Jul 13, 2010
பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை
வணக்கம் நண்பர்களே கடந்த பதிவில் myblog பிரபு திருவண்ணாமலை) அவர்கள் பெண்டிரைவை பார்மட் செய்ய இயலவில்லை என பின்னுட்டத்தின் வழியாக இப்படியாக கேள்வியை கேட்டிருந்தார்.
வணக்கம் சார்... என்னுடைய கணினியில் எந்த pendrive போட்டாலுமformat செய்ய இயலவில்லை. format செய்யும் போது கீழ்வரும் செய்தி வருகிறது windos can not format this drive. quit any disk untilites or oter programs that are using this drive, and make sure that no widows is displaying the contents of the drive. then formating again. இப்படி வருது சார். ஏதாவது ஐடியா சொல்லுங்கள். pls
வாழ்க வளமுடன்
பிரபு
திருவண்ணாமலை
இது போல பிரச்சினை நமக்கும் கூட சில நேரம் வந்திருக்கும் இது பெரும்பாண்மையான நபர்களுக்கு தெரியும் என நினைக்கிறேன் இருந்தாலும் என்னைப்போல தெரியாத நண்பர்களும் இருக்ககூடுமே என்கிற எண்ணத்தில் தான் இந்த பதிவு இது போன்ற பிரச்சினையை ஐந்து வழிகளில் தீர்வு காணலாம்.
முதல் வழிமுறை
Start ->Run டைப் cmd இப்போது ஒரு கருத்த விண்டோ திறக்கிறதா இதுதான் கமாண்ட் பிராம்ப்ட் சரி இனி நீங்கள் செய்ய வேண்டியது format/x G: என டைப் செய்யுங்கள் இதில் G எனகிற எழுத்து உங்கள் பென் டிரைவ்க்கான எழுத்தாகும் உங்கள் பென் டிரைவ் எந்த எழுத்தை கொண்டிருக்கிறதோ அதை கொடுங்கள் அடுத்து ஒரு எண்டர் கொடுங்கள், நான் தயராயிருக்கிறேன் என்பதாக ஒரு செய்தி வரும் அப்போதும் ஒரு எண்டர் கொடுங்கள், அடுத்ததாக பங்கீடு நடக்கும் இப்போதும் உங்களுக்கு ஒரு செய்தி வரும் தயங்காமல் ஒரு எண்டர் கொடுத்து விடுங்கள் சந்தேகத்திற்கு படமும் இனைத்துள்ளேன் பார்த்துக்கொள்ளுங்கள்.
இரண்டாவது வழிமுறை
Start ->Run டைப் cmd இப்போது திறக்கும் விண்டோவில் format/fs:NTFS G: என டைப் செய்து எண்டர் கொடுங்கள் (இதில் NTFS என்கிற இடத்தில் உங்கள் பென் டிரைவ் எந்த வகை என பார்த்துக்கொள்ளுங்கள் சாதரணமாக FAT32 என்பதாக இருக்கும் அதை தெரிந்துகொள்ள பென் டிரைவின் பிராப்பர்ட்டிஸ் திறந்து பாருங்கள்) மேலும் G என்பது பென் டிரைவின் எழுத்தை குறிக்கும் உங்கள் பென் டிரைவ் எந்த எழுத்தை கொண்டிருக்கிறதோ அதை கொடுத்து விடுங்கள் மீதமுள்ள விபரம் மேலே சொன்ன முதல் வழிமுறையை ஒத்ததுதான் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள் புரியும்.
மூன்றாவது வழிமுறை
Start ->Run டைப் compmgmt.msc என கொடுத்து ஓக்கே கொடுங்கள் இப்போது கம்ப்யூட்டர் மேனேஜ்மென்ட் என்கிற விண்டொ திறக்கும் அதில் Disk Management என்பதில் கிளிக்கி உங்கள் பென் டிரைவை பார்மட் செய்து விடுங்கள் ஒரு வேளை இப்போதும் பிரச்சினை இருந்தால் Change Drive Letter என்பதை தெரிவு செய்து எழுத்தை மாற்றி பின்னர் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் இப்போதும் சரியாகவில்லையென்றால் ஒரு முறை கணினியை ரீஸ்டார்ட் செய்து உடனேயே வேறு எதுவும் செய்யாமல் உங்கள் பென் டிரைவை பார்மட் செய்ய முயற்சி செய்யுங்கள்.
நான்காவது வழிமுறை
இதற்கு நீங்கள் அன்லாக்கர் மென்பொருளை தரவிறக்கவும் உங்க்ள் கணினியில் இன்ஸ்டால் செய்யவும் இப்போது உங்கள் பென் டிரைவில் வலது கிளிக் மெனுவை பாருங்கள் அதில் புதிதாக அன்லாக்கர் இருக்கிறதா அதை வைத்து அதில் உள்ள டேட்டாவை அழித்து விடுங்கள் பின்னர் எளிதாக பார்மட் செய்துவிடலாம் இந்த அன்லாக்கர் வழியாக அழிக்க முடியாத எந்த பைலையும் அழித்து விடலாம்.
ஐந்தாவது வழிமுறை
எனது பழைய பதிவில் பார்ட்டிசியன் மேனேஜர் தரவிறக்க முகவரி கொடுத்துள்ளேன் அதை பயன்படுத்துவது பற்றியும் அந்த பதிவுலேயே எழுதியிருக்கிறேன் சிரமம் பார்க்காமல் தரவிறக்கி உங்கள் பென் டிரைவ் பார்மட் செய்து விடவும் செயல் படுத்துவதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது.
இது உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் இது உங்களை போல உள்ள மற்ற நபர்களுக்கும் சென்றடைய உதவுங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் இங்கு கூட்டனி தானே நடக்கிறது நான் உன்னை புகழ்ந்து பதிவு எழுதுறேன் நீ என்னை புகழ்ந்து பதிவு எழுது நான் உனக்கு வோட் போடுறேன் நீ எனக்கு வோட் போடு இவர்களை போன்றவர்களால் நல்ல விஷங்கள் எழுதினாலும் மற்றவர்களுக்கு பயன்படாமலே போகிறது என்று மாறுமோ இந்த நிலை!?
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
17 Responses to “பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை”
-
Mohamed Faaique
said...
July 13, 2010 at 11:59 AMஎன்னுடைய portable hard disk open ஆவதில் பிரச்சனை குடுக்கிறது. சிலவேளை மொத்த PC ஐயும் ஹோல்ட் பண்ணி விடுகிறது. manage 'ம் ஓபன் செய்ய முடிவதில்லை. solution என்ன? ௫ partition ,களில் ஒன்றில் மட்டுமே இந்த பிரச்சனை. மற்றவைகள் ரொம்ப மெதுவாக open ஆகின்றன.
-
பாரதி
said...
July 13, 2010 at 2:13 PMபயனுள்ள தகவல் நன்றி நண்பரே;
நாம் பதிவிடும் சின்ன,சின்ன விஷயங்கள் நிச்சயமாக எதாவது ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும், எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை, தொடர்து பதிவிடுங்கள் -
WebPrabu
said...
July 13, 2010 at 3:52 PMஅடேங்கப்பா!!! இத்தனை முறையில் Pen Drive-களை Format-செய்யலாமா? முற்றிலும் புதிய, பயனுள்ள தகவல். மிக்க நன்றி!!!
-
ஈரோடு கதிர்
said...
July 13, 2010 at 4:20 PMநல்ல தகவல்
மிக்க நன்றி -
எல் கே
said...
July 13, 2010 at 4:29 PMgood info ... keep writing...
//Faaique Najeeb
may i know the brand of the external HDD.. try runngin chkdsk /f/r -
Mohamed Faaique
said...
July 13, 2010 at 5:41 PMTOSHIBA.. HARD DISK தனியாக வாங்கி CASING தனியாக வாங்கி இணைத்துள்ளேன்..
"chkdsk /f/r" HOW 2 DO THIS... -
ஜிஎஸ்ஆர்
said...
July 14, 2010 at 4:52 PM@Faaique Najeeb
போர்ட்டபிள் ஹார்ட்டிஸ்க் இனைக்காத போது கணினியின் வேகம் நன்றாக இருக்கிறதா? -
ஜிஎஸ்ஆர்
said...
July 14, 2010 at 4:55 PM@samsungg
முடிந்தவரை எழுதுவோம் நாம் வேறென்ன எதிர்பார்க்க போகிறோம் பதிவின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் அவர்களின் கருத்துக்கள் தான் மேலும் சிறப்பாக எழுத உதவும் -
ஜிஎஸ்ஆர்
said...
July 14, 2010 at 4:56 PM@WebPrabu
எனக்கு தெரிந்தது இத்தனை இன்னும் தெரியாதது எத்தனையோ? -
ஜிஎஸ்ஆர்
said...
July 14, 2010 at 4:56 PM@ஈரோடு கதிர்
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
July 14, 2010 at 4:57 PM@LK
நன்றி -
Unknown
said...
July 14, 2010 at 9:22 PMமிக்க நன்றி சார்... எனக்காக பதிவு எழுதியது மகிச்சியாக உள்ளது.
என்னுடைய பிரச்சனையினை சரி செய்து விட்டேன்.
வாழ்க வளமுடன்
பிரபு
திருவண்ணாமலை -
Mohamed Faaique
said...
July 15, 2010 at 10:01 AMபோர்ட்டபிள் ஹார்ட்டிஸ்க் இனைக்காத போது கணினியின் வேகம் நன்றாக இருக்கிறது.
-
Mohamed Faaique
said...
July 15, 2010 at 12:14 PMபோர்ட்டபிள் ஹார்ட்டிஸ்க் இனைக்காத போது கணினியின் வேகம் நன்றாக இருக்கிறது
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 7:57 PM.seithu vitthaen, work aagirathu !!
.thangal, eluttaannikku nandri, aasiriyarae ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 9:43 PM@சிகப்பு மனிதன் நன்றி நண்பரே நம் பதிவுகளை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்களேன் அவர்களும் நம் தளத்திற்கு வரட்டுமே
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 9:52 PM.செய்கிறேன், நண்பரே !
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>