May 29, 2010

8

போல்டர் மற்றும் பைல்களை பாதுகாப்பாக வைக்க வழி

 • May 29, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: குட்ட குட்ட குனிபவனும் முட்டாள்,குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்.

  நண்பர் MHM NIMZATH அவர்கள் (பயனுள்ள தகவல்களை தந்தீர்கள் நன்றி.Folder ஐ Delete செய்யாமல் ஆக்குவது எப்படி? என்னை நீங்கள் மண்னிக்க வேண்டும் உங்களுடைய தகவல்களை நான் எனது இணையபக்கத்தில் இணைக்கவுள்ளேன்) இப்படியாக ஒரு கருத்துரையோடு ஒரு கேள்வியையும் எழுதியிருந்தார் சரி அவருக்காகவும் இன்னும் நமது நண்பர்களுக்காகவும் ஒரு பதிவாக எழுதிவிடாலமே என்கிற எண்ணத்தில் தான் இந்த பதிவு.

  நாம் சாதரணமாக நம் கணினியின் வன்தட்டை இரண்டு அல்லது மூன்றாக பிரித்திருப்போம் முடிந்தவரை மூன்றாக பிரித்திருந்தால் நல்லது. இனி நீங்கள் பாதுகாப்பாக வைக்க நினைக்கும் போல்டர் டிரைவ் என்பது G:யில் இருக்கிறது என வைத்துக்கொள்வோம், இப்போது G:யை திறந்தவுடன் Gsr எனும் போல்டர் உள்ளது பின் அதன் உள்ளே உங்களின் எல்லா டேட்டாக்களும் வெவ்வேறு போல்டர்களிம் பெயர்களிலும் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

  இனி நீங்கள் செய்யவேண்டியது

  ren Gsr Gsr.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} இதை காப்பி எடுத்து நோட்பேட் திறக்கவும் பேஸ்ட் செய்யவும் LOCK KEY எனும் பெயரில் BAT-ஆக சேமிக்கவும் BAT என்பது Extension குறிப்பதாகும் இதற்காக ஒன்றும் குழம்ப வேண்டியதுஇல்லை Just LOCK KEY.BAT என அடித்து சேமித்தால் போதுமானது.(Gsr என்கிற இத்தில் உங்கள் போல்டரின் பெயர் வரவேண்டும்)

  ren Gsr.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} Gsr இதை காப்பி எடுத்து நோட்பேட் திறக்கவும் பேஸ்ட் செய்யவும் OPEN KEY எனும் பெயரில் BAT-ஆக சேமிக்கவும்.(Gsr என்கிற இத்தில் உங்கள் போல்டரின் பெயர் வரவேண்டும்)

  இப்பொழுது நீங்கள் ஒரு LOCK KEY.BAT மற்றும் OPEN KEY.BAT என இரண்டு பேட் பைல்கள் உருவாக்கி விட்டீர்கள் இதுதான் உங்கள் டிரைவில் உள்ள அனைத்து பைல்களையும் பாதுகாக்கபோகிறது.

  இனி நான் முன்னமே கூறியபடி Gsr எனும் போல்டரை மறைக்க விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் இப்பொழுது Gsr எனும் போல்டர் மற்றும் LOCK KEY.BAT மற்றும் OPEN KEY.BAT மூன்றும் ஒரே இடத்தில் இருக்கட்டும் இனி தாங்கள் LOCK KEY.BAT டபுள் கிளிக் செய்யுங்கள் Gsr எனும் போல்டர் Control Panel Icon போல மாறியிருக்கும் இப்பொழுது Gsr எனும் போல்டர் திறந்து பாருங்கள் Control Panel திறக்கும் இனி இதை திறப்பதற்கு OPEN KEY.BAT எனும் பைலை டபுள் கிளிக் செய்யுங்கள் உங்கள் பைல்கள் அனைத்தும் பார்க்க இயலும்.

  எந்த போல்டரை தாங்கள் மறைக்க விருப்புகிறீர்களோ அந்த போல்டரை மறைத்தவுடன் LOCK KEY.BAT மற்றும் OPEN KEY.BAT இரண்டையும் வேறு இடத்தில் மாற்றி வைத்துவிடுங்கள் முயற்சிக்கும் முன்பு சோதனைக்காக ஒரு டம்மி போல்டரில் செய்துபார்க்கவும்.

  இல்லை நண்பா இது கொஞ்சம் சிரமாமாக இருக்கிறது ஏதாவது ஒரு மென்பொருளாக இருந்தால் பரவாயில்லை என நினைக்கிறீர்களா? ஒன்றும் பிரச்சினையில்லை உங்களுக்கு ஒரு Free Folder Hide மென்பொருள் இனைப்பும் தந்துவிடுகிறேன் உபயோகிப்பதற்கு எளிமையாக இருக்கும் அதிகம் மெமரி எடுத்துக்கொள்வதில்லை இது இலவச மென்பொருள் தான் நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு நன்கொடை வழங்கலாம்.

  என்ன நண்பர்களே உங்களுக்கு இது உபயோகமில்லை என்று ஒதுக்கி விடாதீர்கள் ஏதாவது ஒரு நேரத்தில் பயன்படும் ஒரு வேளை உங்களுக்கு இது உபயோகமானது என்றால் மற்றவர்களும் பயனடைய உதவுங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  8 Comments
  Comments

  8 Responses to “போல்டர் மற்றும் பைல்களை பாதுகாப்பாக வைக்க வழி”

  Lakshmanan said...
  May 29, 2010 at 1:10 PM

  உங்களுடைய இந்த சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு லட்சுமணன்


  Lucky Limat லக்கி லிமட் said...
  May 29, 2010 at 2:24 PM

  நண்பரே அருமையான பதிவு

  அன்புடன்,
  லக்கி லிமட்


  kk samy said...
  May 29, 2010 at 5:16 PM

  நண்பரே.

  தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை.

  இந்த notepad ல், type பன்ற மேட்டரெல்லாம், குழம்பிக்க வேண்டியதுதான்.
  அதனால், நான் free hide folder software ஐ, use பன்னிகிட்டேன்.
  இது ஈசியா இருக்கு. தகவலுக்கு நன்றி.
  தொடரட்டும் தங்களது நற்பணி.

  வாழ்த்துக்களுடன்...

  kk samy


  soundar said...
  May 29, 2010 at 6:11 PM

  அணைவருக்கும் தேவைபடும் பதிவு


  MHM NIMZATH said...
  June 5, 2010 at 9:16 PM

  எண்னுடைய (http://nimzath.6te.net) கேள்வியை பதிவாக இணைத்தமைக்கு நண்றி. கணினிக்கு Password ஐ நாம் Type செய்வதைவிட எம்முடைய குரலை கேட்டவுடன் திரப்பதற்கு ஏதாவது மென்பொருள் இருக்கின்ரதா? (சிவாஜி திரைப்படத்தில் வருவது போல)


  தமிழன் said...
  July 4, 2010 at 2:21 PM

  NICE

  ROMBA USEFUL MESSAGE FRIEND


  ஜிஎஸ்ஆர் said...
  July 5, 2010 at 9:05 AM

  @தமிழன்தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே


  சிகப்பு மனிதன் said...
  November 27, 2010 at 6:46 PM

  .rectified link :

  http://www.cleanersoft.com/hidefolder/free_hide_folder.htm


  .மிகவும் பயனுள்ள trick, நண்பரே !!

  .பகிர்ந்தமைக்கு நன்றி !


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர