Oct 19, 2010

27

சிறிய புகைப்படங்களை தரம் குறையாமல் பெரிதாக்கலாம்

  • Oct 19, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:களத்தில் குதியுங்கள் கைகள் அழுக்காகட்டும் அப்பொழுது தான் அடுத்த முறை கைகள் அழுக்காகமல் குதிக்க முடியும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு புகைப்படம் பற்றியது நாம் அன்றாடம் எத்தனையோ விதமான காரணங்களுக்காக புகைப்படங்களை பயன்படுத்துகிறோம் அதிலும் வலைப்பூக்களில் புகைப்படம் அதிகமாக பயன்படுத்துகிறோம், இதனால் படிக்கும் நபர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருக்கும் சில நேரங்களில் வலைத்தளங்களில் ஏதாவது புகைப்படம் தேடுவோம் ஆனால் அந்த படமோ அளவில் சிறியதாக இருக்கும் அதை பெரிதாக்க நினைத்தால் நிச்சியம் படத்தின் உருவம் மாறிப்போகும்.

    இதை பற்றி நம்முடைய கடந்த பதிவான இமேஜ் கன்வெர்ட்டர் (Image Convertor)
    ல் நண்பர்கள் எஸ்.கே
    மற்றும் மாணவன்
    இருவரும் ஒரு சந்தேகத்துடன் தீர்வையும் கேட்டிருந்தார்கள் பின்வருமாறு.

    எஸ்.கே
    எளிமை! சிறப்பாக உள்ளது! படம் தரம் குறையாமல் பெரிதாக்க மென்பொருள் உள்ளதா நண்பரே?

    மாணவன்
    ”படம் தரம் குறையாமல் பெரிதாக்க மென்பொருள் உள்ளதா நண்பரே?”
    நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் அதற்கான மென்பொருள் இருந்தால் பதிவிடவும் நண்பா...
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
    நன்றி




    இந்த பதிவு அவர்களுக்காகவும் மேலும் பலரை சென்றடையும் வகையில் இதை ஒரு பதிவாக எழுதுகிறேன். உண்மையை சொல்கிறேன் இந்த பதிவு என்னுடைய இரண்டு இரவுகளை தொலைத்திருக்கிறேன். நான் எழுதும் அதிக பதிவுகள் இரவில் மட்டுமே எழுதியிருக்கிறேன், இந்த பதிவை எழுதும் முன்பாக நிறைய ஆன்லைன் தளங்கள் மற்றும் இன்னும் சில மென்பொருள்கள் என நிறைய சோதித்து பார்த்த இறுதியில் கொஞ்சம் எனக்கு திருப்தியளித்தவுடன் இந்த பதிவை எழுதுகிறேன் இனி நீங்கள் இந்த Photo Enlarger
    மென்பொருளை தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இது உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யவேண்டியது இல்லை நேரடியாக இயக்கலாம், தரவிறக்கி முடித்த பின்னர் SmillaEnlarger இருமுறை கிளிக்கினால் இயங்க தயாராகிவிடும. இந்த மென்பொருள் இப்போது பீட்டாவாகவே இருக்கிறது.

    அதற்கு முன்பாக இந்த சின்ன விஷயத்தையும் படித்துவிடுங்கள் நீங்கள் பெரிதாக்க விரும்பும் படம் குறைந்த பட்ச தரமாவது இருக்கவேண்டும் படம் தரமில்லாத போது நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு படத்தை மாற்றினாலும் படம் சிதைந்து போயிருக்கும். மேலும் இந்த மென்பொருள் எந்தளவிற்கு உங்களுக்கு தீர்வாய் அமையப்போகிறது என்பதும் எனக்கு தெரியாது இருப்பினும் ஓரளவிற்கு நிச்சிய்ம் இந்த பதிவு தீர்வு அளிப்பதாய் இருக்கும்.

    இந்த மென்பொருளில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன நான் அடிப்படையை மட்டுமே எழுதுகிறேன் இனி நீங்களாகவே கொஞ்சம் முயன்று மற்ற விஷயங்களையும் பயன்படுத்தி பாருங்கள். இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நீங்கள் செய்யவேண்டியவற்றை நான் அடையாளமிட்டு எண்கள் கொடுத்துள்ளேன் அதன் படியே செய்து விடுங்கள் எண் 1ல் கிளிக்கி நீங்கள் விரும்பும் படத்தை உள்ளிடவும், எண் 2ல் அளவை கூட்டலாம் அல்லது கீழிருக்கும் Custom என்பதன் வழியாகவும் வேண்டிய அளவு கொடுக்கலாம், எண் 3ல் அளவை மாற்றவும் சேமிக்கவும் கொடுக்கும் கட்டளை, எண் 4ல் கிளிக்கி நீங்கள் கொடுத்த கட்டளை முடிவடைந்துவிட்டதா என பார்த்துக்கொள்ளலாம், எல்லாம் முடிந்தால் படத்தின் அளவு பெரியதாக இருக்கும் நீங்கள் கொடுத்த படத்தின் தரத்தை பொறுத்து அவுட்புட் இருக்கும்.



    இல்லை எனக்கு படத்தை மொத்தமாக மாற்ற தேவையில்லை ஒரு குறிப்பிட்ட பாகத்தை மட்டும் பெரிதுபடுத்தி பார்க்க ஆசை அல்லது சேமிக்க ஆசை அதற்கும் வழி இருக்கிறது சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள் நான் உங்களுக்காக மாற்றிய ஒரு பெரிய படத்தை இனைக்க நினைத்தேன் ஆனால் படத்தின் அளவு 7 எம்பி இருந்ததால் இனைத்தாலும் தளம் திறப்பதில் பிரச்சினை ஆகும் எனவே விட்டு விட்டேன். தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் வித்யாசம் உணர்வீர்கள்.



    போட்டோஷாப் உபயோகிப்பவர்கள் எந்தவெரு புகைப்படத்தையும் போட்டோஷாப் வழியாகவே 10% அளவு அதிகரித்தாலும் பெரிய சிதைவு இருக்காது முயற்சித்து பாருங்கள் மறக்காமல் ரெசல்யூசன் 300 வைத்துக்கொள்ளுங்கள்.

    போதுமான நேரமின்மையால் முழுமையாக எழுதமுடியவில்லை இருப்பினும் இதில் விரிவாக எழுதும் அளவிற்கு ஒன்றுமில்லை மிக எளிமையான மென்பொருள்.என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    27 Comments
    Comments

    27 Responses to “சிறிய புகைப்படங்களை தரம் குறையாமல் பெரிதாக்கலாம்”

    மாணவன் said...
    October 19, 2010 at 11:42 AM

    அருமை நண்பா,
    கேட்டதுபோலவே மென்பொருளை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் சூப்பர்...

    ”உண்மையை சொல்கிறேன் இந்த பதிவு என்னுடைய இரண்டு இரவுகளை தொலைத்திருக்கிறேன். நான் எழுதும் அதிக பதிவுகள் இரவில் மட்டுமே எழுதியிருக்கிறேன், இந்த பதிவை எழுதும் முன்பாக நிறைய ஆன்லைன் தளங்கள் மற்றும் இன்னும் சில மென்பொருள்கள் என நிறைய சோதித்து பார்த்த இறுதியில் கொஞ்சம் எனக்கு திருப்தியளித்தவுடன் இந்த பதிவை எழுதுகிறேன்”
    உங்களின் உழைப்பிற்கு ஒரு சல்யூட்....
    உங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் பகிர வேண்டுமென்ற உங்களின் எண்ணம் மகத்தானது
    தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் நாங்கள் எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்
    உங்களின் பணி மென்மேலும் சிறக்க பாராட்டுகளும் வாழ்த்துக்களும்...
    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    மாணவன்


    ஜிஎஸ்ஆர் said...
    October 19, 2010 at 1:35 PM

    @மாணவன்அன்பின் நண்பா இந்த மென்பொருள் உங்கள் தேவையை தீர்த்து வைத்ததா? படங்களை சோதித்து பார்த்தீர்களா என்பதை பற்றியும் எழுதியிருந்தால் படிப்பவர்களுக்கு நம்பகத்தன்மையை உறுதி செய்வதாக இருந்திருக்கும்


    எஸ்.கே said...
    October 19, 2010 at 1:43 PM

    மிக்க மிக்க நன்றி நண்பரே எங்கள் கேள்விகளுக்காக பதில் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி! உங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் பகிர வேண்டுமென்ற உங்களின் எண்ணம் மகத்தானது. அதற்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.தங்கள் பணி மென்மேலும் சிறக்கவும் செழிக்கவும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
    என்றும் தங்கள் நண்பன்
    எஸ். கே


    முத்து said...
    October 19, 2010 at 3:02 PM

    டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு சொல்லுறேன் பாஸ்


    !♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
    October 19, 2010 at 3:26 PM

    பயனுள்ள தகவல். நன்றி நண்பரே


    ராஜ நடராஜன் said...
    October 19, 2010 at 5:22 PM

    தகவல் பரிமாற்றத்துக்கு நன்றி.


    ராஜ நடராஜன் said...
    October 19, 2010 at 5:26 PM

    நீங்க போட்டோஷாப் பற்றிக் குறிப்பிட்டதால் இன்னுமொரு பின்னூட்டம்.புகைப்பட இயங்குதளங்களில் மிகவும் சிறப்பானது போட்டோஷாப் மட்டும் அதன் பங்காளிகள்.ஆனால் மென்பொருள் உயர்வு படுத்துகிறோமென்று காசு பிடுங்குவதில் எனக்கு உடன்பாடில்லை.


    மாணவன் said...
    October 19, 2010 at 6:04 PM

    "அன்பின் நண்பா இந்த மென்பொருள் உங்கள் தேவையை தீர்த்து வைத்ததா? படங்களை சோதித்து பார்த்தீர்களா என்பதை பற்றியும் எழுதியிருந்தால் படிப்பவர்களுக்கு நம்பகத்தன்மையை உறுதி செய்வதாக இருந்திருக்கும்"

    காலையில் கொஞ்சம் வேலைப்பளுவாக இருந்ததால் பதிவை பார்வையிட்டவுடன்
    மென்பொருளை தரவிறக்கம் மட்டும் செய்துவிட்டு போய்விட்டேன்...
    இப்போதுதான் பயன்படுத்திபார்த்தேன் நன்றாக உள்ளது நண்பா என் சிறிய போட்டோவை பெரிதுபடுத்திபார்த்தேன் தரமும் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது ”cropping, sharpness, thumnail preview” போன்ற வசதிகள் இருப்பது இன்னும் சிறப்பு, இன்ஸ்டால் செய்யவேண்டியது இல்லை நேரடியாக இயக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு...
    எனது நண்பர்களுக்கும் அறிமுகபடுத்தி உள்ளேன்
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா
    நட்புடன்
    மாணவன்


    ஜிஎஸ்ஆர் said...
    October 20, 2010 at 9:54 AM

    @எஸ்.கேநன்றி நண்பா முடிந்தவரை பதிவை பற்றியதான உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டால் படிப்பவர்களுக்கு சந்தேகம் தீர உதவியாய் இருக்கும்


    ஜிஎஸ்ஆர் said...
    October 20, 2010 at 9:55 AM

    @முத்துசோதனை செய்து பாருங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    October 20, 2010 at 9:57 AM

    @பிரஷாதங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே மென்பொருளை பயன்பாடு நன்றாய் இருக்கிறதா


    ஜிஎஸ்ஆர் said...
    October 20, 2010 at 9:58 AM

    @ராஜ நடராஜன்நீங்கள் சொல்வது 100% உண்மைதான் ஆனால் சில நேரங்களில் அதில் செய்ய முடியாத வேலைகளை வேறு சில மென்பொருள்கள் எளிதாய் செய்து கொடுத்துவிடும்


    ஜிஎஸ்ஆர் said...
    October 20, 2010 at 9:59 AM

    @மாணவன் நன்றி நண்பா


    மாணவன் said...
    October 20, 2010 at 1:44 PM

    "முடிந்தவரை பதிவை பற்றியதான உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டால் படிப்பவர்களுக்கு சந்தேகம் தீர உதவியாய் இருக்கும்"
    நிச்சயமாக என்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கும் உதவியாய் இருப்பேன் உங்களைப்போலவே நான் தெரிந்துகொண்டதை மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எனது எண்ணமும் ஆவலும் நண்பா...
    மிக்க நன்றி...
    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்


    மாணவன் said...
    October 20, 2010 at 5:10 PM

    அன்பின் நண்பர் ஜிஎஸ்ஆர்,
    நான் பதிதாக வலைத்தளம் தொடங்கி பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன்
    தாங்கள் எனது வலைத்தளத்திற்கு வருகைபுரிந்து கருத்துக்களை பதிவு செய்து வழி நடத்தி செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
    பின் குறிப்பு: பதிவுலகில் எனது குருவான மதிப்பிற்குரிய திரு. வேலன் சார்(velang.blogspot.com) , திரு. ஜி எஸ் ஆர் (ஞானசேகர்) (gsr-gentle.blogspot.com) மற்றும் எனது நண்பர்கள்,பதிவுலக நண்பர்கள் நண்பிகள் அனைவருக்கும் எனது சின்ன (அர்ப்பனிப்பு) படைப்பு இக்கவிதை தொகுப்பு....

    உங்களின் ஆசிர்வாதத்தோடும் மற்ற நண்பர்களின் துனையோடும் இனைந்து நானும் பயனிக்கிறேன் வலைப்பூவில்...

    http://urssimbu.blogspot.com

    என்றும் நட்புடன்...
    உங்கள்.மாணவன்


    Guruji said...
    October 31, 2010 at 10:44 AM

    சார் எனக்கு ஒரு உதவி தேவை என்னிடம் avl format ல் சில file உள்ளது அதை PDF ஆகவோ WORD ஆகவோ கன்வெர்ட் செய்ய வேண்டும் அதற்கான சாப்ட்வேர் இருந்தால் தெரியபடுத்தவும். .


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 8:01 PM

    @யோகி ஸ்ரீ ராமானந்த குரு நீங்கள் .AVI பார்மட் என குறிப்பிட்டிருப்பது வீடியோ பார்மட் என்பதை குறிக்கிறதா?

    நீங்கள் குறிப்பிட்டிருப்பது இது தான் என்றால் உங்களிடம் இருக்கும் வீடியோவை 4shared தளத்தில் அப்லோட் செய்து அந்த உரலை இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள் இப்போது உள்ள தொழில்நுட்பம் பயன்படுத்தி எனக்கு தெரிந்த வரையில் இரண்டுமே கொஞ்சம் கடினாம் ஆனாலும் வேறு சில வழிமுறைகளை பயன்படுத்தி முதலில் வீடியோவை இமேஜ் பிரேமாக மாற்றி அதனை பிடிஎப் ஆக மாற்றமுடியும் என நினைக்கிறேன் எப்படி இருந்தாலும் உங்களிடமிருக்கும் அந்த பைலை அனுப்புங்கள் என்னால் உங்களுக்கு உபயோகப்படும் வகையில் ஏதாவது செய்ய முடியுமானல் நிச்சியம் செய்கிறேன் ( நான் உங்களிடம் அந்த பைலை கேட்பதன் காரணம் சோதனைக்காக மட்டுமே என்னிடம் வீடியோ இருக்கிறது ஆனால் உங்களிடம் இருக்கும் வீடியோவை எந்த முறையில் செய்யமுடியும் என்பதற்கு அவசியம் உங்கள் பைல் தேவை எல்லாம் சரியாய் செய்து தீர்க்க முடிந்தால் அனைவரும் பயனடையும் வகையில் ஒரு பதிவாக எழுதலாம்

    சரியான புரிதலுக்கு நன்றி


    Islamiya Paarvai said...
    November 11, 2010 at 4:08 PM

    மன்மதன்
    நீங்கள் போடும் ஒவ்வொரு ஆக்கங்களும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. உங்களுடைய முயற்சிக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 12, 2010 at 12:34 AM

    @Islamiya Paarvai சரியான புரிதலுக்கு நன்றி நண்பரே தொடர்ந்து இனைந்திருங்கள்


    Tamil whatsapp stickers and png images said...
    November 12, 2010 at 8:07 AM

    இதுவரை இவ்வாறு ஒரு மென்பொருள் இருப்பதே தெரியாது. எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்! நன்றி என்று மட்டும் சொன்னால் போதாது, உங்களின் தனிச்சிறப்பு வாய்ந்த ஆக்கங்களுக்கு என்றும் பாராட்டுகளைத் தெரிவிக்க ஆசை!


    நிலாமதி said...
    November 12, 2010 at 7:16 PM

    மிகவும் பயனுள்ள் தகவல் களை திரட்டித்தரும் உங்களுக்கு என் நன்றிகள்.


    ஜிஎஸ்ஆர் said...
    November 13, 2010 at 8:56 AM

    @சிவகுமார் சுப்புராமன்தங்களின் வரவிற்க்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே முடிந்தால் நம் தளத்தோடு இனைந்திருங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    November 13, 2010 at 8:57 AM

    @நிலாமதிஎனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு பயன்படும் விதத்தில் எழுதுகிறேன் அவ்வளவே, தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி முடிந்தால் நம் தளத்தோடு இனைந்திருங்கள்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 11:35 AM

    .purindu kondaen,...


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:01 PM

    @சிகப்பு மனிதன்புரிதலுக்கு நன்றி நண்பரே


    A IAUDHAYARAJ said...
    February 25, 2011 at 8:55 AM

    மிகவும் அருமையான பதிவு
    மிகவும் உபயோமாகவுள்ளது
    தங்களது பணி சிரக்க வாழ்த்துக்கள்
    நன்றி நன்பரே


    ம.தி.சுதா said...
    March 9, 2011 at 3:29 PM

    இன்று தான் சகோதரம் இதை பயன்படுத்துறேன்...


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர