Jul 22, 2010

12

பிரபல ஹேக்’கிங்’குகள் மற்றும் கீலாக்கர் அபாயம்

  • Jul 22, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: நல்லதே செய் நல்லதே நடக்கும்.

    ஹேக்கர்கள் என்றவுடன் உடனே இனையத்திருடர்கள் என்றுதான் நினைப்போம் ஆனால் அந்த ஹேக்கர்களிலும் இரண்டு வகை இருக்கிறார்கள் அதாவது நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள் இதில் நல்ல ஹேக்கர்கள் என்பவர்கள் தான் எத்திக்கல் ஹேக்கர்கள், கெட்டவர்கள் தான் கிரிமினல் ஹேக்கர்கள் இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கிரிமினல் ஹேக்கர்கள் தங்கள் சுய இலாபத்துக்காக மட்டுமே அவர்கள் இனைய வலையமைப்பை உடைத்து தங்களுக்கு தேவையானதை திருடிக்கொள்வார்கள், எத்திக்கல் ஹேக்கர்கள் என்பவர்கள் கணினியின் பாதுகாப்பாளர்கள் இவர்கள் ஒரு வலையமைப்பில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதை சரி செய்ய உதவுவார்கள் இதில் இன்னும் ஒரு வகை இருக்கிறார்கள் இவர்கள் ஒரு தளத்தை முழுவதும் முடக்கி அல்லது தன் கட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள் ஆனால் எந்தவித தகவல்களையும் அழித்து விடாமல் நான் தான் இதை செய்தேன் என அறிவிப்பார்கள் இவர்களும் நல்லவர்கள் தான். மிகப்பெரிய வலையமைப்பை கொண்ட நிறுவணங்களில் நிச்சியமாக எத்திக்கல் ஹேக்கர்கள் இருப்பார்கள் அதாவது அங்கீகாரம் பெற்ற ஹேக்கர்கள் இருப்பார்கள்.

    சரி நாம் இந்த பதிவில் மிகச்சிறந்த எத்திக்கல் ஹேக்கர்களையும், கிரிமினல் ஹேக்கர்களை பற்றியும் பார்ப்போம்.

    முதலில் நல்லவர்களான எத்திக்கல் ஹேக்கர்களை பற்றி பார்க்கலாம்.

    Stephen Wozniak இவர்தான் ஆப்பிள் நிறுவணத்தின் CEO இவர் முதன் முதலில் செய்த ஹேக்கிங் ஊதா பெட்டி என ஒன்றை தயாரித்து அதன் வழியாக தொலைபேசி இனைப்பின் ஊடாக கணக்கிலடங்காத அளவிற்கு பணம் செலவழிக்காமல் பேசமுடியம் என்பதை நிருபித்தவர் ஆனால் அவர் இந்த சோதனைக்கு பிறகு ஒரு முறை கூட அதை உபயோகித்ததில்லை இவரை பற்றிய விக்கிபீடியா

    Tim Berners-Lee இவர் கல்லூரியில் படித்த காலத்தில் யுனிவர்சிட்டி கணினிகளை அவர்கள் அறியாமல் படிப்பதற்காக உபயோகபடுத்துவதில் ஆரம்பித்த்து இவரின் ஹேக்கிங் CERN என்கிற யூரோப்பியன் நியுக்கிளியர் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி செய்யும் போது இவர் உருவாக்கிய ஹைபர்டெகஸ்ட் தான் ஆராய்ச்சியில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவியதாம் இவரை பற்றிய விக்கிபீடியா

    Linus Torvalds லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்பாடு அடைந்ததில் இவரின் பங்கு மிகப்பெரியது லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்த்தில் கெர்னல் மாற்றங்கள் கொண்டுவந்தார் இவரை பற்றிய விக்கிபீடியா

    Richard Stallman நாம் தற்போது உபயோகிக்கும் பல திறந்த்வெளி மென்பொருள்கள் பெறுமளவில் வருவதற்கு காரணமாக இருந்தவர் இவரை பற்றிய விக்கிபீடியா

    Tsutomu Shimomura இவரின் தொழில்நுட்பங்களை தான் அமெரிக்காவின் FBI நெடு நாட்களாக பயன்படுத்தினர் கணினி பாதுக்காப்பில் இவர் ஒரு வல்லவர் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள் இவரை பற்றிய விக்கிபீடியா

    இனி கிரிமினல் ஹேக்கர்களை பற்றி பர்க்கலாம்

    Jonathan James இவர் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செர்வரையே ஹேக் செய்தவர் அதோடு நிற்காமல் நாசவின் கணினிகளையும் இவர் பதம் பார்த்தவர் இவரால் நாசாவில் ஏற்பட்ட கணினி சம்பந்தபட்ட இழப்பு மட்டும் 1.7 பில்லியன் டாலர்கள் இவர் இறுதியாக தற்கொலை செய்து கொண்டார் அதில் நீதிக்கு புறம்பாய் நடந்தேன் அதன் விளைவு தான் என் மரணம் என குறித்து வைத்திருந்தார் இவரை பற்றிய விக்கிபீடியா

    Adrian Lamo இவர் நியூயார்க் டைம்ஸ் மற்றும் யாகூ, பேங்க் ஆப் அமெரிக்கா போன்றவற்றின் வலையமைப்பை உடைத்து அதிலிருந்த தகவல்களையும் திருடியவர் ஆனால் தற்போது பத்திரிக்கை துறையில் பணி செய்கிறார் இவரை பற்றிய விக்கிபீடியா

    Kevin Mitnick இவர் அமெரிக்க ஹேக்கர்கள் வரிசையில் மிக பிரபலமாணவர் இவரை பற்றிய தகவலை கொண்டே Freedom Downtime and Takedown இந்த இரண்டு ஆங்கிலபடமும் எடுக்கபட்டது இவர் தனது முதல் ஹேக்கிங்கை பேருந்தில் பஞ்ச் செய்வதில் ஆரம்பித்து தொலைதொடர்பின் வலையமைப்பில் தனக்கென ஒரு வலையமைப்பை உருவாக்கியிருந்தார் இப்போது இவர் கணினி பாதுகாப்பு துறையிலும் மீடியாவிலும் பேச்சாளராக இருக்கிறார் இவரை பற்றிய விக்கிபீடியா

    Kevin Poulsen இவர் தொலை தொடர்புகளின் வலையமைப்பை உடைப்பதிலும் ரேடியோ அலைகளை இடைமறிப்பதிலும் மிகத்திறமையானவராக இருந்திருக்கிறார் ஒரு முறை FBI இன் கணினியையும் விட்டு வைக்கவில்லை இவரை பற்றிய விக்கிபீடியா

    Robert Tappan Morris இவர் ஒரு விஞ்ஞானியின் மகன் முதன் முதலில் 1986ல் கணினி திருடன் என அரெஸ்ட் செய்யப்பட்டவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கிட்டத்தட்ட 6000கணினிகளுக்குள் தன் கைவரிசையி காண்பித்திருக்கிறார் இவரை பற்றிய விக்கிபீடியா

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால இருவருமே அதி பயங்கர புத்திசாலிகள் தான் என்ன சில நேரங்களில் எத்திக்கல் ஹேக்கர்களின் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு கிரிமினல் ஹேக்கர்கள் அவர்கள் வேலையை காட்டிவிடுவார்கள.

    ஒரு சுவாராஸ்யமான தகவலை சொல்கிறேன் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் அவர்கள் பள்ளியில் படித்த் காலத்தில் ஒவ்வொருவருக்கும் நேரம் ஒதுக்கீடு செய்ந்திருந்தார்கள் கணினி உபயோகிக்க ஆனால் நம் பில்கேட்ஸ் அவர்களுக்கு அந்த நேரம் போதவில்லை எனவே அப்போதிருந்த டாஸ் விண்டோவை உடைத்து தனக்கான நேரத்தை மட்டும் கூட்டி வைத்துக்கொண்டாராம் இதை அவர் செய்யும் போது வயது 13 மட்டுமே மேலும் பில்கேட்ஸ் மற்றும் நண்பர்கள் இனைந்து புரோகிராம் எழுத தொடங்கிய போது வருமானம் குறைவாக இருந்த போது மற்ற நண்பர்கள் எல்லாம் சேர்ந்து பில்கேட்ஸ் அவர்களை தனியாக சென்று விட சொன்னார்களாம் அதற்கு அவரும் மறுப்பு எதுவும் சொல்லாமல் நான் செல்கிறேன் ஆனால் மீண்டும் திரும்பி வருவேன் இந்த கணினி சாம்ராஜ்யத்தின் ராஜாவாக என்று சொன்னாராம் பின்னாளில் என்ன நடந்த்து என்பது உங்க்ளுக்குத்தான் தெரியுமே.

    மேலும் சில ஹேக்கர்கள் பற்றிய தகவல்

    மேலும் சில ஹேக்கிங் வகைகள்

    மேலும் தற்போது சில வலைத்தளங்களும் கூட ஹேக் செய்யப்படுகின்றன இவற்றில் இருந்து தப்பிக்க வழி ஒன்றும் இல்லை எத்தனை பெரிய அறிவாளியாக இருந்தாலும் ஹேக்கர்கள் நினைத்தால் இரண்டு வரி ஸ்கிரிப்டில் ஏதாவது ஒரு வலையமைப்பின் வழியாக உள்ளே புகுந்து விடுவார்கள் ஆனால் சமீப நாட்களாக தனி நபர் தாக்குதலில் கீ லாக்கர் மற்றும் ஸ்பூப்பிங், இஞ்ஜெக்ட் முறையில் உள்ளே நுழைகிறார்கள் முடிந்த வரை நீங்கள் வலையில் உலாவும் போது நேரடியாக அட்ரஸ் பாரில் நீங்களே அட்ரஸை டைப் செய்து உள்ளே செல்லுங்கள் வங்கி கணக்கை உபயோகிக்கும் போது விர்ச்சுவல் கீபோட் பயன்படுத்துங்கல் மின்னஞ்சல் திற்க்கும் போது ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லுமாறு அமைத்துக்கொள்ளுங்கள. வெளியில் சென்று இனையம் உபயோகிக்க வேண்டி வந்தால் ஒரு நிமிடம் செலவழித்து அந்த கணினியில் கீ கிராம்ப்ளர் இன்ஸ்டால் செய்து உபயோகியுங்கள் இன்ஸ்டால் செய்ய முடியாத கணினியில் போர்ட்டபிள் பிரவுசரை பயன்படுத்துங்கள் இது போன்ற பிரச்சினைகளை மனதில் வைத்து நான் கடந்த மே 10ம் தேதி கீலாக்கர் அபாயமும் அதற்கான பாதுகாப்பும் எழுதியிருந்தேன் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் மேலும் சில பாதுகாப்பான இனையம் என்பதாக ஒரு பதிவு எழுத இருக்கிறேன்.

    என்ன நண்பர்களே இந்த பதிவில் உங்களுக்கு தெரிந்த்தாகவே இருந்தாலும் ஒரு முறை ஞாபகபடுத்துதலாக இருந்திருக்கும் உங்களுக்கு உபயோகமானது என்றால் உங்கள் நண்பர்களுக்கும் சென்றடைய உதவுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    12 Comments
    Comments

    12 Responses to “பிரபல ஹேக்’கிங்’குகள் மற்றும் கீலாக்கர் அபாயம்”

    Mohamed Faaique said...
    July 22, 2010 at 12:08 PM

    நல்லாயிருக்கு... நல்ல ஆய்வு...


    ramalingam said...
    July 22, 2010 at 4:23 PM

    http://www.freshwap.net/ebooks/185607-hackers-heroes-of-the-computer-revolution-25th.html மேற்கண்ட புத்தகம் உங்களுக்கு உபயோகப்படலாம்.


    பிரகாசம் said...
    July 22, 2010 at 10:25 PM

    தொடர்ந்து பல்வேறு சிறப்பான தகவல்களையும் மென்பொருட்கள் பற்றிய குறிப்புகளையும் அளித்து வருகிறீர்கள்.நன்றிகள். தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    ஆங்கில வார்த்தைகளுக்கு ஆன்லைனில் தமிழ் அர்த்தம் தெரிந்துகொள்ள
    http://www.agaraadhi.com என்ற இணையதளம் உபயோகமாக இருக்கும்.


    Anonymous said...

    July 22, 2010 at 10:39 PM

    நண்பர் அவர்களுக்கு வணக்கம்,

    ஹேக்கர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் பற்றிய உங்களின் தகவல்கள் அருமை. வாழ்த்துக்கள்.

    //வெளியில் சென்று இனையம் உபயோகிக்க வேண்டி வந்தால் ஒரு நிமிடம் செலவழித்து அந்த கணினியில் கீ கிராம்ப்ளர் இன்ஸ்டால் செய்து உபயோகியுங்கள்
    இன்ஸ்டால் செய்ய முடியாத கணினியில் போர்ட்டபிள் பிரவுசரை பயன்படுத்துங்கள்//

    என்று சொல்லி உள்ளீர்கள். கீ கிராம்ப்ளர் என்றால் என்ன? என்பது பற்றியும் போர்ட்டபிள் பிரவுசர் பற்றிய தகவல்களை கூறுங்களேன்.

    அன்புடன்
    தமிழார்வன்.


    ஜிஎஸ்ஆர் said...
    July 24, 2010 at 11:00 AM

    @Faaique Najeeb நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    July 24, 2010 at 11:00 AM

    @ramalingam தகவலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    July 24, 2010 at 11:02 AM

    @பிரகாசம்தங்கள் தகவலுக்கு நன்றி நானும் இது பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன் http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_7946.html


    ஜிஎஸ்ஆர் said...
    July 24, 2010 at 11:04 AM

    @tamizharvan விடை இந்த பதிவிலேயே இருக்கிறது http://gsr-gentle.blogspot.com/2010/05/blog-post_2318.html
    மன்னிக்கவும் நண்பா போதிய நேரமின்மையே காரணமாக இருக்கிறது தயவு செய்து மன்னிக்கவும்


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 1:04 PM

    சிந்திக்க வைக்கும் ஒரு பதிவு....


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:39 PM

    @ம.தி.சுதாஇதைப்பற்றி கொஞ்சம் விரிவாக எழுத விருப்பம் இருக்கிறது பார்க்கலாம்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 6:59 PM

    .தலைசிறந்த hackerகளை, அறிமுகம் செய்தீர்கள், மிக்க நன்றி, ஆசிரியரே !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:40 PM

    @சிகப்பு மனிதன் நன்றி நண்பா


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர