Jul 18, 2010

8

டாஸ்க் பார், நோட்டிபிகேசன் ஏரியா, குயிக் லாஞ்ச் பிரச்சினைக்கு தீர்வு

  • Jul 18, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: மற்றவர்களுடைய வாழ்க்கையை ஒப்பிடாமல் உன் சொந்த வாழ்க்கையை அனுபவி.

    வணக்கம் நண்பர்களே என் அலுவகலக நண்பர்கள் பலரும் என்னிடம் கணினி பிரச்சினைகளுக்காக தொடர்பு கொள்வார்கள் நானும் பெரும்பாலும் ஜிமெயில் அரட்டையில் எனக்கு தெரிந்ததை சொல்லிகொடுத்து விடுவேன் இப்படித்தான் நேற்று பழைய கணினி வாங்கியிருக்கிறார் வாங்கும் போது நன்றாகதான் இருந்ததாம் ஆனால் அவர் வீட்டில் வந்து இயக்கிய போது கணினியின் டாஸ்க் பார் காணவில்லை இந்த டாஸ்க் பார் இல்லையென்றால் நீங்கள் உதாரணத்துக்கு பத்து விண்டோவை திறந்து வைத்திருக்கிறீர்கள் ஆனால் உங்களுக்கு டெஸ்க்டாப்பில் இருக்கும் ஒரு பைலை திறக்கவேண்டும் டாஸ்க் பார் இருந்தால் அதன் வழியாக டெஸ்க்டாப் எளிதாக சென்று விடலாம் ஒரு வேளை இந்த டாஸ்க் பார் உங்கள் கணினியில் காணவில்லையென்றால் திறந்திருக்கும் அனைத்து விண்டோவையும் மினிமைஸ் செய்த பின் தான் டெஸ்க்டாப்பை அடைய முடியும் நண்பருக்கும் இந்த பிரச்சினை தான் ஏற்பட்டிருக்கிறது இது போன்ற பிரச்சினைகள் சாதரணமாக இயங்குதளம் நிறுவும் போது ஏற்படும் தவறுகள் அல்லது வைரஸ் பிரச்சினைகளாலும் வரலாம் அல்லது தவறாக பைல்களை அழிப்பதன் மூலமாகவும் வரலாம்.



    சரி இந்த பிரச்சினைக்கு தீர்வாக நாம் நமது ரெஜிஸ்டரியில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் திரும்ப கொண்டு வந்து விடலாம் ஆனால் தெரியாதவர்கள் ரிஜிஸ்டரியில் மாற்றங்கள் கொண்டுவருவது பிழையானால் மீண்டும் இயங்குதளம் நிறுவ வேண்டிவரும் சரி நண்பருக்கு எப்படி பிரச்சினையை சரி செய்வது என இனையத்தில் தேடிய போதுதான் ஒரு அழகான மென்பொருள் கிடைத்தது இதன் அளவு வெறும் 172கேபி தான் ஆனால் அது 5டாலர் விலை மதிப்புள்ளது சரி அதை கிராக் செய்யமுடியுமாவென தேடியபோதுதான் அதற்கும் கிராக் பேட்ஜ் கிடைத்தது நீங்கள் TaskbarRepairToolPlus என்பதை இயக்கி பாருங்கள் உங்களுக்கு படத்தில் உள்ளது போல செய்தி வரும்.



    இப்போது நீங்கள் இந்த Task Bar Repair Tool தரவிறக்கவும், மென்பொருள் இயங்குதளத்தில் நிறுவாமல் நேரடியாக இயங்ககூடியது கீழிருக்கும் படங்களை பாருங்கள் உங்களுக்கு புரியும்.



    இனி இந்த மென்பொருளின் உதவியோடு 34விதமான பிரச்சினைகளை தீர்க்கலாம் அவை என்ன மாதிரியான பிரச்சினைகள் என்பதை கீழே பாருங்கள்.

    Task bar Problems

    Taskbar is Missing
    Lock Taskbar Greyed Out
    Minimized Programs Missing
    Stuck in Classic View
    Reduce Size of Buttons
    Restore to Default
    Toolbars Greyed Out or Missing
    Remove Specific Toolbars
    Remove Icons - Desktop Toolbar
    Disable Taskbar Context Menus
    Remove Taskbar from Control Panel
    Disable Right Click/Properties
    Lock Size and Position of the Taskbar
    Remove Open, Explore, Find - Start
    Remove Open All, Explore All Users
    Hide or Show the Taskbar
    Hide or Show the Start Button
    Repair Icon Views
    Restore Taskbar to Default Position
    Remove Taskbar Grouping
    Repair, Disable/Enable Task Manager


    Notification Area

    Hide or Show All Listed Tray Icons
    Hide or Show All Inactive Icons
    Remove Past Items
    Show Missing Icons
    Restore/Remove the Clock
    Disable Balloon Tips
    Remove the Notification Area
    Remove Selective Icons
    Disable Low Disk Space Warning


    Quick Launch Bar

    Can't Create Error Message
    Restore Show Desktop Icon
    Remove the Quick Launch Area
    Save Quick Launch Sort Order
    Add Links to Quick Launch


    சில நேரங்களில் இப்படித்தான் நண்பரே கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்பது போல இது போன்ற சிறிய மென்பொருள்கள் மிக அற்புதமாக நம் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் என்ன நண்பர்களே இப்போது உங்களுக்கு உபயோகமில்லாதது போல தோன்றலாம் ஆனால் பிரச்சினை எப்போது வருமென்று தெரியாதே அதனால் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதவது உபயோகப்படும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    8 Comments
    Comments

    8 Responses to “டாஸ்க் பார், நோட்டிபிகேசன் ஏரியா, குயிக் லாஞ்ச் பிரச்சினைக்கு தீர்வு”

    யூர்கன் க்ருகியர் said...
    July 18, 2010 at 12:28 PM

    //அதை கிராக் செய்யமுடியுமாவென தேடியபோதுதான்//

    Keep it up Dude !


    யூர்கன் க்ருகியர் said...
    July 18, 2010 at 12:33 PM

    பதிவின் தலைப்பிற்கு மேலாக "பிங்க்" கலரில் எழுதியுள்ள மேட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ..
    அகைன் கீப் இட் அப்பு டியுட்!


    Faaique Najeeb said...
    July 18, 2010 at 1:38 PM

    Can v use this in Win 7?


    ஜிஎஸ்ஆர் said...
    July 20, 2010 at 6:13 PM

    @யூர்கன் க்ருகியர்
    ்நல்லது


    ஜிஎஸ்ஆர் said...
    July 20, 2010 at 6:17 PM

    @யூர்கன் க்ருகியர்

    ஏன் நண்பரே நீங்கள் இப்படி?


    ஜிஎஸ்ஆர் said...
    July 20, 2010 at 6:18 PM

    @Faaique Najeeb

    உபயோகபடுத்த முடியாது


    சிகப்பு மனிதன் said...
    November 26, 2010 at 7:21 PM

    .நானும், விண்டோஸ் 7 Ultimate, உபயோகம் செய்கிறேன்

    .எனக்கு சாப்ட்வேர் செயல்படுகிறது !!


    .பகிர்ந்தமைக்கு நன்றி, ஆசிரியரே !!!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:48 PM

    @சிகப்பு மனிதன்அப்படியா தகவலுக்கு நன்றி நண்பரே இனி இந்த பதிவை படிப்பவர்களுக்கு தஙக்ளின் கருத்துரை உதவும்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர