Oct 17, 2010

13

இமேஜ் கன்வெர்ட்டர் (Image Convertor)

  • Oct 17, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: எந்த சமயத்திலும் முயற்சியை விடாதே, அப்பொழுது நிஜமாய் தோற்றுபோகிறாய்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு புகைப்படம் பற்றியது நாம் அன்றாடம் எத்தனையோ விதமான காரணங்களுக்காக புகைப்படங்களை பயன்படுத்துகிறோம் அதிலும் ஸ்டுடியோ, மற்றும் வலைப்பூக்களில் புகைப்படம் அதிகமாக பயன்படுத்துகிறோம், இதனால் படிக்கும் நபர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருக்கும்.

    புகைப்படங்களை பொருத்தவரை நிறையவிதமான பார்மட்டுக்கள் இருக்கின்றன அதில் நாம் குறிப்பாக JPG, BMP, GIF என்பது போன்ற பார்மட்டுகளை நாம் வலைப்பூக்களில் பயன்படுத்துகிறோம் உதாரணமாக நாம் ஒரு ஸ்கீரின் ஷாட் எடுத்து நாம் மைக்ரோசாப்டின் பெயிண்டில் திறந்தால் அங்கு டிபால்ட்டாக இருக்கும் பார்மாட் BMP நல்ல தரமானாதாக இருக்கும் ஆனால் அளவு அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் கொஞ்சம் தரம் மாறாமல் அளவை குறைக்க JPG பார்மட் பயன்படுத்தலாம் அதே நேரத்தில் போட்டோஷாப்பில் PSD எனும் பார்மட் இருக்கிறது அதன் அளவு இவை எல்லாவற்றையும் விட அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் அதில் இருக்கும் பயன்பாடுகளும் இருக்கும்.

    நாம் இந்த பதிவின் வழியாக பார்க்கபோவது ஒரு பார்மட்டில் இருந்து வேறொரு பார்மட்டிற்கு எளிதாக எப்படி மாற்றுவது என்பதை பற்றித்தான் இதற்கு நிறைய மென்பொருள்கள் இனையத்தில் கிடைக்கின்றன ஆனால் இந்த மென்பொருள் ஒரே நேரத்தில் பலவிதமான பார்மட்டுகளை கையாலும் விதத்தில் இருக்கின்றன இதன் வழியாக JPG, BMP,GIF, GreyScale, Rotate இப்படி விதமான செயல்களை எளிதாக செய்யமுடியும்.

    இனி இந்த இமேஜ் கன்வெர்ட்டர் Image Convertor தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் மிக குறைந்த அளவுள்ள மென்பொருள்தான் இனி உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் இதன் ஷார்ட்கட் ஐகானை கிளிக்கினால் கீழிருக்கும் படத்தை போல வரும்.



    இனி இடது பக்கம் இருக்கும் லோக்கல் டிஸ்க் வழியாக நீங்கள் மாற்ற விரும்பும் படங்களை தனியாகவோ அல்லது மொத்தமாகவோ தெரிவுசெய்து கன்வெர்ட் என்பதை கிளிக்கினால் போதும் எல்லாம் சில நொடிகளில் மாற்றிவிடலாம் இதன் வழியாக வேண்டுமானால் கலர் படங்களை கிரே கலராக மாற்றவும் படங்களை திருப்பும் வசதியும் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள் விரும்புவீர்கள்.

    போதுமான நேரமின்மையால் முழுமையாக எழுதமுடியவில்லை இருப்பினும் இதில் விரிவாக எழுதும் அளவிற்கு ஒன்றுமில்லை மிக எளிமையான மென்பொருள்.என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    13 Comments
    Comments

    13 Responses to “இமேஜ் கன்வெர்ட்டர் (Image Convertor)”

    மாணவன் said...
    October 17, 2010 at 12:20 PM

    சின்ன பதிவாக இருந்தாலும் கலக்கல் நண்பா,
    பயனுள்ள மென்பொருள் பலருக்கும் பயன்படும்
    ஒருவரி கருத்து டச்சிங் நண்பா ”எந்த சமயத்திலும் முயற்சியை விடாதே, அப்பொழுது நிஜமாய் தோற்றுபோகிறாய்” சூப்பர்.
    உங்களுக்கும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
    என்றும் நட்புடன்
    உங்கள்.மாணவன்


    ம.தி.சுதா said...
    October 17, 2010 at 12:30 PM

    பலருக்கு உதவக் கூடிய அருமையான பதிவு ஒன்று சகோதரா வாழ்த்துக்கள்...


    முத்து said...
    October 17, 2010 at 5:05 PM

    நன்றி.உபயோகமான தகவல்


    erodethangadurai said...
    October 17, 2010 at 10:28 PM

    எல்லோருக்கும் அவசியமான பதிவு...

    இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

    http://erodethangadurai.blogspot.com/


    ஜிஎஸ்ஆர் said...
    October 17, 2010 at 11:53 PM

    @மாணவன்உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பா இங்கு நான் எழுதுவதை விட உங்களை போன்ற நண்பர்கள் எழுதும் வாக்கும் கருத்துரையும் தான் நம் தளத்தின் அழகு , கவிதைக்கு பொய் அழகு என்பது போல என் தளத்திற்கு வாசக நண்பர்களாகிய நீங்கள் அளிக்கும் வாக்கும் கருத்துரையும் அழகு


    ஜிஎஸ்ஆர் said...
    October 17, 2010 at 11:54 PM

    @ம.தி.சுதாபலருக்கும் உதவ தானே நண்பா உங்கள் ஆதரவோடு தொடர்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    October 17, 2010 at 11:54 PM

    @முத்துதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 17, 2010 at 11:56 PM

    @ஈரோடு தங்கதுரை தாங்கள் எப்பொழுது வந்தாலும் நம் தளத்திற்கு முக்கியமானவரே நண்பா, தங்களின் வரவிற்கும் முதல் கருத்துரைக்கும் நன்றி நண்பா, முடிந்தால் தொடர்ந்து இனைந்திருக்க முயலுங்கள்


    எஸ்.கே said...
    October 18, 2010 at 12:49 AM

    எளிமை! சிறப்பாக உள்ளது! படம் தரம் குறையாமல் பெரிதாக்க மென்பொருள் உள்ளதா நண்பரே?


    மாணவன் said...
    October 18, 2010 at 7:29 AM

    ”படம் தரம் குறையாமல் பெரிதாக்க மென்பொருள் உள்ளதா நண்பரே?”
    நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் அதற்கான மென்பொருள் இருந்தால் பதிவிடவும் நண்பா...
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
    நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    October 19, 2010 at 1:38 PM

    @மாணவன்,@எஸ்.கே உங்கள் இருவருக்குமான பதில் http://gsr-gentle.blogspot.com/2010/10/blog-post_19.html


    Vengatesh TR said...
    November 26, 2010 at 11:40 AM

    .மூன்று இமேஜ் சாப்ட்வேர்களையும், மிக உபயோகம் வாய்ந்தவை !!

    .அதிக மெமரி எடுத்துகொள்ளது எத்தன சிறப்பு என கருதுகிறேன் ...


    .புகுத்தம்மைக்கு நன்றி !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:00 PM

    @சிகப்பு மனிதன்உண்மை தான் அதிக மெமரியை எடுத்துக்கொள்வதில்லை நண்பரே மேலும் உபயோகிக்க எளிதானது


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர