Jul 26, 2010
புரொபசனல் பிடிஎப்-வேர்டு கன்வெர்ட்டர் இலவசம்
வணக்கம் நண்பர்களே நாம் இன்று பார்க்கபோவது பிடிஎப் பைலை எப்படி வேர்டுக்கு மாற்றுவது இனையத்தில் தேடினால் ஆயிரம் மென்பொருள் கிடைக்கும் ஆனால் அதில் பல மென்பொருள்களும் பணம் செலுத்தி பெற வேண்டியிருக்கும் சில மென்பொருகள் இன்னும் சிலர் பணம் செலுத்தி பெறவேண்டியதை கிராக் செய்து வைத்திருப்பார்கள் நான் உங்களுக்கு தரப்போவது இந்த வகையை சேர்ந்ததுதான்.
மன்னிக்கவும் நண்பர்களே இது பதிவிற்கு சம்பந்தமில்லாதது சமீபத்தில் ஒரு மலையாள தொலைக்காட்சியில், ரேடியோவில் மற்றும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நட்ததும் இரு விதமான அணிகள் அதில் நடந்த விவாத்தில் தொலைக்காட்சியில் பணி புரிந்தவர்கள் தான் அதிகமாக ரேடியோ நிகழ்ச்சிக்கு விரும்பி சென்றிருக்கிறார்கள் மாறாக ரேடியோ நிகழ்ச்சி வழங்குபவர்கள் பெரிய மீடியா என்னும் தொலைக்காட்சிக்கு செல்ல விருப்பமில்லை எனவும் தெரிவித்தார்கள், அதற்காக அவர்கள் சொன்ன காரணம் தொலைகாட்சியில் திறமைகளை விட அங்கு உருவத்துக்குதான் மதிப்பு மேலும் எப்போதும் ஓரே மாதிரியான சம்பாஷைனைகள் என்பதாக குறைபட்டு கொண்டார்கள். இதில் நிகழ்ச்சி நடத்துணர் ரேடியோவில் பணி புரிபவர்களிடம் தொலைகாட்சி என்றால் உங்களை எல்லோரும் தெரிந்துகொள்ள உதவுமே என்றார், அதற்கு அவர்கள் நாங்கள் எங்களை வெளிபடுத்தவிட்டாலும் எங்களுடன் உரையாடும் நேயர்கள் எங்களை மனதிலே உருவகபடுத்தி விடுவார்கள் என்கிறார்கள் உண்மைதானே? நீங்கள் எப்போதாவது ரேடியோ நிகழ்ச்சி கேட்டிருக்கிறீர்களா? நான் இது போல உணர்ந்திருக்கிறேன் இப்போதும் கூட பதிவுலகில் நான் விரும்பும் சிலரின் (நீங்களாகவும் இருக்கலாம்) குறித்தான் உருவம் என் மனதில் பதிந்து இருக்கிறது ஆனால் அவர்களை பார்க்க முடியுமா என தெரியாது? எப்போதும் மூடி இருக்கும் வரை ஒரு விதமான ஆவலும் மனதிற்குள்ளாக உருவகபடுத்துதலும் இருக்கும்தானே. நீங்கள் எப்போதாவது முகம் அறியாத நபர்களோடு பேசி அதன் வாயிலாக அவர்கள் உருவம் உங்கள் மனதிற்குள் பதிந்து அவரை எப்போதாவது காணும் போது வியந்திருக்கிறீர்களா? இப்படி ஏதாவது நடந்திருந்தால் அவசியம் கருத்துரையில் பகிர்ந்து கொள்ளவும்.
சரி நண்பர்களே பிடிஎப் பற்றிய விஷயத்துக்குள் வந்து விடுகிறேன் நான் ஏற்கனவே பிடிஎப் வெட்டு ஒட்டு எடிட் என்னவேணாலும் பண்னு என்கிற பதிவை எழுதியிருந்தேன் தயவு செய்து படித்து விடுங்கள் இனி பிடிஎப் – வேர்டு மென்பொருள் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும், சீரியல் எண்ணை காப்பி எடுத்து உங்கள் மென்பொருளில் ஒட்டவும் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் செயல்பட தொடங்கிவிடும் கொடுத்தாலும் போதும்.விலை கொடுத்து வாங்க விருப்பமில்லாதவர்கள் பிடிஎப் -வேர்ட் இலவசம் தரவிறக்கி பயன்படுத்தலாம்.
இனி அந்த மென்பொருளில் File என்பதில் Preference திறக்கவும் அந்த புதிய பக்கத்தில் Merge pictures into background என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடவும் இதன் செய்வதால் நீங்கள் மாற்ற விரும்பும் பிடிஎப் பைல் போட்டோ உள்ளதாக இருந்தாலும் அதையும் அழகாக மாற்றி எடுப்பதற்கு தான் இனி நீங்கள் விரும்பும் பிடிஎப் பைலை கன்வெர்ட் செய்யுங்கள் அது எத்தனை பக்கங்களாகவும் இருக்கலாம் அதெல்லாம் இவனுக்கு ஒன்றும் பிரச்சினையே இல்லை ஆனால் ஒரு வருத்தமான செய்தி தமிழ் பிடிஎப் என்றால் எழுத்துருவில் பிரச்சினை இருக்கிறது.
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்கள் ஒட்டுமொத்த பிடிஎப் – வேர்டு , வேர்டு – பிடிஎப், பிடிப் பக்கங்களை பிரித்தல், பிடிஎப் பக்கங்களை சேர்த்தல் என எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைத்திருக்குமென்றே நம்புகிறேன் இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதென்றால் அவசியம் நீங்கள் பதிவிற்கு வாக்கும் பதிவை பற்றியதான் உங்கள் அபிப்பிராயத்தை அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள் நான் எல்லா பதிவுகளிலும் இதேயே திரும்ப திரும்ப எழுதுவதன் காரணம் ஒரு பதிவை படித்தவுன் அது குறித்தான் வாசகர்கள் கருத்தை வைத்துத்தான் பதிவு பலரையும் சென்றடையும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
23 Responses to “புரொபசனல் பிடிஎப்-வேர்டு கன்வெர்ட்டர் இலவசம்”
-
Unknown
said...
July 26, 2010 at 12:23 PMthankyou thankyou thankyou
-
karuppuveli
said...
July 26, 2010 at 6:01 PMஅருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள். கணினி சார்ந்த உங்கள் கட்டுரைகள் வியப்பூட்டுபவை,பிரமிக்கதக்கவை. மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் தோழரே
-
joseph amalan
said...
July 26, 2010 at 8:36 PMya it works and very useful to us.Thanks for giving and keep going...
-
July 26, 2010 at 8:57 PMபயனுள்ள மென்பொருள். நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
அன்புடன்
தமிழார்வன். -
world
said...
July 27, 2010 at 12:56 AMthank u
-
Mohamed Faaique
said...
July 27, 2010 at 8:53 AMit will b use to me tooo . tq
-
ஜிஎஸ்ஆர்
said...
July 27, 2010 at 9:49 AM@karuppuveli நன்றி சகா என்னை விட திறமையான எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள் நான் ஒரு சிறு துரும்பு அவ்வளவுதான்
-
ஜிஎஸ்ஆர்
said...
July 27, 2010 at 9:51 AM@joseph amalanநல்லது நண்பா முடிந்தால் தொடர்ந்து வாருங்கள் நாமும் உங்களோடு தொடர்கிறோம்
-
ஜிஎஸ்ஆர்
said...
July 27, 2010 at 9:52 AM@manoharநல்லது நண்பா முடிந்தால் தொடர்ந்து வாருங்கள்
-
ஜிஎஸ்ஆர்
said...
July 27, 2010 at 9:54 AM@tamizharvan நன்றி நண்பா இத்தனை பதிவுகளுக்கு பின்னால் உங்கள் கருத்துரை இருக்கிறது நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
July 27, 2010 at 9:55 AM@world நன்றி சகா
-
ஜிஎஸ்ஆர்
said...
July 27, 2010 at 9:58 AM@Faaique Najeebஎல்லோருக்கும் பயன்பட வேண்டுமென்பதே நம் நோக்கம்
-
Lakshmanan
said...
July 27, 2010 at 10:19 AMஇந்த சேவையை தொடர்ந்து செய்ய வாழ்த்துகள்....
-
ம.தி.சுதா
said...
July 27, 2010 at 2:19 PMஉங்கள் ஆக்கங்கள் மிக மிக தரமானவை
-
ஜிஎஸ்ஆர்
said...
July 27, 2010 at 5:02 PM@ம.தி.சுதா தங்களின் சரியான புரிதலுக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
July 27, 2010 at 5:03 PM@Lakshmanan நான் என்ன நண்பா பெரிதாக சேவை செய்து விட்டேன்? உண்மையை சொல்ல போனால் நான் ஒன்றுமே செய்யவில்லை
-
July 27, 2010 at 6:35 PMதினம் ஒரு அருமையன பதிவு போடுகிரிர்கள் மேலும் அதீகமாக பதீவுககாள் இட வாழ்துக்கல் ஆ.மாணீக்கவேலு
-
kk samy
said...
July 27, 2010 at 10:05 PMநண்பரே..
நான் இந்த மென்பொருளைத்தான் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன்.
இந்த மென் பொருளின் Full Package என்னிடம் இருக்கிறது.
http://www.4shared.com/file/kp9Kji_-/Word_Processing_Ashen__key.html
இதில்
pdf - word
pdf - text
pdf filter & reader போன்றவை இருக்கிறது.
இது என்னை போன்ற வாசகர்களுக்கு பயன்படும் என நினைக்கிறேன். -
ஜிஎஸ்ஆர்
said...
July 28, 2010 at 5:27 PM@kk samyநன்றாயிருக்கிறது நண்பரே தரவிறக்கி பார்த்தேன் இது போல பயனுள்ள மென்பொருள்கள் இருந்தால் மின்னஞ்சலில் அனுப்புங்கள் உங்கள் பெயரிலேயே பதிவாக வெளியிடலாம்
-
ஜிஎஸ்ஆர்
said...
July 28, 2010 at 5:28 PM@maanikamதினம் ஒரு பதிவு என்பது நடக்குமா என்பது தெரியவில்லை என்னால் முடிந்த வரை நல்ல பதிவாக இட முயற்சிக்கிறேன்
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 6:30 PMவாழ்க்கை என்பது துக்கம் என்றால் காதல் அதன் கனவு.
.தூக்கம் என்று,வரும் என, நான் நினைக்கிறேன் !
(தவறுஏதும் இருப்பின், என்னை மன்னிக்கவும் ..)
.pdf2word, நான் நினைத்தை போலவே செயல்படுகிறது ! (now, tested by downloading with sample documents...)
.எழுத்தாணிக்கு நன்றி ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 9:33 PM@சிகப்பு மனிதன்தூக்கம் என்பதில்லை துக்கம் என்பது தான் அதாவது நான் எழுதிய நோக்கம் வாழ்க்கை என்பது சிலருக்கு எப்பவும் நெருக்கடியாக இருக்கிறது அந்த நேரத்தில் அந்த சூழலை மாற்றுவதற்கு தான் காதல் என்பதாக பொருள்பட எழுதியிருந்தேன் ஆனால் தாங்கள் எழுதியதை பார்த்து இப்படியும் எழுதலாமே என நினைக்கிறேன்
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 9:45 PM.சரியாக புரியவைதமைக்கு நன்றி !
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>