Oct 11, 2010

6

இனைய வரைமுறை (நெறிமுறை) விலாசம் (IP Address)

  • Oct 11, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: எந்த காயத்திற்கும் நண்பன் மருந்தாவான் ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்துக்கு மருந்து இல்லை.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நீங்கள் பெரிதாக கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை இது உங்களுக்கு பெரிதாக பயனபட போவதுமில்லை இருப்பினும் தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.ஒரு வீட்டுக்கு ஒரு முகவரி இருப்பது போல ஒவ்வொரு கணினிக்கும் ஒரு ஐபி அட்ரஸ் இருக்கும் ஆனால் சாதரண கணினி பயன்பாட்டாளர்களுக்கு இதனுடைய அவசியம் வரப்போவதில்லை இருப்பினும் அந்த இனைய வரைமுறை விலாசத்தை எப்படி அறிந்துகொள்வது என பார்க்கலாம்.

    Start –> Run -> cmd என டைப் செய்து கமாண்ட் விண்டோ திறக்கவும்.



    இனி இப்படி திறக்கும் இதில் நீங்கள் செய்யவேண்டியது ipconfig என டைப் செய்து ஒரு எண்டர் கொடுக்கவும் இனி உங்கள் கணினியில் IP ADDRESS (ஐபி முகவரி) இனைய வரைமுறை (நெறிமுறை) விலாசம் வந்திருக்கும் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.



    வேறொரு வழிமுறையவும் பாருங்கள் முன்னர் பார்த்தது போலதான் ஆனால் இதில் Iipconfig/all என்பதாக டைப் செய்யவேண்டும் இதில் கூடுதலான தகவல்களை பெறலாம்.



    சரி நீங்கள் உங்கள் கணினியின் IP ADDRESS (ஐபி முகவரி) இனைய வரைமுறை (நெறிமுறை) விலாசம் மாற்ற நினைக்கிறீர்கள் அதற்கு என்ன செய்வது என பார்க்கலாம் மேலே பார்த்தது போல Start - >Run - > cmd என டைப் செய்து ipconfig/release அல்லது ipconfig /renew என டைப் செய்து ஒரு எண்டர் கொடுத்தால் மாறிவிடும் இதிலிருந்து வெளிவர exit என டைப் செய்தால் போதும்.



    என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    6 Comments
    Comments

    6 Responses to “இனைய வரைமுறை (நெறிமுறை) விலாசம் (IP Address)”

    எஸ்.கே said...
    October 11, 2010 at 3:09 PM

    கமெண்ட் போடறவங்க/ஆன்லைனில் இருப்பவர்கள் ஐபி அட்ரஸ்லாம் கண்டுபிடிக்க முடியுமா நண்பரே?


    ஜிஎஸ்ஆர் said...
    October 11, 2010 at 4:22 PM

    @எஸ்.கேஇந்த இரண்டு விஷயத்திற்குமே எனக்கு பதில் தெரியவில்லை ஆனால் நம் தளத்திற்கு வருபவர்களின் ஐபி முகவரியை ஓரளவிற்கு கண்டுபிடிக்க முடியும் ஆனால் அது 100% சரியானதா என்பதை கண்டுபிடிப்பது சிரமாமாக இருக்கிறது நானே எனது இரண்டு கணினிகளில் இதை சோதித்து பார்த்திருக்கிறேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்

    http://statcounter.com/

    மன்னிக்கவும் தங்களுக்கு சரியான பதில் அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்


    ம.தி.சுதா said...
    October 11, 2010 at 10:58 PM

    ////எந்த காயத்திற்கும் நண்பன் மருந்தாவான் ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்துக்கு மருந்து இல்லை.////
    இன்னைக்க நீங்க சொன்ன கருத்து தந்த தகவலை விட எனக்குப் பிடிச்சிருக்கு...


    ஜிஎஸ்ஆர் said...
    October 12, 2010 at 10:09 AM

    @ம.தி.சுதாதங்கள் கருத்திற்கு நன்றி நண்பா


    Vengatesh TR said...
    November 26, 2010 at 12:11 PM

    .எனக்கு மிகவும், உபயோகமான சாப்ட்வேர் அளித்து உள்ளிர்கள் !!!


    .தங்களின், எழுதானிக்கு நன்றி !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:54 PM

    @சிகப்பு மனிதன் தங்களின் கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பரே


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர