Oct 30, 2010

30

கருத்துரை மட்டுப்படுத்துதல் அவசியமா?

  • Oct 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: பிறர் திறமையை திருடி உன் புத்திசாலித்தனத்தை காட்டாதே.

    இங்கு சில தளங்களில் நானும் எனக்கு தேவையான தெரியாத சில விஷயங்களை மற்றவர்களிடம் கேட்பதுண்டு அதில் எனக்கு எந்தவொரு அவமானமும் இல்லை காரணம் தெரியாத விஷயத்தை எனக்கு கற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் சில தளங்களில் கருத்துரைகளை மட்டுப்படுத்துதல் செய்திருப்பார்கள் என்னைப்பொருத்தவரை இந்த மாதிரியான தளங்களில் நமது சந்தேகத்தையோ பாரட்டுதலை கூட தெரிவிக்க விருப்பம் இருப்பதில்லை. இந்த மட்டுப்படுத்துதல் என்பது அவர்களை புகழ்ந்து ஆஹா அருமை சூப்பர், கலக்கிட்டிங்க, இன்னும் சில டெம்ப்ளேட் வாசகங்கள் மட்டும் உடனே வெளியிடப்படும் அல்லாமல் அதில் உள்ள குறைகளையோ அவர்களுக்கு தெரியாத விஷயங்களையோ கேட்டு விட்டால் போதும் நிச்சியமாக உங்கள் கருத்துரை வெளியிடப்பட மாட்டாது அதிலும் உங்களுடைய கருத்துரை முதாலாவதாக இருந்தால் நிச்சியம் வெளியிடப்பட மாட்டாது காரணம் நாம் கேட்டிருக்கும் சந்தேகமோ கேள்வியோ அல்லது சுட்டிக்காட்டியிருக்கும் விஷயமோ அவர்களுக்கு தெரியாது என்பதை நம் கேள்வி காட்டிக்கொடுத்து விடும் அதிலும் முதலாவதாக நம் கருத்துரை இருந்தால் அடுத்த கருத்துரை இட வருபர்கள் நிச்சியம் அதை படிக்கும் வாய்ப்பு இருக்கிறதே! அதை படிப்பவருக்கும் அந்த பதிவரின் திறன் தெரிந்துவிடுமே? அதற்காக அவர்கள் அந்த கருத்துரையை வெளியிடமாட்டார்கள் எனக்கும் இது போல் நேர்ந்திருக்கிறது.

    இந்த வலைத்தளத்தை பொருத்தவரை கருத்துரையும் வாக்கும் தான் பதிவை சிறப்பானதாக ஆக்குகிறது என்றால் நிச்சியம் மிகையில்லை ஆனால் இதில் நல்ல பதிவுகளும் பிரபல பகுதிக்கு வருகிறது ஒன்றுமில்லாத பதிவும் பிரபல பகுதிக்கு வருகிறது வெறும் காப்பி பேஸ்ட் செய்பவரின் பதிவும் பிரபல பகுதிக்கு வருகிறது. நல்ல பதிவுகளுக்கு கருத்துரை எழுதுகிறார்கள் ஆனால் ஒன்றுமில்லாத பதிவுகளில் கருத்துரையை கொட்டுகிறார்கள் இன்னும் சில வகை பதிவுகள் இருக்கின்றன முழுக்க முழுக்க ஆங்கில வலைத்தளங்களின் அச்சு நகல்கள் இவர்கள் சுயமாக ஒன்றுமே எழுதுவதில்லை அப்படியே ஆங்கில தகவல்களின் பதிவின் மூலத்தை காப்பி எடுத்து ஒட்டி விடுவார்கள் காரணம் அந்த மூலத்தில் அவர்களால் எந்த மாற்றத்தையும் செய்யமுடியாது காரணம் சிறிய மாற்றங்களும் தவறாக முடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் அதனால் அவர்கள் மூலத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கமல்ஹாசன் குணா படத்தில் மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் இடையில் போட்டுக்கொள்ள சொல்வாரே அந்த மாதிரி இவர்கள் கொஞ்சம் வசனத்தை சேர்த்து எழுதிவிடுவார்கள் பதிவு ஹிட் கருத்துரையோ அபாரம் இந்த வகையை சேர்ந்தவர்களும் கருத்துரையை மட்டுப்படுத்தியே வைத்திருப்பார்கள்.

    ஒரு பொதுவான இடத்திற்கு வந்துவிட்டு கூட்டத்தோடு கும்மாளமிடும் சகாக்களின் கருத்துரையை மட்டுமே வெளியிடுவதாக இருந்தால் எதற்காக பொதுவெளியில் உங்கள் கருத்துக்களை வெளியிடுகிறீர்கள், உங்களுக்கு எல்லாம் தெரிந்த்தாய் காட்டிக்கொள்கிறீர்கள்? தெரியாத விஷயத்தை தெரியாது என சொல்வதில் உங்களுக்கு என்ன கவுரவும் குறைந்துவிட போகிறது? உங்கள் கருத்துகளுக்கோ அல்லது பதிவிற்கு டெம்ப்ளேட் பின்னுட்டமிட்டால் சந்தோஷம் அல்லாது குறைகளையோ கேள்வியையோ கேட்டால் உங்களால் அதை வெளியிட முடியாது இது எப்படி தெரியுமா இருக்கிறது என்னை பற்றி புகழ்ந்தால் தான் கருத்துகளை வெளியிடுவேன் என்பது போலாக இருக்கிறது ஒரு பதிவிற்கு கருத்துரை அவசியம் ஆனால் அந்த கருத்துரை பதிவின் சாரம்சத்தை ஒத்து இருக்க வேண்டும் அதை விட்டு விட்டு சம்பந்தமே இல்லாமல் புகழ்பாடும் கருத்துக்களுக்கு அங்கு என்ன வேலை.

    நானே ஒரு சமுதாய சிந்தனை பதிவையோ அல்லது இன்ன பிற ஏதாவது ஒரு பதிவை எழுதுகிறேன் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த பதிவினை பற்றிய கருத்துரையை விவாதிக்காமல் நான் வந்துட்டேன் போய்ட்டேன் போன்ற பின்னுட்டங்கள் அவசியமா இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? இதைத்தான் விரும்புகிறீர்கள் என்றால் பொதுவில் ஏன் எழுதுகிறீர்கள்?

    இதை சம்பந்தபட்டவர்கள் பதில் சொல்ல நினைக்கலாம் (மனதுக்குள்) மட்டுறுத்தாவிட்டால் கருத்துரை வருவது தெரியாது ஏன் தெரியாது ஒவ்வொரு வலைப்பூவிலும் கருத்துரை பெட்டிக்கு கீழேயே ஒரு வசதி இருக்கிறது அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து விட்டாலே போதும் எல்லா கருத்துரைகளும் நேரடியாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்துவிடுமே எல்லாவற்றிற்கும் உங்களால் பதில் அளிக்க முடியும்.

    நான் கவணித்த சில பதிவர்கள் இருக்கிறார்கள் முழுவதும் ஆங்கில தளத்தின் பிரதியை மட்டுமே நான் அந்த தளத்தில் கண்டிருக்கிறேன் சரி காப்பி தான் எடுக்கிறீர்கள் குறைந்த பட்சம் உங்களுக்கு தான் எதையும் சொந்தமாக எழுத தெரியாது சரி எழுதியவரின் இனைய முகவரியை கொடுக்கலாமே என்றால் அதை கூட அவர்கள் வெளிப்படுத்துவதில்லை சரி அதை நாம் சுட்டிக்காட்டி கருத்துரையை எழுதினால் அதை அவர்கள் வெளியிடமாட்டார்கள் உங்கள் பக்கம் நேர்மை இருந்தால் அதை வெளியிட்டு அதற்கு பதில் அளித்திருக்க வேண்டும் உங்கள் பக்க நியாயத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் அது அல்லாமல் உங்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடும் என்பதால் வெளியிடாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்?

    படிக்க வரும் நண்பர்கள் அனைவருமே கருத்துரை எழுதுவதில்லை இன்னும் குறிப்பாக எல்லாமே கொடுக்கல் வாங்கல் தான் அதை படிப்பவர்களுக்கு புரியும் ஏதோ ஒரு சில நண்பர்கள் பதிவு பிடித்து போய் கருத்துரை எழுதுவார்கள் இன்னும் சில நண்பர்கள் அந்த பதிவிற்கு வாக்கு அளித்து இன்னும் பலரை சென்றடைய உதவுகிறார்கள் இதில் தான் பிரச்சினையே எல்லோருக்குமே ஹிட்ஸ் அவசியம் கருத்துரை அவசியம் ஓட்டு அவசியம். ஒரு பதிவு சிறப்பானதாக இருந்து அது பிரபல பகுதிக்கு வந்தால் அந்த நல்ல தகவல் மேலும் சிலரை எளிதாக சென்றடையும் அல்லாது ஒன்றுக்கும் உதவாத பதிவுகளை முன்னிலைபடுத்துவதால் அவர்களின் திறனையும் குறைத்து அவர்கள் தளத்தை படிப்பவர்களின் திறனையும் குறைக்கவே செய்கிறார்கள்.

    இதை படிக்கும் போது உங்கள் எல்லோருக்குமே தோன்றக்கூடும் இதில் நான் யாரை குறித்து எழுதியிருக்கிறேன் என சிந்திக்ககூடும் நிச்சியமாக இது யாரை குறித்தும் அல்ல அதே நேரத்தில் இது போன்ற தவறுகள் குறிப்பாக மற்றவரின் திறமையை திருடி தனது திறமையாக வெளிக்காட்டிக்கொள்ளும் சில அற்ப பதர்களுக்கு நான் பெயர் சொல்லாமலே அவர்களுக்கு புரிந்து விடும் நான் யாரை சுட்டியிருக்கிறேன் என! இதை படிக்கும் போது உங்களுக்கு உங்களேயே மையமாக வைத்து எழுதியிருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    30 Comments
    Comments

    30 Responses to “கருத்துரை மட்டுப்படுத்துதல் அவசியமா?”

    Anonymous said...

    October 30, 2010 at 1:06 PM

    சொன்னது சரிதான்..நாம் எப்படி நடந்து கொள்கிறோமே அதே போல பிறரும் நம்மிடம் நடந்து கொள்கிறார்கள்...நானும் யார் தளத்துக்கும் போகாமல் என் தளத்தில் மட்டும் இருந்துகொண்டே இருந்தால் பிறர் தளத்தில் கமெண்ட் போடாமல் இருந்தால் நன்றாக எழுதினாலும் யாரும் எனக்கும் கமெண்ட் போட மாட்டார்கள்..இதுதான் பதிவுலகம்..பதிவுலகம் எப்பொதும் நண்பர்களை சார்ந்தே இயங்குகிறது பெரும்பாலும் வாசகர்கள்,பதிவர்கள் ஒன்றே.. 250 பதிவுக்கு பின் தெரிந்து கொண்ட உண்மை இது.


    மாணவன் said...
    October 30, 2010 at 1:20 PM

    ///இங்கு சில தளங்களில் நானும் எனக்கு தேவையான தெரியாத சில விஷயங்களை மற்றவர்களிடம் கேட்பதுண்டு அதில் எனக்கு எந்தவொரு அவமானமும் இல்லை காரணம் தெரியாத விஷயத்தை எனக்கு கற்றுக்கொள்ள வேண்டும்///

    எனது கருத்தும் இதுதான் நண்பா,
    நமக்குத்தெரியாத ஒரு விசயத்தை யாராவது கேட்டால் தெரியவில்லை என்று உண்மையை ஒத்துக்கொள்வதில் நாம் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை
    மாறாக அந்த செய்தியை நாமும் சிந்தித்து கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஈடுபாடும் ஆர்வமும் அதிகரிக்கும் அல்லது முயற்சி செய்யவாவது தூண்டும்

    என்னைப்பொறுத்தவரை எந்த ஒரு தளத்திலும் ஒரு பதிவை படிக்கும்போது அந்த பதிவு சம்பந்தமான ஏதாவது கருத்துரையிடத்தான் நினைப்பேன்,
    இது பதிவு எழுதிவருக்கு ஊக்கமும் உற்சாகமாய் அமைவதோடு படிக்கும் வாசகர்களுக்கும் பதிவில் ஒரு புது செய்திகளை தெரிந்துகொள்ள உதவியாய் இருக்கும் அதை விட்டு விட்டு பதிவு வெளியிட்டவுடன் ‘வடை எனக்கே’ me the first' இதெல்லாம் தேவையில்லாதது. இது எனது கருத்து மற்றவர்களின் பார்வையில் எப்படி என்று தெரியவில்லை

    ”இந்த வலைத்தளத்தை பொருத்தவரை கருத்துரையும் வாக்கும் தான் பதிவை சிறப்பானதாக ஆக்குகிறது என்றால் நிச்சியம் மிகையில்லை ஆனால் இதில் நல்ல பதிவுகளும் பிரபல பகுதிக்கு வருகிறது ஒன்றுமில்லாத பதிவும் பிரபல பகுதிக்கு வருகிறது வெறும் காப்பி பேஸ்ட் செய்பவரின் பதிவும் பிரபல பகுதிக்கு வருகிறது. நல்ல பதிவுகளுக்கு கருத்துரை எழுதுகிறார்கள் ஆனால் ஒன்றுமில்லாத பதிவுகளில் கருத்துரையை கொட்டுகிறார்கள் இன்னும் சில வகை பதிவுகள் இருக்கின்றன”

    ஒன்றும் சொல்வதற்கில்லை இங்கேயும்[பதிவுலகில்] அரசியல்தான்
    இதைப்பற்றி மேலும் நான் சொல்லபோவதில்லை பதிவை படிப்பவர்களுக்கே புரியும்
    “கருத்துரை மட்டுப்படுத்துதல் அவசியமா? ”

    நல்ல ஒரு விரிவான அலசல்
    நிறைய விசயங்களை தெரிந்துகொண்டேன்
    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

    என்றும் நட்புடன்
    மாணவன்


    மாணவன் said...
    October 30, 2010 at 5:33 PM

    அன்பின் நண்பா,

    பதிவிற்கு ’கீழே இதையும் பாருங்களேன்’ என்ற Related posts widget சரியாக வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன் சரிபார்த்துக்கொள்ளுங்கள்

    நன்றி
    என்றும் நட்புடன்
    மாணவன்


    ம.தி.சுதா said...
    October 30, 2010 at 7:33 PM

    சகோதரா நான் பதிவுலகிற்குள் வரும் போது யுனிகோட் கூட எப்படி என்று தெரியாது சேர்ஜ் பொக்ஸ் ல் தட்டச்சிட்டு முதலாவது பதிவிட்டேன் ஆனால் இன்று இந்தளவுக்க ஓரளவேனும் விசயம் தெரியுது என்றால் எனக்கு உதவிய நண்பர்களைத் தான் நன்றி கூறணும்... ஐரி எழுதுபவர்களில் என் அதிகமான சந்தேகத்தை தீர்த்த பெருமை தங்களுக்கே உண்டு.. ஒருவரின் தளத்தில் இதுவரை 5 கேள்விக்கு மேல் அடித்தேன் ஆனால் ஒன்றுக்கும் பதிலில்லை...


    ம.தி.சுதா said...
    October 30, 2010 at 7:34 PM

    சகோதரா ஒரு உதவி hidden பண்ணிய பைலை எப்படிக் கண்டுபிடிக்கலாம்...
    முடிந்தால் உதவுங்கள் (அவசரமில்லை)


    மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...
    October 30, 2010 at 8:17 PM

    //ஒரு பதிவு சிறப்பானதாக இருந்து அது பிரபல பகுதிக்கு வந்தால் அந்த நல்ல தகவல் மேலும் சிலரை எளிதாக சென்றடையும் //

    பலரின் மனக்குமுறல்கள் இது. இப்போதெல்லாம் பதிவுதிரட்டிகளில் ஹிட் லிஸ்டில் இருக்கும் பதிவுகளில் பாதி செல்லாக்காசுதான். ப்ளாக்கில் படிக்கும் ஆர்வம் சிறிது குறையச் செய்கிறது என்பது உண்மையே.


    Unknown said...
    October 30, 2010 at 11:33 PM

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி . சில வலை பதிவுகளில் உங்களது கட்டுரையை அப்படியே காபி பேஸ்ட் பண்ணியுள்ளதை கண்டேன் . எனது கட்டுரைகளும் சில வலைபூக்களில் உள்ளன . என்ன செய்வது ?


    மாணவன் said...
    October 31, 2010 at 6:08 AM

    "ம.தி.சுதா said... 7
    October 30, 2010 6:04 PM

    சகோதரா ஒரு உதவி hidden பண்ணிய பைலை எப்படிக் கண்டுபிடிக்கலாம்...
    முடிந்தால் உதவுங்கள் (அவசரமில்லை)"

    //ஜிஎஸ்ஆர் said... 16
    October 23, 2010 7:40 AM

    @ம.தி.சுதாஇப்படி கண்டுபிடிக்கலாமே
    http://i53.tinypic.com/23r46j9.jpg//

    இதை முயற்சி செய்துபாருங்கள்

    இன்னும் சொல்லனும்னா

    my computerல் TOOLS சென்று foder options க்ளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் இரண்டாவதாக view என்ற ஃடேப் இருக்கும் அதை கிளிக் செய்து கீழே உள்ள advance settings பாருங்கள் அதில் Hiden files and folder என்று இருக்கும் அதில் "show hidden files and folder" இதை அடையாளப்படுத்தி apply செய்து ok கொடுங்கள்

    நன்றி
    நட்புடன்
    மாணவன்


    Good citizen said...
    October 31, 2010 at 4:21 PM

    Well said sir, most bloggers are like this type ( they don't publish opposite opinions) but one should ignore these types of bloggers

    Sorrry no time to wright in tamil
    Good article,best wishes


    தர்சிகன் said...
    October 31, 2010 at 7:26 PM

    "ம.தி.சுதா said... 7
    October 30, 2010 6:04 PM

    சகோதரா ஒரு உதவி hidden பண்ணிய பைலை எப்படிக் கண்டுபிடிக்கலாம்...
    முடிந்தால் உதவுங்கள் (அவசரமில்லை)"

    //ஜிஎஸ்ஆர் said... 16
    October 23, 2010 7:40 AM

    @ம.தி.சுதாஇப்படி கண்டுபிடிக்கலாமே
    http://i53.tinypic.com/23r46j9.jpg//

    இதை முயற்சி செய்துபாருங்கள்

    இன்னும் சொல்லனும்னா

    my computerல் TOOLS சென்று foder options க்ளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் இரண்டாவதாக view என்ற ஃடேப் இருக்கும் அதை கிளிக் செய்து கீழே உள்ள advance settings பாருங்கள் அதில் Hiden files and folder என்று இருக்கும் அதில் "show hidden files and folder" இதை அடையாளப்படுத்தி apply செய்து ok கொடுங்கள்

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    windows 7 எனில் start- - control panel-- floder options க்கு செல்லவும்

    நன்றி


    தர்சிகன் said...
    October 31, 2010 at 7:36 PM

    //...ஒரு வரி கருத்து: பிறர் திறமையை திருடி உன் புத்திசாலித்தனத்தை காட்டாதே....//
    இன்னும் ஒரு கருத்து : உண்மையே என்றும் அழியாப்புகழைத் தரும்.

    நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 7:39 PM

    @ஆர்.கே.சதீஷ்குமார்சரியாக சொன்னீர்கள் ஆனாலும் நான் குறிப்பிட்டது கருத்துரையை மட்டுப்படுத்துதல் அவசியமா? என்பதை பற்றித்தான் ஆனால் நீங்கள் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 7:42 PM

    @மாணவன்கருத்துரை என்பது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள தானே ஆனால் கருத்துரையை மட்டுறுத்தல் செய்து வைத்து நாம் எழுதுவதை உடனே வெளியிடாமல் இருப்பது காலம் தாழ்த்தி வெளியிடுவது, வெளியிடாமலே இருப்பது பின்பு எதற்கு கருத்துரையில் எழுத வேண்டியது தானே எனக்கு புகழந்து வரும் பின்னுட்டமிடும் கருத்து மட்டுமே வெளியிடப்படும் என எழுதியிருந்தால் நாமும் புரிந்துகொண்டு ஒன்றும் எழுதமால் போய்விடலாமே


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 7:43 PM

    @மாணவன் நான் தான் அதில் ஒன்றும் இனைக்காமல் விட்டுவிட்டேன் அதில் வரும் பதிவுகள் நாம் இனைக்கும் வகைகளை பொருத்தது நான் அவசரதில் இனைக்காதாதால் தான் இப்படி இருக்கிறது


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 7:45 PM

    @ம.தி.சுதாஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பா நீங்கள் எனக்கு தெரிந்ததை கேட்டிருப்பீர்கள் உடனே பதில் அளித்திருப்ப்பேன் ஒரு வேளை தெரியவில்லை என்றால் அதையும் தெரியாது என சொல்லியிருப்பேன்


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 7:46 PM

    @ம.தி.சுதா உங்கள் கேள்விக்கு அன்றே பதில் அளித்திருந்தேன் நீங்கள் தான் கவணிக்க வில்லை என நினைக்கிறேன்

    http://gsr-gentle.blogspot.com/2010/10/blog-post_22.html

    இப்படி கண்டுபிடிக்கலாமே
    http://i53.tinypic.com/23r46j9.jpg


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 7:48 PM

    @மக்கள் தளபதி/Navanithan/ナパニ வெறும் காப்பி பேஸ்ட் செய்பவரின் பதிவுக்கு இருக்கும் வரவேற்பு கூட உண்மையாக புரிந்து எழுதும் பதிவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை

    என்னைப்பொறுத்தவரை அங்கீகாரம் என்பது தகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 7:50 PM

    @குழந்தை நல மருத்துவன்! என் பதிவு பிரச்சினையில்லை போகட்டும் ஆனால் தங்கள் பதிவை காப்பி எடுத்து எழுதுபவர்களிடம் மருத்துவ சந்தேகங்கள் கேட்டால் என்ன பதில் அளிப்பார்கள் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 7:51 PM

    @moulefriteசரியான கருத்துக்களை வெளியிடுவது இல்லை தெரியாத விஷயங்களை ஒத்துக்கொள்வதும் இல்லை ஆனால் அவர்களை போன்ற அரைகுறைகளுக்கு தான் இந்த பதிவுலகம் சரியாய் பொருந்துகிறது


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 7:52 PM

    @வருணன்அருமையான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே


    ம.தி.சுதா said...
    October 31, 2010 at 10:49 PM

    மாணவன், வரணன், மற்றும் ஜிஎஸ்ஆர் அனைவருக்கும் மிக்க நன்றிகள் உரித்தாகட்டும்...


    ம.தி.சுதா said...
    October 31, 2010 at 10:50 PM

    மன்னிக்கணும் சகோதரா நான் அதைக் கவனிக்கவில்லை.. மன்னிக்கவும்..


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 10:57 PM

    @ம.தி.சுதாபரவாயில்லை நண்பா ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் எந்த கேள்வியாக இருந்தாலும் தெரிந்தவரையில் பதில் அளித்திருப்பேன் ஒரு வேளை தெரியாத பட்சத்தில் அதையும் தெரிவித்திருப்பேன்

    தங்களின் சரியான புரிதலுக்கு நன்றி


    guru said...
    November 2, 2010 at 2:10 PM

    தனது திறமையை வளர்த்து கொள்ள கருத்துரை மிகவும் அவசியமானது...
    என்னைப் பொருத்தவரை, கருத்துரையை மட்டுப்படுத்துவது என்பது தன்னைத்தானே மட்டுப்படுத்தி கொள்வது போலானது..


    Vengatesh TR said...
    November 2, 2010 at 2:23 PM

    எனக்கு உங்கள் வரிகளின் ஆழம் புரிகிறது !

    இனி நன்புடன் !


    Vengatesh TR said...
    November 2, 2010 at 2:28 PM

    @சிகப்பு மனிதன்

    .mannikkavum, athu நட்புடன் !


    ADMIN said...
    November 2, 2010 at 4:34 PM

    என்ன ஆதங்கத்தில் இப்படி எழுதியிருக்கிறீர்கள் என்பது தெளிவாகவே புரிகிறது..!


    ஜிஎஸ்ஆர் said...
    November 2, 2010 at 7:53 PM

    @guruஆனால் பதிவுலகத்தை பொருத்தவரை இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டிகொள்வது தான் மற்றவர்களுக்கு சிறப்பாக தெரிகிறது


    ஜிஎஸ்ஆர் said...
    November 2, 2010 at 7:54 PM

    @சிகப்பு மனிதன் சரியான புரிதலுக்கு நன்றி நண்பா எழுத்து பிழை ஒன்றும் பிரச்சினை இல்லை


    ஜிஎஸ்ஆர் said...
    November 2, 2010 at 7:54 PM

    @தங்கம்பழனி என் ஆதங்கத்தை உங்களால் சரியாக யூகிக்க முடிந்திருந்தால், சரியான புரிதலுக்கு நன்றி நண்பரே


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர