Oct 24, 2010

43

டோரண்டில் தரவிறக்கமும் டேட்டா பகிர்வும்

  • Oct 24, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: புத்திமதி விளக்கெண்ணைய் போன்றது கொடுப்பது சுலபம், குடிப்பது கடிணம்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு ரோரண்ட் பற்றியது நிறைய நண்பர்களுக்கு இந்த டோரண்ட் பற்றி தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத நண்பர்கள் இருக்கக்கூடும் சமீபத்தில் தான் நண்பர் ஒருவர் இதைப்பற்றி கேட்டிருந்தார் நானும் எனக்கு தெரிந்த வரையில் அவருக்கு சொல்லிக்கொடுத்தேன் ஆனால் மீண்டும் இரண்டு நாள் இடைவெளியில் ரோரண்ட் பைலை கண்டுபிடித்ததாகவும் ஆனால் அளவு வெறும் 8கேபி மட்டுமே இருக்கிறது இதை எப்படி இன்ஸ்டால் செய்வது என கேட்கிறார் இத்தனைக்கும் தினம் கணினி உபயோகிப்பவர் தான்! சரி இதை பற்றி எழுதினால் நம் நண்பர்களுக்கும் உதவுமே என்கிற எண்ணமே இந்த பதிவின் நோக்கம்.

    இந்த டோரண்டில் ஒரு சிறப்பு இருக்கிறது நீங்கள் எந்த தளத்திலும் உங்கள் டேட்டக்களை அப்லோட் செய்யாமலே நீங்கள் விரும்புவர்களுக்கு எளிதாக தரவிறக்க கொடுக்க முடியும் உதாரணமாக 4ஜிபி உள்ள உங்கள் திருமண வீடியோவை அப்லோட் செய்து பகிர்வது என்றால் கொஞ்சம் நினைத்து பாருங்கள் பொதுவாகவே நமக்கு இருக்கும் தரவிறக்க வேகத்தில் பாதியே இருக்கும் அப்லோட் வேகம் இந்நிலையில் டேட்டாவை பகிர்ந்துகொள்வது என்பது எளிதான காரியமில்லை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதை எளிதாக்கவே டோரண்ட் இருக்கிறது டோரண்ட் கிளையண்ட் கணினியில் நிறுவியவுடன் உங்கள் கணினியும் கிட்டத்தட்ட ஒரு வழங்கி போல செயல்பட்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில் இதன் வழியாக உங்கள் வீடியோக்களை அல்லது பிற டேட்டாக்களை பகிர்ந்து கொள்ளும் போது அவசியம் பாஸ்வேர்ட் இட்டு பகிரவும் ஏனென்றால் உங்கள் பைல் டோரண்டில் இனைக்கபட்டதும் அது யாருக்கும் அனுகும் வகையில் இருக்கும் எனவே அவசியம் பாஸ்வேர்ட் பாதுகாப்பு தேவை.

    இனி நீங்கள் செய்யவேண்டியது டோரண்ட் கிளையண்ட்
    தரவிறக்கி கணினியில் நிறுவவும் அளவு வெறும் 300கேபிக்குள் தான். நிறுவி முடித்ததும் கீழிருக்கும் படத்தில் இருப்பது போல இருக்கும்.



    இப்போது டோரண்டின் கிளையண்ட் உங்கள் கணினியில் நிறுவப்பட்டு விட்டது இனி டோரண்டில் நமக்கு தேவையானதை எப்படி தேடுவது என பார்க்கலாம். டோரண்டில் தேடுவதற்கு என்றே ஒரு தளம் இருக்கிறது Torrentz
    இங்கே சென்று நமக்கு வேண்டியதை தேடவும் நான் ஏதோ ஒன்றை தேடியதை உங்களுக்காக கீழே படங்களாக இனைத்திருக்கிறேன்.



    இனி நீங்கள் தேடிய பைல் கிடைத்ததும் அதில் இருக்கும் சீடர்ஸ் மற்றும் லீச்சர்ஸ் இரண்டையும் பாருங்கள் இதில் நீங்கள் முக்கியமாக கவணிக்க வேண்டியது சீடர்ஸ் எண்ணிக்கை சீடர்ஸ் எண்ணிக்கையை பொறுத்து உங்கள் தரவிறக்க வேகம் மாறுபடும் இந்த பைலை பார்த்தீர்களா சீடர்ஸ் எண்ணிக்கை 42 இருக்கிறது லீச்சர்ஸ் எண்ணிக்கை 24 இருக்கிறது அதோடு Good என்பதாகவும் வாக்களித்திருக்கிறார்கள்.

    இனி மேலே நான் அடையாளம் காண்பித்துள்ள பைலை கிளிக்கியது கீழிருக்கும் படத்தில் உள்ளது போல வேறு ஒரு விண்டோவிற்கு அழைத்துச்செல்லும் மேலே உள்ள படம் டோரண்டில் இருக்கிறதா என்பதை அறிய ஆனால் கீழிருக்கும் இந்த படம் எந்தெந்த தளங்களில் நாம் தேடிய தரவிறக்கம் டோரண்டாக கிடைக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இனி இங்கு கிளிக்குவதன் மூலம் நாம் பைல் கிடைக்கும் இடத்தை அடைந்து விடலாம்.



    நான் BITSNOOP.COM தளத்திற்கு சென்றேன் இதில் பாருங்கள் பைலின் பெயர் அதன் அளவு எத்தனை நாட்களுக்கு முன்பு அப்லோட் செய்யப்பட்டது பாசிட்டிவ் கருத்துக்கள், நெகட்டிவ் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் வாக்கு என எல்லா தகவல்களும் கொடுத்திருக்கிறார்கள் இதைப்போலவே எல்லா தளங்களும் இருக்கும் என்பதில்லை ஒவ்வொரு தளங்களும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் அதை எல்லாம் நீங்களாகவே தெரிந்துகொள்வீர்கள்.



    இந்த BITSNOOP.COM தளத்தில் வலது பக்கம் பாருங்கள் ஒரு ஒரு அடையாளம் கொடுத்துள்ளேன் அது தான் நீங்கள் தரவிறக்க போகும் டேட்டாவின் டோரண்ட் பைல் அதை தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் அளவு அதிகபட்சம் 50-60 கேபி-க்குள் இருக்கும்.



    இப்போது நீங்கள் டோரண்ட் பைல் தரவிறக்கி விட்டீர்கள் இனி நாம் முதலிலேயே டோரண்ட் கிளையண்ட் கணினியில் நிறுவினோமே அதை திறந்து கீழிருக்கும் படத்தில் நான் அடையாளம் காண்பித்துள்ள Add என்பதை கிளிக்கி டோரண்ட் பைல் இருக்கும் இடத்தை பிரவுஸ் செய்து ஓக்கே கொடுத்து விடுங்கள் அவ்வளவு தான், இப்படித்தால் Add செய்ய வேண்டுமென்பதில்லை நீங்கள் தரவிறக்கிய டோரண்ட் பைலை இருமுறை கிளிக்கினாலே நேரடியாக டோரண்ட் கிளையண்டிற்கு கொண்டு வந்துவிடும்.



    இனி உங்கள் தரவிறக்கம் தொடங்கிவிடும் இதிலே எல்லாவற்றையும் காண்பிக்கும் உங்கள் தரவிறக்க வேகம், நீங்கள் அப்லோட் செய்யும் வேகம் என மொத்த தகவல்களையும் காண இயலும் இன்னும் இதில் நாம் பத்து பைல்களை இனைத்திருந்தால் எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் எப்பொழுது அப்லோட் செய்ய அனுமதிக்கலாம் என நிறைய செட்டிங்ஸ் இருக்கிறது பதிவின் நீளம் போதுமான நேரமின்மை இப்படி எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இத்துடன் நிறைவு செய்கிறேன் சந்தேகம் இருப்பின் கேட்கலாம் முடிந்தவரை உதவுகிறேன் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தையும் மறக்க வேண்டாம் உங்களின் தரவிறக்கத்திற்கு இலவச நேரம் இருக்கிறதென்றால் அந்த நேரத்திலேயா டோரண்டில் தரவிறக்குங்கள் உங்களுக்கு அன்லிமிட்டட் இனைய இனைப்பு இருந்தால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை.

    சரி தரவிறக்க வேகம் குறைவாக இருக்கிறதா எனது முந்தைய பதிவான யூ டோரண்ட் தரவிறக்க வேகம் அதிகரிக்க (Torrent Speed 25% முதல் 40%)
    பாருங்கள் நிச்சியம் நல்ல மாற்றம் தெரியும்.

    நல்லாயிருக்கு நண்பா இதை தவிற இந்த டோரண்டில் தரவிறக்க வேறு ஏதாவது வழி இருக்கா என கேட்பவர்கள் எனது முந்தையை பதிவான டோரண்ட் தேடலும் ஓப்ரா தரவிறக்கமும்
    பாருங்கள் இனியும் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேளுங்கள் முடிந்தவரை உதவுகிறேன்.

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    43 Comments
    Comments

    43 Responses to “டோரண்டில் தரவிறக்கமும் டேட்டா பகிர்வும்”

    Raja said...
    October 24, 2010 at 10:52 AM

    Super Explanation


    மாணவன் said...
    October 24, 2010 at 1:36 PM

    அருமை நண்பா,
    தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளம்படியாகவும் அழகாக எழுதியுள்ளீர்கள்
    சூப்பர்.... மென்பொருள் பயனுள்ள தேவையான ஒன்றுதான் பயன்படுத்திபார்க்கிறேன்.
    உங்கள் பணி மென்மெலும் சிறக்க வேண்டும்
    என்றும் நட்புடன்
    உங்கள் மாணவன்


    Sugumarje said...
    October 24, 2010 at 3:13 PM

    Greets :) தொடரட்டும் பணி


    balakrishna said...
    October 24, 2010 at 3:31 PM

    நண்பா, இதில் இருந்து download செய்வது legal அல்லது illegalல. மிக அருமையான பதிவு நான் இப்போது utorrent download செய்துவிட்டேன்.
    உங்கள்
    பால்கி


    ம.தி.சுதா said...
    October 24, 2010 at 3:55 PM

    அருமையாக விளக்கியுள்ளிர்கள் நன்றி.. இந்த இடத்தில் ஒரு சந்தெகம் சானும் கிரக் பண்ணிய விண்டோ 7 தான் பாவித்தேன் அத கொஞ்ச நாளில் ஜெனீயுனிற்கு மாறும்படி கேட்டு வேகம் குறைந்துவிட்டது இப்போ பழையபடி எக்ஸ்பி ற்கு மாறிவிட்டேன்... ஆனால் எனக்க 7 தான் விருப்பம்.. ஏதாவது மாற்று வழியிரக்கா.. நீங்க இதைப்பற்றி சட்டவிரோதம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் ஒரு ஏழைக்கான உதவியாக நினைத்தச் செய்யுங்கள் (காரணம் மற்றவனை எப்ப தட்டி விழுத்தலாம் என்றே ஒரு கூட்டம் அலைகிறது..)


    எஸ்.கே said...
    October 24, 2010 at 4:11 PM

    மிக அருமையாக விவரித்துள்ளீர்கள்! சிறப்பான பதிவு நன்றி!
    யூடோரண்ட் பிட்டோரண்ட் என்ன வித்தியாசம்!
    நான் பிட்டோரண்ட் பயன்படுத்துகிறேன்!


    முத்து said...
    October 24, 2010 at 4:43 PM

    கலக்குறீங்க வாழ்த்துக்கள்


    Unknown said...
    October 24, 2010 at 6:00 PM

    Torrent ல நீங்க சொன்ன settings எல்லா மாத்தினதுக்குப் பிறகு upload rate ம் கூட கண்ணாபிண்ணானு ஏறிடுச்சே, என்ன பண்றது?


    மரா said...
    October 24, 2010 at 8:14 PM

    சூப்பர் சூப்பர் தல..வாழ்த்துக்கள்.


    ஜிஎஸ்ஆர் said...
    October 24, 2010 at 11:28 PM

    @Rajaதங்களின் சரியான புரிதலுக்கு நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 24, 2010 at 11:29 PM

    @மாணவன்பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கு டோரண்ட் அருமை புரியும்


    ஜிஎஸ்ஆர் said...
    October 24, 2010 at 11:29 PM

    @Sugumarjeஉங்கள் ஆதரவோடு தொடர்கிறேன் நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 24, 2010 at 11:31 PM

    @balakrishnaடோரண்டில் சட்டபூர்வமான மென்பொருளும் கிடைக்கும் விலையுயர்ந்த மென்பொருளும் சினிமாவும் கிடைக்கும் நீங்கள் தரவிறக்கும் மென்பொருளை பொருத்தது Legal, Illegal இரண்டுமே


    ஜிஎஸ்ஆர் said...
    October 24, 2010 at 11:34 PM

    @ம.தி.சுதாஇதை தரவிறக்கி பாருங்கள் உங்கள் பிரச்சினை தீரக்கூடும்
    http://www.4shared.com/file/FsdfH-yI/Windows_7.html


    Sekar said...
    October 24, 2010 at 11:35 PM

    simple explanation for new comers


    ஜிஎஸ்ஆர் said...
    October 24, 2010 at 11:35 PM

    @எஸ்.கேஇரண்டுமே கிளையண்ட் தான் சிலருக்கு சில வடிவமைப்பு பிடிக்கும் மேலும் உதராணத்துக்கு நாம் பயன்படுத்தும் பிரவுசர் போல


    ஜிஎஸ்ஆர் said...
    October 24, 2010 at 11:36 PM

    @முத்துஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பா உங்களை போன்ற படித்தால் தான் இது பிரபல பதிவு யாரும் படிக்காவிட்டால் இது எப்படி கலக்கும், நண்பரே நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    October 24, 2010 at 11:38 PM

    @Dhanaடோரண்ட் கிளையண்ட் திறந்து settings திறக்கவும் http://i55.tinypic.com/291ztjm.jpg


    ஜிஎஸ்ஆர் said...
    October 24, 2010 at 11:40 PM

    @Sekarதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 24, 2010 at 11:41 PM

    @மராதங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா


    Umapathy said...
    October 25, 2010 at 6:06 AM

    அருமையான பதிப்பு


    மாணவன் said...
    October 25, 2010 at 6:13 AM

    அன்பின் நண்பர் ஜிஎஸ்ஆர்,
    சின்ன உதவி வேண்டும் நண்பரே
    என்னுடைய வலைப்பக்கத்தில் உங்களுடைய தளத்தையும் மற்ற நண்பர்களின் தளத்தையும் அப்புறம் நீங்கள் இடுகின்ற பதிவுகளும் டிஸ்பிளே செய்வது பொன்ற இனைப்பு கொடுக்கலாம் என்றிருக்கிறேன் அதை எவ்வாறு செய்வது என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.
    உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கும்
    உங்கள். மாணவன்


    Blogger said...
    October 25, 2010 at 9:53 AM

    Rather than torrents file hosting sites give better speeds.
    Also torrents are more susceptible for malware.


    NaSo said...
    October 25, 2010 at 11:56 AM

    பயனுள்ள தகவல்கள். utorrent scheduler பற்றி விளக்கமுடியுமா நண்பா?


    Unknown said...
    October 25, 2010 at 1:14 PM

    மிக அருமையாக விவரித்துள்ளீர்கள்!


    ஜிஎஸ்ஆர் said...
    October 25, 2010 at 10:35 PM

    @மாணவன்உங்களுக்கான பதிவு எழுதியாகிவிட்டது நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    October 25, 2010 at 10:37 PM

    @The Rebelஉண்மைதான் நண்பா அதே நேரத்தில் வைரஸ் இருப்பதும் உண்மைதான் அதற்காகத்தான் அதில் இருக்கும் கமெண்ட் மற்றும் வாக்கு சீடர்ஸ் லீச்சர்ஸ் எண்ணிக்கையை கணக்கில் எடுத்து தரவிறக்க வேண்டும்


    ஜிஎஸ்ஆர் said...
    October 25, 2010 at 10:38 PM

    @நாகராஜசோழன் MAsettings திறக்கவும் http://i55.tinypic.com/291ztjm.jpg


    ஜிஎஸ்ஆர் said...
    October 25, 2010 at 10:38 PM

    @இசைப்பிரியன்வரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 25, 2010 at 10:39 PM

    @உமாபதிபுரிதலுக்கு நன்றி நண்பா


    Anand said...
    November 4, 2010 at 11:36 PM

    Just now I'm seeing this site. Really, I'm trying to use this torrent, but not able to get any help. But this will help me a lot


    ஜிஎஸ்ஆர் said...
    November 6, 2010 at 9:38 AM

    @Anandஇதைப் போலவே இன்னும் நிறைய பயனுள்ள தகவல்கள் நம் தளத்தில் காணப்படும் நேரம் கிடைக்கும் போது பாருங்கள் ஒருவேளை இதில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ளலாம்.

    தொடந்து இனைந்திருந்தால் நலம்


    Unknown said...
    November 6, 2010 at 10:59 AM

    உபயோகமான தகவலை எளிமையாக விளக்கியதற்கு நன்றி ! வாழ்த்துக்கள் சார் !


    ஜிஎஸ்ஆர் said...
    November 6, 2010 at 10:08 PM

    @குழந்தை நல மருத்துவன்!வணக்கம் நண்பரே நலம் நலமறிய ஆவல். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே


    karuna.a said...
    November 7, 2010 at 7:28 AM

    GR8... its helped me a lot!!


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:22 AM

    .இது தான், நான் தங்கள், வலைப்பூவில் படித்த முதல் பதிவு !! (on nov mon starting...)


    .அப்போது எனக்கு பரீட்சை நடந்து கொண்டிருந்த காரணத்தால், என்னால்
    தொடர்ந்து தினமும் படிக்கமுடியவில்லை !!

    .torrent செயல்பாடு விளக்கமாக தெரிந்துகொண்டேன் ....


    .தங்களின் எழுத்தானிக்கு நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:03 PM

    @karuna.aதங்களை போன்ற நண்பர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே நமது நோக்கமும்


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:04 PM

    @சிகப்பு மனிதன் நன்றி நண்பரே இனி வரும் காலங்களில் நம் தளத்தோடு இனைந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:14 PM

    .நிச்சயமாக, ஆசிரியரே !!


    தேவா said...
    December 9, 2010 at 7:11 AM

    நீங்கள் அளித்துள்ள விண்டோ 7 லிங்கை பயன்படுத்தி பார்த்தேன் நல்லமுறயில் வேலை செய்கிறது உதவிக்கு நன்றி உங்கள் பணி மேலும் தொடற வாழ்த்துக்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    December 9, 2010 at 9:37 AM

    @தேவா சந்தோஷம் முடிந்தால் தொடர்ந்து இனைந்திருங்கள்


    victory said...
    December 28, 2010 at 7:43 AM

    Dear Friend,

    Thanks a lot for urn valuable tips and guidance.Recentlly. I downloaded and
    Installed winmend doctor but how to register to get the full benefits.pl. tell me
    Is it a free version?
    With thanks
    venkatesh tsvmpm@gmail.com


    ஜோதிஜி said...
    March 29, 2013 at 10:05 PM

    ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்த விசயம்.நன்றி.


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர