Oct 5, 2010
விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows Installation)–இறுதி பாகம் 8
வணக்கம் நண்பர்களே இந்த பதிவை படிக்கும் முன் முந்தைய ஏழு பதிவின் விபரத்தையும் பார்த்து விடுங்களேன்.
விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 1
விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 2
விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 3
விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4
விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 5
விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 6
விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 7
நண்பர்களே கடந்த சில பல நாட்களகாக இதை எழுதி முடிக்கவேண்டும் என நினைத்தாலும் எழுதுவதற்கான நேரமின்மையை எழுதவிடமால தடுத்தது இந்த சில நாட்களில் எழுதாமல் இருந்ததும் என்னவென்று விசாரித்து நிறைய மின்னஞ்சல்கள் வந்தது அவர்களுக்கு என் நன்றி என்று எழுதலாம் ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லையே! சரி நண்பர்களே முந்தைய ஏழு பதிவுகளின் வாயிலாக சில விஷயங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் இப்போது நீங்கள் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டீர்கள் நீங்கள் முந்தய பதிவுகளின் படி எல்லாமே சரியாய் செய்திருந்தால் இப்போது கீழிருக்கும் படம் போல வந்திருக்கும் அதை ஓக்கே கொடுத்து விடுங்கள். படங்கள் உதவி www.petri.co.il
இனி இப்படியாக ஒரு விண்டோ வரும் இந்த விண்டோவில் வருவது போல 18 செகண்டுகள் காத்திருக்கலாம் அல்லது காத்திருக்காமல் ஓக்கே கொடுத்து விடலாம்.
இனி உங்கள் விண்டோ தொடங்குவதற்கான ஸ்கீரின் வரும் சிறிது நேரம் காத்திருக்க சொல்லும் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும்.
இனி கீழிருக்கும் படத்தில் உள்ளது போல சில பல விண்டோ வரும் எல்லாம் புரிந்துகொள்ளும் வகையில் தான் இருக்கும் எனவே அது பற்றி அதிகம் படங்கள் இனைக்கவில்லை எல்லாம் நெக்ஸ்ட் கொடுக்க வேண்டிவரும்.
இனி இப்படியாக ஒரு விண்டோ வரும் போது நீங்கள் ரிஜிஸ்டர் செய்து விடுங்கள் அவசியம் இனைய இனைப்பு இருக்கவேண்டும் ஒருவேளை தற்போது ரிஜிஸ்டர் செய்யவேண்டாம் பின்னர் செய்துகொள்ளலாம் என நினைத்தால் No not this time என்பதை செலக்ட் செய்து நெக்ஸ்ட் சென்று விடுங்கள்.
எல்லாம் முடிந்த்தும் மைக்ரோசாப்ட் நிறுவணத்தின் சார்பாக உங்களுக்கு நன்றி சொல்வார்கள் அதையும் ஏற்றுக்கொண்டு விண்டோவில் கீழே இருக்கும் பினிஷ் பொத்தானை அழுத்தினால் போதும் விண்டோஸ் இன்ஸ்டாலேசன் முழுவதுமாக முடிந்தது விடும்.
இனி இந்த விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 2 ல் பார்த்த படி நீங்கள் முன்னரை தரவிறக்கி வைத்திருந்த டிரைவர் அல்லது உங்களிடம் இருக்கும் மதர்போர்டு குறுந்தகடு இட்டு கணினிக்கு தேவையான டிரைவர்களை இன்ஸ்டால் செய்யவும் அவ்வளவுதான் அடுத்தபடியாக உங்களுக்கு தேவையான மென்பொருள்களை கணினியில் நிறுவவும் மறக்கமால் அவசியம் நல்ல ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்துவிடவும், அப்படியே இந்த பதிவை பாருங்கள் கீலாக்கர் அபாயமும் அதற்கான பாதுகாப்பும் பாருங்கள் உங்களுக்கு அவசியம் என நினைத்தால் அதையும் இன்ஸ்டால் செய்துவிடுங்கள்
மேலும் உங்கள் பார்வைக்கு
இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்
கணினி பயன்பாட்டு வேகம் அதிகரிக்க
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
14 Responses to “விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows Installation)–இறுதி பாகம் 8”
-
எஸ்.கே
said...
October 5, 2010 at 10:30 AMவிண்டோஸ் இன்ஸ்டால் செய்வதில் இந்த டிரைவர் பிரச்சினைதான் பெரும்பிரச்சினை நண்பரே!:-)
-
seenu
said...
October 5, 2010 at 4:26 PMHi my dear Brother
Your posts are very good.
Pls upload the pdf file for windows installation in any of one file holding website>
I am expecting you abt windows 7 installation and linux installation posts
Thanking You -
ஜிஎஸ்ஆர்
said...
October 5, 2010 at 7:09 PM@எஸ்.கே பார்மட் செய்யும் முன்பு இயங்கும் நிலையில் இருந்தால் எளிதாக செய்துவிடலாம் ஆனால் ஆனால் இயங்காத கணினி என்றால் கொஞ்சம் சிரமமாக இருக்கும் ஆனால் அதையும் கூட ஹைரனில் பார்த்துவிடும் வசதி இருக்கிறது
-
ஜிஎஸ்ஆர்
said...
October 5, 2010 at 7:15 PM@seenuஇதை பாருங்களேன்
http://www.techtalkz.com/windows-7/514412-windows-7-installation-guide-tutorial.html -
மாணவன்
said...
October 6, 2010 at 12:01 PMஅருமை நண்பா வெற்றிகரமாக ”இயங்குதளம் நிறுவுதல்” சிறப்பாக எழுதிவிட்டீர்கள்...
உங்கள் பதிவுகளை பின்பற்றி புதியவர்கள் முயன்று பார்த்தால் நிச்சயமாக சுலபமாக ”இயங்குதளம் இன்ஸ்டால் செய்து விடலாம்....
”விண்டோஸ் இன்ஸ்டால் செய்வதில் இந்த டிரைவர் பிரச்சினைதான் பெரும்பிரச்சினை நண்பரே”
டிரைவர் பிரச்சினை ஆன்லைனில் தரவிறக்கம் செய்து செய்து சரி செய்யலாம் நண்பரே எந்த நிறுவனத்தின் கணினியோ அதன் product model key no தெரிந்துகொண்டு கூகிலிள் தேடினாலே கிடைத்துவிடும் நான் பல தடவை நண்பர்களின் கணினிகளுக்கு டிரைவர் தரவிறக்கம் செய்து செய்து சரி செய்திருக்கிறேன் நண்பரே....
அன்பின் ஜிஎஸ்ஆர் நண்பா தொடர்ந்து இதே உற்சாகத்துடன் எழுத வேண்டும்
நாங்கள் எப்போதும் இனைந்திருப்போம்...
பாராட்டுகளும் வாழ்த்துக்களுடன்...
உங்கள் மாணவன் -
ஜிஎஸ்ஆர்
said...
October 7, 2010 at 11:05 AM@மாணவன்எல்லா பதிவுகளிலும் கருத்துரை இடுகிறீர்கள் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நல்ல வேளை நீங்கள் ஒரு வலைப்பதிவராக இல்லை . தங்கள் கருத்துரைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி தொடர்ந்து வரவை விரும்பி!
-
guru
said...
October 12, 2010 at 11:39 AMஅருமையான தொடர்...
என்னைப் போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
நன்றிகள் பல... -
Vengatesh TR
said...
November 26, 2010 at 12:49 PM.அணைத்து பாகங்களையும் படித்து விட்டேன்
.நேரம் போவதே தெரியவில்லை, உங்கள் வலைப்பூக்களை பார்க்கும் போது.. -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 7:49 PM@guru நன்றி நண்பரே அவசியம் இனி அடுத்த கருத்துரையில் நானக இன்ஸ்டால் செய்துவிட்டேன் என உங்களிடமிருந்து கருத்துரை வந்தால் அதைவிட சந்தோஷம் வேறு இல்லை
-
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 7:50 PM@சிகப்பு மனிதன்பொதுவாகவே இனையத்தில் இருந்தால் நம்முடைய நேரத்தை தின்று விடும்
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 9:23 PM.எனக்கு பரீட்சை முடிந்து விட்டது !!
.எனவே, இனிமேல் இரவு தூங்கினால் அதுவே பெரிய விஷயம் !! -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 9:25 PM@சிகப்பு மனிதன்அவசியம் 6 மணி நேர தூக்கம் அவசியம் மறக்கவேண்டாம்
-
ADMIN
said...
December 30, 2010 at 12:23 PMஒவ்வொரு பதிவும் அருமையான எளிய விளக்கங்களுடன் இருக்கிறது. பாராட்டுக்கள்.. பல.. ! நிச்சயமாய் அனைத்து புதியவர்களுக்கு உதவும்..!
-
ஜிஎஸ்ஆர்
said...
January 1, 2011 at 6:53 PM@தங்கம்பழனிஎன்னால் நான்கு நண்பர்கள் சின்ன விஷயத்தையாவது கற்றுக்கொண்டால் அதைவிட சந்தோஷம் வேறில்லை!
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>