Oct 14, 2010

19

கணினியில் எந்த கோப்பையும் என்கிரிப்ட் செய்யலாம்

  • Oct 14, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: தோல்வியிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவிட்டால் தான் அது தோல்வி.

    வணக்கம் நண்பர்களை இந்த பதிவு ஒரு மென்பொருளை அல்லது ஏதாவது ஒரு கோப்பு எதுவாக இருந்தாலும் எப்படி அதை வேறொரு விதமான பார்மட்டாக மாற்றி அதை என்கிரிப்ட் செய்து விடுவது உதாரணமாக உங்களிடம் ஒரு மென்பொருள் இருக்கிறது அதிகமான மென்பொருள்களின் எக்ஸ்டென்ஷன் .EXE என்பதாக இருக்கும் ஆனால் இந்த மென்பொருள் வழியாக நாம் என்கிரிப்ட் செய்துவிட்டால் அதன் எக்ஸ்டென்ஷன் . xcon என்பதாக இருக்கும் இது எல்லா மென்பொருளுக்கும், நாம் உபயோகபடுத்தும் எந்த கோப்பாக இருந்தாலும் என்கிரிப்ட் செய்தால் . xcon என்பதாகவே இருக்கும்.

    இதனால் என்ன பயன் அவ்வளவு எளிதாக யாரும் திறக்க முடியாது ஏன் நீங்களே அதன் கடவுச்சொல்லை மறந்துவிட்டாலும் திறக்க முடியாது. நான் இதே போன்றதொரு வேறொரு வழிமுறையை நான் மே-29-2010 அன்று போல்டர் மற்றும் பைல்களை பாதுகாப்பாக வைக்க வழி என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அந்த மென்பொருள் பைல்களை வெளியில் காண்பிக்காது ஆனால் இது காண்பிக்கும் ஆனால் திறக்க முடியாது.

    இனி இந்த Conceal Setup மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், நிறுவி முடிந்த்தும் நீங்கள் செய்ய வேண்டியதை கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு மென்பொருளை என்கிரிப்ட் செய்தவுடன் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்.



    இனி நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் எந்த பைலை என்கிரிப்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதை இழுத்து பூட்டு இருக்கும் இடத்தில் விடவும்.



    இப்போது இப்படியாக ஒரு சிறிய பாப் அப் வரும் அதில் நீங்கள் செய்யவேண்டியது Destination என்பதில் நீங்கள் உள்ளிடும் கோப்பு எந்த இடத்தில் மாற்றம் செய்து வரவேண்டும் Location என்பதை கொடுக்கவும் அடுத்தபடியாக கடவுச்சொல் இருமுறை ஒரே மாதிரியாக கொடுக்கவும் பின்னர் கொடுத்து முடித்ததும் மேலே இருக்கும் Save and Close என்பதை சொடுக்கினால் போதும் உங்கள் பைல் இப்போது என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும் அப்படியே அதன் கீழே பாருங்கள் Delete Original File என்பதாக இருக்கிறது அதை வேண்டுமானால் பயன்படுத்துங்கள் அதை பயன்படுத்தினால் நீங்கள் உள்ளிடும் ஒரிஜினல் கோப்பு அழிக்கப்பட்டு அதற்கு பதிலாக என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பு மட்டும் இருக்கும். முதலில் சோதனை செய்து பார்த்துவிட்டு பயன்படுத்துங்கள்.



    இதே வழிமுறைதான் என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பு திறப்பதற்கும் முதலில் என்கிரிப்ட் செய்ய பூட்டு இட்ட இடத்தில் பைலை DRAG & DROP செய்தீர்கள் இப்போது சாவி இட்ட இடத்தில் DRAG & DROP செய்யப்போகிறீர்கள் அவ்வளவுதான்.

    இதில் எந்த கோப்பையும் உள்ளிட முடிகிறது ஆனால் சாதரண போல்டரில் பைல்களை இட்டு மறைக்க நினைத்தால் முடிவதில்லை அதே நேரத்தில் மொத்த பைல்களையும் ஒரு போல்டரில் இட்டு அதை விண் ரார் கோப்பாக மாற்றிய பின்னர் மொத்த போல்டரையும் என்கிரிப்ட் செய்ய முடிகிறது பயன்படுத்தி பாருங்கள்.

    என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    19 Comments
    Comments

    19 Responses to “கணினியில் எந்த கோப்பையும் என்கிரிப்ட் செய்யலாம்”

    S.முத்துவேல் said...
    October 14, 2010 at 1:55 PM

    மிக அருமையான பதிவு


    Madhavan Srinivasagopalan said...
    October 14, 2010 at 2:28 PM

    //கணினியில் எந்த கோப்பையும் என்கிரிப்ட் செய்யலாம்//

    இந்த கோப்பையும் encrypt செய்ய முடியுமா ?
    "கிரிக்கெட், ஹாக்கி, ஃபுட்பால் - உலகக் கோப்பு"?


    ம.தி.சுதா said...
    October 14, 2010 at 3:24 PM

    ஃஃஃஃஃதோல்வியிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவிட்டால் தான் அது தோல்வி.ஃஃஃஃ நன்றி சகோதரா கட்டாயம் எல்லோருக்கம் உதவக் கூடிய தகவல் ஒன்று ஏனெனில் தகவல்களைப் பாதகாப்பதென்பது பெரும்பாடு தான்....


    எஸ்.கே said...
    October 14, 2010 at 5:30 PM

    மிக நன்றாக உள்ளது நண்பரே!


    மாணவன் said...
    October 15, 2010 at 5:52 AM

    மிகவும் பயனுள்ள தகவலை அருமையாக விளக்கியுள்ளீர்கள்
    பயனுள்ள மென்பொருள்
    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா


    Unknown said...
    October 15, 2010 at 8:13 AM

    மிக அருமை. தெரிந்ததை தெளிவாக விளக்குவது ஒரு கலை.அது உமக்கு அருமையாக வருகிறது.தொடருங்கள்


    Unknown said...
    October 15, 2010 at 8:20 AM

    தோல்வியிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவிட்டால் தான் அது தோல்வி. (ரூம் போட்டு யோசிப்பீங்கிளோ)நல்ல சிந்தனை


    Senthil said...
    October 15, 2010 at 9:30 AM

    keep going!!!!!!!!
    good!!!!!!!!!


    senthil


    ஜிஎஸ்ஆர் said...
    October 16, 2010 at 9:09 AM

    @எஸ்.முத்துவேல்புரிதலுக்கும் வருகைக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 16, 2010 at 9:12 AM

    @Madhavanஉங்களால் நீங்கள் கேட்டுள்ள கோப்பைகளை கணினி ஏற்றுக்கொள்ளும் ஏதாவது ஒரு பார்மட்டாக மாற்றுவீர்களேயானால் அதையும் என்கிரிப்ட் செய்வதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது


    ஜிஎஸ்ஆர் said...
    October 16, 2010 at 9:13 AM

    @ம.தி.சுதா உண்மைதான் நண்பா அந்த பிரச்சினையில் இருந்து காத்துக்கொள்ள தான் இந்த தற்காலிக தீர்வு


    ஜிஎஸ்ஆர் said...
    October 16, 2010 at 9:16 AM

    @எஸ்.கே கருத்துரைக்கு நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 16, 2010 at 9:19 AM

    @மாணவன்நானும் பார்த்த வரையில் இந்த மென்பொருள் சிறப்பாக இருக்கிறது நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 16, 2010 at 9:42 AM

    @Arulஅப்படியெல்லாம் பெரிசா ஒன்றுமில்லை நண்பா தெரிந்ததை எழுதுகிறேன் அது மற்றவர்களுக்கு எளிதாக புரிந்தால் அது சந்தோஷமே


    ஜிஎஸ்ஆர் said...
    October 16, 2010 at 9:43 AM

    @Arulதவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்


    ஜிஎஸ்ஆர் said...
    October 16, 2010 at 9:44 AM

    @Senthilதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    Vengatesh TR said...
    November 26, 2010 at 11:47 AM

    .அப்படி என்றால், .exe பைல்களையும்,இந்த மாதிரி மாற்றி, பின்பு, gmail'l பரிமாறி (exchange) செய்து கொள்ளலாம், அல்லவா !!

    .தங்கள் எழுதானிக்கு நன்றி !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:59 PM

    @சிகப்பு மனிதன் நிச்சியமாக செய்யமுடியும் நண்பா அல்லது .exe என்பதை .Txt எனும் extension ஆக மாற்றுவதன் மூலமும் அனுப்பமுடியும்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:16 PM

    .தகவலுக்கு நன்றி !!


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர