Jul 7, 2010

18

பிரவுசரே இல்லாமல் இனையம் உலவலாம்

  • Jul 7, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:நல்ல நண்பன் உடையவனுக்கு நிலைக்கண்ணாடி அவசியமில்லை.

    வணக்கம் நண்பர்களே நாம் சாதரணமாக இனையத்தில் உலவ பிரவுசரை பயன்படுத்தவோம் ஆனால் நாம் இப்போது பார்க்கபோவது பிரவுசரின் உதவி இல்லாமல் இனையத்தில் எப்படி உலாவுவது என பார்க்கலாம்.

    எனக்கு தெரிந்த வரையில் ஏழுவிதமான வழிகளில் பிரவுசர் இல்லாமல் இனையத்தில் உலாவலாம் நான் உங்களுக்கு விளக்கபோவது ஒன்றை மட்டுமே ஆனால் அந்த வழிதான் மீதமுள்ள ஆறு வழிமுறைக்கும் பயன்படப்போகிறது. நான் தங்களுக்காக எடுத்துக்கொண்டது நோட்பேட் காரணம் நான் சாதரணமாக அதிகம் பயன்படுத்துவது இதைத்தான் மேலும் அலுவலக நேரத்தில் இனையம் திறந்து பார்க்க வசதியாய் இருக்கிறது.

    சரி இனிமேலும் தங்களை பொறுமையை சோதிக்க விரும்பவில்லை நேரடியாக விஷயத்திற்கு சென்று விடலாம் முதலில் நோட்பேட் திறந்துகொள்ளுங்கள் நோட்பேட் திறப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன தங்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதை பயன்படுத்துங்கள். Start-> Program-> Accessories->Notepad (Shortcut to winkey+R type notepad)

    நோட்பேட் திற்ந்துவிட்டீர்களா இனி மெனுவில் இருக்கும் Help திறந்து அதில் Help Topics என்பதை கிளிக்கவும் உங்களுக்கு கீழிருக்கும் படத்தில் உள்ளது போல விண்டோ திறக்கும்.



    இனி ஊதா நிற பாரில் உங்கள் எலியின் வலது கிளிக்கில் Jump to URL என்பதை கிளிக்குங்கள் இப்போது உங்களுக்கு ஒரு சிறிய பாப் அப் விண்டோ திறக்கிறதா? அங்கு நீங்கள் செல்ல விரும்பும் தளத்தின் பெயரை கொடுத்து ஓக்கே கொடுத்து விடுங்கள் அட்ரஸ் கொடுக்கும் போது http://gsr-gentle.blogspot.com என்பது போல இருக்கட்டும் சந்தேகத்திற்கு படம் இனைக்கப்பட்டுள்ளது.



    நான் என் தளத்தின் பெயரை கொடுத்த பின் என் தளம் திறந்திருக்கிறது ஆனால் என்ன இதில் டேப் வசதியெல்லாம் இல்லை இருப்பினும் அது ஒரு குறையில்லை என்றே நினைக்கிறேன் உங்கள் கணினியில் இனையதளம் முழுவதுமாக தெரிய இடது பக்கம் இருக்கும் பான் விண்டோவை டிராக் செய்வதன் மூலம் முழு திரையையும் காணலாம் படத்தை பாருங்கள் புரியும்.



    இனி நான் மேலே சொன்னபடி மீதமுள்ள வழிகளையும் கீழே கொடுத்திருக்கிறேன் இரண்டிற்கு ஷார்ட்கட் தெரியவில்லை தெரிந்த நண்பர்கள் பின்னுட்டத்தில் தெரியபடுத்தினால் எனக்கும் என்னைப்போல பிற நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும்.

    Program-> Accessories->Notepad (Shortcut to winkey+R type notepad)

    Program->Accessories->Entertainment-> Sound Recorder (Shortcut to winkey+R type Sndrec32)

    Program->Accessories->Paint (Shortcut to winkey+R type pbrush or mspaint)

    Program-> Accessories->WordPad (Shortcut to winkey+R type wordpad)

    Program->Accessories->Calculator (Shortcut to winkey+R type calc)

    Program->Accessories->Communications->Fax->Fax Console (Shortcut தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்)

    Programs->Accessories-> Address Book (Shortcut தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்)

    இன்னும் ஒரு கொசுறு தகவல் நீங்கள் திறக்க விரும்பும் தளத்தை Start->Run-> Type website address கொடுப்பதன் மூலமும் இனையத்தளம் திறக்கலாம் அதில் உங்கள் டிபால்ட் பிரவுசர் திறக்கும்.



    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருந்ததா? இருப்பின் தங்கள் நண்பர்களுக்கும் நம் தளத்தை அறிமுகபடுத்துங்கள் உங்கள் பொன்னான நேரத்தில் ஒரிரு நிமிடம் செலவழித்து வாக்கும் கருத்துரையும் அளிப்பதன் மூலம் இன்னும் அதிகமான நபர்களை சென்றடைய நீங்களும் மனது வையுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    18 Comments
    Comments

    18 Responses to “பிரவுசரே இல்லாமல் இனையம் உலவலாம்”

    பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...
    July 7, 2010 at 11:07 AM

    thx


    ethavuthu Irukkum said...
    July 7, 2010 at 12:34 PM

    Help topics - not opening.


    மின்னுது மின்னல் said...
    July 7, 2010 at 3:09 PM

    http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html


    இதில் சொன்னவாறு செய்யவும்

    பிறகு உங்கள் பக்கத்தில் கருவிபட்டை தோண்றும் அதில் அனுப்பு என்பதை கிளிக்க தமிழ்மணத்துக்கு அனுப்பபட்டு விடும்

    குறி சொற்கள் தொழில்நுட்பம்,ஜாப்,internet, போல் வைத்தால் அந்த பகுதியில் நிண்ட நேரம் இருக்கும்


    அன்புடன் அருணா said...
    July 8, 2010 at 6:09 PM

    பூங்கொத்து!!


    ஜிஎஸ்ஆர் said...
    July 10, 2010 at 1:07 PM

    @பாலகுமாரன், வத்திராயிருப்பு.
    நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    July 10, 2010 at 1:08 PM

    @ethavuthu Irukkum தயவுசெய்து ஒருமுறை சரியாய் முயன்று பாருங்களேன்


    ஜிஎஸ்ஆர் said...
    July 10, 2010 at 1:11 PM

    @மின்னுது மின்னல் நீங்கள் விரும்பியவாறு இனைத்துவிட்டேன் இருப்பினும் இரண்டு பதிவுகளை அங்கு இனைத்தும் அது எந்த பகுதியில் இருக்கிறது என்பதை கூட கண்டுபிடிப்பது கடினமாயிருக்கிறது அவர்கள் தளத்தை எளிமைப்படுத்தாமல் பிடிவாதமாக இருப்பார்கள் என நினைக்கிறேன் மன்னிக்கவும் தமிழ்மணம் ஓட்டு பட்டையை எடுத்துவிடுகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    July 10, 2010 at 1:11 PM

    @அன்புடன் அருணா நன்றி


    வடுவூர் குமார் said...
    July 11, 2010 at 12:24 PM

    உலாவிக்கு ப‌ண‌ம் க‌ட்ட‌வேண்டிய‌ கால‌ம் என்றால் இம்முறை உத‌வும் ஆனால் இப்போது தான் இல‌வ‌ச‌மாக‌வே ப‌ல‌ உலாவிக‌ள் கிடைக்குதே!!


    ஜிஎஸ்ஆர் said...
    July 11, 2010 at 12:36 PM

    @வடுவூர் குமார் இது அதற்காக பதியப்பட்டதல்ல இப்படியும் இனையத்தில் உலவலாம் என்பதற்காகவே மட்டுமே மேலும் அலுவலக நேரங்களில் பயன்படுத்தாலம் என்கிற நோக்கில் தான் எழுதினேன்


    Ram said...
    October 26, 2010 at 6:21 PM

    actually help topics using thru internet explorer


    ஜிஎஸ்ஆர் said...
    October 27, 2010 at 7:46 AM

    @Ramஇப்படியும் இனையத்தில் உலவலாம் என்பதற்காக மட்டுமே இந்த பதிவு


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 1:08 PM

    ஃஃஃஃஃநல்ல நண்பன் உடையவனுக்கு நிலைக்கண்ணாடி அவசியமில்லை.ஃஃஃஃ
    ஆமாம் இதைத் தானே கொஞ்சம் வித்தியாசமாய் என் பதிவில் பதிந்துள்ளீர்கள்....


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 1:09 PM

    பழைய பதிவானாலும் எனக்கு புதிய விசயம்....


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:44 PM

    @ம.தி.சுதாஆமாம் நண்பா ஒரு விஷயத்தை சரியான விதத்தில் எப்படியும் எழுதலாம் தானே


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:45 PM

    @ம.தி.சுதா நாம் கற்றுக்கொள்ளாதவரை நாம் காணும் ஒவ்வொன்றும் புதிய விஷயமே என்ன செய்ய இன்னும் இந்த பூமியில் நாம் கற்க வேண்டிய அனுபவ பாடம் இதை விட நிறைய இருக்கிறது


    Vengatesh TR said...
    November 26, 2010 at 10:16 PM

    .windows 7-il, இப்படி help-topics'eh காணோம் !!

    .xp system'il அமரும் போது, சோதித்து கொள்கிறேன் !

    .தகவலுக்கு நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    November 27, 2010 at 9:15 AM

    @சிகப்பு மனிதன்சரி நண்பரே xp ல் சோதித்து பாருங்கள்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர