Jul 13, 2010
பதிவுக்குள் ஜாவா கட்டம் மற்றும் லேபிள், சமுதாய தளம்
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்க போவது நமது பதிவுக்குள் ஒரு கட்டமும் அதனுள்ளே ஜாவா குறியீடுகளை எப்படி உள்ளிடுவது என பார்க்கலாம் நாம் சாதரணமாக ஒரு ஜாவ்வின் குறியீட்டு நிரலை நமது பதிவின் உள்ளே கொண்டு வரமுடியாது அதற்காகத்தான் இந்த வழிமுறையை பார்க்க போகிறோம் மேலும் இதன் மூலம் நீங்கள் வேறுபடுத்தி காட்ட விரும்பும் வரிகளையும் உங்கள் விருப்பம் போல கொண்டு வர முடியும்.
நம் பதிவில் பாருங்கள் சில இடங்களில் ஜாவா நிரல்களை பதிவிற்குள் கொண்டுவந்திருக்கிறேன் அந்த இடங்களில் பின்புலம் வேறு நிறமாக இருக்கிறதா? அது தான் நான் சொல்ல வந்த ஜாவா கட்டம்
சரி முதலில் ஜாவவின் கட்டம் கொண்டுவர என்ன செய்ய வேண்டுமென்பதை பார்க்கலாம் உங்கள் பிளாக்கரில் நுழைந்து Edit HTML பகுதிக்கு சென்று உங்கள் வார்ப்புருவை தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் (முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மட்டுமே) இனி நிரலில் கிளிக்கி அதில் Ctrl + F அழுத்துவதன் மூலம் ]]></b:skin>என்பதை கண்டுபிடியுங்கள் இனி அதற்கு மேலாக கீழிருக்கும் கோடிங்கை பிரதி எடுத்து அதற்கு மேலாக ஒட்டி விடவும்.
pre
{
background:#efefef;
border:1px solid #A6B0BF;
font-size:120%;
line-height:100%;
overflow:auto;
padding:10px;
color:#000000 }
pre:hover {
border:1px solid #efefef;
}
code {
font-size:120%;
text-align:left;
margin:0;padding:0;
color: #000000;}
.clear { clear:both;
overflow:hidden;
}
மேலும் உங்கள் எழுத்தின் நிறம் பின்புல நிறம் போன்றவறை நீங்கள் விரும்பும் படி மாற்றிக்கொள்ளவும் அதற்கு தேவையான HTML கலர் தேர்ந்தெடுக்க HTML , HTML விரும்பும் வண்ணத்தை மாற்றிக்கொள்ளவும்.
சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பார்க்கவும்.
இனி இது போலான ஜாவா நிரலை உங்கள் பதிவில் கொண்டுவர நீங்கள் பதிவில் கொண்டு வர வேண்டிய நிரலை ஜாவா கன்வெர்ட்டர் அல்லது இங்கே சென்று நீங்கள் பதிவில் கொண்டு வர விரும்பும் நிரலை அந்த தளத்தில் கன்வெர்ட் செய்து கொள்ளுங்கள், கன்வெர்ட் செய்த நிரலை உங்கள் பதிவில் நேரடியாக பதிந்து கொள்ளலாம் ஆனால் மேலே கொடுத்துள்ள ஜாவா நிரலை அவசியம் உங்கள் வார்ப்புருவில் சேர்த்திருக்க வேண்டும். மேலும் வேறு ஏதாவது டெக்ஸ்ட்டை நீங்கள் வேறு படுத்தி காட்ட விரும்பினால் அதற்கு கன்வெர்ட் செய்ய வேண்டியது இல்லை அதற்கு பதிலாக டெக்ஸ்ட்டை
<pre>
உங்கள் டெக்ஸ்ட்
</pre>
இப்படி அமைக்கவும்.
நன்றி: http://about-new-blogger.blogspot.com
இனி அடுத்தது பதிவின் லேபிள் கொண்டுவருவது பற்றி பார்க்கலாம் உங்கள் பிளாக்கரை திறந்து Design என்பதை கிளிக்கவும் இனி Blog Posts என்பதில் Edit என்பதை கிளிக்கவும் இப்போது உங்களுக்கு ஒரு விண்டோ திறக்கும் அதில் Labels என்பதில் குறிச்சொல் கொடுக்கலாம் ஆனால் நீங்கள் எப்போதும் ஓரே விதமான பதிவுகள் மட்டுமே எழுதுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதற்கு மட்டுமே இது உபயோகப்படும் உதாரணத்துக்கு நீங்கள் கவிதையை மட்டும் எழுதுகிறீர்கள் என்றால் அங்கு குறிச்சொல்லாக கவிதை என கொடுத்து சேமித்தால் போதும் மேலும் சமுதாய தளங்களான கூகுள் பஸ், டிவிட்டர், முகபுத்தகம், பிளாக்கர், ஜிமெயில் போன்றவற்றிற்கான இனைப்பையும் எளிதாக ஏற்படுத்தலாம் மேலும் Reaction என்பதையும் நீங்கள் விரும்பும் வகையில் மாற்றிக்கொள்ளலாம்.
சில நேரங்களில் சமுதாய தளம் இனைக்கும் போது உங்கள் தளத்தில் வரவில்லையென்றால் பிளாக்கரில் Edit HTML பகுதிக்கு சென்று Ctrl + F அழுத்தி <b:if cond='data:post.title'> வரியை கண்டுபிடிக்கவும் பின்னர் அதற்கு கீழ் அடுத்த வரிசையில்
<div class='post-share-buttons'>
<b:include data='post' name='shareButtons'/>
</div>
சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பார்க்கவும்.
சமுதாய தளத்தில் தேவையில்லாதவற்றை நீக்குவதற்கு Edit HTML பகுதிக்கு சென்று ]]></b:skin> கண்டுபிடிக்கவும் இனி எதை நீக்க விரும்புகிறீர்களோ அதற்கு மேலாக அதற்கான வரியை பிரதி எடுத்து ஒட்டவும்.
.sb-blog{display:none}
.sb-twitter{display:none}
.sb-facebook display:none}
.sb-buzz{display:none}
.sb- email display:none}
சந்தேகத்திற்கு படத்தையும் பாருங்களேன்.
லேபிள் கொண்டு வருவதற்கான இன்னொரு முறையையும் பார்க்கலாம் Edit Posts என்பதை திறந்து Label Actions என்பதில் உங்களுக்கு தேவையான குறிச்சொல்லை உருவாக்கி அதன் அருகில் இருக்கும் இருக்கும் கட்டத்திற்குள் டிக் மார்க் குறி ஏற்படுத்துவதன் மூலம் லேபிள் கொண்டுவர முடியும் கீழே படத்தையும் பாருங்களேன்.
அடுத்ததாக இன்னொரு முறையும் இருக்கிறது உங்கள் புதிய பதிவு எழுதும் நேரத்தில் Labels for this post என்பதன் அருகில் உங்கள் பதிவிற்கான குறிச்சொல்லை கொடுக்கலாம் படத்தையும் பாருங்களேன்.
மேலே உள்ளது போல எல்லாம் செய்தால் இனி உங்கள் பதிவிற்கு கீழ் லேபிள் இப்படியாக இருக்கும்.
பதிவு மிக நீளமாகவிட்டது என நினைக்கிறேன் இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருப்பின் பதிவிற்கு வாக்கும் பதிவை பற்றிய கருத்துரையும் அளிப்பதன் மூலம் இன்னும் நிறைய நண்பர்களுக்கு சென்றடைய நீங்கள் உதவலாமே.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
14 Responses to “பதிவுக்குள் ஜாவா கட்டம் மற்றும் லேபிள், சமுதாய தளம்”
-
- யெஸ்.பாலபாரதி
said...
July 11, 2010 at 12:07 PMஎல்லாம் சரி தான் சேகர்,
ஆனா.. பதிவின் நடுவில் வந்திருக்கும்..
//.ள்க்ஷ-க்ஷப்ர்ஞ்{க்ண்ள்ல்ப்ஹஹ்:ய்ர்ய்ங்-
.ள்க்ஷ-ற்ஜ்ண்ற்ற்ங்ழ்{க்ண்ள்ல்ப்ஹஹ்:ய்ர்ய்ங்-
.ள்க்ஷ-ச்ஹஸ்ரீங்க்ஷர்ர்ந் க்ண்ள்ல்ப்ஹஹ்:ய்ர்ய்ங்-
.ள்க்ஷ-க்ஷன்க்ஷ்க்ஷ்{க்ண்ள்ல்ப்ஹஹ்:ய்ர்ய்ங்-
.ள்க்ஷ- ங்ம்ஹண்ப் க்ண்ள்ல்ப்ஹஹ்:ய்ர்ய்ங்-
//
மொழி தான் புரியவில்லை.என்னைய மாதிரி கணினி கைநாட்டுக்கு புரியும் படி எழுதுங்கள் நண்பா. :( -
வடுவூர் குமார்
said...
July 11, 2010 at 12:20 PMஅருமை.
-
ஜிஎஸ்ஆர்
said...
July 11, 2010 at 12:39 PM@♠ யெஸ்.பாலபாரதி ♠
நீங்கள் சொல்ல வருவது புரியவில்லையே எனது கணினியில் மற்றும் அலுவலக கணினிகளில் எந்தவித எழுத்து பிரச்சினையும் இல்லையே மேலும் எந்த இடத்தில் இந்த எழுத்து பிரச்சினை என்பதை சுட்டிக்காட்டினால் சரி செய்ய உதவியாய் இருக்கும் -
ஜிஎஸ்ஆர்
said...
July 11, 2010 at 12:39 PM@வடுவூர் குமார்
நன்றி -
மக்கள் தளபதி/Navanithan/ナパニ
said...
July 11, 2010 at 12:52 PMGood info. Keep the good work.
Best wishes
Navanithan -
மின்னுது மின்னல்
said...
July 11, 2010 at 6:34 PM@♠ யெஸ்.பாலபாரதி ♠
எனக்கு நல்லா தெரியுதே தல ! -
Mohideenjp
said...
July 12, 2010 at 4:56 PMபுரியவில்லை!
-
ஜிஎஸ்ஆர்
said...
July 12, 2010 at 5:12 PM@மக்கள் தளபதி
நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
July 12, 2010 at 5:14 PM@vaanmohi
எது புரியவில்லை என்பதை சுட்டிகாட்டினால் உங்களுக்கு உதவ வசதியாயிருக்கும் -
Unknown
said...
July 12, 2010 at 7:16 PMவணக்கம் சார்... என்னுடைய கணினியில் எந்த pendrive போட்டாலும்
format செய்ய் இயலவில்லை. format செய்யும் போது கீழ்வரும் செய்தி வருகிறது
windos can not format this drive. quit any disk untilites or oter programs that are using this drive, and make sure that no widows is displaying the contents of the drive. then formating again. இப்படி வருது சார். ஏதாவது ஐடியா சொல்லுங்கள். pls
வாழ்க வளமுடன்
பிரபு
திருவண்ணாமலை -
ஜிஎஸ்ஆர்
said...
July 13, 2010 at 11:37 AM@myblog முதலில் தங்களுக்கு நன்றி இப்படி ஒரு கேள்வியை கேட்டதன் வாயிலாக அதை பற்றி எழுத வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள் உங்களுக்கான பதில் http://gsr-gentle.blogspot.com/2010/07/blog-post_13.html
-
ம.தி.சுதா
said...
August 29, 2010 at 12:16 PMசகோதரா வணக்கம்... தங்கள் தளம் எமக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது... ஒரு சந்தேகம் தீர்க்க முடியுமா?..
எனது வலைத்தளத்திற்கு (mathisutha.blogspot.com) flag counter இட்டேன். ஆனால் எனது கணணியில் முன்னர் வந்தாலும் இப்போது வருவதில்லை. கரணம் என்னவாக இருக்கும். சிரமம் பாராது உதவ முடியுமா. -
Vengatesh TR
said...
November 26, 2010 at 10:08 PM.தேவையான பொழுது உபயோகித்து கொள்கிறேன் !
.அது எப்போது என்று எனக்கே தெரியாது, ஆனால், உங்களிடம் தான், முதலில் சந்தேகம் கேட்பேன் !
.தங்கள், எழுதானிக்கு நன்றி ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 27, 2010 at 9:14 AM@சிகப்பு மனிதன்அவசியம் கேளுங்கள் எனக்கு தெரிந்ததை நிச்சியம் சொல்லி தருகிறேன்
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>