Jul 24, 2010

9

ரேபிட்ஷேர் தரவிறக்கம்

  • Jul 24, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: நாம் எழுந்திருப்பதற்காகவே விழுகின்றோம்.

    வணக்கம் நண்பர்க்ளே இந்த பதிவில் நாம் பார்க்கபோவது ரேபிட்ஷேர் பைல்கள் தரவிறக்கம் பற்றித்தான் சாதரணமாக மற்ற தளங்களுக்கும் இதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது இவர்கள் தேடுவதற்கான வசதி கூட அளிப்பதில்லை அதையே நாம் மூன்றாம் தளங்களின் வாயிலாகத்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கிறத, சில நேரங்களில் உங்கள் ஐபி தற்போது உபயோகத்தில் இருக்கிறது என்பது போல செய்தி வரும், ஆனால் நீங்கள் அந்த தளத்தை அப்போதுதான் திறந்திருப்பீர்கள் அது உங்கள் தவறு இல்லை உங்கள் ஐபி யை யாரும் தவறாக உபயோகிப்பதாகவும் அர்த்தம் இல்லை மாறாக உங்கள் சர்வீஸ் புரைவைடர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே ஐபி யை அந்த மொத்த ஏரியாவிற்க்கும் வழன்கியிருப்பார்கள் அது பற்றி ஏப்ரல் மாதம் 25ம் தேதி நான் எழுதிய ரேபிட்ஷேரில் தேடலும் தரவிறக்கமும் ஆனால் அதில் அன்றே சில நண்பர்கள் பாப் அப் தொல்லை இருப்பதாக கருத்துரையில் எழுதியிருந்தார்கள் அதற்கும் தீர்வாகத்தான் இந்த பதிவு

    நாம் இலவசமாக தரவிறக்கும் போது நமக்கென கவுண்டவுன் இருக்கும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் சில நேரத்தில் ஒரு தரவிறக்கம் முடியும் வரை வேறொரு தரவிறக்கம் மேற்கொள்ள முடியாது அதற்காக இனையத்தில் தேடிய போது கவுண்டவுன் நிறுத்துவதற்கு javascript:alert(c=0)அல்லது javascript:var c=0; பயன்படுத்தி நிறுத்த முடிகிறது அல்லது javascript:var%20counta=0;var%20countb=0;var%20countc=0;var%20countd=0;
    var%20counte=0;var%20countf=0;var%20countg=0;var%20counth=0;var%20counti=0;
    var%20countj=0;var%20countk=0;var%20countl=0;var%20countm=0;var%20countn=0;
    var%20counto=0;var%20countp=0;var%20countq=0;var%20countr=0;var%20counts=0;
    var%20countt=0;var%20countu=0;var%20countv=0;var%20countw=0;var%20countx=0;
    var%20county=0;var%20countz=0; இதை பயன்படுத்தி தரவிறக்க முடியும் இது உங்கள் நேரத்தை குறைக்க மட்டுமே உதவும்.

    சில நேரங்களில் உங்கள் ஐபி முகவரி தற்போது உபயோகத்தில் இருப்பதாக செய்தி வரும் அந்த மாதிரியான நேரங்களில்

    Click Start -> Run
    Type cmd in the Open box, then click OK.

    இப்போது திறந்திருக்கும் கமெண்ட் பிராம்ட்டில் பின்வரும் கட்டளைகளை பயன்படுத்தி ஐபி முகவரி மாற்றுவதன் மூலம் முயற்சித்து பார்க்கலாம்.

    ipconfig /flushdns
    ipconfig /release
    ipconfig /renew

    மேலே இருக்கும் விஷயம் எதுவும் ஒத்து வராத நிலையில் சில தளஙக்ளில் இலவசமாகவே தருகிறார்கள் நீங்களும் வேண்டுமானல் அவர்களுக்கு நன்கொடை கொடுக்க முடியும் கூகுலில் தேடிப்பார்த்தால் இலவச உதவியும் கிடைக்க கூடும்.

    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதுதானே ஆம் என்றால் இந்த பதிவை நீங்களும் பலருக்கு சென்றடைய உதவலாமே.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    9 Comments
    Comments

    9 Responses to “ரேபிட்ஷேர் தரவிறக்கம்”

    ஜீவன்பென்னி said...
    July 24, 2010 at 11:31 AM

    மிக்க நன்றி. பயனுள்ள பதிவு. கணக்கை உருவாக்கி விட்டேன்.


    மரா said...
    July 24, 2010 at 1:04 PM

    நல்ல விசயம்ணே. கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் பாஸ் நீங்க. இப்பவே ஒரு கணக்கை ஓபன் பண்ணிறேன்


    தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...
    July 26, 2010 at 1:54 AM

    super


    ஜிஎஸ்ஆர் said...
    July 26, 2010 at 9:00 AM

    @ஜீவன்பென்னிநல்லது நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    July 26, 2010 at 9:02 AM

    @மயில்ராவணன்என்ன நண்பா ரொம்ப பெரிய வார்த்தையெல்லாம் சொல்றிங்க அதுக்கெல்லாம் தகுதி இல்லாதவன் நான்


    ஜிஎஸ்ஆர் said...
    July 26, 2010 at 9:03 AM

    @தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை நன்றி நண்பா (தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை சொல்லிட்டு ஆங்கிலத்தில் எழுதிகிறீர்களே நண்பா!?)


    Rajesh said...
    December 5, 2010 at 1:26 PM

    நான் இன்னும் பயன் படுத்திப் பார்க்கவில்லை. ஆனாலும் பயனுள்ள பகிர்வு.நன்றி.


    ஜிஎஸ்ஆர் said...
    December 6, 2010 at 10:32 AM

    @Rajeshதளத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதாவது பயன்படலாம்


    ஜிஎஸ்ஆர் said...
    December 6, 2010 at 10:32 AM

    @Rajeshதளத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதாவது பயன்படலாம்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர