Oct 7, 2010
விர்ச்சுவல் டிரைவ் (மாய யக்கி) Virtual Drive
வணக்கம் அன்பின் நண்பர்களே நமது பதிவில் கருத்துரை வழியாக நண்பர் ஒருவர் விர்ச்சுவல் டிரைவ் பற்றி எழுதுமாறு கேட்டிருந்தார் அவர் வேண்டுக்கோளுக்கிணங்க இந்த பதிவை எழுதுகிறேன் இதில் என்ன ஒரு விஷேசம் என்றால் இந்த பதிவு எழுதும் வரை நான் விர்ச்சுவல் டிரைவ் உபயோகபடுத்தியிருக்கவில்லை அல்லது அதற்கான தேவை ஏற்படவில்லை அதனால் ஆரம்பத்தில் சிறிய தயக்கம் ஒரு விஷயத்தை சோதித்து பார்க்காமல் எழுதுவது என குழம்பியிருந்தேன் பின்னர் நண்பர் மகாராஜன்கேம்ஸ் இருக்கிறதா என்று கேட்டு அப்படியே அவரிடம் இதை பற்றியதான சந்தேகத்தையும் கேட்டிருந்தேன் உடனே அவர் அது குறித்தான தகவலை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார் என்னதான் ஆங்கில தளங்களை வாசித்து வைத்திருந்தாலும் அனுபவரீதியாக உணராமல் செய்வது என்பது என்னைப் பொறுத்தவரை சரியாய் இருக்காது நீங்களும் அப்படித்தானே!
இந்த பதிவில் அவர் எழுதியது நல்ல பதிவு. தொடருங்கள்....
ஒரு லேப்டாப்பில் 'Virtual Drive' உருவாக்கி CD image copy செய்வது எப்படி என்று விளக்கவும். (அடிக்கடி CD போட்டு games விளையாடும் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்)
சரி நண்பர்களே இந்த விர்ச்சுவல் டிரைவ் என்பது எதற்காக என்பதை சிறிய விளக்கமாக பார்த்துவிடுவோம் இந்த விர்ச்சுவல் டிரைவ் கணினியில் நம்மிடம் இருக்கும் ஒரு சிடி, டிவிடி ரோம் அல்லது வண்தட்டு இப்படி எதையும் அது போலவே ஒரு நகல் உருவாக்குவது அதாவது ஒரு ஏமாற்று வேலை தான் இது. நம்மிடம் ஒரு ஐஎஸ்ஓ(ISO) பைல் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதன் அளவு 7ஜிபி இருக்கிறது கடையில் அதற்கும் மேலான அளவுள்ள குறுந்தகடுகள் கிடைக்கின்றன ஆனால் நம்மிடம் இருப்பதோ சாதரண டிவிடி 4.70ஜிபி அளவுள்ளது ஆனால் நம் கணினியில் வண்தட்டில் போதுமான அளவு இருக்கிறது என வைத்துகொள்வோம், இப்போது நாம் அந்த ஐஎஸ்ஓ(ISO) பைலை எரிக்காமாலே அல்லது குறுந்தகடில் மாற்றமாலே நேரடியாக கணினியில் இருந்தே விளையாடபோகிறோம் இதனால் கணினியின் வேகமும் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. விளையாட்டு மட்டுமல்ல மென்பொருள்களுக்கும் பொருந்தும், இந்த பிரச்சினைக்கு தீர்வாகத்தான் நாம் பார்க்க போகிற விர்ச்சுவல் டிரைவ் உதவப்போகிறது.
பொதுவாகவே விளையாட்டு மென்பொருள்கள் அதிக அளவுள்ளதாகவும் கிராப்பிக்ஸ் கார்டு பிரச்சினையும் இருக்கும் உங்களின் கணினியில் கிராப்பிக்ஸ் கார்டு சரியில்லை என்றால் சில விளையாட்டுக்களை விளையாட முடியாது இது உங்கள் கவணத்திற்கு மட்டுமே மற்றபடி இதற்கும் விர்ச்சுவல் டிரைவுக்கும் சம்பந்தமில்லை.
விளையாட்டு வகையில் வரும் மென்பொருள்கள் சில கணினியில் இன்ஸ்டால் செய்தால் போதும், இன்னும் சில கணினியில் இன்ஸ்டால் செய்யவும் வேண்டும் அதே நேரத்தில் அந்த குறுந்தகடும் வேண்டும் விளையாடுவதற்கு, இன்னும் சிலவற்றில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக குறுந்தகடை உங்கள் சிடி,டிவிடி ரோமில் இட்டு விளையாடலாம் எது எப்படியிருந்தாலும் இந்த எல்லாவற்றுக்குமே இந்த விர்ச்சுவல் டிரைவ் ஒரு தீர்வாக இருக்கும் மேலும் அடிக்கடி சிடி,டிவிடி இட்டு விளையாடுவதால் குறுந்தகடில் ஏற்படும் கிராக் பிரச்சினை இருக்காது பத்திரமாக இருக்கும்.
நான் இதற்காக உங்களுக்கு மூன்று வித மென்பொருளை பரிந்துரை செய்யப்போகிறேன் இதில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அல்லது எளிமையாய் இருப்பதாய் நினைக்கிறீர்களோ அதை பயன்படுத்தி பாருங்கள்.
Magic ISO Maker & Creator
இந்த Magic ISO Maker தரவிறக்கி கணினியில் நிறுவுவதன் மூலமாக எந்த ஒரு மென்பொருளையும் அல்லது எதுவாக இருந்தாலும் இமேஜ்(ISO) ஆக மாற்றலாம்.
இனி மேஜிக் ஐஎஸ்ஓ மென்பொருளை வழக்கமாக நிறுவும் முறையிலே நிறுவி விடுங்கள் இனி டெஸ்க்டாப்பில் அமர்ந்திருக்கும் ஷார்ட்கட் ஐகானை இருமுறை கிளிக்குவதன் மூலம் கீழிருக்கும் விண்டோ வந்திருக்கும் இதன் வழியாக நாம் ஒரு மென்பொருளை ஐஎஸ்ஓ-வாக (ISO)மாற்றலாம் இனி படத்தில் நான் அடையாளம் காண்பித்துள்ள வழிமுறைப்படி செய்யுங்கள் நீங்கள் புரிந்துகொண்ட பின்பு உங்களுக்கான ஒரு வழியை உருவாக்கிகொள்வீர்கள் என தெரியும். நான் கொடுத்துள்ள வழிமுறை கணினியில் இருக்கும் ஒரு மென்பொருளை ஐஎஸ்ஒ-வாக மாற்றுவதை பற்றித்தான் ஒருவேளை நீங்கள் குறுந்தகடை சிடி ரோமில் இட்டிருந்தால் கீழிருக்கும் இத்தனை வேலைகளையும் செய்யவேண்டியிருக்காது நான் குறிப்பிட்டுள்ள மவுண்ட் பட்டனை கிளிக்கினால் போதும்.
இனி இப்படியாக ஒரு விண்டோ வரும் இதில் அடையாள படுத்தி எண் கொடுத்துள்ள வரிசையை பின்பற்றி செய்துவிடுங்கள் அவ்வளவு தான் இப்போது வெற்றிகரமாக நீங்கள் ஒரு மென்பொருளை இமேஜ் பைலாக மாற்றியிருப்பீர்கள்.
இப்போது உங்களிடம் இமேஜ் பைல் தயாராக இருக்கிறது அதை எப்படி விர்ச்சுவல் டிரைவில் இனைப்பது என பார்க்கலாம் அதற்கு முன்பாக நீங்கள் எக்ஸ்பி இயங்குதளம் என்றால் மட்டும் Magic Virtual Disc Creator மென்பொருளை தரவிறக்கி கணினியில் வழக்கம் போலவே நிறுவி விடுங்கள். அல்லாத நபர்கள் Magic ISO Creator சென்று உங்கள் இயங்குதளத்திற்கு தேவையானதை தரவிறக்கவும்.
இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நீங்கள் உருவாக்கிய இமேஜ் பைல் இப்படியாக இருக்கும் இதை விர்ச்சுவல் டிரைவில் இனைப்பதற்கு வலது கிளிக்கில் கீழிறுக்கும் படத்தில் உள்ளது போல செய்தால் போதும் நீங்கள் இனிமேல் குறுந்தகடு இல்லாமலே விளையாடலாம் இதில் G என இருப்பது உங்கள் கணினியில் டிவிடி ரோம் ஏற்கனவே G என இருந்தால் H என வரும். இந்த இமேஜ் பைலை வின்ரார் வழியாக எக்ஸ்ட்ராக்ட் செய்து பார்க்கவும் முடியும்.
இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நாம் உருவாக்கிய விர்ச்சுவல் டிரைவ் இருக்கும் ஆரம்பத்தில் நமது கணினியில் ஏற்கனவே இருந்த டிரைவ் போலவே இருக்கும் நீங்கள் பைலை மேலே இருக்கும் படத்தில் சொன்னதுபடி இனைத்ததும் சில எண்கள் இட்டு விர்ச்சுவல் சிடி ரோம் இருக்கும்.
சரி இப்படி எத்தனை டிரைவ்கள் நாம் உருவாக முடியும் , இவர்கள் நம்மை நான்கு டிரைவ்கள் உருவாக்க அனுமதிக்கிறார்கள் கீழிருக்கும் படத்தை பாருங்கள் புரியும் இதன் வழியாக நான்கு டிரைவ்கள் உருவாக்கினால் நான்கு விளையாட்டு சிடிகளை இமேஜ் ஆக மாற்றி நான்கிலும் சேமித்து வைக்கலாம் தேவையில்லாத நேரத்தில் இதை டிசாபிள் செய்து வைக்கவும் முடியும் இதனால் பைல் அழிந்து போகாது.
Power ISO Maker & Creator
மேலை பார்த்த மென்பொருள் செய்ததை தான் இதுவும் செய்யப்போகிறது Power ISO தரவிறக்கம் எனவே இதை பற்றி கூடுதல் எழுதப்போவதில்லை எல்லாவற்றிற்கும் படத்தை இனைத்திருக்கிறேன் நிச்சியமாக உங்களுக்கு எளிமையாக புரியும்.
நீங்கள் இன்ஸ்டால் செய்து முடித்ததும் திறந்தால் கீழிருக்கும் விண்டோ திறக்கும் இதன் வழியாக உங்கள் கணினியில் இருக்கும் அல்லது குறுந்தகடில் இருக்கும் ஒரு மென்பொருளை அல்லது இன்ன பிற பைல்களை எளிதாக படத்தில் காட்டியுள்ள வழிமுறையை பின்பற்றி இமேஜ் (ISO) ஆக மாற்றி விடலாம்.
இனி உங்களிடம் இருக்கும் இமேஜ் பைலை வேண்டுமானால் திறந்து பார்க்க கீழிருக்கும் படத்தில் உள்ள வழிமுறையை பின்பற்றலாம்.
நீங்கள் மாற்றிய இமேஜ் பைல் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல இருக்கும் அதை எலியால் வலது கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு தேவையான விர்ச்சுவல் டிரைவில் இனைக்கலாம் எக்ஸ்ட்ராக்ட் செய்யலாம், ஒரு முறை விர்ச்சுவல் டிரைவில் இனைத்தால் போதும் தானக அழிந்து போவதில்லை இதில் 8 டிரைவகள் வரை உருவாக்க முடியும்.
இனி இது போலவே மேலும் ஒரு மென்பொருள் மேலே பார்த்த இரண்டையும் விட கொஞ்சம் அதிக திறனுடன் இருக்கிறது மென்பொருளின் அளவு 100எம்பி இருக்கிறது இதை பற்றி நான் எழுத போவதில்லை காரணம் மேலே சொன்ன வழிமுறையை ஒத்ததுதான் விரும்புவர்கள் தரவிறக்கி பார்க்கலாம் Virtual_CD_Maker
உங்களிடம் இருக்கும் இமேஜ் பைல்களை நீரோவில் எரிக்க்லாம் நீரோ இல்லாதவர்கள் மேலே பார்த்த மென்பொருள் வழியாக எரிக்கலாம், இல்லை எனக்கு வேறு மென்பொருள் வேண்டும் என விரும்புவர்கள் இதை பயன்படுத்தி எரிக்கலாம் ISO_Burrn
மேலே சொன்ன எந்த மென்பொருளும் எனக்கு பிடிக்கவில்லை அதே நேரத்தில் என்னிடம் இருக்கும் ஐஎஸ்ஓ (இமேஜ்_ISO) பைலை எக்ஸ்ட்ராக்ட் செய்து பார்க்க ஏதாவது மென்பொருள் இருக்கிறதா என கேட்பவர்களுக்காக ISO_Extractor
என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும் இது போன்ற பதிவுகளை எழுதுவதற்கு சில நேரங்களில் தூக்கம் தொலைக்க வேண்டியிருக்கு.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
12 Responses to “விர்ச்சுவல் டிரைவ் (மாய யக்கி) Virtual Drive”
-
எஸ்.கே
said...
October 7, 2010 at 10:59 AMDaemon toolsஐ விட்டுடீங்களே! :-)
-
Umapathy
said...
October 7, 2010 at 11:19 AMபொதுவா நான் Win Rar ல Extract பன்னுவேன், ஆனால் எனக்கு வித்தியாசம் தெரியல
-
ம.தி.சுதா
said...
October 7, 2010 at 5:46 PMசகோதரா இந்த ஆக்கம் என் நண்பரக்க கட்டாயம் தேவைப்படும் அனுப்பிவைக்கிறென்...
-
மாணவன்
said...
October 8, 2010 at 12:24 PMபிரமாதம் நண்பா,
விர்ச்சுவல் டிரைவ்பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளீர்கள் நண்பரே
அருமை நிச்சயமாக பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
மாணவன் -
ஜிஎஸ்ஆர்
said...
October 8, 2010 at 1:38 PM@எஸ்.கேஅதன் சீரியல் கிடைக்காததால் விட்டு விட்டேன் நண்பா கிடைத்தால் அப்டேட் செய்துவிடுகிறேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
October 8, 2010 at 1:40 PM@உமாபதிஎல்லாமே ஒன்று தான் நான் இப்படியும் இருக்கிறது என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்வதற்காக மட்டுமே
-
ஜிஎஸ்ஆர்
said...
October 8, 2010 at 1:41 PM@ம.தி.சுதா நண்பர்களுக்கு பயன்படுவதற்காக தானே எழுதுகிறேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
October 8, 2010 at 1:42 PM@மாணவன்தங்கள் வரவிற்கும் சரியான புரிதலோடான கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா
-
Unknown
said...
October 8, 2010 at 10:27 PMநல்ல பதிவு . தொடரட்டும் சிறந்த பணி
-
ஜிஎஸ்ஆர்
said...
October 9, 2010 at 9:00 AM@Arul நன்றி நண்பரே
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 12:33 PM.சிறந்த விளக்கங்களை, புகைப்படத்துடன் இணைத்து வெளியிட்டடுக்கு நன்றி !
.தங்கள் எழுட்டானிக்கு நன்றி ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 7:51 PM@சிகப்பு மனிதன்பயன்படுத்தி பாருங்கள் சிறப்பாக இருக்கும்
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>