ காதல் வருவதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை? இந்த நேரத்தில் உங்களுக்கு வரும் கேள்வியை நான் மறுக்கவில்லை நியாயம் தான் எல்லோருக்கும் இயல்பாய் இருப்பது தான் நம் குழந்தைகள் நல்ல இடத்தில் திருமணம் செய்து நம் மகளை, அல்லது மகனை நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்கிற இயல்பான ஆசைதான்! இருக்கத்தான் செய்யும்! பிறந்ததில் இருந்து பார்த்து பார்த்து ஈ, எறும்பு, அழுத்தமான காற்று கூட படாமல் வளர்த்தவர்களாயிற்றே அவர்கள் எதிர்பார்ப்பதில் பெரிதாய் தவறு ஒன்றும் இருப்பாதாய் தெரியவில்லை இந்த விதத்தில் அவர்கள் நிலையில் அவர்கள் சரியாகவே இருக்கிறார்கள்.

  ஆனால் நீங்கள் உங்கள் குடும்பம், சூழ்நிலை எல்லாம் தெரிந்தும்,வளர்த்த தாய் தந்தையரின் மீதான அன்பையும் மீறி காதலிக்கிறீர்கள் காதல் அந்தளவிற்கு உங்களை தூண்டும் இந்த நேரத்தில் எல்லாம் ஒரு தூசி போல தெரியும் ஆனால் ஒரு பெண் அல்லது ஆணின் ஏற்படும் ஒருவித ஈர்ப்பு அது காதலா, காமாம, அல்லது வெறும் ஈர்ப்பு மட்டும் தானே என்பதை கூட அறிய முடியாத நிலையில் காதலிக்கிறீர்கள் காதலிக்கும் போது பெற்றோரின் கண் வெட்டி கண்களால் பேசவும் தெரிந்த உங்களுக்கு காதலின் அடுத்த கட்டமான திருமணம் என்கிற நிலையில் உங்கள் தைரியம் தன்னம்பிக்கை எங்கே போகிறது?

  காதல் என்றாலே பிரச்சினை என்பதை நீங்கள் காதலிக்கும் போதே உணர்ந்திருப்பீர்கள். உங்களவரை முதன் முதலில் காணும் போது உங்கள் கண் முன் மின்மினி பூச்சி அழகாய் பறந்து கீர்ன் சிக்னலை உங்கள் மனது கொடுத்து விடும் ஒரு வழியாய் தனிமையாய் சந்திக்க நேர்ந்தால் உங்கள் காதலை விட அவரவர் குடும்ப பாரம்பரியம் சாதி மதம் உறவிணர்கள் என எல்லாவற்றையும் நிச்சியம் பரிமாறிக்கொள்வீர்கள் தானே அப்பொழுதே உங்களுக்கு உங்கள் காதலின் முடிவு தெரிந்திருக்கும் அப்பொழுது குருட்டு நம்பிக்கையில் எப்படியும் சமாளித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் காதலை விட மனமிருக்காது உங்கள் குருட்டு தன்னபிக்கையை உங்களவர் தன்னம்பிக்கை என நினைத்து கண்ணே மணியே என கனவில் கோட்டை கட்ட ஆரம்பித்து விடுவார்.

  விளைந்த பொருள் விற்பனைக்கு வந்து தானே ஆகவேண்டும்! அப்படித்தான் உங்கள் காதலும் பெற்றோரின் வரட்டு பிடிவாதத்திலும் உங்கள் மீதான அக்கரையாலும் உங்களுக்கென வரன் பார்க்க தொடங்குவார்கள் அப்பொழுதே பிரச்சினை வந்துவிடும் உங்கள் காதலிலும் சலசலப்பு தொடங்கும்.ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சொல்வீர்கள் எப்படியாவது உன் வீட்டில் சொல்லி சம்மதிக்க வை என்பதான விவாதங்கள் தொடங்கி விடும் ஆனால் உங்கள் வீட்டிலோ கோவிலில் பலி கொடுக்க போகும் ஆடு போலத்தான் உங்கள் நிலைமை ஆட்டிற்காவது மஞ்சல் தண்ணி தலையில் ஊத்தி அதன் உடம்பை சிலிர்க வைத்து சம்மதம் கொடுத்துவிட்டது என சந்தோஷத்தில் பலி கொடுத்து விடுவார்கள் ஆனால் இந்த விஷயத்தில் பெற்றோர்கள் உங்களின் சம்மத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் நீங்கள் குழந்தையாம், உங்களுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது என்று தமக்கு தாமே சொல்லிக் கொள்வார்கள்.

  அவர்களுக்கே தெரியாமால் கண் வெட்டி காதலிக்க தெரிந்த நீங்கள் குழந்தையாம்! ஒன்றுமே தெரியாதம்! ஆனால் குடும்பம் நடத்த மட்டும் தெரியுமாம்! திடீரென்று வாழ்வில் வந்த ஒருவரை பேசி காதலிக்க தெரிந்த உங்களுக்கு உங்கள் பெற்றோருடன் உங்கள் காரியங்களை பகிர்ந்துகொள்ள முடியாதா? உங்கள் நிலையை அவர்களுக்கு சொல்லித்தான் புரிய வைக்க முடியாதா? பிரச்சினை என வரும் போது பிரச்சினைகளை சமாளிக்க முடியாமால் உடனே ஆசையாய் காதலித்த உங்களவரை மெர்ச்சுரிட்டியாக ஒருவரை ஒருவர் பிரிந்து செல்ல முடிவெடுக்கிறீர்கள் இது தான் உங்கள் காதலா? மனசு முழுவதும் உங்களவரோடான வாழ்க்கையை கனவில் வாழ்ந்து விட்டு வெறும் சதை பிண்டாமாய் அப்பா சொன்னார், அம்மா சொன்னார் என நொண்டிச்சாக்கு சொல்வதற்கு பெயர் தான் காதாலா?

  சரி அப்படியே பிரிந்து சென்று நீங்கள் வேறு ஒருவரோடு உங்கள் குடும்பத்தினர் கட்டாயத்தின் பேரில் வேறொருவரை திருமணம் செய்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம், நீங்களோ ஒருவரை காதலித்தீர்கள் ஆனால் வேறு ஒருவரை திருமணம் செய்கிறீர்கள் இதைபோலவே நீங்கள் திருமணம் செய்யப்போகும் நபருக்கும் இது போன்ற ஒரு பின்னனி இருந்தால் எப்படியிருக்கும்? அப்பொழுது உங்களால் திருமண பந்தத்தில் மனதளவில் சந்தோஷமாகத்தான் இருக்க முடியுமா? சரி ஏதோ ஒரு தருணத்தில் உங்கள் முன்னால் உங்களவரை எதிர்கொள்ள நேர்ந்தால் உங்களால் இயல்பாய் இருக்க முடியுமா? என்னடா அப்படியென்றால் இவன் கூட்டிக்கொண்டு ஓடச் சொல்கிறானோ! என நினைக்க வேண்டாம் வாழ்க்கை முழுவதும் மனதுக்குள் வருந்துவதற்கு பதிலாக உங்களால் முடிந்தவரை போராடி பார்க்கலாமே மனதில் ஒருவரும் கட்டிலில் ஒருவரும் என்பது வாழ்க்கைக்கு சுகமாக இருக்காது.

  தயவு செய்து காதலியுங்கள் அது ஒரு அழகான உணர்வு, சந்தோஷம் அப்படியே ஒருவேளை உங்களுக்கு திரைப்படங்களில் வருவது போல கண்டதும் காதல் வந்தால் எதார்த்தமாய் யோசித்து பாருங்கள் வண்டி வண்டியாய் ஆசைகள் சுமந்து கனவுக்கோட்டை காட்டி சுமக்க முடியாமல் வீழ்ந்து விடாதீர்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் சேர்த்தே பாதிக்கும். இந்த சமுதாயத்தை பொருத்தவரை காதல் இன்னமும் தீண்டப்பட கூடாத ஒன்று தான் ஆனால் காதலால் மட்டுமே சாதி மதம் ஒழித்து சமத்துவம் தர முடியும்.

  அன்பான பெற்றோர்களே நீங்களும் யோசியுங்கள் காதலிப்பது ஒன்றும் மிக பெரிய தவறு இல்லை அது மனிதனுக்குள் இருக்கும் இயல்பான ஒன்று தான் உங்கள் பிடிவாதத்தில் திருமணம் செய்து கொடுத்து இரண்டாவது நாளே உங்கள் பெண் வீட்டிற்கு வந்தால் அவளின் நிலை என்னாவாக இருக்கும் அல்லது கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த உங்கள் மகன் திருமணம் முடிந்த சில நாளிலியே துனைவியை பிரிந்தால் அவருக்கு உங்களால் என்ன ஆறுதலை சொல்லி விடமுடியம்? காலம் கடந்த ஆறுதலில் தொலைந்த சந்தோஷம், வாழ்க்கை நிம்மதி, அந்தஸ்து என ஏதாவது கிடைத்து விடுமா?

  நண்பர்களே காதலிக்க நினைப்பவர்கள், இப்போது காதலித்து கொண்டிருப்பவர்கள் என அனைவருக்கும் நம்பிக்கை தரும் வகையிலோ அல்லது எதார்த்தத்தை உணர்த்தும் வகையிலான உங்கள் கருத்துகளை எழுதுங்கள் படிப்பவர்களுக்கு உதவும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  8 Comments
  Comments

  8 Responses to “இதற்கு பெயரும் காதலாமே!”

  மாணவன் said...
  June 27, 2011 at 11:27 AM

  காதலைப்பற்றிய நல்ல புரிதலுடன் தெளிவா சொல்லியிருக்கீங்க...
  பகிர்தலுக்கு நன்றிண்ணே.


  ஜீ... said...
  June 27, 2011 at 12:01 PM

  //உங்கள் நிலையை அவர்களுக்கு சொல்லித்தான் புரிய வைக்க முடியாதா? பிரச்சினை என வரும் போது பிரச்சினைகளை சமாளிக்க முடியாமால் உடனே ஆசையாய் காதலித்த உங்களவரை மெர்ச்சுரிட்டியாக ஒருவரை ஒருவர் பிரிந்து செல்ல முடிவெடுக்கிறீர்கள் இது தான் உங்கள் காதலா?//

  எந்தப் பெற்றோரிடமும் அமைதியாக நிதானமாகப் பேசிப்புரிய வைக்க முடியும்..அனால் நம்மில் பலர் (அநேகமாக பெண்கள்) அதை செய்வதில்லை, செய்ய விரும்புவதில்லை என்பதே உண்மை!
  நல்ல பதிவு!


  எஸ்.முத்துவேல் said...
  June 27, 2011 at 1:54 PM

  மிக தெளிவாக வாழ்க்கை பற்றி எழுதியுள்ளீர்கள்.
  நன்றி...


  ஜிஎஸ்ஆர் said...
  July 7, 2011 at 9:27 PM

  @மாணவன் தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி தம்பி


  ஜிஎஸ்ஆர் said...
  July 7, 2011 at 9:28 PM

  @ஜீ...கருத்திற்கு நன்றி இன்னும் ஆழமாய் நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்லியிருக்க்லாம்...


  ஜிஎஸ்ஆர் said...
  July 7, 2011 at 9:29 PM

  @எஸ்.முத்துவேல் நன்றி நண்பா உங்கள் கருத்துகளையும் பகிர்ந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்...


  rtvenkat said...
  May 4, 2012 at 11:19 PM

  வாழ்க்கையை(காதலை)ப் ப‌ற்றி மிக அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். காத‌ல்தான் வாழ்க்கை.
  அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை,மனைவி,மக்கள்,அத்தை,மாமன்,நண்பன்,உற்றார்,உறவினர் என எல்லோரும் எல்லோரையும் காத‌லித்துக்கொண்டுதான் உள்ளோம். ஆனாலும் நாம் பெற்ற குழந்தைகள் தங்கள் வாழ்க்கைத்துணையைக் காதலித்தால் மட்டும் குற்றம் சொல்கிறோம். காதல் திருமணம் செய்த பெற்றோர்களும் இப்படித்தான் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் என எனக்குத்தோன்றியது, நல்ல காதலை விட நல்ல காசு பணமே இன்றைய வாழ்க்கைக்குத் தேவை என்ற முரண்பாடான கேடுகெட்ட சிந்தனையே என நினைக்கிறேன். இந்த சிந்தனை சரியோ தவறோ, உள்ளவரை மட்டுமே உலகம் மதிக்கிறது என்பது உண்மையே! எனவே காத‌லிப்போரே! காசு பணமும், உலகத்தின் மதிப்பும் தேவை எனில் காதலை கைவிடுங்கள். காதலே தேவை எனில் போராடியாவது திருமணம் புரிந்து, உங்கள் அன்பை கைவிடாமல் காசு பணம் சேர்க்க பாருங்கள். உலகம் உங்கள் பின்னால் வரும்.


  ஜிஎஸ்ஆர் said...
  May 8, 2012 at 4:12 PM

  @rtvenkat\\உள்ளவரை மட்டுமே உலகம் மதிக்கிறது என்பது உண்மையே!\\

  இப்படித்தான் இன்றைய சமுதாயம் நம்மை வளர்க்க விரும்புகிறது அன்பு, பண்பு, மனிதநேயம் எல்லாமும் பணத்தால் அழிக்கபட்டு கொண்டிருக்கிறது, ஆனாலும் பணத்தால் சாதிக்க முடியாத எத்தனையோ சிறிய விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர