Oct 25, 2010
நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில்
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு நம் அருமை நண்பர் மின்னஞ்சல் வழியாக அவருடைய தளத்தில் அவர் விரும்பும் தளங்களை அவருடைய தளத்தில் காண்பிக்க விரும்புவதாகவும் அவர் இனைத்திருக்கும் தளங்கள் அவருடைய நண்பர் தளங்கள் புதிதாக பதிவு எழுதினால் தானாகவே அப்டேட் ஆக வேண்டும் என்பதாக கேட்டிருந்தார். நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்ததால் அவரின் பெயரை இங்கு இனைக்கவில்லை(உங்கள் பெயரை வெளியிட ஏதாவது ஆட்சேபம் இருக்கும் என நினைத்து தான் வெளியிடவில்லை மாற்றுக்கருத்து இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் நண்பரே.)
நண்பர் கொஞ்சம் அவர் தளத்தை Add Gadget என்பதை திறந்து பார்த்திருந்தால் நான் இந்த பதிவை எழுத வேண்டி வந்திருக்காது அதனால் என்ன நமக்கும் ஒரு பதிவு எழுத வாய்ப்பு கிடைத்ததே!
சரி நண்பர்களே இந்த விஷயம் நிறைய நபர்களுக்கு தெரிந்திருக்கும் ஆனாலும் என்னைப்போல, நண்பரைப்போல புதிதாக வந்தவர்களுக்கு தெரிந்துகொள்ள இந்த பதிவு உதவும் உண்மையை சொல்லப்போனால் நண்பர்களுடைய தளத்தையும் நம் தளத்தில் இனைப்பது நல்ல விஷயம் தான் ஆனால் நீங்கள் விரும்பும் நபர்கள் கூட இந்த மாதிரியான செயல்களை செய்வதில்லை. இனி நீங்கள் Dash Board சென்று அங்கு இருக்கும் Design என்பதி கிளிக்கி பின்னர் அங்கிருக்கும் Add a Gadget என்பதை கிளிக்கினால் கீழிருக்கும் பாப் அப் விண்டோ திறக்கும் அதில் நீங்கள் Blog List என்பதன் அருகில் இருக்கும் பிளஸ் அடையாளத்தை எலியால் அழுத்தவும்.
இப்போது உங்களுக்கு கீழிருக்கும் பாப் அப் விண்டோ வந்திருக்கும் அதில் Title என்பதில் தலைப்பு அதாவது நீங்கள் வரிசை படுத்தபோகும் தளங்களுக்கான பெயர் உதாரணமாக “ நான் விரும்பும் தளங்கள்” அல்லது “இதையும் பாருங்கள்” எல்லாம் உங்கள் ரசனைக்கேற்ப கொடுத்து விடுங்கள் அடுத்த்தாக உங்களுக்கு பதிவின் தலைப்பு மட்டும் வேண்டுமா இல்லை நேரம் தேதி பதிவின் அவதார் வேண்டுமா என்பதை உங்கள் விருப்பம் போல் தெரிவு செய்யுங்கள் நான் எல்லாவற்றையும் தெரிவு செய்திருக்கிறேன் அடுத்ததாக Add a blog to your list என்பதை கிளிக்கவும்.
இப்போது இப்படியாக ஒரு பாப் அப் வந்திருக்கும் அதில் நீங்கள் இனைக்க விரும்பும் தளத்தின் பெயரை கொடுத்து ADD என்பதை கிளிக்கவும் அல்லது நீங்கள் பின்பற்றும் வலைத்தளம் மொத்தமாக உங்கள் பதிவில் தெரிய Blogs I’m Following என்பதை கிளிக்கினால் நீங்கள் பின்பற்றும் மொத்த தளமும் உங்கள் பதிவில் தெரியும்.
நீங்கள் சேர்த்த பின்பு இனி இப்படியாக இருக்கும் எல்லாம் சரியாய் செய்து விட்டால் SAVE கொடுத்து விடவும் இனிமேல் நீங்கள் விரும்பும் தளங்கள் உங்கள் பதிவில் தெரியும்.
எல்லாம் முடிந்ததும் கீழிருக்கும் படம் போல உங்கள் தளத்தில் இருக்கும் தானாகவே அப்டேட் ஆகிவிடும்.
ஏதோ காரணத்தால் நீங்கள் சில தளங்களை நீக்க விரும்பினால் அதை நீக்கவும் வசதி இருக்கிறது வேண்டுமானல் பெயரை மாற்றும் வசதியும் இருக்கிறது.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும். ஒரு சந்தேகம் இருக்கிறது நண்பர்களே நம் தளத்தில் நண்பர்கள் பட்டியலில் இனைந்திருக்கும் நண்பர்களுக்கு நன்றி அதே நேரத்தில் இது வரை 15 நபர்களுக்கு மேல் வெளியேறி இருக்கிறார்கள் இது எதனால் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை சரியான புரிதல் இல்லாமையா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா நம் தளத்தில் வெளியேறிய நண்பர்கள் அறிய வேண்டியது நீங்கள் நம் தளத்தில் இனைவதால் உங்களுக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படாது மாறாக நீங்கள் இனைவதால் நீங்கள் என்னை அங்கீகரிக்கிறீர்கள் என்பது மட்டுமே நீங்கள் எனக்கு வழங்கும் ஆதரவு மட்டுமே மற்றபடி இதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரி என்னால் தெரிந்துகொள்ள முடியாது.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
22 Responses to “நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில்”
-
மாணவன்
said...
October 25, 2010 at 9:16 AMநான் மின்னஞ்சல் மூலம் கேட்டதை ஒரு பதிவாகவே எழுதி அசத்திவிட்டீர்கள் நண்பா, பிரமாதம் இப்படி ஒரு தெளிவான ஒரு விளக்கத்திற்காகத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன் சூப்பர் எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினால் எனக்கு மட்டுந்தான் பயன்படும் அவ்வாறு அல்லாமல் என்னைப்போன்ற புதியவர்கள் பலருக்கும் பயன்படட்டும் என்ற நல்லெண்ணத்தில் ஒரு பதிவாகவே எழுதியுள்ளீர் அதான் ”ஜிஎஸ்ஆர்-ஜெண்டில்” பாராட்டவும் நன்றி சொல்லவும் வார்த்தைகளே இல்லை நண்பா
உங்களைப்போன்ற நண்பர்களின் நட்பு கிடைத்ததே பெருமையாக உள்ளது
என் மனமார்ந்த நன்றி
(உங்கள் பெயரை வெளியிட ஏதாவது ஆட்சேபம் இருக்கும் என நினைத்து தான் வெளியிடவில்லை மாற்றுக்கருத்து இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் நண்பரே.)
நிச்சயம் நீங்கள் எது செய்தாலும் அதில் ஒரு நன்மை இருக்கும் என்ற சரியான புரிதலோடு என்றென்றும் உங்கள் வழியில்...
உங்கள் மாணவன் -
Unknown
said...
October 25, 2010 at 9:25 AMவேர்ட்பிரஸ் இணைய தளத்தில் இப்படி ஏதும் வசதி இருக்கிறதா நண்பா?? இளம் வலைப் பதிவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்..
-
Unknown
said...
October 25, 2010 at 2:32 PMஉபயோகமான பதிவு நன்றி மற்றும் ஒட்டு போட்டாச்சி
-
erodethangadurai
said...
October 25, 2010 at 2:42 PMநல்ல பதிவு நண்பரே.. ! ஒரு குழந்தைக்கு சொல்லித்தருவது போல அருமையாக சொல்லி அசத்தி விட்டீர்கள்.
-
சரவணன்.D
said...
October 25, 2010 at 8:19 PMநன்றி நண்பா!!!
http://gnometamil.blogspot.com/ -
ஜிஎஸ்ஆர்
said...
October 25, 2010 at 10:42 PM@மாணவன்மின்னஞ்சல் வழியாக கேள்வியை அனுப்பிய போது நீங்கள் பொதுவில் கேட்பதை விரும்பவில்லை என நினைத்துதான் பதிவில் கூட உங்கள் பெயரை வெளிப்படுத்தவில்லை மன்னிக்கவும் புரிதலுக்கு நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
October 25, 2010 at 10:44 PM@அஸ்பர்-இ-சீக்நான் அறிந்திருக்கவில்லை மேலும் நான் பிளாக்கரை பயன்படுத்தவதால் அதனை அதிகம் தேடியதில்லை இருப்பினும் தேடிபார்க்கிறேன் ஏதாவது வழி தெரிந்தால் அவசியம் நம் தளத்தில் எழுதுகிறேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
October 25, 2010 at 10:44 PM@விக்கி உலகம் நன்றி நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
October 25, 2010 at 10:45 PM@ஈரோடு தங்கதுரை நான் என்னை மனதில் வைத்துதான் நண்பா ஒவ்வொரு பதிவையும் எழுதுகிறேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
October 25, 2010 at 10:46 PM@சரவணன்.Dவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா
-
எஸ்.கே
said...
October 25, 2010 at 11:26 PMஅழகான் விளக்கம் நண்பரே! நன்றி!
-
ஜிஎஸ்ஆர்
said...
October 26, 2010 at 7:55 AM@எஸ்.கேதங்களின் வருகைக்கும் சரியான புரிதலுடான கருத்துரைக்கு நன்றி நண்பரே
-
மாணவன்
said...
October 26, 2010 at 8:48 AMஉலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
தமிழரின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது
இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
லிங்க் http://heroes.cnn.com/vote.aspx இந்த தளத்திற்கு சென்று நம்மாளு படத்தை க்ளிக் செய்து அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்பி அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.
நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்
அலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்
முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.
நன்றி -
மாணவன்
said...
October 26, 2010 at 8:53 AMஉலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
தமிழரின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது
இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
லிங்க் http://heroes.cnn.com/vote.aspx இந்த தளத்திற்கு சென்று அவருடைய படம் கீழே இருக்கும் கட்டத்தில் க்ளிக் செய்து அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள்.
* அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.
* முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.
நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்
அலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்
நன்றி -
மாணவன்
said...
October 26, 2010 at 8:54 AMநம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்
அலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள் -
ADMIN
said...
October 26, 2010 at 12:50 PMநல்ல செம்மையான பதிவு...வணக்கங்களும் நன்றிகளும்..
வாழ்த்துக்கள்...
தங்கம்பழனி. -
ம.தி.சுதா
said...
October 30, 2010 at 1:08 AMநல்லதொரு பதிவு நானும் இதைத் தான் தேடினென் இன்றே மாற்றிக் கொள்கிறேன்.....
-
ஜிஎஸ்ஆர்
said...
October 30, 2010 at 9:31 AM@ம.தி.சுதா நல்லது நண்பா உங்களுக்கு பிடித்த பயனுள்ள பதிவு எனும் நினைப்பவற்றை உங்கள் தளத்தில் இனைத்து வையுங்கள் ஆனால் சாதரணமாக யாரும் இதை செய்வதில்லை.
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 9:14 AM.உங்களை போன்ற சிலரால் தான், மழை பெய்கிறதோ !!
.எனக்கு பிற்காலத்தில் தேவைபடும் !!
.பகிர்ந்தமைக்கு நன்றி !! -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 8:06 PM@சிகப்பு மனிதன் நிச்சியமாக நல்லவர்கள் இருப்பதால் மட்டுமே மழை பெய்கிறது நானெல்லாம்?
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 9:13 PM.நீங்களும் அதில் ஒருவராகக் இருப்பீர்கள், எனக்கு சந்தேகமே இல்லை !!
-
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 9:19 PM@சிகப்பு மனிதன்சந்தோஷம் நண்பரே
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>