Jul 29, 2010

12

வின்ராரில் கோப்பை வெட்டி பூட்டு போடலாம்

  • Jul 29, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: நேர்மையில்லாத கையாள் நேர்மையுள்ள அதிகாரியையும் கெடுத்து விடுவான்.

    அருமை வாசக நண்பர்களே என் ஒவ்வொரு பதிவையும் படித்ததோடு அல்லாமல் நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களும் கற்றுக்கொள்ளும் வகையில் உங்கள் பொன்னான நேரத்தில் நல்லென்னத்துடன் பதிவிற்கு வாக்களித்தும், பதிவை பற்றியதான கருத்துரையும் எழுதியும் என்னை ஊக்கபடுத்தும் நண்பர்களே சரியாக எழுத ஆரம்பித்து ஐந்து மாத காலத்திற்குள் 40,000 ஹிட்ஸ் இத்தனைக்கும் தமிழிஷில் மட்டுமே பகிரப்பட்டது இப்பொழுதும் அப்படித்தான் நண்பர்கள் முடிந்தால் வேறு வலை திரட்டிகளிலும் இனைத்து விடலாம், 264 மின்னஞ்சல் சந்தாதாரர்கள், நம் தளத்தோடு பாலோவர்களாக இனைந்திருக்கும் 110(கொஞ்சம் குறைவுதான்) நண்பர்கள் இவையெல்லாம் உங்களால் மட்டுமே சாத்தியப்பட்டது நான் வெறும் ஒரு பூஜ்ஜியம் தான் என் முன்னால் நீங்கள் இருப்பதால் தான் இந்த பூஜ்ஜியத்திக்கும் மதிப்பு.

    நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்க போவது வின்ரார் மென்பொருள் பற்றித்தான் இந்த மென்பொருளை பற்றி உங்கள் எல்லோருக்குமே தெரியும் நான் சொல்லப்போகும் தகவலும் உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும் இருந்தாலும் யாராவது தெரியாத நபர்கள் இருந்தால் அவர்களுக்கு உதவுமே என்கிற எண்ணத்தில் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

    வின்ரார் கோப்பு சுருக்கி இல்லாதவர்கள் இங்கே தரவிறக்குங்கள் வழக்கம் போலவே உங்கள் கணினியிலும் இன்ஸ்டால் செய்து விடுங்கள் இப்போது நீங்கள் மின்னஞ்சலில் அல்லது வேறு ஏதாவது தளத்தில் அப்லோட் செய்ய நினைக்கும் மென்பொருள் அல்லது சினிமா இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், இதை எதற்காக பயன்படும் என நினைக்கும் நண்பர்களுக்கு உங்கள் மின்னஞ்சலில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இனைக்க முடியாத போது, கோப்பு பகிர்வு தளங்களில் நண்பர்களுக்கு அனுப்புவதற்காக பகிர நினைக்கும் போது அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவேயே அப்லோட் செய்ய அனுமதிப்பார்கள் நீங்கள் பணம் செலுத்தி உபயோகிப்பவர் என்றால் இது பற்றி கவலைபட தேவையில்லை.

    கீழிருக்கும் படத்தில் உள்ளது போல உங்கள் அனுப்ப வேண்டிய அல்லது பகிர நினைக்கும் கோப்பில் உங்கள் எலியால் வலது கிளிக் செய்வதன் மூலம் திறக்கும் மெனுவில் Add to achieve என்பதை தெரிவு செய்யவும்.



    இப்போது கீழிருக்கும் விண்டோ வந்திருக்கும் அதில் முதலாவதாக இருக்கும் General டேப்பில் Split to volumes, bytes என்பதில் எந்த அளவிற்க்கு கோப்புகளை துண்டு துண்டாக்க வேண்டும் என்பதை தெரிவு செய்யவும்.



    அடுத்த்தாக கீழிருக்கும் படத்தில் உள்ளது போல Advanced டேப்பை திறந்து Set Password என்பதில் நீங்கள் விரும்பும் பாஸ்வேர்ட் கொடுக்கவும் அடுத்ததாக ஓக்கே கொடுத்து விடவும் இனி நீங்கள் விரும்பிய கோப்பு துண்டு துண்டாக மாற்றப்பட்டிருக்கும்.



    இனி நீங்கள் வெட்டி பூட்டு போட்ட கோப்பை மின்னஞ்சலில் அல்லது கோப்பு பகிர்வு தளங்களில் அப்லோட் செய்து அந்த உரலை நண்பர்களுக்கு அனுப்பி விடவும், இப்படி துண்டாகாப்பட்ட கோப்புகளை ஒன்று சேர்க்க மொத்த துண்டாக்கப்பட்ட கோப்புகளையும் ஓரே இட்த்தில் வைத்து ஏதாவது ஒரு கோப்பை Extract செய்வதன் மூலம் துண்டு துண்டாக்கபட்டிருந்த கோப்புகள் ஒரே கோப்பாக மாறிவிடும் நீங்கள் கடவுச்சொல் கொடுத்திருந்தால் extract செய்யும் போது கடவுச்சொல் கொடுக்கவும.

    நண்பர்களே இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? பயனுள்ளதென்றால் உங்களை போல மற்றவர்களும் தெரிந்துகொள்ள உதவுங்களேன் மேலும் அடுத்த எழுத இருக்கும் பதிவில் இதே மென்பொருளுடன் வேறு ஒரு மென்பொருளையும் உபயோகித்து என்ன செய்யலாம் என்பதை எழுதுகிறேன் அது நிச்சியம் உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    12 Comments
    Comments

    12 Responses to “வின்ராரில் கோப்பை வெட்டி பூட்டு போடலாம்”

    Mohamed Faaique said...
    July 29, 2010 at 11:40 AM

    thnks a lot... really very use full in office...


    ஜிஎஸ்ஆர் said...
    July 29, 2010 at 1:09 PM

    @Mohamed Faaique நன்றி நண்பா


    Unknown said...
    July 29, 2010 at 7:22 PM

    அருமையன தொழில்நூட்ப பதிவு போடுகிறீர்கள் எனக்கு பயனுல்லதாக இருக்கிறது மிகவும் நன்றீ அ.மாணீக்கவேலு


    WebPrabu said...
    July 30, 2010 at 8:39 AM

    அனைவருக்கும் பயனுள்ள அருமையான பதிவு.
    நன்றி !!


    SABA1972 said...
    July 31, 2010 at 5:29 AM

    thak u


    ஜிஎஸ்ஆர் said...
    July 31, 2010 at 8:59 AM

    @maanikamஎன்னால் முடிந்ததை தெரிந்ததை எழுதுகிறேன் அது தங்களுக்கு உபயோகபடுகிறதென்றால் அதை விட மகிழ்ச்சி எதுவுமில்லை


    ஜிஎஸ்ஆர் said...
    July 31, 2010 at 9:02 AM

    @WebPrabu நன்றி தம்பி


    ஜிஎஸ்ஆர் said...
    July 31, 2010 at 9:02 AM

    @SABA1972 நன்றி


    Rajasekar said...
    August 26, 2010 at 5:46 PM

    நன்றி பல மிகவும் பயனுள்ள கருத்துக்கள்
    த.இராஜசேகரன்.


    ஜிஎஸ்ஆர் said...
    August 28, 2010 at 9:11 AM

    @Rajasekarதொடர்ந்து இனைந்திருங்கள் இன்னும் சில நல்ல பதிவுகளை படைக்கலாம்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 6:14 PM

    .மன்னிக்கவும், எழுத்து பிழையால், மேலிட்ட கருத்துரையை அழிக்க வேண்டியாகிவிட்டடு !


    .thanks for revised me, about winrar software, la !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:27 PM

    @சிகப்பு மனிதன்அந்த கருத்துரையின் தடத்தை அழித்து விட்டேன்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர