Jul 5, 2010

14

5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்

 • Jul 5, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: தியாக வாழ்க்கை கலையின் சிகரம். அது தான் முற்றிலும் உண்மையான மகிழ்ச்சி.

  கணினியில் நீங்கள் பாடல்களை 5.1ல் கேட்க விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்பினால் இங்கே தரவிறக்குங்கள் எல்லா இயங்குதளத்திற்கும் கிடைக்கிறது தற்போது இது சோதனை பதிப்பு அளவிலே தான் இருக்கிறது ஆனால் பாடல் கேட்பதென்றால் 2.1 என்பதுதான் சிறப்பாக இருக்கும் சினிமா பார்ப்பதென்றால் 5.1 நல்ல விருந்தாக இருக்கும்.

  அடுத்து நாம் சாதரணமாக நாம் பாடல்களை அதிகமாக விலையின் காரணம் கொண்டும் MP3 பாடல்களை கேட்கிறோம் சரி இந்த MP3 பாடல் கேட்கும் போது நாம் முழுமையான இசையை கேட்கிறோமா என்றால் நிச்சியம் இல்லை காரணம் ஒரு பாடலின் தரம் குறையாமல் இருக்கும் போது குறைந்தபட்சம் 70 முதல் 80MB இருக்கும் அதைத்தான் நாம் அதன் தரத்தையும் சில நம் காதுகளால் கேட்க முடியாத இசையையும் இந்த MP3 பார்மட்டானது முழுவதுமாக நீக்கிவிட்டு நமக்கு அதை வெறும் 4MBக்குள் மாற்றித்தருகிறது எனவேதான் நல்ல இசையை விரும்பும் பிரியர்கள் ஆடியோ சிடியைத்தான் பயன்படுத்தி கேட்பார்கள் அதிலும் நம்மைப்போல 5.1 ஹோம் சிஸ்டம் பாடல் கேட்பதற்கு சுகமாக இருக்காது சரி விஷயத்துக்கு வருவோம் இந்த ஆடியோ சிடியில் உள்ள பாடலை நாம் நேரடியாக காப்பி எடுக்கமுடியாது நீங்கள் வேண்டுமானல் அதை காப்பி எடுத்து பாருங்கள் மொத்த அளவு வெறும் 200Kbக்குள் இருக்கும் சரி நமக்கு விருப்பமான பாடலை ஆடியோ சிடியில் இருந்து எப்படி MP3பார்மட்டுக்கும் காப்பி எடுப்பது என பார்க்கலாம் இதற்கு எந்த மென்பொருளும் அவசியமில்லை காரனம் மைக்ரோசாப்ட்டின் இயங்குதளம் பொதியில் windows media player இனைக்கப்பட்டு தான் வருகிறது இனி நீங்கள் சிடி டிரைவில் ஆடியோ சிடி குறுந்தகடை உள்ளிடுங்கள் அடுத்து உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரை திறந்துகொள்ளுங்கள் இனி இடது புறம் பான் விண்டோவில் Copy from Cd என்பதை தெரிவு செய்யுங்கள் அடுத்ததாக பாடல்களை தேர்வு செய்யுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.  இனி நீங்கள் செய்யவேண்டியது Tools ->Options கிளிக்கி திறக்கும் பாப் அப் விண்டோவில் Copy Music என்கிற டேப் திறந்து அதில் Change என்பதில் கிளிக்கி பாடல்களை சேமிக்க விரும்பும் இடத்தை பிரவுஸ் செய்து ஓக்கே கொடுத்து வெளியேறவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.  இனி உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்கம் பாருங்கள் Copy Music என ஒரு ரேடியோ பட்டன் இருக்கிறதா அதை கிளிக்குங்கள் அவ்வளவுதான் இனி உங்கள் கணினியின் வேகத்தை பொருத்து உங்கள் ஆடியோ சிடியில் இருந்து பாடலை MP3யாக மாற்றியிருக்கும்.  நான் மேலே சொன்னேன் சில சப்தங்களை கேட்க முடியாதென அது பற்றி ஒரு சுவராஸ்ய பதிவு பாருங்களேன்.மேலும் தரம் குறையாத பாடல்களை Loss Less MP3 அல்லது Loss Less Songs என கூகுளில் தேடிப்பாருங்கள் நல்ல தரமிகுந்த பாடல்கள் கிடைக்கும் தமிழில் அதிகம் இல்லை.

  இது பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்தே இருக்கும் நம் நோக்கம் இது பற்றி தெரியாத நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு உதவுமே என்பதுதான் பதிவு பயனுள்ளதாய் இருந்தால் உங்கள் நண்பர்களும் பயனடையட்டும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  14 Comments
  Comments

  14 Responses to “5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்”

  ஆர்.கே.சதீஷ்குமார் said...
  July 5, 2010 at 10:11 AM

  நல்ல பதிவு...


  பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...
  July 5, 2010 at 1:23 PM

  nice Post & thanks a lot!!!

  also, regarding the admin password crack i'm waiting for ur reply.

  thanks,
  balawatrap


  ப்ரின்ஸ் said...
  July 6, 2010 at 4:08 PM

  infomative.....thanks for share with us..


  ஜிஎஸ்ஆர் said...
  July 7, 2010 at 9:54 AM

  @ப்ரின்ஸ்
  தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி தொடர்ந்து நம் தளத்தில் இனைந்திருங்கள்


  saif said...
  July 25, 2010 at 11:05 AM

  Thangal solvathu unmai thaan MR.gnanasekar avargale.ivvalavu kasta pattu eluthugireergal,atharku oru siru paaraattu allathu nandri kooda yaarum sollavillai endral,nitchayam manam sornthu vidum..NAAN MANATHAARA SOLGIREN..UNGAL OVVORU ELUTTHUM ENGALUKKU PAYANULLAVAI..ITHUVARAI UNGAL SITE NAAN VANTHATHU ILLAI...INDRU THAAN UNGAL SITE VARUUM VAAIPPU KIDAITHATHU.THAMILISH VAZHIYAGA THEDI KONDU IRUKKUMPOTHU UNGAL SITE PARTHEN..REALLY ALL YOUR LETTERS ARE VERY USEFULL BOSS..I NEVER HEARED ABOUT THIS SITE B4..BU HERE AFTER I WILL VISIT YOUR SITE EACH N EVERYDAY..OFCOURSE..I WILL RECOMMEND YOUR SITE 2 MY FRIENDS ASWELL..
  UNGA BLOG NAME PURUYATHA KIRUKKALGAL ALLA,,NEENGA THAARAALAMA,''PAYANULLA PATHIVUGAL'' NU PEYAR MAATRI KOLLALAAM GNANASEKAR SIR..SATHYAMA SOLREN..ELLA BLOGSLAYUM THEVAYATRA CINEMA,VETTI PETCHUGAL IRUKKUM.ORU SILA BLOGS VITHI VILAKKU...AANAL UNGA SITE MULUKKA MULUKKA 100% MAKKALUKKU PAYANULLA SEITHIGAL THAAN IRUKU..YETHAYUM ETHIR PAARAAMAL INTHA UTHAVI SEIYUMM UNGALUKKU ENATHU MANAMAARNTHA VAALTTHUKKAL.NANDRI BOSS..KALAKKUNGA..!! (UNGA COMMENT BOXLA YEN TAMILIL COMMENT PANNUM VASATHI ILLA? MATRA BLOG FRIENDS COMMENTS BOXLAYELLAM TAMILIL ELUTHUM VASATHI ULLATHEY? NEENNGALUM YEN AVANGA STYLE LA COMMENT BOX AMAIKKA KOODATHU? I HAV ANOTHER DOUBGHT ASWELL.ALL OTHER PEOPLE SENT COMMENTS IN TAMIL IN UR SITE.!! BU THERE IS NO OPTION HERE 2 WRITE IN TAMIL.THEN HOW THEY WROTE THE COMMENTS IN TAMIL? CAN U EXPLAIN ME ABOUT THIS MR.GNANASEKAR?) manasa thalara vidaathinga boss..ungala mathiri aalunga ippadi eluthaama poitta,engalukku thaan kastam..thank u so much 4 all ur usefull letters my friend..tc


  ஜிஎஸ்ஆர் said...
  July 26, 2010 at 9:22 AM

  @saifமிக நீளமான கருத்துரையை ஆழ்ந்த புரிதலோடு எழுதியிருக்கிறீர்கள் அதற்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே மேலும் தாங்கள்\\UNGA COMMENT BOXLA YEN TAMILIL COMMENT PANNUM VASATHI ILLA? MATRA BLOG FRIENDS COMMENTS BOXLAYELLAM TAMILIL ELUTHUM VASATHI ULLATHEY? NEENNGALUM YEN AVANGA STYLE LA COMMENT BOX AMAIKKA KOODATHU?\\இப்படியாக ஒரு கேள்வியையும் சேர்த்த்து எழுதியிருக்கிறீர்கள் எனக்கும் தமிழில் எழுதும் படியான கமெண்ட் பாக்ஸ் வசதி அமைக்க விருப்பம் ஆனால் எப்படி என தெரியாததுதான் இதற்கு முன் இன்னொரு நபரும் இதே கேள்வியை கேட்டிருந்தார் தயவு செய்து நீங்கள் ஏதாவது ஒரு தளத்தில் தமிழில் கமெண்ட் செய்யும் வசதி இனைக்கபட்டிருந்தால் அந்த தள முகவரியை இங்கு தரவும் நான் அவர்களிடம் கேட்டு நம் தளத்திற்கும் தமிழில் கமெண்ட வசதி அளிக்கும் வசதியை செய்து விடுவோம்.

  அடுத்ததாக நீங்கள்\\OTHER PEOPLE SENT COMMENTS IN TAMIL IN UR SITE.!! BU THERE IS NO OPTION HERE 2 WRITE IN TAMIL.THEN HOW THEY WROTE THE COMMENTS IN TAMIL? CAN U EXPLAIN ME ABOUT THIS MR.GNANASEKAR?)\\ இப்படியாக ஒரு கேள்வியையும் கேட்டிருக்கிறீர்கள் அதற்கு பதிலாக http://gsr-gentle.blogspot.com/2010/06/blog-post_9800.htmlஇந்த பதிவு தங்களுக்கு உதவுமென்றே நம்புகிறேன் மேலும் சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கருத்துரையில் பதியவும்

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்


  சிகப்பு மனிதன் said...
  November 26, 2010 at 10:42 PM

  .இப்படி தான், ஒரிஜினல் ACD'களை, மாறுகிறார்களா ?
  (மேலே saifகாக, குறிப்பிட்டிருந்த லிங்கில், "இந்த" எனும் வார்த்தையும், சேர்ந்து விட்டதால், "page does not exist" என்ற பிழை செய்தி ப்ரௌசரில் (BROWSER) தெரிகிறது).

  திருத்தப்பட்ட லிங்க் :

  http://gsr-gentle.blogspot.com/2010/06/blog-post_9800.html


  ஜிஎஸ்ஆர் said...
  November 27, 2010 at 9:18 AM

  @சிகப்பு மனிதன்ஆம் நண்பரே நீங்கள் காப்பி எடுக்கும் போது URL மட்டும் காப்பி எடுக்கவேண்டும்


  rtvenkat said...
  April 23, 2012 at 1:36 AM

  ந்ல்ல பதிவு நண்பரே! 5.1 ஹோம் தியேட்டரில் கேட்க,எம்பி3 பாடலை அல்லது AVI வீடியோவை 5.1 ஆக மாற்றி DVD-ல் Write செய்ய முடியுமா? உதவுங்கள் ப்ளீஸ்!


  ஜிஎஸ்ஆர் said...
  April 23, 2012 at 8:01 PM

  @rtvenkatஇரண்டு நாட்கள் பொறுத்திருங்கள் உங்களுக்கு ஒரு பதிவு எழுதி விடுகிறேன் ஒரு வேளை கூடுதலாக கூட சில நாட்கள் தேவைப்படலாம் தேவைப்பட்டால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி விடுங்கள்..


  rtvenkat said...
  April 29, 2012 at 4:57 PM

  @ஜிஎஸ்ஆர்தங்களின் பதில் கண்டு மிக்க மகிழ்ச்சி நண்பரே! ஒவ்வொருவரின் கேள்விக்கும் தாங்கள் கொடுக்கும் மதிப்பு, அக்கறை ஆச்ச‌ர்யப்பட வைக்கிறது. மிக்க மகிழ்ச்சி! பரவாயில்லை நண்பரே. உங்களால் முடியும்பொழுது பதிவிடுங்கள். காத்திருக்கிறேன்(றோம்).


  ஜிஎஸ்ஆர் said...
  May 8, 2012 at 4:06 PM

  @rtvenkatஉடனே பதிலும் எழுத முடியவில்லை, பதிவும் எழுத முடியவில்லை இருப்பினும் தங்களுக்கு மின்னஞ்சல் வழியாக பதில் அனுப்பியிருக்கிறேன் உங்கள் மின்னஞ்சலை பார்க்கவும்.


  rtvenkat said...
  May 15, 2012 at 7:05 PM

  மிக்க நன்றி நண்பரே! ஆனாலும் மின்னஞ்சல் ஏனோ வந்து சேரவில்லை. முடிந்தால் மீண்டும் அனுப்பி வைக்கவும். சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். உங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம். நன்றி!


  ஜிஎஸ்ஆர் said...
  May 16, 2012 at 10:20 AM

  @rtvenkatமன்னிக்கவும் நண்பரே நேற்று தான் சரி பார்த்தேன் மின்னஞ்சல் பவுன்ஸ் ஆகியிருக்கிறது தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பும் போது நீங்கள் கொடுத்திருந்த மின்னஞ்சல் முகவரி சரியானதா என்பதை சரி பார்க்கவும்.

  மீண்டும் தளம் வழியாக மின்னஞ்சல் கொடுக்கும் போது தற்போது பயன்பாட்டில் இருக்கும் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் நலம்.


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர