Jul 27, 2010

16

எக்‌ஷெல் ஒத்த வண்ணங்களின் டேட்டா திருத்தம்

  • Jul 27, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து இருக்க வேண்டியவை தைரியம், நேர்மை, மென்மை.

    (மின்னஞ்சல் வழி புதிய பதிவின் விபரம் அறிய விரும்புவர்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் உரலை கிளிக்குவதன் மூலம் மட்டுமே என் புதிய பதிவு உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் இங்கு சில நண்பர்கள் இன்னும் தங்கள் மின்னஞ்சல் முகவரியை ஆக்டிவ் செய்யாமலே இருக்கிறார்கள், இங்கு மின்னஞ்சல் தரும் போது நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை தரவும் இதற்கென தனியாக மின்னஞ்சல் முகவரி உருவாக்க தேவையில்லை, நம் தளத்தில் நண்பர்களாக இனைந்திருக்கும் பாலோவர்களுக்கு மிக்க நன்றி உங்களின் எண்ணிக்கை நம் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தும் என்றால் அது மிகையில்லை)

    வணக்கம் நண்பர்களே இந்த எக்‌ஷெல் மிகப்பெரிய கடல் நான் பலமுறை வியந்திருக்கிறேன் இதுல இல்லாத வசதி இல்லையென்கிற அளவுக்கு இருக்கும் ஆனால் என்ன நாம் அதில் சில பயன்பாடுகளை தவிர மற்றவற்றை உபயோகிப்பதில்லை காரணம் நமக்கு அதன் அவசியம் ஏற்படாததுதான் நான் இந்த பதிவை எழுதுவதற்கு நேற்று நடந்த நிகழ்ச்சியே காரணம்.

    சாதரணமாக பல நிறுவனங்களிலும் ஒரு வித பட்ட தகவல்களை எக்‌ஷெல்லில் செய்து வைப்பது தான் வழக்கமாக இருக்கும் இதற்கு என் நண்பர் பணிபுரியும் நிறுவனமும் விதிவிலக்கல்ல நேற்று நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்து தன்னிடம் மொத்த பணியாளர்களின் பெயர்கள் இருப்பதாகவும் அதில் பலதரப்பட்ட பிரிவுகள் இருக்கிறதென்றும் அந்த பிரிவுகளை அடையாளம் கானும் விதமாக அந்த செல்களில் வண்ணங்கள் கொடுத்திருப்பதாகவும் சொன்னார் சரி அதில் என்ன பிரச்சினை என்கிற போதுதான் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கும் பெயர்களுக்கும் ஓரே விதமாக சம்பளத்தை நிர்ணயிப்பதற்காக சம்பளத்தை வரையறை செய்து இவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

    பத்தோ அல்லது இருபது என்றால் ஒன்றும் பிரச்சினை இல்லை எளிதாக செய்து விடலாம் ஆனால் ஒரு ஆயிரம் அல்லது ஐயாயிரம் நபர்கள் பணி செய்யும் நிறுவணமாக இருந்தால் கொஞ்சம் கற்பனை பண்ணிபாருங்கள் எவ்வளவு நேரம் ஆகும்? நான் அந்த நண்பருக்கு பரிந்துரைத்தையே இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் இப்போது உங்களிடம் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பைல் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள் இதில் பத்து பெயர்கள் மட்டுமே இருக்கிறது ஆனால் உங்களிடம் இருப்பது பத்தாயிரம் பெயர் கொண்ட பட்டியல்.



    இதில் உள்ளது போல செல்லின் நிறம் கொடுத்திருந்தாலும் அல்லது எழுத்தின் நிறம் மட்டுமே கொடுத்திருந்தாலும் இரண்டுக்குமே பொருந்தும் நான் உபயோகபடுத்துவது மைக்ரோசாபட் 2007 ஆனால் இதே வழிமுறைதான் மைக்ரோசாப்ட் 2003 என்ன கொஞ்சம் மெனுவை கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும் நீங்கள் மைக்ரோசாப்ட் 2003 உபயோகிப்பவராக இருந்தால் Tools என்பதன் கீழாக Auto Filter என்பதை தெரிவு செய்தால் போதும் ஆட்டோ பில்ட்டர் வந்துவிடும்.



    இனி இந்த படத்தில் உள்ளது போல உங்களுக்கு எந்த நிறத்தில் உள்ள பெயர்கள் என்பதை வண்ணத்தை தெரிவு செய்தால் போதும் அந்த வண்ணத்தில் உள்ள தகவல்கள் மட்டுமே காண்பிக்கும் இனி ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் மாற்ற வேண்டிய தொகையை மாற்றி அந்த செல்லை தெரிவு செய்து உங்கள் கர்சரை வைத்து கீழே இழுப்பதன் மூலம் நீங்கள் விரும்புவது போல ஒரே நிறத்தில் இருக்கும் டேட்டாக்களின் தொகையை எளிதாக மாற்றிவிடலாம்.



    என்ன நண்பர்களை நீங்கள் நினைக்கிறீர்களா நமக்கு தேவையில்லையென்று, அதனால் என்ன தெரிந்து வைத்துக்கொண்டால் உதவுமே நேற்று வரை எனக்கும் இதை பற்றி தெரியாது நண்பனுக்காக நான் தேடியபோதுதான் எனக்கும் இந்த வழிமுறை தெரிந்தது எல்லாம் தெரிந்தவர்கள் இங்கு யாருமில்லை நாம் ஒவ்வொரு நாளும் யாரிடமாவது ஒன்றை கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம்.தெரியாத விஷயங்களை யார் சொல்லி கொடுத்தால் என்ன கற்றுக்கொள்வதில் தவறில்லை என நினைக்கும் கூட்டத்தில் உங்களோடு நானும், பதிவு பயனுள்ளது என்றால் வாக்கும் கருத்துரையும் அளிப்பதன் மூலம் பலரை சென்றடைய உதவலாமே.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    16 Comments
    Comments

    16 Responses to “எக்‌ஷெல் ஒத்த வண்ணங்களின் டேட்டா திருத்தம்”

    http://rkguru.blogspot.com/ said...
    July 27, 2010 at 10:06 AM

    பயனுள்ள பதிவு......வாழ்த்துகள்


    Jey said...
    July 27, 2010 at 11:17 AM

    பயனுள்ள தகவல். தொடருங்கள்..


    Mohamed Faaique said...
    July 27, 2010 at 1:44 PM

    எனது டேமேஜர்'இடம் பல முறை குட்டு வாங்கி பின்னர் இதை கற்றுக்கொண்டேன்.. உண்மையிலேயே மிகவும் பயனுள்ள ஒரு tool .


    ஜிஎஸ்ஆர் said...
    July 27, 2010 at 4:57 PM

    @rk guruநன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    July 27, 2010 at 4:59 PM

    @Jeyஉங்களை போன்றோர் ஆதரவு இருந்தால் மட்டுமே தொடர்ந்து செல்ல ஊக்கமாய் இருக்கும்


    ஜிஎஸ்ஆர் said...
    July 27, 2010 at 5:00 PM

    @Mohamed Faaiqueஎக்‌ஷெல் ஒரு கடல் நண்பா நமக்கு தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கும்


    மு.ம.ராஜன் said...
    July 27, 2010 at 7:25 PM

    nice post...


    Anonymous said...

    July 28, 2010 at 2:45 PM

    பயனுள்ள தகவல்.பகிர்தலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    July 28, 2010 at 5:29 PM

    @கோட்டை மகா நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    July 28, 2010 at 5:29 PM

    @mkrpost நன்றி நண்பரே


    மு.ம.ராஜன் said...
    July 29, 2010 at 10:57 AM

    browser url pakkathil GSR ena varukirathe athai eppadi uruvakku vahu ena theriya paduthinal migavum payanullathaga irukkum nanbare..


    ஜிஎஸ்ஆர் said...
    July 29, 2010 at 1:08 PM

    @கோட்டை மகா
    நண்பர் அவர்களுக்கு நான் கீழே கொடுத்திருக்கும் தளங்கள் எல்லாமே பிளாக்கரின் பெவிகான் மாற்றுவதை பற்றியதாகும்
    http://www.bloggertipsandtricks.com/2006/06/favicon-for-your-blogger-blog.html

    http://hapiblogging.blogspot.com/2009/01/how-to-change-favicon-in-blogger-in-xml.html

    http://www.bloggersentral.com/2009/03/first-of-all-what-is-favicon-favicon-is.html

    http://djyano.blogspot.com/2008/03/how-to-change-blogger-favicon_20.html

    http://tips-for-new-bloggers.blogspot.com/2007/02/adding-favicon-icon-to-blogger-url.html

    இது நான் எழுதிய ஐகான் பற்றிய பதிவு
    http://gsr-gentle.blogspot.com/2010/06/blog-post_07.html

    மேலும் பிளாக்கர் சம்பந்த பட்ட தகவல்களுக்கு உங்களுக்கு உதவ இதையும் பாருங்கள்

    http://gsr-gentle.blogspot.com/2010/07/blog-post_21.html

    நண்பருக்கும் இதில் ஏதாவது பிரச்சினை என்றால் தயவு செய்து உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி தரவும் நான் உதவுகிறேன்


    மு.ம.ராஜன் said...
    July 29, 2010 at 8:17 PM

    naanum romba nerama try panren varave illai nanbare..


    mmrking1@gmail.com this is my mail id

    help me


    ஜிஎஸ்ஆர் said...
    July 31, 2010 at 9:14 AM

    @கோட்டை மகாசந்தோஷம்தானே


    Vengatesh TR said...
    November 26, 2010 at 6:19 PM

    .இப்படி எல்லாம், excel'il வசதி உண்டா !


    .கற்றது கைமண்அளவு என்று, நான் நினைத்ததும், தவறு ஆகிவிடும் போல !!


    .தகவலுக்கு மிக்க நன்றி, ஆசிரியரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:29 PM

    @சிகப்பு மனிதன்எக்‌ஷெல்லில் இன்னும் சில சிறப்பான வசதிகள் இருக்கிறது ஆனால் யார்ம் அதை பயன்படுத்துவது இல்லை. எக்‌ஷெல் பவர்புல்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர