Oct 26, 2010

10

ஜிமெயிலில் பூமராங் மின்னஞ்சல் அனுப்பலாம் (Boomerang for Gmail)

  • Oct 26, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: நகத்தால் கிள்ளிப்போட வேண்டியதை கோடாளியால் வெட்டும் அளவிற்கு வளர விடக்கூடாது.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு நம்மில் பலருக்கும் நிச்சியம் உதவும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை சாதரணமாக நாம் ஒரு மின்னஞ்சலை கம்போஸ் செய்து ஒன்று டிராப்டில் சேமித்து வைக்கலாம் அல்லது அப்பொழுதே அனுப்பி விடலாம் ஆனால் இந்த இரண்டும் அல்லாமல் நாம் நம் நண்பரின் திருமணம் அல்லது இன்ன பிற தொழில் ரீதியான மின்னஞ்சல்கள் அல்லது அலுவலக சம்பந்தமான சுற்றரிக்கைகள் என சில விஷயங்கள் முன்கூட்டி தெரிந்து வைத்திருந்து நாம் மின்னஞ்சலில் டிராப்ட் செய்து வைத்திருந்தாலும் சில நேரங்களில் மறந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது ஆனால் இதை நம் நண்பனோ அல்லது மற்ற நிறுவணங்களோ இதை ஏற்றுக்கொள்ளுமா அதற்கு தான் இந்த தீர்வு.

    இனிமேல் நீங்கள் முன்கூட்டியே மின்னஞ்சலை அனுப்பிவிடலாம் ஆனால் அது நீங்கள் அனுமதிக்கிற தேதியில் மட்டுமே சென்றடையும் அதற்காக நீங்கள் மீண்டும் ஞாபகம் வைத்திருக்க வேண்டியதில்லை மின்னஞ்சலை கம்போஸ் செய்யும் போது எல்லாம் முடிந்து விடும்.

    இந்த ஆட் ஆன் வசதி நெருப்பு நரிக்கும் (Firefox) கூகுளின் குரோமிற்கும் (Google Chrome) மட்டுமே கிடைக்கிறது அதுவும் சோதனை நிலையிலே தான் இப்பவும் இருக்கிறது இந்த வசதிக்கு Boomerang என பெயரிட்டுள்ளார்கள இனி நீங்கள் செய்யவேண்டியது இந்த www.baydin.com தளத்திற்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியும் எந்த உலாவியை(பிரவுசரை) பயன்படுத்துகிறீர்கள் என்பதை பதிந்துவிடவும் வேற எந்த கேள்வியும் அவர்கள் கேட்பதில்லை ஒரிரு நொடிகளில் முடிந்துவிடும்.



    ஒருவேளை இதில் சரியாகமல் போகலாம் அதையும் அவர்களே அந்த தளத்தில் தெரிவித்திருக்கிறார்கள் அப்படி உங்களுக்கு நேர்ந்துவிட்டால் அதற்கு ஒரு மாற்று வழி இருக்கிறது அதற்கு நீங்கள் இங்கு infoomatic.com சென்று நான் கீழே அடையாளத்திற்காக படத்தை பாருங்கள் நீங்கள் உங்கள் பிரவுசர் நெருப்பு நரி என்றால் அதற்கான ஆட் ஆன்(Add On) தரவிறக்குங்கள் ஒரு வேளை நீங்கள் குரோம் பிரவுசர் என்றால் அதற்கான ஆட் ஆன் (Add On) இனைத்துக்கொள்ளுங்கள்.



    சரி இப்போது ஆட் ஆன் நிறுவியாயிற்று இனி அடுத்து என்ன உங்கள் மின்னஞ்சலை திறந்து பாருங்கள் புதிதாக ஒரு ஆட் ஆன் நிறுவப்பட்டிருக்கும் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள்.



    இனி நீங்கள் செய்யவேண்டியது வழக்கம் போல To என்பதில் அனுப்பவேண்டிய முகவரி மற்றும் அனுப்பவேண்டிய செய்தியை டைப் செய்துவிட்டு முதலில் சேமித்து விடுங்கள் அடுத்ததாக Send Later என்பதை கிளிக்கி உங்கள் விருப்பபட்ட தெரிவினை தெரிவு செய்யுங்கள் நான் At a specific time என்பதை தெரிவு செய்திருக்கிறேன் இப்போது திறக்கும் பாப் அப்பில் மின்னஞ்சல் செல்லவேண்டிய தேதியும் நேரமும் கொடுத்து Confirm என்பதை அழுத்துங்கள் இப்போது வேறு ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் அதையும் அனுமதித்து விடுங்கள் அவ்வளவுதான் இனி நீங்கள் அனுப்ப விரும்பிய தேதி, நேரத்தில் மின்னஞ்சல் சென்றுவிடும். நீங்கள் மின்னஞ்சலை அனுப்பியவுடன் Sentல் பார்த்தால் இந்த மின்னஞ்சல் தெரியாது நீங்கள் அட்டவனை செய்த தேதியில் சென்ற பின்னர் தான் Sent ல் தெரியும்.



    எல்லாம் சரியாக முடிந்துவிட்டால் ஒன்றும் பிரச்சினை இல்லை இதன் அவசியம் உங்களுக்கு வராது ஒரு வேளை பிரச்சினைகள் இப்படி ஏதாவது ஒன்றாக வரலாம் "You must authenticate before you can use Boomerang. If you did not see an authentication window, try disabling your popup blocker on this site." happens. அதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது இது நெருப்பு நரிக்கானது (firefox) நெருப்பு நரியில் Tools கிளிக்கி Options திறக்கவும்.



    இப்படியாக திறக்கும் பாப் அப் விண்டோவில் Content திறந்து Block pop-up windows என்பதில் இருக்கும் டிக் மார்க் குறியை எடுத்துவிட்டு ஓக்கே கொடுத்து விடவும் அப்படியே மீண்டும் Toolsல் சென்று Clear Recent History சென்று எல்லாவற்றையும் அழித்து விடவும் அவ்வளவு தான் இனி நிச்சியமாக ஆட் ஆன் சிறப்பாக செயல்படும்.



    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    10 Comments
    Comments

    10 Responses to “ஜிமெயிலில் பூமராங் மின்னஞ்சல் அனுப்பலாம் (Boomerang for Gmail)”

    Kiruthigan said...
    October 26, 2010 at 9:17 AM

    நல்ல தகவல் நண்பரே...
    தமிழில் உம்போன்ற ஓரிருவரோ வெகுசிலரோ தான் உளர்...
    தொடரவேண்டும் உம் மகத்தான நற்பணி..
    வாழத்துகிறோம்..


    ADMIN said...
    October 26, 2010 at 12:17 PM

    மிகவும் பயன்படக்கூடிய ஒன்றுதான்.. பயனுள்ள பதிவுக்கு நன்றி...! என்னுடைய வலைப்பூவை பாருங்களேன்.. http://thangampalani.blogspot.com/


    மாணவன் said...
    October 26, 2010 at 12:20 PM

    மிகவும் பயனுள்ள தகவலை அழகு தமிழில் தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும்படி அருமையாக எழுதியுள்ளீர்கள்
    பகிர்ந்தமைக்கு நன்றி
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    என்றும் நட்புடன்
    உங்கள்.மாணவன்


    தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...
    October 26, 2010 at 1:54 PM

    good !! thanks !


    ஜிஎஸ்ஆர் said...
    October 27, 2010 at 7:43 AM

    @Cool Boy கிருத்திகன். இத்தனை பாரட்டுகளுக்கும் உங்கள் நம்பிக்கைக்கும் நான் தகுதியானவனா என தெரியவில்லை இருந்தாலும் உங்களுடன் தொடர்கிறேன் முடிந்தவரை நம் தளத்தில் இனைந்திருங்கள்.


    ஜிஎஸ்ஆர் said...
    October 27, 2010 at 7:44 AM

    @தங்கம்பழனிவருகிறேன் நண்பா நிறைய எழுதுங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    October 27, 2010 at 7:45 AM

    @மாணவன்இன்னும் சிறப்பாக செயல்பட உங்களை போன்ற நண்பர்களின் துனை அவசியம்


    ஜிஎஸ்ஆர் said...
    October 27, 2010 at 7:45 AM

    @தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமைவரவிற்கும் கருத்திற்கும் நன்றி நண்பா


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:07 AM

    .இப்படியும் வசதி உண்டா !!

    .என் ஜிமெயில்il புகுத்தி விட்டேன் !!

    .தங்களின் எழுத்தானிக்கு நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:06 PM

    @சிகப்பு மனிதன்இது நல்ல வசதி நண்பரே அவசியம் பயன்படுத்துங்கள்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர