Jul 25, 2010

15

நோட்பேடில் வைரஸ் புரோகிராம் எழுதலாம்

  • Jul 25, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: பரிசு விலையை பார்ப்பதை விட பரிசை கொடுப்பவரின் மனதை பாருங்கள்.

    நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்க போவது நோட்பேடில் போலியான சில வைரஸ் நிரல்களை எழுதி அதை .VBS , .BAT எக்ஸ்டென்ஷ்களாக சேமித்து அதை இயக்குவதன் மூலம் ஒரு சின்ன விளையாட்டு இந்த நிரலால் தங்கள் கணினிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது ஆனால் இந்த நிரல்களை பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கு இதை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு பாருங்கள் (நீங்கள் சோதித்து பார்த்த பின்பு) அவர் அதை தரவிறக்கி இயக்கினால் அடுத்த பத்து நிமிடத்தில் உங்களுக்கு அலைபேசியில் அழைப்பு வரும் “டேய் நீ அனுப்புனதுல வைரஸ் இருக்குடா கம்ப்யூட்டர் தானே நிறைய பைல் திறக்குது, கலர் கலரா மின்னுதுடா” இப்படியாக உங்களுக்கு கோபத்தில் பேசுவாரென்றே நினைக்கிறேன்.

    சரி இனி நீங்கள் ஒரு நோட்பேட் (Start-Run-Type notepad) திறந்து கீழிருக்கும் நிரலை காப்பி செய்து நோட்பேடில் ஒட்டி சேமிக்கும் போது ஏதாவது ஒரு பெயர் கொடுத்து அதை .VBS என்கிற எக்‌ஸ்டென்ஷனில் சேமிக்கவும் இப்படி சேமிக்கும் போது வழக்கமா இருக்கும் ஐகானுக்கு பதிலாக வேறு ஒரு ஐகானாக மாறியிருக்கும் இனி இதை உங்கள் எலியால் இருமுறை கிளிக்கி விட்டு கொஞ்சம் உங்கள் கணினியை வேடிக்கை பாருங்கள் என்ன நடக்கிறதென்று.

    Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
    do
    wscript.sleep 100
    wshshell.sendkeys "~(enter)"
    loop

    என்ன ஆச்சரியாமாக இருக்கிறதா இதை உங்களால் நிறுத்துவது என்பது இயலாத காரியம் இதற்கு வழி உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து விடுவது தான், மீண்டும் ஒரு முறை உங்களுக்கு ஞாபகபடுத்துகிறேன் இதனால் உங்கள் கணினிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    இனி இரண்டாவதாக ஒரு ட்ரிக் பார்ப்போம் இந்த நிரலை காப்பி எடுத்து ஒரு புதிய நோட்பேட்(Start-Run-Type notepad) திறந்து அதில் ஒட்டி சேமிக்கும் போது ஏதாவது ஒரு பெயர் கொடுத்து அதை .VBS என்கிற(ஏதாவது ஒரு பெயர் கொடுத்து ஒரு புள்ளி வைத்து VBS என சேமித்தால் போதும் உதாரணத்துக்கு gsr.vbs) எக்‌ஸ்டென்ஷனில் சேமிக்கவும், இப்போது வழக்கம் போல உங்கள் எலியால் இருமுறை கிளிக்கி பாருங்கள் என்ன நடக்கிறதென்று உங்களலால் கீபோர்டில் ஒன்றும் செய்ய இயலாது மாறாக தானாக ஏதாவது ஒரு பைலை திறக்கும் எந்த இடத்திலாவது கர்சரை கிளிக்கினால் அந்த இடத்தில் You are a fool என்பதாக எழுதும் நீங்கள் வேண்டும்னால் அந்த அடைப்பு குறிக்குள் இருக்கும் You are a fool என்பதற்கு பதிலாக வேறு ஏதாவது எழுதிக்கொள்ளலாம். இதை நிறுத்துவதற்கு உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து விடுவது தான் வழி.

    Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
    do
    wscript.sleep 100
    wshshell.sendkeys "You are a fool."
    loop

    மூன்றாவதாக ஒரு சின்ன விளையாட்டையும் பார்க்கலாம் கீழிருக்கும் நிரலை காப்பி எடுத்து ஒரு புதிய நோட்பேட்(Start-Run-Type notepad) திறந்து அதில் ஒட்டி சேமிக்கும் போது ஏதாவது .BAT என்கிற எக்ஸ்டென்ஷனில் சேமிக்கவும் இப்போது உங்கள் எலியால் இருமுறை கிளிக்கி வேடிக்கை பாருங்கள் நிச்சியம் ஆச்சரியம் அடைவீர்கள் என்ன உங்கள் கணினி திரை கலர் கலராக மின்னுகிறதா இதை நிறுத்த ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.

    @echo off
    echo e100 B8 13 00 CD 10 E4 40 88 C3 E4 40 88 C7 F6 E3 30>\z.dbg
    echo e110 DF 88 C1 BA C8 03 30 C0 EE BA DA 03 EC A8 08 75>>\z.dbg
    echo e120 FB EC A8 08 74 FB BA C9 03 88 D8 EE 88 F8 EE 88>>\z.dbg
    echo e130 C8 EE B4 01 CD 16 74 CD B8 03 00 CD 10 C3>>\z.dbg
    echo g=100>>\z.dbg
    echo q>>\z.dbg
    debug <\z.dbg>nul
    del \z.dbg

    இதையே இன்னும் வேறு சில விதமாக நீங்கள் யோசித்து பயன்படுத்தி பாருங்கள் இது நீங்கள் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே இது போல இன்னும் நிறைய நிரல்கள் இருக்கின்றன. என்ன நண்பர்களே உங்களுக்கு இது வித்யாசமான அனுபவமாக இருக்கிறதா? ஆம் என்றால் நம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள பதிவிற்கு வாக்கும் பதிவை பற்றிய கருத்துரையும் எழுதுவதன் மூலம் நிறைய நண்பர்களை சென்றடைய உதவலாமே.

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    15 Comments
    Comments

    15 Responses to “நோட்பேடில் வைரஸ் புரோகிராம் எழுதலாம்”

    Mohamed Faaique said...
    July 27, 2010 at 8:43 AM

    போட்டுத்தாக்குங்க பாஸ்.


    ஜிஎஸ்ஆர் said...
    July 27, 2010 at 9:46 AM

    @Faaique Najeebஉங்கள் ஆதரவுடன்


    மு.ம.ராஜன் said...
    July 27, 2010 at 11:04 AM

    kalakiteenga ponga...

    super GSR

    kalakunga...


    ஜிஎஸ்ஆர் said...
    July 27, 2010 at 4:54 PM

    @கோட்டை மகாஎல்லாமே உங்கள் ஆதரவுடன்


    Shajahan Nazrin said...
    July 28, 2010 at 10:32 PM

    mikavum arumaiyaka ullathu


    ஜிஎஸ்ஆர் said...
    July 29, 2010 at 1:04 PM

    @Shajahan Nazrin நன்றி


    எஸ்.கே said...
    August 11, 2010 at 12:13 PM

    மிக அருமையாக உள்ளது!
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!
    நண்பரே! என் இந்த முயற்சியை பார்த்து கருத்து சொல்லுங்கள்!
    அடோப் ஃபிளாஷ்
    நன்றி
    எஸ்.கே


    ஜிஎஸ்ஆர் said...
    August 11, 2010 at 1:35 PM

    @எஸ்.கேதமிழில் யாரும் இதுவரை எழுதவில்லை என்றே நினைக்கிறேன் அருமையாக எழுதுகிறீர்கள் ஆனால் இன்னமும் எளிமைப்படுத்த வேண்டும்


    ம.தி.சுதா said...
    October 30, 2010 at 1:05 AM

    நல்லதொரு விளையாட்டு விளையாடித் தான் பார்ப்போமே...


    ஜிஎஸ்ஆர் said...
    October 30, 2010 at 9:30 AM

    @ம.தி.சுதாஎதிராளியை அச்சுருத்தும் ஆனால் ஆபத்து விளைவிக்காத விளையாட்டு


    Vengatesh TR said...
    November 26, 2010 at 6:39 PM

    .இதுவும் நல்லா தான், இருக்கு la !

    .எப்படி தான், யோசிப்பாங்களோ !!!



    .பகிர்ந்தமைக்கு நன்றி, !


    Vengatesh TR said...
    November 26, 2010 at 6:41 PM

    .பரிசு விலையை பார்ப்பதை விட பரிசை கொடுப்பவரின் மனதை பாருங்கள்

    .இதையும், சமீபத்தில், பார்த்தேன் .. ரசித்தேன் ..

    (மனதை எப்படி பார்ப்பது ??)


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:37 PM

    @சிகப்பு மனிதன்ஏதாவது புதுமையான விஷ்யங்களாக இருந்தால் தானே படிப்பார்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:38 PM

    @சிகப்பு மனிதன்மனதை என்று குறிப்பைடுவது அவரின் அன்பை பாருங்கள் என்பதேயாகும்


    Thiagu Mohan said...
    August 30, 2012 at 12:03 PM

    nice


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர