Oct 21, 2010

14

இமேஜ் ரீஸைசர் (Image Resizer)

  • Oct 21, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: சிறிய காரியங்களை சரியாக செய்யுங்கள் நாளடைவில் பெரிய காரியங்கள் தேடி வரும்

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு புகைப்படம் பற்றியது நாம் அன்றாடம் எத்தனையோ விதமான காரணங்களுக்காக புகைப்படங்களை பயன்படுத்துகிறோம் அதிலும் ஸ்டுடியோ, மற்றும் வலைப்பூக்களில் புகைப்படம் அதிகமாக பயன்படுத்துகிறோம், இதனால் படிக்கும் நபர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருக்கும்.

    இந்த பதிவு பலருக்கு பயன்படும் ஆனால் எப்போது இதன் தேவை வருமென்று தெரியாது, அதனால் என்ன தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் தவறில்லை,என்னவென்றே தெரியவில்லை கடந்த சில பதிவுகள் தொடர்ச்சியான புகைப்படம் பற்றியதாகவே அமைந்துவிட்டது சரி இனி இந்த Resizer மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவுங்கள் சில நொடிகளில் இன்ஸ்டால் ஆகிவிடும்.

    இந்த மென்பொருள் வாயிலாக உங்களிடம் இருக்கும் பலதரப்பட்ட அளவுகளில் உள்ள புகைப்படங்களை மிக எளிதாக ஒரே மாதிரியான அளவுகளுக்கு கொண்டுவந்துவிடலாம் பொதுவாக கணினியில் ஏதாவது ஒரு தகவலில் அடிப்படையில் புகைப்படத்தையும் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் மேலும் Access-ல் புகைப்படம் பயன்படுத்துவதற்கு இந்த மென்பொருள் வாயிலாக மாற்றம் ஏற்படுத்திக்கொண்டு பயன்படுத்தலாம் காரணம் நம்மிடம் பத்து புகைப்படத்தை மட்டுமே நாம் பயன்படுத்த போகிறோம் என்றால் ஒன்றும் பிரச்சினையில்லை ஒவ்வொன்றாகவே செய்து முடித்துவிடலாம் ஆனால் ஒரு நிறுவணத்தில் இருக்கும் 5000 நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்த நினைத்தால் ஒவ்வொன்றையும் தனியாக செய்யமுடியாதல்லவா! சமீபத்தில் தான் இதன் தேவை நமக்கும் வந்தது.

    இனி உங்கள் மென்பொருளை இயக்க தொடங்குங்கள் இதில் நீங்கள் ஒரு புகைப்படத்தையோ அல்லது மொத்தமாகவோ மாற்றும் வசதி இருக்கிறது . நான் இதில் பயன்படுத்தி இருக்கும் புகைப்படத்தின் அளவு 6x9 Ft ஆகும் ஆனால் சில நிமிடங்களில் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் அளவிற்க்கு உங்கள் விருப்பம் போல மாற்றி கொடுத்துவிடும்.

    (இந்த புகைப்படத்தை 5x8 Inch ஆக இருந்தது அதை நமது கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட சிறிய புகைப்படங்களை தரம் குறையாமல் பெரிதாக்கலாம் வாயிலாக மாற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்க)



    இதில் பாருங்கள் பிரிவியூ என்பதில் படத்தின் அளவு பெரியது என்பதால் காண்பிக்கவில்லை ஆனால் அளவை மாற்றி கொடுத்துவிடும் நான் 6x9 Ft அளவுள்ள ஒரு புகைப்படத்தை உள்ளிட்டு 5X8 Inch ஆக மாற்றியிருக்கிறேன் மிக எளிமையானது பயன்படுத்தி பாருங்கள் ஆனால் இது போன்ற மென்பொருள்கள் எல்லா நண்பர்களுக்கும் தேவைப்படுமா என்பது தெரியவில்லை தேவைப்படும் நண்பர்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.



    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    14 Comments
    Comments

    14 Responses to “இமேஜ் ரீஸைசர் (Image Resizer)”

    மாணவன் said...
    October 21, 2010 at 9:37 AM

    வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருளை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் அருமை நண்பா,
    சில நேரங்களில் கண்டிப்பாக இந்த மென்பொருள் உதவியாய் இருக்கும்
    தரவிறக்கம் செய்து வைத்திருந்தால் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்
    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா....
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
    என்றும் நட்புடன்
    உங்கள்.மாணவன்


    guru said...
    October 21, 2010 at 11:25 AM

    நன்றி நண்பரே..
    இந்த மென்பொருளைத்தான் தேடிக் கொண்டிருந்தேன் ....


    Speed Master said...
    October 21, 2010 at 12:01 PM

    Nice one me too looking for this kind software
    thanks a lot man bye


    ஜிஎஸ்ஆர் said...
    October 21, 2010 at 6:54 PM

    @மாணவன் நன்றி நண்பா என்னால் முடிந்ததை எழுதுகிறேன் அதானல் நண்மையடைந்தால் சந்தோஷமே


    ஜிஎஸ்ஆர் said...
    October 21, 2010 at 6:54 PM

    @guru இப்போது உங்கள் தேடுதலுக்கு விடை கிடைத்து விட்டதுதானே!


    ஜிஎஸ்ஆர் said...
    October 21, 2010 at 6:55 PM

    @Speed Masterவரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    Guruji said...
    October 31, 2010 at 10:54 AM

    சார் எனக்கு ஒரு உதவி தேவை என்னிடம் avl format ல் சில file உள்ளது அதை PDF ஆகவோ WORD ஆகவோ கன்வெர்ட் செய்ய வேண்டும் அதற்கான சாப்ட்வேர் இருந்தால் தெரியபடுத்தவும்


    ஜிஎஸ்ஆர் said...
    October 31, 2010 at 8:03 PM

    @யோகி ஸ்ரீ ராமானந்த குருங்கள் .AVI பார்மட் என குறிப்பிட்டிருப்பது வீடியோ பார்மட் என்பதை குறிக்கிறதா?

    நீங்கள் குறிப்பிட்டிருப்பது இது தான் என்றால் உங்களிடம் இருக்கும் வீடியோவை 4shared தளத்தில் அப்லோட் செய்து அந்த உரலை இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள் இப்போது உள்ள தொழில்நுட்பம் பயன்படுத்தி எனக்கு தெரிந்த வரையில் இரண்டுமே கொஞ்சம் கடினாம் ஆனாலும் வேறு சில வழிமுறைகளை பயன்படுத்தி முதலில் வீடியோவை இமேஜ் பிரேமாக மாற்றி அதனை பிடிஎப் ஆக மாற்றமுடியும் என நினைக்கிறேன் எப்படி இருந்தாலும் உங்களிடமிருக்கும் அந்த பைலை அனுப்புங்கள் என்னால் உங்களுக்கு உபயோகப்படும் வகையில் ஏதாவது செய்ய முடியுமானல் நிச்சியம் செய்கிறேன் ( நான் உங்களிடம் அந்த பைலை கேட்பதன் காரணம் சோதனைக்காக மட்டுமே என்னிடம் வீடியோ இருக்கிறது ஆனால் உங்களிடம் இருக்கும் வீடியோவை எந்த முறையில் செய்யமுடியும் என்பதற்கு அவசியம் உங்கள் பைல் தேவை எல்லாம் சரியாய் செய்து தீர்க்க முடிந்தால் அனைவரும் பயனடையும் வகையில் ஒரு பதிவாக எழுதலாம்

    சரியான புரிதலுக்கு நன்றி

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 11:27 AM

    .புரிந்து கொண்டேன், ஆசிரியரே !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:02 PM

    @சிகப்பு மனிதன்மீண்டும் ஆசிரியரா? நண்பரே அது புனிதமான வார்த்தை எனக்கு அந்த தகுதியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:17 PM

    .அப்படி என்றால், நான் உங்களை எப்படி அழைப்பது ?

    .நீங்களே, எனக்கு தகுந்த வார்த்தையை கூறுங்கள் !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:20 PM

    @சிகப்பு மனிதன்இருக்கவே இருக்கிறது சகோதரா அல்லது நண்பா எனக்கு இந்த தகுதிதான் பெரிதாக நினைக்கிறேன்


    Vengatesh TR said...
    November 27, 2010 at 9:40 PM

    .நான், சிறுவயது, மாணவன் !

    .நண்பன் என்று, இனி அழைக்கிறேன், இதற்கு தான், வயது ஒரு தடை இல்லை, என நான் நினைக்கிறேன் !


    .வழிகாட்டுதலுக்கு நன்றி,


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:51 AM

    @சிகப்பு மனிதன்உண்மை தான் நட்புக்கு மட்டுமே விதிகள் குறைவு


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர