Oct 29, 2010

18

நடந்தால் பாலம் இடியுமா?இடியும்! எப்படி?( Resonance)

  • Oct 29, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: இயற்கையை விஞ்சிய விஞ்ஞானம் இல்லை.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு கொஞ்சம் சுவாராஸ்யாமாகவே இருக்கும் என் நினைக்கிறேன் நாம் பார்க்க போவது ஒலி பற்றித்தான் இந்த ஒலியின் வேகத்தையும் அதன் திறனையும் கொஞ்சம் பார்க்கலாம். நீங்கள் இயற்பியல் (பெளதிகம்) படித்தவரனால் இதைப் பற்றி உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும், இதைவிட அதிகமாகவே நீங்கள் படித்திருப்பீர்கள். நான் சின்ன விஷயத்தை மட்டுமே இந்த பதிவில் எழுத போகிறேன்.

    என்னடா தலைப்பில் நடந்தால் பாலம் இடியுமா? இடியும்! என எழுதியிருக்கிறேன் என நினைக்கிறீர்களா உண்மைதான் பாலம் இடியும் இராணுவ வீரர்கள் நடந்தால் அதாவது அவர்கள் அணிவகுப்பு (March Pass) செய்தால் பாலம் இடியும் வாய்ப்பு இருக்கிறது அதனால் தான் உலகத்தில் எல்லா இடங்களிலுமே இராணுவ வீரர்கள் பாலத்தில் அணிவகுப்பு செய்ய அனுமதியில்லை நமது நாட்டையும் சேர்த்துதான் ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்துக்காக பாலம் கடந்து அணிவகுப்பு செல்லவேண்டி வந்தால் அவர்கள் வேகத்தை குறைத்து கொள்வார்கள்.

    சரி எதனால் இது நடக்கிறது இராணுவ வீரர்கள் அணிந்திருக்கும் மிதியடியின் அடியில் உலோக்தகடு பதிக்கப்பட்டிருக்கும் பாலத்தின் உள்ளேயும் இரும்பு மற்றும் உலோகம் இருப்பதால் தான் இந்த பிரச்சினை இராணுவ வீரர்கள் அணிவகுப்பின் போது ஓரே நேரத்தில் காலை தூக்கி காலை தரையில் அடித்து இறக்கும் போது ஏற்படும் ஒலி அதிர்வு தான் இந்த வேலையை செய்கிறது அதாவது அவர்கள் நடக்கும் போது எழும்பும் ஒலியின் அதிர்வலைகள் பாலத்தில் உள்ளே இருக்கும் இரும்பு,உலோகத்தில் இருந்து எழும்பும் ஒலி அலைகளோடு ஒத்துப்போனால் போதும் பாலம் பாலத்தில் விரிசல் அல்லது இடிவது நிச்சியம்.

    இன்னும் ஒரு விஷயம் பார்க்கலாம் ஒரு பாலத்தின் மேலே ஒரு விமானமோ அல்லது ஹெலிகாப்டரோ பறக்கிறது என வைத்துக்கொள்வோம் விமானம் அல்லது ஹெலிகாப்டரில் இருந்து வெளிவரும் ஒலி அதிர்வலைகளும் பாலத்தில் ஏற்படும் ஒலி அதிர்வலைகளும் ஒரே அலைவரிசையில் இருந்தால் பாலத்தில் விரிசல் அல்லது முறிந்து போகும் வாய்ப்பு அதிகம்.

    இந்த அதிவலைகள் பாலத்துக்கு மட்டுமில்லை ஓரே திட அளவுள்ள அதிர்வை வெளிப்படுத்தும் எந்த பொருளுக்கும் அடங்கும் இன்னும் கொஞ்சம் புரியும் வகையில் சொல்கிறேன் வீட்டில் ஒரு குவளை இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள் இரண்டும் ஒரே திடத்தில் இருக்கிறது இப்போது ஒரு குவளையை நீங்கள் ஏதாவது ஒரு கரண்டி கொண்டு தட்டினால் ஒலி எழும்பும் அப்படி எழும்பும் ஒலியை நிறுத்த உங்கள் கைகளால் குவளையை பொத்தி பிடித்தால் தெரியும் அதன் அருகில் உள்ள குவளையில் இருந்து ஒலி எழும்பும். இது அப்படியே நடக்க வேண்டுமென்பதில்லை ஓரே அளவுள்ள ஒலி அதிர்வலைகளை ஏற்படுத்தாத பட்சத்தில் ஒன்றுமே நடக்காது ஆனால் இரண்டின் போதும் ஏற்படும் அதிர்வலைகள் ஓரே அளவாக இருந்தால் நிச்சியமாக் ஒரு குவளையை தட்டி ஒலி எழுப்பி அதை தடுத்தாலும் மற்ற குவளையில் இருந்து ஒலி எழும்பும். இன்னும் சில நேரங்களில் நீங்கள் கவணித்திருக்க கூடும் தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது பட்டாசில் இருந்து வரும் ஒலியின் அதிர்வலைகளை நாம் வீட்டில் இருக்கும் அண்டா குண்டாக்களில் தெரியும் இப்போது தான் தீபாவளி வருகிறதே இதை கவணித்து பார்த்து விடுங்கள் உங்களுக்கு புரியும் இதைத்தான் ஆங்கிலத்தில் Resonance என்கிறார்கள்.

    இது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக நண்பர் தந்த விபரம் அவருக்கு இனையம் பரிச்சியமில்லை ஆனால் ஆங்கிலச் செய்திகளில் வந்தாதாக சொல்கிறார் ஆனாலும் என்னால் இதில் சரியான தகவலை தரமுடியவில்லை ஆனால் இது நடந்த விபரம் கேட்டதாக ஞாபகம் இருக்கிறது செய்திகளிலும் வந்திருந்ததாம் நானும் அதை இனையத்தில் தேடி மேலதிக தகவலை பெற முயற்சித்தேன் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, அந்த தகவல் ஹெலிகாப்டர் பாலத்தின் மேலே பறந்த போது அது ஏற்படுத்திய அதிர்வலையில் பாலம் உடைந்திருக்கிறதாம் இதைப்பற்றி மேலதிக தகவல் தெரிந்தவர்கள் இனையத்தில் தொடுப்பு இருந்தால் கொடுத்து உதவுங்களேன்.

    இனி மேலதிக தகவலாக இந்த விடீயோவினை பாருங்கள்.







    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் உங்களுக்கு தெரிந்த இயற்பியல் படித்த நண்பர்களே கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு புரியும் வகையில் அவர்களால் சொல்லித்தர இயலும் காரணம் நான் இயற்பியல் படித்தவன் அல்ல. பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    18 Comments
    Comments

    18 Responses to “நடந்தால் பாலம் இடியுமா?இடியும்! எப்படி?( Resonance)”

    guru said...
    October 29, 2010 at 11:04 AM

    ஒரு வேளை காமன்வெல்த் போட்டி ஆரம்பிக்கும் முன், மைதானத்தின் அருகே உள்ள பாலம் இடிந்து விழுந்ததிற்கு, இது கூட ஒரு காரணமாக இருக்குமோ...!


    Speed Master said...
    October 29, 2010 at 12:03 PM

    ya its true mee too studied some where

    Guru -- How you think up normally

    Nice post man bye


    மாணவன் said...
    October 29, 2010 at 12:05 PM

    அருமை நண்பா,
    வழக்கம்போலவே பயனுள்ள தகவலை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி

    ஒலியைப்பற்றி ஏற்கனவே படித்திருந்தாலும் நீங்கள் தெளிவாக விளக்கினீர்கள்
    வீடியோவும் அருமை...

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகளுடன்
    உங்கள் மாணவன்


    அந்நியன் said...
    October 29, 2010 at 12:09 PM

    தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வதே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நாடு நிலையை வெளியிடும் வரை ஆதரவு தாரீர் …அந்நியன்


    ஜெயந்த் கிருஷ்ணா said...
    October 29, 2010 at 2:41 PM

    நல்ல பதிவு...


    ம.தி.சுதா said...
    October 29, 2010 at 8:27 PM

    அருமை சகொதரா நான் பௌதிகவியல் படித்தவன் தான்.. அருமையாக விளங்கம் படி விளக்கியுள்ளீர்கள்... நன்றிகள்.. இந்த உடையும் கணத்தை பரிவு என்று அழைப்போம்... இதனால் தான் பைசா கோபுரத்திற்கு அருகாமையில் விமானம் பறக்க அனுமதியில்லை... அத்துடன் பீரங்கிக் குண்டுகள் ஒநே நேரத்தில் ஒரே கட்டளையில் வெடிக்க வைக்கப்படும்...


    NaSo said...
    October 29, 2010 at 9:16 PM

    பள்ளியில் படித்ததை திரும்பவும் படித்து புரிந்துகொள்ள வைத்தது உங்கள் பதிவு. நன்றி.


    பெருங்காயம் said...
    October 29, 2010 at 9:21 PM

    இராணுவ வீரர்கள், பாலத்தில் மார்ச் செய்து பாலம் உடைந்து விட்டதால் அதன் பிறகே பாலத்தில் மார்ச் செய்வதில்லை என்று படிதத ஞாபகம் உள்ளது.


    ஜிஎஸ்ஆர் said...
    October 30, 2010 at 9:11 AM

    @guruநண்பா உண்மைதான் ஆராய்ந்து பார்த்தால் அதன் பின்னால் இந்த Resonance இருந்தாலும் இருக்ககூடும் நண்பா உங்களின் சிந்திக்கும் திறன் பிடித்திருக்கிறது


    ஜிஎஸ்ஆர் said...
    October 30, 2010 at 9:12 AM

    @Speed Master தங்கள் வரவிற்கும் பகிர்தலுக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 30, 2010 at 9:13 AM

    @மாணவன் நம்முடைய நோக்கமே எந்த தகவலையும் என்னை போல சராசரிக்கும் கீழே இருப்பவரும் புரிந்துகொள்ள வேண்டுமென்பது தான் அதைத்தான் உங்களை போன்ற நண்பர்களின் ஆதரவோடு செய்துகொண்டிருக்கிறேன் இனியும் தொடரும்


    ஜிஎஸ்ஆர் said...
    October 30, 2010 at 9:24 AM

    @அந்நியன் நீங்கள் தளம் மாறிப்போய் கருத்துரை எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன், மேலும் நீங்கள் சொல்ல வந்த நபர்களை பற்றி எனக்கு தெரியாது அவர்கள் முகவரியை கொடுத்திருந்தாலவது படித்து பார்த்திருப்பேன்.

    பதிவுலகத்தில் அவரவர் விருப்பபடி எழுதுகிறார்கள் வேண்டிய நண்பர்களை புகழ்ந்து எழுதுவது எழுதாமல் இருப்பது அவர்கள் சொந்த விஷயமே மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள வதே மாதரம் சசிக்கு திறமையும் நேர்மையும் இருந்தால் அங்கீகாரம் தானக தேடிவரும்.

    என்னைப்பொருத்த வரை அங்கீகாரம் என்பது தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கே கிடைக்கவேண்டும் நீங்கள் சொல்கிற நபர்களின் தொடுப்பு கொடுங்கள் நானும் படித்து பார்க்கிறேன.


    ஜிஎஸ்ஆர் said...
    October 30, 2010 at 9:25 AM

    @வெறும்பயவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 30, 2010 at 9:27 AM

    @ம.தி.சுதாஇந்த பதிவு எழுதும் போது இதை படிக்கும் நண்பர்கள் சரியான கோனத்தில் புரிந்துகொள்வார்களா என சந்தேகத்திலே தான் எழுதியிருந்தேன் அதை சரியாகவே நண்பர்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 30, 2010 at 9:28 AM

    @நாகராஜசோழன் MAவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 30, 2010 at 9:28 AM

    @விஜயகுமார் சரியான புரிதலுடன் கூடிய கருத்துக்கு நன்றி நண்பா


    ம.தி.சுதா said...
    October 30, 2010 at 7:21 PM

    நன்றி சகோதரா... இன்னுமொரு தகவல் ஒன்று physics என்பது ஒரு கிரேக்கச் சொல் இதன் அர்த்தம் இயற்கை என்பதாகும்


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 8:05 PM

    @ம.தி.சுதாஇது எனக்கு புது தகவல்

    பகிர்வுக்கு நன்றி நண்பா


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர