Jul 6, 2010

11

தொழில்முறை நிழற்பட ஸ்லைட்ஷோ

 • Jul 6, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: அகமும் முகமும் மலர்ந்து விருந்தோம்பின் பகையும் ஆகும் பந்தம்.

  வணக்கம் நண்பர்களே நாம் சாதரணமாக நமது நிழற்படக்கருவியில்(கேமரா) போட்டோ எடுத்து அதை நம் நினைவுகளில் மதுரமாய் இருந்தாலும் நம் எதிர் கால ஞாபகபடுத்துதலுக்காக செருகேடில் (ஆல்பம்) சேமித்து பாதுகாப்போம் இதெல்லாம் சில பல ஆண்டுகளுக்கு ஆனால் இப்போதெல்லாம் வெறும் காகித்தில் இருக்கும் நிழற்படங்களை காணும் போது சலிப்பு வந்துவிடுகிறது அந்த குறையை தீர்க்க நமது நிழற்படங்களை குறுந்தகடில் பதிந்து நம் வீட்டிலிருக்கும் டிவிடி பிளேயரில் இட்டு நம் தொலைக்காட்சி பெட்டியில் பார்த்து ரசிக்கிறோம்.

  இப்படி நாம் பார்க்கும் குறுந்தகடு வெறும் டேட்டாவாக பதியப்பட்டிருந்தால் ஒவ்வொரு நிழற்படமாக மாறிக்கொண்டே இருக்கும் ஆனால் இதில் நமக்கு தேவையான மாதிரி நிழற்படங்கள் வந்து போகும் வசதி இருக்காது ஆனால் அதற்கெல்லாம் எந்த சிரமுமில்லாமல் நமது மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தோடையே விண்டோஸ் மூவி மேக்கர் இனைக்கப்பட்டிருக்கும் இது ஒன்றும் குறைத்து சொல்லிவிட முடியாது சிறப்பாகவே இருக்கும் இதில் நாம் விரும்பும் வகையில் பல எபெட்டுகளை சேர்க்க முடியும் ஆனாலும் புதியவர்களுக்கு அல்லது இதைவிட சிறந்தான ஒன்றை தேடும் நபர்களுக்கு புரொபசனல் மென்பொருள் விலை கொஞ்சம் அதிகம் ஆனால் வசதிகள் ஏராளம்.

  விரும்பும் நபர்கள் டிவிடி ஸ்லைட்ஷோ மென்பொருள் தரவிறக்கி உங்கள் கணினியில் வழக்கம் போல நிறுவிக்கொள்ளுங்கள் இனி Help என்பதை கிளிக்கி Register திறக்கவும் அதில் பயணர் பெயர் மற்றும் பயணரின் ரிஜிஸ்டர் கீ இரண்டையும் காப்பி எடுத்து பேஸ்ட் செய்யவும் இனி உங்கள் மென்பொருள் ரிஜிஸ்டர் செய்தது சரியென ஒரு பாப் அப் விண்டோ வந்து போகும் இந்த மென்பொருளின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 2800 வரை ஆகிறது வேண்டுமானால் அந்த தளத்தில் சென்று சோதித்து பாருங்கள், அதே நேரத்தில் இதைபோலவே வேறு ஏதாவது இலவச மென்பொருள் இருக்கிறதா எனக்கேட்கும் நண்பர்கள் Photo SlideShow Maker பய்னபடுத்தி பார்க்கலாம் ஆனால் வசதிகள் குறைவு.  இனி அடுத்ததாக நீங்கள் விரும்பும் படத்தை இனைப்பது, பின்னனியில் உங்களுக்கு பிடித்தமான இசையை சேர்ப்பது ஒவ்வொரு நிழற்படத்திற்கும் தேவையான பெயர் கொண்டுவருவது அதற்கான எபெக்ட் சேர்ப்பது வீடியோவிற்கான பிரிவியூ பார்ப்பது தேவையான மெனுவை கொண்டு வருவது மற்றும் யூடியுப்பில் அப்லோட் செய்ய விருப்பமா அதற்கான முறையும் இருக்கிறது குறுந்தகடில் நாம் தயாரித்த்தை எரிப்பது என எல்லாமே மிகவும் எளிமையாக உங்கள் முகப்பிலேயே இருக்கிறது என்னாலும் முழுவதுமாய் பயன்படுத்தி பார்க்க முடியவில்லை அத்தனை விஷயங்கள் அடங்கி கிடக்கிறது இந்த மென்பொருளில், தேவையானல் நிழற்படங்களுக்கு இடையே வீடியோவையும் சேர்க்கலாம் மேலும் தங்களிடம் ஹெட்போன் வசதி இருந்தால் உங்கள் குரலையும் பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள் ஆனால் முதலில் அழித்து பதியும் வசதி கொண்ட குறுந்தகடை பாவித்து முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு தெளிவாக புரிந்தவுடன் நீங்கள் விரும்பியவாறு மிக சிறப்பான முறையில் ஒரு நிழற்பட ஸ்லைட்ஷோ உருவாக்கி வீட்டில் கண்டு மகிழுங்கள் இன்றைய நிழற்படங்களை நம் நினைவுகளாக நாளைய நம் சந்ததியினருக்கு விட்டுச்செல்வோம் சரிதானே நம் எத்தனை பேருக்கு தெரியும் நம் பாட்டனாரை முப்பாட்டனரை?  இதில் உள்ள வசதிகள் என்னவென்று தெரிந்துகொள்ள ஒரு படத்தையும் கீழே இனைத்திருக்கிறேன் பாருங்கள் புரியும்.  என்ன நண்பர்களே இது உங்களுக்கு இந்த நேரத்தில் உபயோகமில்லாத பதிவு போல் தோன்றினாலும் நிச்சியம் உங்களுக்கு தேவைப்படும் உங்கள் திருமண நிழற்படங்கள் உங்கள் குழந்தைகளின் நிழற்படங்களை பத்திரமாக குறுந்தகடில் பதிந்து பத்திரப்படுத்துங்கள் நாம் நினைவுத்திறன் குறையும் காலங்களில் நமது நினைவுகலை மீளக்கொண்டு வர மிகவும் உதவியாய் இருக்கும். பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும் நாம் என்ன பெரிதாக செய்து விட போகிறோம் முடிந்தவரை நல்ல தகவல்களை நம் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தலாமே! இது உங்களால் முடியும்தானே!

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  11 Comments
  Comments

  11 Responses to “தொழில்முறை நிழற்பட ஸ்லைட்ஷோ”

  WebPrabu said...
  July 6, 2010 at 3:51 PM

  எவ்வளவு பொறுமையாக எந்தவொரு செயலையும் அலசி ஆராய்ந்து பார்க்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெளிவாக தெரிகிறது. சிறுதுளிகளே பெருவெள்ளம். நண்பராக என்னையும்[webprabu@gmail.com] உங்களின் அரட்டையில் இணைத்துகொள்ளுங்கள்.
  நன்றி!!!


  மின்னுது மின்னல் said...
  July 6, 2010 at 9:53 PM

  GOOD AND THANKS


  ஜிஎஸ்ஆர் said...
  July 7, 2010 at 9:49 AM

  @WebPrabu தங்களின் அன்பிற்கு நன்றி நண்பா நான் சாதரணமாக அரட்டையில் மற்றும் சமூக தளங்களில் நேரம் செலவழிப்பதில்லை இருப்பினும் தங்கள் பெய்ரையும் எனது கூகுள் அரட்டையில் சேர்த்துக்கொள்கிறேன் நாம் இருவரும் எதேச்சையாக சந்தித்தால் நிச்சியம் உரையாடலாம்


  ஜிஎஸ்ஆர் said...
  July 7, 2010 at 9:50 AM

  @மின்னுது மின்னல்

  நன்றி சகோதரா


  muthuvel said...
  August 19, 2010 at 1:06 PM

  மிக அருமை நண்பரே வாழ்த்துக்கள் உன் புகழ் ஓங்க


  Speed Master said...
  August 19, 2010 at 3:24 PM

  அருமை , வாழ்த்துக்கள்


  ஜிஎஸ்ஆர் said...
  August 21, 2010 at 9:13 AM

  @muthuvelநன்றி நண்பரே தொடர்ந்து இனைந்திருங்கள்


  ஜிஎஸ்ஆர் said...
  August 21, 2010 at 9:13 AM

  @Speed Masterநன்றி நண்பரே தொடர்ந்து இனைந்திருங்கள்


  சிகப்பு மனிதன் said...
  November 26, 2010 at 10:21 PM

  .என்னை போன்ற புதியவர்களுக்கு இது தானே, பொழுதுபோக்கு !

  .மிகவும் பயனுள்ள மென்பொருள் + தகவல் !


  சிகப்பு மனிதன் said...
  November 26, 2010 at 10:24 PM

  .மன்னிகவும், !

  .அது புதியவர்களுக்கு அல்ல, மாணவர்களுக்கு !

  .இடையிடையே அலைபேசியில் அழைப்பு வருவதால், கவனபிழை எழுகிறது !

  .இனிமேல் சரிசெய்து கொள்கிறேன் !!


  ஜிஎஸ்ஆர் said...
  November 27, 2010 at 9:16 AM

  @சிகப்பு மனிதன்பிழைகள் ஏற்படுவது இயல்புதான்


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர